13/02/2023
கிவேதன் என்ற நாமம் என் சகோதரனுக்கு
ஆம் அவன் விவேகமானவன்
படிப்பில் பட்டம் பெற்று
துடிப்பாய் வாழ்ந்தவன்
கடின உழைப்பால் வாழ்க்கையை வென்றவன்
பல்கலைக்கழகம் கற்று
நல்நிலை பெற்றவன்
தமிழகரத்தில் ஒலித்தது அவன் தங்கமான குரல்
வெள்ளை மனதுடையோன்
கொள்ளை அழகுடையோன்
எல்லாம் பெற்று அவன் இல்வாழ்க்கையில்
இணையவிருக்கும் போதா
கொஞ்சமும் இரக்கமில்லா வஞ்சகன் அவன் என் சகோதரனைனுயிரைப் பறித்தது
படித்துக் கொடுத்த பாலகர்களோடு
அவனும் விடைபெற்றானோ?
தவிக்கிறது மனம்
ஏன் சென்றாயோ? அவ்விடம்
காந்தக் குரலோனே!
இனி மண்ணில் எப்போது உன் குரல் ஒலிக்கும்
எப்போது உன் முகம் ஜொலிக்கும்
உன் சேவை முடிந்ததோ இவ்வளவு சீக்கிரம்...
திருமணபந்தத்தில் இணையவிருந்தாய் மகிழ்வாய்
பிணபந்தமாய் செல்லவோ? என் செய்வோம் இறைவா உன் திருவிளையாடலும் ஓர் இரகசியம்தான் கிவேதா? சகோதரா உன் சேவையில் மிகவேகமாய் ஓய்வெடுத்தாயோ?
நீ மறைந்தாலும்
உன் குரல் என்றும் பலரில் வாழும் .... எம்மைவிட்டுப் பிரிந்தாலும் உன் நினைவுகள் என்றும் எம்முடன்
விண்ணோடு சேர்ந்த உனக்கும் உன்னோடு சேர்ந்த மழலைகளுக்கும் கண்ணீர் காணிக்கை தவிர எம்மிடம் வேறேதுமில்லை
உங்கள் ஆத்மா சாந்தி பெறட்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஓம் சாந்தி... சாந்தி.. சாந்தி....