Sriram Sathiyamoorthy

Sriram Sathiyamoorthy Journalist

02 மார்ச் 1958ம் ஆண்டு மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்றிலிருந்து இன...
02/03/2024

02 மார்ச் 1958ம் ஆண்டு மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை 66 ஆண்டுகளாக சின்னத்தை இழக்காத, முடக்கப்படாத சின்னமாக உதயசூரியன் இருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னும், ஜெயலலிதா மறைவுக்கு பின்னும் இரட்டை இலை முடங்கியுள்ளது. காமராஜர், இந்திரா காங்கிரஸ் என பிரிந்து நின்ற போதும் கை சின்னம் காங்கிரஸிடமிருந்து கை நழுவியுள்ளது. இன்று வாசன், வைகோ, சீமான் என 10 ஆண்டுகளுக்கு மேல் கட்சி நடத்தும் அனைவரும் சின்னத்துக்காக நீதிமன்றம் செல்கின்றனர். சைக்கிளும், மாம்பழமும், குக்கரும், பரிசுப்பொட்டியும், இரட்டை மெழுகுவர்த்தி என பல சினங்கள் தமிழ்நாடு அரசியல் களத்தில் மக்கள் மனதில் தடம் பதித்து சென்றுள்ளன.

ஆனால் 66 ஆண்டுகளாக uதயசூரியன் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சின்னமாக இருந்துள்ளது.

‘‘மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களுக்கோ நித்திரை
போடுங்கள்
உதயசூரியனுக்கு முத்திரை!’’ என சொல்லி அண்ணா ஐந்தே நொடிகளில் வாக்கு கேட்டிருக்கிறார்.

‘‘நாடு நலம் பெற, நாசகார ஆட்சி தொலைய, உங்கள் இதயசூரியனில் உதிக்கட்டும் உதயசூரியன்!’’ என சொல்லி கலைஞர் வாக்கு கேட்டிருக்கிறார்.

இன்னும் தேர்தல் நேரங்களில் ஊர்களில் கலைஞரின் கரகர குரலில் வாக்களிப்பீர் உதயசூரியன் என்ற வார்த்தை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த உதயசூரியன் சின்னத்துக்கு உயிர் கொடுத்தது திமுக என்றால் அதுதான் அல்ல. உதயசூரிய முதலில் உதித்தது ரெட்டைமலை சீனிவாசன் எண்ணத்தில்தான்.

1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில் ரெட்டைமலை இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் இரண்டு மலைகளுக்கு நடுவே சூரியன் உதிப்பது போல கொடியை உருவாக்கினார்கள். 1936ல் சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன் என்றச் அமைப்பை தொடங்கிய போது அந்த கட்சியின் கொடி சூரியன். அந்த கட்சிக்கு சூரிய கட்சி என்ற பெயரும் இருந்தது. 1941ல் உதயசூரியன் என்ற இதழ் குடியாத்தம் பகுதியில் இருந்து வெளியானது. அதில்தான் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டது. இப்படி உதய சூரியனுக்கு உள்ள கதைகள் பல உண்டு.

தமிழ்நாடு அரசியலில் சின்னம் முக்கியமானதாக இருந்துள்ளது கலைஞரும், எம்.ஜி,.ஆரும், ஜெயலலிதாவும், ஸ்டாலினும் இந்த சின்னத்தில் யாரை நிறுத்தினாலும் இந்த சின்னத்துக்கு ஓட்டு என்ற ஃபார்முலாவை நீண்ட நாட்களாக தமிழ்நாடு அரசியல் களம் கண்டுள்ளது. அதனை இன்று வரை உதயசூரியன் தக்க வைத்துள்ளது.

01/03/2024

Persons suffering from disabilities are "no different from you or me" and the more appropriate term to use for them would be "differently abled" and not "disabled", the Delhi High Court has said.

✨️
27/11/2023

✨️

...

