Ponnamaravathiexpress

Ponnamaravathiexpress பொன்னமராவதி பகுதிகளின் செய்திகள் அன?

 #பொன்னமராவதியில் தீ விபத்து
14/12/2023

#பொன்னமராவதியில் தீ விபத்து

14/12/2023
14/12/2023

09/12/2023

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி பூதன்வளவில் ஸ்ரீபட்டவன் சுவாமி கோயிலில் சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யந...
03/12/2023

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி பூதன்வளவில் ஸ்ரீபட்டவன் சுவாமி கோயிலில் சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

நெல் கமிஷன் மண்டியை  உடைத்து மூன்று லட்சம் பணம் கொள்ளை சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்யுடன் தப்பிச்சென்ற கொள்ளைக...
15/11/2023

நெல் கமிஷன் மண்டியை உடைத்து மூன்று லட்சம் பணம் கொள்ளை சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்யுடன் தப்பிச்சென்ற கொள்ளைகள் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை

புதுக்கோட்டை மாவட்டத்தின் நேற்று பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்
17/10/2023

புதுக்கோட்டை மாவட்டத்தின் நேற்று பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்

20/09/2023

உடலுக்கு பாதிப்பில்லாமல் இயற்கையாக விவசாயம் செய்ய ஆசையாக உங்களுக்காக பொன்னமராவதியில் இப்போது!

பொன்னமராவதி பகுதியில் மாடி தோட்டம் மற்றும் விவசாயத்திற்கு இயற்கை முறையில் தயாரிக்கபட்ட * #ஜீவாமிர்தம்* தேவைபடுவோர் தொடர்...
17/09/2023

பொன்னமராவதி பகுதியில் மாடி தோட்டம் மற்றும் விவசாயத்திற்கு இயற்கை முறையில் தயாரிக்கபட்ட * #ஜீவாமிர்தம்* தேவைபடுவோர் தொடர்புக்கு 8270297211

காரையூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியில்கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது
09/09/2023

காரையூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியில்
கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது

 #புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம்  #கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
04/09/2023

#புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் #கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

இந்த பைக் ஆக11 இரவு 11 40 மணியளவில் திருக்கழம்பூர் பள்ளிவாசல் தெருவில் தொலைந்து விட்டது இந்த பைக்கை பார்த்தால் உடனடியாக ...
21/08/2023

இந்த பைக் ஆக11 இரவு 11 40 மணியளவில் திருக்கழம்பூர் பள்ளிவாசல் தெருவில் தொலைந்து விட்டது இந்த பைக்கை பார்த்தால் உடனடியாக இந்த போன் நம்பருக்கு அல்லது பொன்னமராவதி
காவல்துறையினருக்கு தெரியப்படுத்துங்கள்

21/08/2023  #நாளேடு
21/08/2023

21/08/2023 #நாளேடு

சாலையை சீரமைக்க கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா  #கண்டியாநத்தம் ஊராட்சி மக்கள் வரும் வெள்ளி அன்று  #பஸ் மற...
30/05/2023

சாலையை சீரமைக்க கோரி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா #கண்டியாநத்தம் ஊராட்சி மக்கள் வரும் வெள்ளி அன்று #பஸ் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர்
District Collector, Pudukkottai

பொன்னமராவதியில் திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திட்டம்: சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார...
04/04/2023

பொன்னமராவதியில் திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை திட்டம்: சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உடன்பிறப்புகளாய் இணைவோம் திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர்கள் புதிய சேர்க்கை திட்டத்தின் படி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முழுவதும் திமுகவினர்
உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற உறுப்பினர் சேர்க்கை திட்டத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டது. அவ்வகையில் பொன்னமராவதி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் உடன்பிறப்புகளாக இணைவோம் என்ற பெயரில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை முகாமை புதுக்கோட்டை திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏராளமான ஆண்கள், பெண்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி,வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகரக் கழக செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், இளைஞரணி இளையராஜா, தகவல் தொழில்நுட்பபிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா, பேரூராட்சி துணைத்தலைவர் வெங்கடேசன், சீமாட்டி லத்தீப், ஆலவயல் அழகப்பன் அம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நம்ம முதலாளி நல்ல முதலாளி புதுக்கோட்டையில் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் அரசு பள்ளிக்கு ரூ.50 ஆ...
25/02/2023

