27/04/2024
🙏இன்று சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி 🙏
🌹விக்கினங்களை தீர்க்கக் கூடியவர் விநாயகப் பெருமான். இவருக்குரிய அனைத்து சதுர்த்திகளும் வழிபாட்டிற்கு
உகந்ததாகும். அப்படி சித்திரை மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விகட் சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். விகட் என்றால் பயம் என்று பொருள் என்ன ஆகுமோ என் வாழ்க்கையில் பலவித கஷ்டங்களால் ஏற்படும் பயத்தைப் போக்க கூடிய சங்கடஹர சதுர்த்தி இதுவாகும். சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டால்
நிறைவேறாமல் பாதியில் நிற்கும் காயங்கள், நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் கைகூடி வரும்.
🌹 விநாயகப் பெருமான் எளிமையான தெய்வம் என்பதால்,
ஓம் கணேசாய நமஹ என சொல்லி வழிபட்டாலே ஓடி வந்து அருள் செய்வார்.
தடைகள், பயங்கள், பிரச்சனைகள் ஆகிய அனைத்தும் தவிடு பொடியாக்கி, விருப்பங்களை நிறைவேற்றி வைக்கக்கூடிய ஆற்றல் உடையது சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும்.
🌹 சதுர்த்தி என்றாலே அது விநாயகருக்குரிய திதியாகும். முழுமுதற் கடவுள் ஆன விநாயகப் பெருமான் சங்கடங்களை நீக்கி, சந்தோஷத்தையும் வெற்றியும் அருளக் கூடியவர். இவருக்குரிய சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபடுவதால் அவரின் பரிபூரணமான அருளைப் பெற முடியும். மாதத்திற்கு இரண்டு முறை சதுர்த்தி திதி வருவதுண்டு. இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அறுக்கக் கூடியது. சங்கடங்களை அறுத்து நன்மைகளை வழங்கக் கூடிய சதுர்த்தி என்பது இதற்குப் பொருள். வாழ்வில் இருக்கும் எப்படிப்பட்ட சங்கடம், துன்பம், கஷ்டம், தடைகள், பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடலாம்.
🌹 சித்திரை சங்கடஹர சதுர்த்தி 🌹
ஒவ்வொரு மாதத்திலும் வரும் சதுர்த்திக்கு ஒவ்வொரு சிறப்பு இருப்பது போல் தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு பணக்கஷ்டங்கள், குடும்ப கஷ்டங்களை தீர்க்கும் ஆற்றல் உண்டு. இன்று சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி. சனி தோஷம் உள்ளிட்ட கிரக தோஷங்களால்
பாதிக்கப்பட்டு, பல விதமான சங்கடங்களை அனுபவிப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்தால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக குறையும். இன்று காலை 07.34க்கு துவங்கி நாளை 07.06 வரை சதுர்த்தி திதி உள்ளது. இதனால் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள் இன்று அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு விரதத்தை துவங்கி விட வேண்டும். முழுவதுமாக உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். வீட்டில் விளக்கேற்றி விநாயகர் நாமங்களை சொல்லி விரதத்தை துவங்கலாம். மாலையில் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று, சிவப்பு நிற மலர்கள் மற்றும் அருகம்புல் வாங்கி கொடுங்கள். முடிந்தால் உங்கள் கைகளால் அருகம்புல் மாலை கொடுப்பது சிறப்பாகும்.
🌹சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை 🌹
கோவிலில் நடக்கும் அபிஷேக ஆராதனை, பூஜைகளை பார்த்து முடித்துவிட்டு, விநாயகரை 3 அல்லது 8 முறை வலம் வந்து வணங்க வேண்டும். பிறகு சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து, விநாயகரிடம் மனம் விட்டு உங்களின் வேண்டுதல்களை அல்லது மனக் குறைகளை சொல்லி முறையிடுங்கள். உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு வீட்டிற்கு வந்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றி, உங்களால் முடிந்த நைவேத்தியம் படைத்து வழிபடுங்கள்.
🌹சதுர்த்தி விரத பலன்கள் 🌹
சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபடுவதால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம், கடன் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி பிரச்சினை நீங்கி ஒற்றுமை ஏற்படும். நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
அதிலிருந்து விடுபடுவதுடன், நல்ல ஆரோக்கியமும் பெறுவார்கள். வேலை, திருமணம் தள்ளிப் போகிறது என கவலைப்படுபவர்களுக்கு நல்ல வேலையும் நல்ல துணையும் அமையும்.
🙏ஓம் விக்னே விநாயகா போற்றி போற்றி 🙏
அனைவருக்கும் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி நல்வாழ்த்துக்களுடன் தித்திக்கும் சனிக்கிழமை விடியல் வணக்கம் 🙏🌹🙏