புதுக்கோட்டையின் நகர கட்டமைப்பே வியக்க வைக்கும் ஒன்றாக இருக்கும். இதன் நகர கட்டமைப்பை தீர்மாணிக்கும் பொறுப்பு 1800-களின்...
23/11/2023

புதுக்கோட்டையின் நகர கட்டமைப்பே வியக்க வைக்கும் ஒன்றாக இருக்கும். இதன் நகர கட்டமைப்பை தீர்மாணிக்கும் பொறுப்பு 1800-களின் இறுதியில் புதுக்கோட்டையின் நிர்வாகப் பொறுப்பை வகித்த திவான் சேஷையா சாஸ்திரியிடம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை நகரை நவீனமாக நிர்மாணிப்பதற்காக ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸையும் புதுச்சேரியையும் பார்வையிட்டு வர, தனிக் குழுக்களை அவர் அமைத்தார். இதன் தொடர்ச்சியாக நகரின் நடுவில் அரண்மனை, அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் தலா நான்கு அடுக்கு முறையில் 16 வீதிகள், மழை நீரைச் சேமிக்கும் வகையில் மேட்டுப் பகுதியான மச்சுவாடியில் தொடங்கி காட்டுப் புதுக்குளம் வரை 36 குளங்கள் என்று புதுக்கோட்டை உருவானது.

200 ஆண்டுகளுக்கு முன்பே நகர கட்டமைப்பில் சிறந்து விளங்கிய புதுக்கோட்டையின் நகர கட்டமைப்பை கழுகு பார்வையில் காட்டியவர்
Abinesh Sekar வாழ்த்துகள் தம்பி

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/04/2023

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

விகடனில் என் ஊர் பகுதி வெளியாகிக் கொண்டிருந்த நேரம். இந்த தலைப்புக்கு புதுக்கோட்டையில் புதுக்கோட்டை ராணியைவிட வேறு யாரும...
13/04/2023

விகடனில் என் ஊர் பகுதி வெளியாகிக் கொண்டிருந்த நேரம். இந்த தலைப்புக்கு புதுக்கோட்டையில் புதுக்கோட்டை ராணியைவிட வேறு யாரும் பொருத்தமான நபராக இருக்க மாட்டார்கள் என்று நானும், காளிமுத்துவும் சென்று பேட்டி எடுத்தோம். அப்போது புதுக்கோட்டை ராணி ரமாதேவிக்கு 72 வயதிருக்கும் பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியல் அலுவலகம் தொடங்கி, நான் படித்த பள்ளிக்கூடம் வரை பல அரசு அமைப்புகளுக்காக கட்டிடங்கள் அரச குடும்பத்துடையது. நவீன புதுக்கோட்டையை எப்படி அரச குடும்பம் கட்டமைத்தது என்பதை அந்த பேட்டியில் விளக்கமாக சொல்லியிருப்பார். இப்போது 85 வயதில் அவர் மறைந்திருக்கிறார். ஆழ்ந்த இரங்கல்கள்


*************************

மீள் - ஆனந்த விகடன் - என் விகடனில் வெளியான ராணி ரமாதேவியின் என் ஊர் பேட்டி

''ஆங்கிலேயர் கால இந்தியாவில் நாடு முழுவதும் இருந்த 537 சமஸ்தானங்களில், ஆங்கிலேயர்களால் சிறப்பு அந்தஸ்து அளிக்கப் பட்ட சமஸ்தானம் என்ற பெருமையுடன் திகழ்ந்தது புதுக்கோட்டை சமஸ்தானம்!'' - புதுக்கோட்டையின் வரலாற்றைப் பெருமிதத் தோடு கூறத் தொடங்கினார் ராணி ரமாதேவி தொண்டைமான்.

''பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை கலசமங்கலம் என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட் டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப் பட்டது. அந்தப் பெயருக்கு ஏற்றார்போல் அன்றைய காலகட்டத்தில் நவீனத்துக்கு ஓர் உதாரணமாக விளங்கியது புதுக்கோட்டை. தொண்டைமான் மன்னர்கள் உருவாக்கிய இன்றைய நவீனப் புதுக்கோட்டைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர், 1800-களின் இறுதியில் புதுக்கோட்டையின் நிர்வாகப் பொறுப்பை வகித்த சேஷையா சாஸ்திரி.

புதுக்கோட்டை நகரை நவீனமாக நிர்மாணிப் பதற்காக ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸையும் புதுச்சேரியையும் பார்வையிட்டு வர, தனிக் குழுக்களை அவர் அமைத்தார். இதன் தொடர்ச்சியாக நகரின் நடுவில் அரண்மனை, அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் தலா நான்கு அடுக்கு முறையில் 16 வீதிகள், மழை நீரைச் சேமிக்கும் வகையில் மேட்டுப் பகுதியான மச்சுவாடியில் தொடங்கி காட்டுப் புதுக்குளம் வரை 36 குளங்கள் என்று புதுக்கோட்டை உருவானது.

அந்தக் காலத்தில், புதுக்கோட்டையில் குடியிருப்புகளின் முன்புறம் கால்வாய்கள், பின் புறத்தில் கழிவு நீர்க் கால்வாய்கள் இருக்கும். இதனால், எவ்வளவு மழை பெய்தாலும் சாலைகளிலோ தெருக்களிலோ புதுக்கோட்டை யில் தண்ணீர் தேங்காது. அக்காலத்தில் தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பல நகரங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த நகரம் இது.

புதுக்கோட்டைக்கு என்று தனிக் கலாசாரம் உண்டு. பழமையும் நவீனமும் இரண்டறக் கலந்த கலாசாரம். புதுக்கோட்டையில் புழக்கத்தில் இருந்த அம்மன் நாணயங்கள்கூட தனித்துவமானவை. மன்னர் குடும்பத்தோடு இப்பகுதி மக்களுக்கு நெருக்கமான உறவு உண்டு. ஊரின் முக்கிய அடையாளம், திருக் கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில். இங்கு நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழா, சித்திரைத் திருவிழா போன்ற திருவிழாக் காலங்களில், சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து, 10 நாட்கள் தங்கி மன்னர் குடும்பத்தோடு திருவிழாவைக் கொண்டாடிவிட்டு ஊர் திரும்புவது வழக்கம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 3.3.1948-ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜா ராஜகோபால தொண்டைமானால் கஜானா உட்பட அனைத்து நிர்வாகமும் முழுமையாக இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன் றைக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி அலுவலகமாக இருக்கும் இடம், எங்கள் புதிய அரண்மனை. மன்னர் காலத்தில் இப்பகுதி கல்வி வளர்ச்சிக்காகவே கட்டப்பட்டதுதான் மன்னர் கல்லூரி. அரசுத் தலைமை மருத்துவ மனையும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இன்றைக்கு சென்னை அருங்காட்சியகத்துக்கு அடுத்து, தமிழகத்திலேயே முக்கியமான அருங்காட்சியகமாகத் திகழும் புதுக்கோட்டை அருங்காட்சியகம், 1910-ம் ஆண்டு மன்னர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இப்படி மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடந்த இடம் புதுக்கோட்டை.

ஒரு காலத்தில் புதுக்கோட்டையின் முக்கியத் தொழிலாக நெசவுத் தொழில் இருந்தது. குறிப் பாக திருவப்பூரில் தயாரிக்கப்படும் சாய வேட்டிக்கு என்று தனி மரியாதை உண்டு.

'எல்லாரும் கட்டும் வேட்டி
அந்த வேட்டி இந்த வேட்டி
என் புருஷன் கட்டும் வேட்டி

புதுக்கோட்டை சாய வேட்டி!’ என்ற தெம்மாங்குப் பாடல் மூலம் புதுக்கோட்டை நெசவுக்கு உள்ள பெருமையை அறியலாம். அதேபோல, மண்பாண்டத் தொழிலும் பிரசித்திப் பெற்ற ஒன்று. இன்றும் மழையூர், திருவப்பூர் பகுதிகள் மண் பாண்டக் கலையில் தமிழக அளவில் பெயர் பெற்று திகழ்கின்றன.