நம்ம முதலாளி நல்ல முதலாளி

புதுக்கோட்டையில் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் அரசு பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் திருக்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மாரிமுத்து (வயது 35). இவர் சிங்கப்பூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் மாரிமுத்துவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, மாரிமுத்து தனது திருமணத்திற்கு வருமாறு அவரது முதலாளியும், தொழில் அதிபருமான கெல்வின்யாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார். இதையடுத்து, மாரிமுத்துவுக்கு நித்யா (28) என்பவருடன் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்- மங்களநாயகி அம்பாள் கோவிலில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்துக்கு வந்த கெல்வின்யாவ் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்தார். பின்னர் அவருக்கு ஊரின் எல்லையில் இருந்து சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க மாரிமுத்துவின் உறவினர்கள் தடபுடலாக வரவேற்பு அளித்தனர். திருமணம் முடிந்த பிறகு மணமக்களை வாழ்த்தி விட்டு அங்கு வந்திருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், நண்பர்களோடு பந்தியில் அமர்ந்து அசைவ உணவுகளை சாப்பிட்டார். பின்னர் அருகே இருந்த திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவ- மாணவிகளுக்கு காமராஜர் புத்தகம் மற்றும் தலா ரூ.500 வழங்கி பாராட்டினார். பின்னர் மாணவ-மாணவிகளின் திறமைகளை கேட்டறிந்தார். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரத்தை நன்கொடையாக தலைமையாசிரியர் ரெக்ஸ் ஜூனியான் ரெனியிடம் வழங்கினார். அதன்பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து மாணவ-மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் திருமணத்திற்கு வந்த சிங்கப்பூர் தொழில் அதிபர் அரசு பள்ளிக்கு நிதியுதவி கொடுத்ததை பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வரலாறுமூலவர் : மாரியம்மன்தலவிருட்சம் : நெல்லிமரம்ஊர் : கொன்னையூர்மாவட...
16/02/2023

கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வரலாறு

மூலவர் : மாரியம்மன்

தலவிருட்சம் : நெல்லிமரம்

ஊர் : கொன்னையூர்

மாவட்டம் : புதுக்கோட்டை

#ஸ்தல_வரலாறு :

முன்னொருகாலத்தில் இந்தப்பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ இனத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அதிகாலையில் எழுந்து, பால்கறந்து, தலையில் தூக்கி சென்றுஊருக்குள் சென்று விற்று வருவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில், ஊர்மக்களை பல விசித்திரமான நோய்கள் தாக்கின; இதனால், நிலத்தில் வேலை செய்ய ஆளே இல்லாமல் போனது. விதைத்தவை எல்லாம், நீர்பாய்ச்ச ஆளின்றி, வாடின; கருகின. மழையும் தப்பிவிட... குடிப்பதற்குக் கூட தண்ணீர் கஷ்டம் எனும் அளவுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள். மக்கள் அனைவரும்உலகாளும் நாயகியை வேண்டினர்.

