Nagai Press Club

Nagai Press Club This is the official page of Nagai Press Club (நாகை பத்திரிகையாளர் மன்றம்)

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நியூஸ் 7 செய்தியாளர் திரு. நேசபிரபு மீது நடந்த கொலைவெறித் தாக்குதலை நாகை பத்திரிகையாளர...
25/01/2024

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நியூஸ் 7 செய்தியாளர் திரு. நேசபிரபு மீது நடந்த கொலைவெறித் தாக்குதலை நாகை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இன்று நாகப்பட்டினத்தில் செய்தியாளர்கள் மற்றம் சமூக ஆர்வலர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இந்த கொடுஞ்செயல் செய்தோரை உடனே கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் மாவட்ட காவல், திருப்பூர் மாநகர காவல் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

இவர்கள்,
நாகை பத்திரிக்கையாளர் மன்றம்

பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல்நாகை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில...
25/01/2024

பல்லடம் நியூஸ் 7 நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல்

நாகை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைக்காட்சி நிருபராக இருந்து வருபவர் நேசபிரபு.

இவர் கடந்த சில நாட்களாக மதுக்கடைத் தகராறுகள் குறித்து செய்தி வெளியிட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சில சமூகவிரோதிகள் தன்னைக் கண்காணிப்பதையும், தாக்க முயற்சிப்பதையும் உணர்ந்து காவல்துறையினருக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு அந்த சமூகவிரோத கும்பல் நேசபிரபு மீது, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மோசமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

பலத்த காயங்களுடன் கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவுடிக் கும்பலின் தாக்குதலை நாகை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

முன்பே தகவல் கொடுத்திருந்தும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது மிகமோசமான முன்னுதாரணம்.

எனவே, தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காவல்துறையினர் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பட்டமான கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தி நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். எந்த வகையிலும் தப்பிவிடாத வகையில் அவர்கள் மீதான சாட்சியங்களை வைத்து தண்டனை பெற்றுத்தர திருப்பூர் மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் நேரடி கவனம் செலுத்தி, இதுபோன்ற ரவுடித்தனங்கள் பிற மாவட்டங்களில் நேரிடாத வகையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நாகை பத்திரிகையாளர் மன்றம் கோருகிறது.

பலத்த காயமடைந்த நிருபர் நேசபிரபுவுக்கு உயர் சிகிச்சை அளிப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

இப்படிக்கு,
சே.சகாதேவன், தலைவர்
எஸ்.பார்த்திபன், செயலாளர்
மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்.
நாகை பத்திரிகையாளர் மன்றம்.

தேசிய பத்திரிகை தினம்💐 நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம்வர்கீஸ் அவர்கள் நாகை மாவட்ட செய்தியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார...
16/11/2023

தேசிய பத்திரிகை தினம்💐 நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம்வர்கீஸ் அவர்கள் நாகை மாவட்ட செய்தியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்💐

நாகை மாவட்ட ஆட்சியர் திரு.ஜானிடாம் வர்கீஸ், அவர்கள் தலைமையில் நாகை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று மாவட்ட செய...
04/08/2023

நாகை மாவட்ட ஆட்சியர் திரு.ஜானிடாம் வர்கீஸ், அவர்கள் தலைமையில் நாகை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று மாவட்ட செய்தியாளர்களின் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்தியாளர்களின் தார்மீக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஆட்சியர் உறுதியளித்தார். சில கோரிக்கைகளை உடனடியாக செய்து முடித்தார். செய்தியாளர்களின் குறைதீர் கூட்டம் இனிமேல் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியருக்கு மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் திரு.மீ.செல்வக்குமார். அவர்கள், உதவி செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் அண்ணாகலைஞர் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
Nagai Press Club

16.11.2022 இன்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு வாழ்த்து த...
16/11/2022

16.11.2022 இன்று தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாகையில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகளை மாவட்ட ஆட்சியர் திரு. டாக்டர். அ. அருண்தம்புராஜ், அவர்கள் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தில் 50 வயதை கடந்தும் செய்தித்துறையில் பணியாற்றும் மூத்த செய்தியாளர்கள் வின் டிவி செய்தியாளர் எஸ்.பார்த்திபன், அவர்கள், தினபூமி செய்தியாளர் முருகேசன் அவர்கள், நமது எம்ஜிஆர் செய்தியாளர் R.கண்ணன், அவர்கள் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார். நிகழ்வில் நாகை மாவட்டத்தில் பணிபுரியும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் மூத்த செய்தியாளர்கள், இளம் செய்தியாளர்கள் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் நாகை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இவன்,
நாகை பத்திரிக்கையாளர் மன்றம்
Nagai Press Club