கலைகள் செழித்த இடம் புதுக்கோட்டை. புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர்கள் தட்சிணா மூர்த்தி பிள்ளை, ரெங்கநாயகி, நாடக மன்னர் பி.யூ.சின்னப்பா, 'காதல் மன்னன்’ ஜெமினி கணேசன், ஏ.வி.எம் ராஜன் ஆகியோரின் சொந்த ஊர் புதுக்கோட்டைதான். தீரர் சத்தியமூர்த்தி, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரான முத்துலெட்சுமி ரெட்டி போன்ற வரலாற்று நாயகர்கள் வாழ்ந்த மண் இது.

புதுக்கோட்டையின் மிகப் பெரிய கொண் டாட்டங்கள் திருவப்பூர் மாரியம்மன் கோயில் பூத்திருவிழாவும் நார்த்தாமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவும். இந்தத் திருவிழாக்களின்போது நடக்கும் கரகாட்டம், நாடகங்களுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. உணவு என்று எடுத்துக் கொண்டால், முந்திரிக்கும் மீனுக்கும் முக்கிய இடம் கொடுப்பார்கள் எங்கள் ஊர்க்காரர் கள்.

ஒருபுறம் புதிய நாகரிக மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டாலும் கலாசார அளவில் இன்றும் தங்கள் மரபு களைப் பேணுபவர்கள் நாங்கள். கோயில் திருவிழாக்களில் தொடங்கி, வீட்டு விசேஷங் கள் வரை அனைத்திலுமே, இதைப் பார்க்க முடியும். பழைய பெருமையோடு புதிய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கிறோம் நாங்கள்!''

- ச.ஸ்ரீராம், படங்கள்: பா.காளிமுத்து

I Love Pudukkottai Kavitha Ramu எம்.எம்.அப்துல்லா M M Abdulla

05-12-2016 ஜெயலலிதா இறந்த தினமா ?40 வருஷத்துக்கும் மேல தமிழ்நாட்டோட அரசியல் களத்துல மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவோட வீடான...
05/12/2022

05-12-2016 ஜெயலலிதா இறந்த தினமா ?

40 வருஷத்துக்கும் மேல தமிழ்நாட்டோட அரசியல் களத்துல மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவோட வீடான வேதா நிலையதுக்கு ரொம்ப முக்கியமான இடம் இருக்கு. அந்த இல்லத்துல இருந்து செப்டம்பர் 22, 2016 அன்னிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாங்க ஜெயலலிதா. அவங்க அந்த இல்லத்துல உயிரோட வேதா இல்லத்துல இருந்த கடைசி நாளும் அதுதான்.செப்டம்பர் 22, 2016 தொடங்கி டிசம்பர் 5, 2016 இரவு 11:50 மணிக்கு ஜெயலலிதா இறந்ததா அப்பல்லோமருத்துவமனை அறிவிச்சது வரைக்கும் நடந்த எல்லா விஷயங்கள்ளையும் மர்மம் இருக்கறதா சொல்லி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா இருந்தப்ப ஆறுமுகசாமி ஆணையத்த அமைச்சாங்க. அந்த ஆணையம் சமீபத்துல அறிக்கைய சமர்பிச்சதுல பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்திருக்கு. மர்மம் நிறைந்த ஜெயலலிதா மரணம் இன்னும் சில மர்மமான கேள்விகள எழுப்பியிருக்கு.