அவர்களின் நோய்கள்யாவும் குணமாக வேண்டும்; மனமெல்லாம் குளிர்ந்து பூரிக்க வேண்டும்; பூமி செழித்து, அனைவருக்கும் வயிறார உணவு கிடைக்க வேண்டும் என யோசித்தவள், பூமிக்குள் புகுந்து கொண்டாள். பாலை எடுத்துக் கொண்டு, வழக்கம் போல் அந்தப் பெரியவர் வரும் போது, கொன்றை மரத்தின் வேர்களில் அவரது கால்கள் பட தடுமாறினார். பால் மொத்தமும் கொட்டியது. மண்ணெல்லாம் பாலாயிற்று. எத்தனை கவனமாக நடந்து போனாலும், இப்படித் தடுமாறுவதும், பால் கீழேமண்ணில் கொட்டி வீணாவதும் தினமும் தொடர்ந்தது. பெரியவர் கவலையானார். ஒருநாள், கோடரியால் அந்தக் கொன்றைமரத்தின் வேரை வெட்டினார். அங்கிருந்து ரத்தமும் பாலுமாக வெளிப்பட, அதிர்ந்து போனார் பெரியவர். விஷயம் தெரிந்து, ஊரே கூடியது. இன்னும் இன்னும் தோண்டிப்பார்க்க.... அழகிய விக்கிரகத் திருமேனியில் வெளிப்பட்டாள்,

தேவி பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்து, மேடான பகுதியில் வைத்தது தான் தாமதம்... உடலையே துளைத் தெடுப்பது போல் பெய்தது, கனமழை கிணறுகளும் குளங்களும் ஊரணிகளும் நிரம்பின; பிறகு வரப்பு வழியே, வாய்க்கால் வழியே வயல்களுக்கு சென்று, விதைகளை குளிரச் செய்தன. தேகத்தைத் துளைத்த மழையால், மக்களின் தோல் நோய்கள்யாவும் நீங்கின.

#கோயில்சிறப்புகள் :

• இங்கு ஊர் மக்கள் ஓலைக் குடிசை அமைத்து, அங்கே அம்மனை வைத்து வழிபடத் தொடங்கினர். ஆரம்பத்தில் ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள் பிறகு காட்டையே ஊராக்கி குடி புகுந்தனர்.

• கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றானது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது. அதே போல், ஓலைக் குடிசையாக இருந்த ஆலயமும் மிகப்பிரமாண்டமான கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டது. அன்று தொடங்கி இன்றளவும் கொன்றையூர் மாரியம்மன் தான், இந்தப் பகுதி மக்களுக்கு விருப்பத் தெய்வம், கண்கண்ட தெய்வம், குல தெய்வம் எல்லாமே!

• குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது சிறப்பு.

• பக்தர்கள் தாங்கள் நினைத்தது நிறைவேறியதும் கண்மலர், உருவ பொம்மை, உப்பு, மிளகு, அமோகமாக விளைந்த நெல் என நேர்த்திக் கடனை செலுத்தி, வணங்குகின்றனர்.

• ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திங்கள் முதல் ஞாயிற்றுக் கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும் அதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாணவேடிக்கையுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால் குடங்களுடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

• உடலில் சகதி பூசி இக்கோயில் அம்மனை வழிபட்டால் வேண்டுதல் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

• அம்மனின் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா பங்குனி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, கோலாகலமாக நடைபெறுகிறது. மறுநாள், அக்னிக் காவடி வழிபாடு. 2 ஆவது ஞாயிற்றுக் கிழமையில் காப்புக்கட்டி, மறுநாளில் இருந்து நடைபெறுகிறது 15 நாள் மண்டகப்படி. இந்த 15 நாட்களும் தினமும் பால் திருமுழுக்கு, மாவிளக்கேற்றுதல், பொன்னமராவதி, செவனூர், ஆலவயல் மற்றும் செம்பூதி என நான்கு நாட்டை சேர்ந்தவர்களும் திரளாக வந்து அம்மனை தரிசித்தல், வெள்ளி ரதத்தில் அம்மன் வீதியுலா எனக் கொன்னையூர் முழுவதும் விழா மகிழ்ச்சியை காணலாம்.

#திருவிழா :

ஆடி அமாவாசை, பங்குனி திருவிழா, தமிழ் மாதப்பிறப்பு

முகவரி:

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
கொன்னையூர்,
புதுக்கோட்டை.