நாகை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி நாகை மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலை...
19/10/2022

நாகை பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி நாகை மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அடையாள அட்டையை வழங்கிய நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.திரு. அருண் தம்புராஜ் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த நாகை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் திரு. செல்வக்குமார் அவர்களுக்கும் நாகை பத்திரிகையாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்!

இவன்,
நாகை பத்திரிகையாளர் மன்றம்
Nagai Press Club

வருந்துகிறோம். திருவாரூர் மாவட்ட நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் திரு.செந்தில்குமரன் அவர்கள் உடல்நிலை சரியில...
08/08/2022

வருந்துகிறோம். திருவாரூர் மாவட்ட நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் திரு.செந்தில்குமரன் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 07.08.2022 அன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகைதுறை சார்ந்த உறவுகள் அனைவரின் துயரத்திலும் நாகை பத்திரிகையாளர் மன்றம் பங்கு கொள்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

இவண்,
நாகை பத்திரிகையாளர் மன்றம்,
நாகப்பட்டினம்

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தலைமையேற்ற பின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் ஜூலை 18 அன்று காலையில் நா...
19/07/2022

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தலைமையேற்ற பின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் ஜூலை 18 அன்று காலையில் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலக அறையில் நடைபெற்றது. நாகை பத்திரிகையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு:நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்தல் 14....
19/07/2022

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு:

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்தல் 14.07.2022 அன்று மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்:
திரு. எஸ். சகாதேவன்

துணைத் தலைவர்கள்:
திரு. பி. கந்தவடிவேல்
திரு. என். முருகேசன்

செயலாளர்:
திரு. எஸ். பார்த்திபன்

இணைச் செயலாளர்கள்:
திரு. ஆர். விஜய்
திரு. வி. மூர்த்தி

பொருளாளர்:
திரு. எஸ். செய்யது நிஜாமுதீன்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
💐💐❤💐💐

அ.தி. அன்பழகன்,
தேர்தல் அலுவலர் &
உணவு பாதுகாப்பு அலுவலர்,
நாகப்பட்டினம்

ப. அந்துவன்சேரல்,
உதவி தேர்தல் அலுவலர் & புள்ளியியல் அலுவலர்,
நாகப்பட்டினம்

இடம்: நாகப்பட்டினம்
நாள்: 14.07.2022

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்:ஜூலை 14, 2022 அன்று நாகை பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்தில...
19/07/2022

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்:

ஜூலை 14, 2022 அன்று நாகை பத்திரிகையாளர் மன்ற அலுவலகத்தில் மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மக்களாட்சி முறைப்படி தேர்தல் நடைபெற்றது. இதில் நாகை பத்திரிகையாளர்கள் நேரடியாகவும், வாட்சன் செயலி மூலமாகவும் வாக்களித்தனர். நாகை உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி. அன்பழகன் தேர்தல் அலுவலராகவும், புள்ளியியல் அலுவலர் ப. அந்துவன்சேரல் உதவி தேர்தல் அலுவலராகவும் இருந்து முன்னின்று தேர்தலை நேர்மையாக நடத்தினர். தேர்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை உறுதுணையாக இருந்தது.

19/07/2022
நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய அலுவலகம் திறப்பு:ஜூன் 24, 2018 அன்று அன்றைய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அ...
19/07/2022

நாகை பத்திரிக்கையாளர் மன்றத்தின் புதிய அலுவலகம் திறப்பு:

ஜூன் 24, 2018 அன்று அன்றைய தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஓ.எஸ்.மணியன் நாகை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அன்றைய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய் மற்றும் அன்றைய நாகை மாவட்ட வருவாய் அலுவலர் திரு முருகேசன் முன்னிலை வகித்தனர். அவ்விழாவில் பத்திரிகையாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

19/07/2022

Address

Nagapattinam
611001

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagai Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nagai Press Club:

Share


Other Nagapattinam media companies

Show All