21.9.2016 அன்னிக்கு மெட்ரோ ரயில் விழாவுல காணொலி காட்சி மூலமா தலைமைச் செயலகத்துல இருந்து கலந்துகிட்டு வேதா நிலையத்துக்கு வந்துருக்காங்க ஜெயலலிதா.கார் கார்டனுக்குள்ள வந்தவொடன கார விட்டு கீழ இறங்கும் போது ஜெயலலிதா நிலை தடுமாறி கீழ விழப்போக சசிகலா அவங்கள வீட்டுக்குள்ள கூட்டிட்டு போயிருக்காங்க. சசிகலா ஆணையத்துல சொன்ன தகவல் படி ஜெயலலிதாவுக்கு 3 நாளாவே கடும் காய்ச்சல் இருந்து வந்துருக்கும்னும் டாக்டர் சிவக்குமார் பரிந்துரைப்படி வெறும் பாராசிட்டமல் மாத்திரை மட்டுமே எடுத்திருந்திருக்காங்க.அடுத்த நாள் காலையில டாக்டர் சிவகுமார் வேதா நிலையம் வந்து அங்க இருக்கிறவங்கிட்ட ஜெயலலிதாவோட உடல்நிலைய பத்தி விசாரிச்சிட்டு அங்கிருந்து கிளம்பிருக்காரு. ஜெயலலிதாவோட தனிப்பட்ட மருத்துவரா இருந்தும் சிவகுமார் ஏன் அவங்கள நேரடியா பரிசோதிக்கலனு கேள்விகள் எழும்பிச்சு.

சசிகலா கூப்பிட்டதன் அடிப்படைல டாக்டர் சிவக்குமார் போயஸ் கார்டனுக்கு வந்துருக்காரு. அப்ப ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிகிட்டு இருக்குறப்போ ஜெயலலிதாவுக்கு இருமல் அதிகமா இருந்திருக்கு.ஜெயலலிதா படுக்கைகிட்ட வரும் போதே சசிகலா மேல மயங்கி விழுந்துருக்காங்க. நிலமை மோசமனதா உணர்ந்த சிவக்குமார் உடனே அப்பல்லோ மருத்துமனைக்கு போன் பண்ணி விஷயத்த சொல்லி ஆம்புலன்ஸ் கேட்டுருக்காரு.கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ் கார்டனுக்கு வந்து ஜெயல்லிதாவ ஏத்திகிட்டு அப்பல்லோ அப்பல்லோ மருத்துவமனைக்கு போகுது.22.9.2016 இரவு 9:45 மணிக்கு சுய நினைவில்லாம அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கூட்டிட்டு போகப்பட்டாங்க. 10:15 மணிக்கு ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனைல அனுமதிக்கப்பட்டதா பதிவுகள் இருக்கு.ஜெயலலிதாவுக்கு உடல்நிலைல நல்ல முன்னேற்றம் அடைந்து வந்த நிலைல செப்சிஸ்ங்குற நோய் தொற்றுல மட்டுமே கவனம் செலுத்தி எண்டோகோகஸ் பாக்டீரியாவ கண்டுபிடிச்சு 27.9.2016 நள்ளிரவு வரைக்கும் சிகிச்சை கொடுத்திருக்காங்க. ஆனா அவரோட உடல் நிலை பின்னடைவுக்கு காரணமான இதய பிரசனைக்கு சிகிச்சையளிக்க தவறிட்டாங்க.

75 நாட்கள் மருத்துவமனைல இருந்தாங்க ஜெயலலிதா. அதுல அவங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைல குழப்பம், அவங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் ஏன் அறுவை சிகிச்சை தேவையில்லனு சொன்னாங்க. வெளிநாடு சிகிச்சைக்கு ஜெயலலிதாவ கூட்டிட்டு போகாததுனு பல்வேறு குற்றச்சாட்டுகள முன்வைச்சுருக்கு ஆணையம். அதுல குற்றம் புரிந்தவர்களா கருதி ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜெயலலிதாவின் மருத்துவர் டாக்டர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கு. சிகிச்சைகள்ல நடந்த முரணான விஷயங்கள், தகவல்கள், ஜெயலலிதாவ சசிகலாவுக்கு நெருக்கமானவர்கல தாண்டி யாரும் பார்க்காததுனு பல்வேறு விஷயங்கள் மர்மமா தொடர்ற வேளைல கடைசி 3 நாட்கள்ல நடந்தது அதிர்ச்சிகரமான விஷயமா பதிவாகியிக்கு.