அமைவிடம் :

கொன்னையூர் முத்துமாரியம்மன் தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ள கிராமம் கொன்னையூர். இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது இவ்வூர். ஊரின் மையப் பகுதியில் கோயில் கொண்டு, காத்து வருகிறாள் முத்து மாரியம்மன்.

நன்றி @திருமலைநாகராஜன்

பொன்னமராவதியில் பொங்கல் பொருட்கள்  வாங்க மக்கள் கூட்டம்
14/01/2023

பொன்னமராவதியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம்

12/01/2023
12/01/2023

12/01/2023

இதை உங்க இஷ்டத்துக்கு பயன்படுத்தாதீங்க... அப்புறம் வண்டியைக் காயலான் கடைக்குத்தான் போடனும்...பைக் மற்றும் ஸ்கூட்டர்களில...
15/11/2022

இதை உங்க இஷ்டத்துக்கு பயன்படுத்தாதீங்க... அப்புறம் வண்டியைக் காயலான் கடைக்குத்தான் போடனும்...

பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் சிவப்பு நிறத்தில் ஒரு ஒரு சுவிட்ச் இருக்கும் இந்த சுவிட்சிற்கு இன்ஜின் கில் சுவிட்ச் என பெயர். இன்ஜினை சாவி மூலமாக இல்லாமல் நேரடியாக இன்ஜினை ஆப் செய்வதற்காகப் பயன்படும் சுவிட்ச்.

அதைத் தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில் இன்ஜினிற்கே கூட ஆபத்து ஏற்படலாம். இதைத் தவறாகப் பயன்படுத்தினால் என்னவெல்லாம் ஆகும்? அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களைத் தான் இந்த பதிவில் நாம் விரிவாகக் காணப்போகிறோம்.

இன்றைய காலங்களில் பெரும்பாலான பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் இந்த இன்ஜின் கில் சுவிட்ச் இருக்கிறது. இந்த சுவிட்சை பயன்படுத்தி வாகனத்தை நிறுத்தலாம். இது பெரும்பாலும் வாகனத்தின் வலது பக்க ஹேண்ட்பர் பகுதியில் இருக்கும். இது பைக், ஸ்கூட்டரை எளிதாக இயக்குவதற்காக வழங்கப்பட்ட ஒரு வசதி தான். இது நேரடியாக இன்ஜின் காயிலில் உள்ள தொடர்பைத் துண்டிக்கும். அதனால் இன்ஜின் ஆஃப் ஆகும். இதைத் தவறாகப் பயன்படுத்தினால் வாகனமே சேதமாகும் நிலை கூட ஏற்படும்.

பைக்கின் மைலேஜ் குறையும்

இன்ஜின் கில்சுவிட்சை அடிக்கடி பயன்படுத்தினால், மீண்டும் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் போது அதிகமான பெட்ரோல் தேவைப்படும். சிலர் சிக்னலில் நிற்கும் போது அல்லது தற்காலிகமாக சில நிமிடங்கள் நிற்கும் போது கூட இந்த சுவிட்ச் மூலம் இன்ஜினை ஆப் செய்து பின்னர் ஆன் செய்கின்றனர். இதனால் பெட்ரோல் அதிகம் செலவாகி பைக்கின் மைலேஜ் குறையும்.

செஃல்ப் மோட்டார் பாதிக்கப்படும்

அடிக்கடி இந்த கில் சுவிட்சை பயன்படுத்தி பைக்கை ஆஃப் செய்தால் பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது செல்ஃபை பயன்படுத்துவார்கள். இதனால் செல்ஃப் மோட்டாரின் ஆயுள் குறையும். இன்று வரும் சில பைக்குகளில் கிக்கர்களே கிடையாது. அப்படியான பைக்குகளில் செல்ஃப் பாதிக்கப்பட்டால் பைக்கை ஸ்டார்ட் செய்வதே பெரிய தலைவலியாக மாறிவிடும்.

பேட்டரி லைஃப் குறையும்

இன்ஜின் கில் சுவிட்ச் நேரடியாக பேட்டரியுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதை தேவையில்லாமல் அடிக்கடி பயன்படுத்தினால் இன்ஜின் கில் சுவிட்சை பயன்படுத்தும் போது எல்லாம் பேட்டரி ஆக்டிவேட் ஆகும். இதனால் பேட்டரியின் வாழ்நாள் குறையும்.

இன்ஜின் பாதிக்கப்படும்

அடிக்கடி பைக்கை ஆஃப் செய்து ஆன் செய்வது நேரடியாக இன்ஜினில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படியாக நீங்கள் தொடர்ந்து இன்ஜின் கில் சுவிட்சை பயன்படுத்தினால் பைக்கின் இன்ஜினை கூட இது பாதித்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பொன்னமராவதி அரிமா பள்ளியில்  கலிக்கம்  கண்ணுக்கு மருந்திடும்  நிகழ்வு
16/10/2022

பொன்னமராவதி அரிமா பள்ளியில் கலிக்கம் கண்ணுக்கு மருந்திடும் நிகழ்வு

16/10/2022

பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் திருவிளக்குப்பூஜை
நன்றி:சுதாகர்

பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் ராமாயணம் படித்து பட்டாபிஷேக விழா மற்றும் திருவிளக்குப்பூஜை நடந்தது
16/10/2022

பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் ராமாயணம் படித்து பட்டாபிஷேக விழா மற்றும் திருவிளக்குப்பூஜை நடந்தது

 #மேலத்தானியத்தில் கிரிக்கெட் போட்டி #பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் கிரிக்கெட்  போட்டி நடைபெற்றது.இதில் புதுக்...
24/09/2022

#மேலத்தானியத்தில் கிரிக்கெட் போட்டி

#பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் புதுக்கோட்டை,திருச்சி, சிவகங்கை,மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டது.இதில் முதல் பரிசை திருமலைகுடி அணியினரும், இரண்டாம் பரிசை மேல த்தானியம் அணியினரும்,மூன்றாம் பரிசை வையாபுரிப்பட்டி அணியினரும்,நான்காம் பரிசை பொன்னமராவதி அணியினரும் வெற்றி பெற்றனர்.பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த போட்டியை மேலத்தானியம்,காரையூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தமிழகத்தில்  #புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி வட்டத்தில் இருக்கும் கிராமம்திருக்களம்பூர். இவ்வூரில் அருள்மிகு கதலி...
13/09/2022

தமிழகத்தில் #புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி வட்டத்தில் இருக்கும் கிராமம்

திருக்களம்பூர். இவ்வூரில் அருள்மிகு கதலிவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் சுவாமி

சுயம்புலிங்கம். அதைச்சுற்றி பிரகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்பு. இங்குள்ள வாழைமரத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதே. வெட்டிக்கொத்துவதோ இல்லை. இந்த வாழையை வெளியே கொண்டு வந்து வைத்தாலும் உண்டாகாது. வெளியே உள்ள வாழையை உள்ளே வைத்தாலும் உண்டாகாது. இலை,காய்,பூ,நார், தண்டு, கிழங்கு எதுவும் மனிதர்கள்.அபிஷேகம் செய்வதற்கு முன் சாப்பிட்டால் உடப்பு முழுவதும் வெண்குஷ்டம் வந்துவிடும். பழம் பார்க்க மலைப்பழமாக இருக்கும். உரித்தால் ரஸ்தாளி செவ்வாழை என்று கூற முடியாது. மரத்தை வெட்டினால் சிவப்பு திரவமாக வரும். இதுவே இம்மரங்களின் சிறப்பாகும். இந்த ஊரில் வால்மீகி முனிவர் தபோவனம் அமைத்திருந்தார். அதனால் திருக்கரம்பூர் என்ற பெயருமுண்டு. அவர் இறைவனை இதயத்தில் ஆட்கொண்டதால் திருக்குரம்யாண்ட நாயனார் என்ற பெயரும் இறைவனுக்கு அதனால் உண்டு. ஸ்ரீ சீதாதேவி கர்ப்பிணியாக இருக்கும்போது கொண்டுவந்து விட்ட இடம் இந்த இடம்.