3.12.2016 அன்னிக்கு காலைல ஜெயலலிதாவுக்கு இருமல் அதிகமாகி இருக்கு.அப்ப சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனை செஞ்சு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கு. மூச்சு விடுறதுல சிரமம் இருந்தது நாள ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டுருக்கு. டிசம்பர் 4, 2016 அன்னிக்கு சிங்கப்பூர்ல இருந்து வரவழைக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட்கள் நடக்க சொல்லியிருக்க சொல்ல அதுக்கு தலையசைச்சிருக்காங்க ஜெயலலிதா. 4.12.2016 காலைல 6 மணிக்கு ஜெயலலிதாவோட உடல் சர்க்கரை அளவு 377ஆ அதிகரிச்சுருக்கு. அவரோட இதயம் செயலிழக்குது. காலைல இருந்து எதையும் சாப்பிடாத ஜெயலலிதா, பாலோட கார்ன் ப்ளாக்ஸ்தான் சாப்பிட்டாங்களாம். அன்னிக்கு மதியம் 1 மணிக்கு ஜெயலலிதா வாந்தி எடுக்குறாங்க. அறைல உள்ள டிவிய ஆஃப் பண்ண சொல்றாஙக். சுவாசிக்க முடியலனு சைகைல சொல்லியிருக்காங்க.

டிசம்பர் 4, 2016 மதியம் 2 மணிக்கு ஒரு மருத்துவர் ஜெயலலிதா இருந்த அறைக்குள்ள உள்ள போய்ட்டு வர்றாரு. சசிகலாவோட அலறல் சத்தம் கேட்குது. அப்போலோ மருத்துவமனை பதட்டமாகுது. சசிகலாவ அழுத நிலைல நர்ஸுங்க எல்லாம் வெளிய கூட்டிட்டு வந்துருக்காங்க. அவர் அனுமதிக்கப்பட்ட அறையிலயே அவருக்கு திறந்த முறை இதய சிகிச்சை கொடுத்திருக்காங்க. நிலமை மோசமாக ஐ.சியூவுக்கு கொண்டு போய் இதய சிகிச்சைய தொடர்ந்திருக்காங்க. அவங்கள கொண்டு செல்லும் போது அமைச்சர்கள் , அதிகாரிகள் ரத்தக்கரை உள்ள பஞ்சுகள பார்த்திருக்காங்க. எக்மோ சிகிச்சையால எந்த பயனும் இல்லைனு சசிகலாகிட்ட சொல்லியிருக்காங்க. தலைமை செயலாளர் அராம மோகன் ராவ் அப்போலோ வர்றாரு. ஆப்ரேஷன் தியேட்டர்ல இல்லாம வார்டுலயே அறுவை சிகிச்சை நடந்திருக்கறத பார்த்து அதிர்ச்சி அடைஞ்சதா சொல்றாரு, அப்ப எக்கோ எடுக்க அறைக்கு வந்த நளினி அவர் லீட் இல்லைனு சொன்னதாகவும் சொல்லப்பட்டதுல இருந்து ஆணையம் ஒரு முடிவுக்கு வந்திருக்கு. 4 டிசம்பர் 2016 அன்னிக்கு 3:50 மணிக்கு ஜெயலலிதா இதயம் செயலிழந்துட்டதா உறுதிப்படுத்தப்பட்டிருக்கு. ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் ஜெயலலிதாவோட உதவியாளரான பூங்குன்றன் மூலமா ஜெயலலிதா இறந்த நேரத்த தெரிஞ்சுக்கிட்டு 4.12.2016 சஷ்டி திதில முதலாமாண்டு திதி கொடுத்ததா சாட்சி சொல்லியிருக்காரு தீபக். இதுபடி பார்த்தாலும் ஜெயலலிதா இறந்தது 4.12.2016னே உறுதியாகுது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 5.12.2016 அன்று இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அறிவித்து 6.12.2016 அன்று ராஜாஜி ஹாலில் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரது மரணத்தை விசாரித்த ஆணையமும், அவரது உறவினரின் சாட்சியமும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த தேதியை 4.12.2016 என்றே உறுதி செய்கிறது.ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்ததா அப்போலோ மருத்துவமனை கொடுத்த அறிக்கை அடிப்படைல தமிழ்நாடு அரசு 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா இறந்ததா அதிகாரப்பூர்வமா அறிவிச்சிச்சாங்க.அதேசமயம் எடப்பாடி பழனிசாமி அமைச்ச ஆறுமுகசாமி ஆணையம் 4ம் தேதியே ஜெயலலிதா உயிரிழந்துட்டத உறுதி செய்யுறாங்க. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில மர்மம் இருக்குறதா சொல்லபடுற நிலையில ஜெயலலிதா மறைந்த தினத்துலயும் மர்மம் நீடிக்குது.