ஸ்ரீ லவனும், ஸ்ரீ குசனும் பிறந்த இடம் இது ஸ்ரீசீதாதேவி. வால்மீகி முனிவர் ரிஷிபத்தினிகள் மற்றும் மாணவர்கள் இந்த வாழைப்பழத்தைத் தான் சாப்பிட்டு பசி ஆறி இருக்கிறார்கள். ஒரு கை அளவு பஞ்சாமிர்தம் சாப்பிட்டால் ஒருநாள் முழுவதும் பசிக்காது. குழந்தைகள் இருவரும் இளமைப்பருவம் அடைந்து விட்டதால் இளவரசுப்பட்டம் கட்ட

வேண்டும் என்று ஸ்ரீசீதாதேவி இறைவனிடம் வேண்ட இறைவனும் அசரீரியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன் என்று கூறினார். சீதாதேவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படி இருக்கும் போது ஸ்ரீ ராமருடைய அசுவமேதக் குதிரை இவ்வழியாக வந்தது. அதில் இந்தக் குதிரையை யாரும் பிடித்துக்கட்டக் கூடாது என்றும் வணங்கி வழிவிட வேண்டும் என்று எழுதி இருந்தது. இந்த வாசகத்தைப் பார்த்த ஸ்ரீலவனும், ஸ்ரீகுசனும் அந்த குதிரையை இங்கே உள்ள வாழைமரத்தில் பிடித்துக் கட்டிவிட்டார்கள். அதை மீட்க வந்த இலட்சுமணன் மற்றும் படைபட்டாளங்களை மயக்கநிலை அடையைச் செய்தார்கள். கடைசியாக ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி குதிரையை மீட்க வரும்போது ஸ்ரீலவனும், ஸ்ரீகுசனும் எதிர்த்து போரிட்டார்கள். ஸ்ரீ ராமரும் போரிட்டார். இருதரப்பிலும் யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. அந்த நேரத்தில் ஸ்ரீ வால்மீகி ரிஷி வந்து ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியிடம் இது வேறுயாருமல்ல உன்னுடைய மகன்களும் மனைவியும் தான் என்று அறிமுகம் செய்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் பழுத்த பின்னர் பஞ்சாமிர்தம் செய்து சாமிக்கு அபிஷேகம் செய்த பினனர் சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள வியாதிகள் குணமாகும்.வைத்தார். இரண்டு பேரும் சேர்ந்ததற்கு அடையாளமாக ஸ்ரீ மகாகணபதியை உளியால் அடிக்காமல் ஒரு பெரிய கல்லை சிறிய கல்லால் தட்டி விநாயகர் ஆக்கினார்கள். அதை பிரதிஷ்டை செய்தார்கள். அதனால் ஸ்ரீ தசரதமகாராஜர் ஒரு குடையின் கீழ் ஆண்ட சூரிய குலத்திற்கே முன்ஜென்ப பாவம் நீங்க வாழைக்காய் பரிகாரம் செய்தால் நீங்கிவிடும். யுகங்கள் தாண்டி கன்னிமூல ஸ்ரீ மகாகணபதியும் வாழைமரத் தோட்டங்களும் இருந்தது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். சோழமன்னன் மேல் படையெடுத்துச் செல்லும்போது வழியில் வாழைமரங்களுக்கிடையே கோயில் தெரிந்ததை பார்த்து விட்டு அங்கே உள்ளே செல்லும் போது பாண்டிய மன்னரின் குதிரை கால்குழம்பு சுவாமியின்மேல் பட்டு சிவலிங்கம் மூன்று பிளவுகள் ஆகி அதில் இருந்து குருதி கொட்டியது. இதனால் கண்பார்வை இழந்த மன்னன் இறைவனிடம் இறைவா நான் அறியாமல் செய்த பிழையை மன்னிக்க வேண்டும். எனக்குக்கண்பார்வை வரவேண்டும் என்று வேண்டினார்" இறைவனும் அரசனின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கே ஒரு ஆலயம் எழுப்பித்தா எனக்கு. உனக்கு கண்பார்வை கிட்டும் என்று உறுதி கூறவே இறைவன். மன்னருக்கு கண்பர்வையை கொடுத்து அருளினார். அதனால் ஸ்ரீ வைத்தியநாதசுவாமி என்ற பெயருமுண்டு. வாழைத்தோட்டத்தில் இருப்பதால் கதலிவனேஸ்வரர் என்ற பெயருமுண்டு. பாண்டிய மன்னர் கோயில் கட்டினார். இறைவனுக்கு அவர் எங்கே கோயில் கட்டினாலும் ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் இல்லாமல் கோயில் கட்டுவது இல்லை. ஸ்ரீமீனாட்சி சொக்கநாதருக்கு தனிக்கோயில் பிரகாரத்தில் ரிஷிபாரூடன் கட்டினார். இக்கோயில் திருமணம் ஆகாதவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வியாழக்கிழமை பள்ளிக் குழந்தைகளுக்குப் பாயாசம் வைத்துக் கொடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும், அபிஷேக ஆராதனை செய்தால் ஒரு மாதத்தில் திருமணம் நடப்பது உறுதியாகும். பிரிவினை ஆன குடும்பத்தில் கணவன் மனைவி இருவரில் யார்,
ஆலயத்தை 108 முறை சுற்றி, குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்க. ஒருவாரத்தில் குடும்பம் ஒன்று சேரும்.

தீராத வியாதிகள் உடம்பில் இருந்தால் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் இவைகளை சுவாமிக்கு அபிஷேகம் செய்தபின் சாப்பிட நோய்கள் தீரும்.

ஆதிசங்கரர் சுவாமி தரிசனத்திற்கு இங்கே வந்தபோது அம்பாள் இல்லாமல் தரிசனம் செய்ய இயலாது என்பதால் அம்பாளை பிரதிஷ்டை செய்ய சுவாமியே சுவாமியைப் பார்ப்பது போல் எதிரே கிழக்கே ஸ்ரீதிருவளர் ஒளிஈஸ்வரர் ஸ்ரீசௌந்தர்நாயகி என்ற கோயிலை எழுப்பி அதன் பின்னரே அம்மன் கோயிலில் அம்மனை பிரதிஷ்டை செய்தார். அதனால் ஸ்ரீகாமகோடிஸ்வரி என்ற பெயருமுண்டு. ஸ்ரீ ஆதிசங்கரர் காசிக்கு மடாலயம் அமைக்கச் சென்ற போது காசி மன்னரிடம் உனக்கு பூர்வ ஜென்ம பாவம் உள்ளது. அதை நீக்க வேண்டும். என்றால் தமிழ்நாட்டில் திருக்களம்பூர் உள்ளது. அங்கே ஸ்ரீகதலிவனேஸ்வரர். ஸ்ரீவைத்தியநாதசுவாமி காமகோடீஸ்வரி சமேதராக வீற்றிருக்கிறார். அங்கே சென்று இருவரையும் வழிபட்டால் உனக்குப் பூர்வஜென்ம பாவம் தீரும் என்று கூறியிருக்கிறார். அதற்குக் காசி மன்னர் பாவங்களை தீர்க்க எல்லோரும் காசிக்கு வருகிறார்கள். அங்கே செல்லச் சொல்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். காசி பாவம் தீர்க்கக் கூடியது தான் பாவங்கள் நீங்கி நோய்கள் நீங்கி சொர்க்கம் அடைகிற இடம் காசி. ஆனால் திருக்களம்பூரில் தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி நோய்கள் நீங்கி வாழையடி வாழையாக வளர்ச்சி அடையளாம். குடும்பம், செல்வாக்கு, வாரிசு அடையலாம். குடும்பம், செல்வம், செல்வாக்கு, வாரிசு, தொழில், நற்பெயர் ஆகியவை வளர்ச்சி அடையும் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டு காசி மன்னன் இங்கே வந்திருக்கிறார். அதுசமயம் இருட்டாக இருக்கவே காலையில் சாமிதரிசனம் செய்யலாம் என்று தங்கியிருக்கிறார். இரவில் மன்னரின் கனவில் வயோதிக ரூபத்தில் உனக்கு வசதி வாய்ப்பு உள்ளது என்னைப்போல வயோதிகரால் எப்படி காசிக்கு வரமுடியும் என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மன்னன் கேட்டுள்ளார்.
நீ கொண்டு வந்துள்ள விஸ்வநாதரையும். விசாலாட்சியையும் பிரதிஷ்டை செய்ய எல்லோரும் காசிக்கு வந்து தரிசனம் செய்த பலன் கிடைக்கும். உனக்கு பாவம் தீரும் என்று கூறியிருக்கிறார். காலையில் உதயமாகிய நாழிகையில் விஸ்வநாதர் விசாலாட்சி பிரதிஷ்டை செய்யப்பெற்றது. திருக்களம்பூர் அருள்மிகு கதலிவனேஸ்வரர் திருக்குரம்பு நாயகி (காமகோடீஸ்வரி) சமேத வைத்தியநாத சுவாமி ஆலயத்திற்கு வந்தால் மதுரை மீனாட்சி சொக்கநாதர். காசி விஸ்வநாதர் விசாலாட்சி, காஞ்சி காமகோடீஸ்வரி இவர்களைத் தரிசனம் செய்த பலன் உண்டு. 1008 சிவாலயங்களைத் தரிசனம் செய்த பலனும் உண்டு.