ஜெயலலிதா இறந்தது 4 டிசம்பரா? 5 டிசம்பரா? | ARVR | Jayalalitha | About the channel:News Tamil 24x7 is a 24-hour Tamil news chan...

யார் இந்த முகமது ஷாரிக்?https://youtu.be/XfeMOVjQAQ4Karthika Kannan
22/11/2022

யார் இந்த முகமது ஷாரிக்?

https://youtu.be/XfeMOVjQAQ4

Karthika Kannan

மங்களூரில் குக்கர் குண்டு வைத்த ஷாரிக் யார்? About the channel:News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. ...

40 ஆண்டுகாலம் ஜெயலலிதாவின் அரசியலில் முக்கிய பங்கு வகித்த வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் கடைசி நாள் இப்படித்தான் இருந்திரு...
01/11/2022

40 ஆண்டுகாலம் ஜெயலலிதாவின் அரசியலில் முக்கிய பங்கு வகித்த வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் கடைசி நாள் இப்படித்தான் இருந்திருக்கிறது

https://youtu.be/oFA-7Ysj8Og

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் கடைசி நாள் | JAYALALITHA | ARVR About the channel:News Tamil 24x7 is a 24-hour Tamil...

28/10/2022

குஜராத்தில் எடுபடுமா கெஜ்ரிவாலின் இந்துத்துவா அரசியல்

https://youtu.be/l9OnVd2FITc

பிசிசிஐ பெண்கள் அணிக்கு காட்டும் பாரபட்சம் இதுதான்!இந்திய மகளிர் அணிக்கும் ஆண்கள் அணியை போலவே சம ஊதியம் என்ற அறிவிப்பு வ...
28/10/2022

பிசிசிஐ பெண்கள் அணிக்கு காட்டும் பாரபட்சம் இதுதான்!

இந்திய மகளிர் அணிக்கும் ஆண்கள் அணியை போலவே சம ஊதியம் என்ற அறிவிப்பு வெளியானதற்கு பிசிசிஐ-க்கு சில ஃபயர் விடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் அவர்களின் அறிவிப்பு அபத்தமானது.

போட்டிக்கான ஊதியத்தை எவ்வளவு உயர்த்தியுள்ளது?

டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு ஆட்டத்துக்கு ஏற்கனவே மகளிர் அணியில் ஒரு வீரருக்கான சம்பளம் 4 லட்ச ரூபாய், அது தற்போது ஆண்களுக்கு தரப்படும் ஊதியமான 15 லட்ச ரூபாய் என்ற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு ஆட்டத்துக்கு ஏற்கனவே மகளிர் அணியில் ஒரு வீரருக்கான சம்பளம் ஒரு லட்ச ரூபாய், அது தற்போது ஆண்களுக்கு தரப்படும் ஊதியமான 6 லட்ச ரூபாய் என்ற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

டி20 போட்டிகளுக்கு ஒரு ஆட்டத்துக்கு ஏற்கனவே மகளிர் அணியில் ஒரு வீரருக்கான சம்பளம் ஒருலட்ச ரூபாய், அது தற்போது ஆண்களுக்கு தரப்படும் ஊதியமான 4 லட்ச ரூபாய் என்ற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பிசிசிஐ காட்டும் பாரபட்சம்?

போட்டிக்கான ஊதியத்தை உயர்த்திய பிசிசிஐ. பெண்களுக்கான ஒப்பந்தத்தை எப்படி வைத்துள்ளது என பார்ப்போம்.

ஆண்கள் அணியில் க்ரேட் A+ என்ற ஒப்பந்தம் உள்ளது. இதில் கோலி, ரோஹித் போன்ற வீரர்கள் இருப்பார்கள் ஆனால் மகளிர் அணியில் அப்படி ஒரு ஒப்பந்தமே இல்லை.

ஆண்கள் அணியில் A க்ரேட் ஒப்பந்தத்திற்கு 5 கோடி ஒப்பந்தத்தொகை. பெண்கள் அணியில் இது 50 லட்சம். அதாவது ஒரு வீரர் எந்த போட்டியிலும் ஆடாவிட்டாலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்தால் அவருக்கு 5 கோடி கிடைக்கும் ஆனால் ஒரு பெண் வீரருக்கு வெறும் 50 லட்சம் மட்டுமே கிடைக்கும். க்ரூப் B & Cயிலும் இந்த வித்தியாசம் உள்ளது. கிட்டத்தட்ட பெண்கள் அணி வீரர்களை விட 14 மடங்கு அதிக தொகைக்கு ஆண் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

சரி போட்டி ஊதியத்தையே வைத்துக் கொள்வோம் அதிலும் பாரபட்சம் தான். ஒரு ஆண்டில் ஆண்கள் அணி ஆடும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 7, பெண்கள் அணி டெஸ்ட் போட்டிகளை ஆடுவதே இல்லை.

ஒரு ஆண்டில் ஆண்கள் அணி ஆடும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை 24, பெண்கள் அணி ஆடும் போட்டிகளின் எண்ணிக்கை 18. ஒரு ஆண்டில் ஆண்கள் அணி ஆடும் டி20 போட்டிகளின் எண்ணிக்கை 42, பெண்கள் அணி ஆடும் போட்டிகளின் எண்ணிக்கை 24.

கோலி 7 டெஸ்ட், 24 ஒரு நாள், 42 டி20 போட்டிகளில் ஒரு வருடம் ஆடினால் அவருக்கு பிசிசிஐ போட்டிக்கான சம்பளமாக கொடுக்கும் தொகை - 3.75 கோடி + ஆண்டு ஒப்பந்தம் 7 கோடி ரூபாய் மொத்தமாக 10.75 கோடி ரூபாய்.

இதே இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை எடுத்துக் கொண்டால் 18 ஒரு நாள், 24 டி20 போட்டிகளில் ஒரு வருடம் ஆடினால் அவருக்கு பிசிசிஐ போட்டிக்கான சம்பளமாக கொடுக்கும் தொகை - 1.8 கோடி + ஆண்டு ஒப்பந்தம் 50 லட்ச ரூபாய் மொத்தமாக 2.3 கோடி ரூபாய்.

கோலிக்கும், கவுருக்குமான வித்தியாசமே 8.45 கோடி ரூபாய்
இதை எப்படி ஆண் வீரர்களுக்கு இணையான சம்பளம் என சொல்ல முடியும்.

Address

7095, Mettu Street
Pudukkottai
622002

Telephone

9962605041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sriram Sathiyamoorthy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sriram Sathiyamoorthy:

Videos

Share


Other Pudukkottai media companies

Show All