திருமணம் வேண்டி வருபவருக்கு, குழந்தை வரம் வேண்டுவோருக்கு, தீராத நோய் தீர வேண்டி வருபவருக்கு நோய் தீர்க்கக் கூடிய மருந்துண்டு. செல்வம், செல்வாக்கு அடைய, வாழ்க்கையில் சந்தோஷம் அடைய என அனைத்திற்கும் இங்கே பரிகாரம் உண்டு.

மின்தடை
13/09/2022

மின்தடை

பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சியில் வள்ளல்பாரி நற்பணிமன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. புதுக்...
10/09/2022

பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் ஊராட்சியில் வள்ளல்பாரி நற்பணிமன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் வள்ளல்பாரி நற்பணி மன்றம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. திருக்களம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் இராமாயி மணி தலைமையில் கதலிவனேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ள தெப்பக்குளத்தின் நான்கு கரை பகுதியிலும் புளி,நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஐம்பது மரக்கன்றுகள்
நடப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மணி, கூட்டுறவு சங்கத்தலைவர் இராசமாணிக்கம்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, கிராம நிருவாகக்கு ழுத்தலைவர் உதயகுமார், செயலாளர் செல்வம்,பொருளாளர் மாசிலாமணி, முத்தமிழ்மன்றத்தலைவர் சண்முகவேல், பொருளாளர் சிங்காரம், ஓய்வு பெற்ற கால்நடை மேற்பார்வையாளர் நெடுஞ்செழியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் கேசவன், வைத்தியநாதன், அழகு, சோமன், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.மேலும்
வள்ளல்பாரி நற்பணி மன்றத்தலைவர் பழனிச்சாமி, செயலாளர் வைரவமூர்த்தி, பொருளாளர் குணசீலன், துனைத்தலைவர் மணி, துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியம், மன்றத்தின் முன்னாள்தலைவர் நெ.இராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் கலைவாணன், முன்னாள் பொருளாளர் சுப்பிரமணியன்,முன்னாள் துணைச்செயலாளர் தம்பிராஜா, கோபால், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடனிருந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Address

Ponnamaravathi
Pudukkottai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Ponnamaravathiexpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share