கந்தர்வகோட்டை செய்திகள்

கந்தர்வகோட்டை செய்திகள் முழுக்க கந்தர்வகோட்டை மக்களின் செய்தி GANDARVAKOTTAI NEWS

தமிழ்நாடு அரசு  #வீட்டுவசதி_வாரியம் "வீடு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம்." #வீட்டுவசதி_வாரிய திட்டங்களில்,...
24/12/2023

தமிழ்நாடு அரசு #வீட்டுவசதி_வாரியம் "வீடு விற்பனை நிலவரம் அறிய புதிய இணையதளம் அறிமுகம்."

#வீட்டுவசதி_வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகள் விபரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

#வீட்டுவசதி_திட்டங்கள் குறித்த விபரங்களை பொது மக்கள் அறிவதில், பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொது மக்கள் அணுகுகின்றனர்.

ஆனால், அங்குள்ள பணியாளர்கள் முறையான விபரங்களை அளிப்பதில்லை. இதேபோன்று, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், வீட்டுவசதி வாரியத்துக்கு என பிரத்யேகமாக, ஒரு இணையதளம் துவக்கப்பட்டது. அதில் முழுமையான விபரங்கள், பொது மக்களுக்கு கிடைப்பதில்லை என புகார் எழுந்தது. இந்த இணையதளமும் முறையாக செயல்படாமல் முடங்கியது.

இதற்கு தீர்வாக, புதிய இணையதளம் ஏற்படுத்த, #வீட்டுவசதி_வாரியம் முடிவு செய்தது. அதன்படி, www.tnhb.tn.gov.in என்ற பெயரில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தை, வாரிய தலைவர் பூச்சி முருகன் துவக்கி வைத்தார்.
👇👇👇👇👇👇👇👇

Formed in 1947 as a small organisation in the name of "CITY IMPROVEMENT TRUST" in order to cater to the Housing needs of Madras City, has developed into a full fledged organisation as "TAMIL NADU HOUSING BOARD" in the year 1961 to cope up with the increasing demand in housing sector all over the sta...

24/12/2023

#பிரதமரின்_முத்ரா_கடன்_திட்டம்
கோழி,
செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா?

ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு.

திட்டம் குறித்து:

பாரத பிரதமரின் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு,
பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல்

மற்றும்
தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குவது.

திட்டத்தின் சிறப்பம்சம்
● இத்திட்டத்தின் கீழ், 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து,

முட்டை உற்பத்தி செய்து,

கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்து
நான்கு வார வயது வரை வளர்த்து விற்க

மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம்.

● ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு
500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க

மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் -

அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.

● பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு
100 பெண் பன்றிகள்
+ 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க

மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

● தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக ஓராண்டில்
2,000 - 2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /

ஒரு நாளில்
30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல்

மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த

திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

திட்டம் பெற தகுதி உடையவர்கள்
● தனி நபர்,
சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள்
ஆவர்.

● முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.
● தொழில்முனைவோர் /தகுதியுள்ள நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான
வங்கி கடன் அனுமதி அல்லது
வங்கி உத்தரவாதத்தை
பெற வேண்டும்,

திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற்றிருக்க வேண்டும்.

திட்டம் பெறும் முறை

https://nim.udyamimitra.in/ இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை
தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு,
கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும்.

பின்னர்
மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும்.

பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

மேலும் விவரங்கள்: அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் ( அ ) கால்நடை பல்கலைக்கழக அலுவலர்கள் ( அ ) தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்கள்

திட்டம் குறித்து மேலும் தகவல்களுக்கு

Link :
https://nlm.udyamimitra.in/

Tamil Nadu Livestock Development Agency (TNLDA)

24/12/2023

மழைப்புரளி

பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு

கடந்த 21.12.2023 அன்று ஒரு நபர் whatsapp வழியாக எதிர்வரும் 27.12.2023 மற்றும் 28.12.2023 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிக மழை பெய்யும் எனவும், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால் வானிலை எச்சரிக்கை மையத்திலிருந்து அவ்வாறான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இவ்வாறு அதிகாரப்பூர்வமில்லாத தகவலை எண்ணி பொதுமக்கள் யாரும் அச்சம் பட தேவை இல்லை. ஏதேனும் வானிலை எச்சரிக்கை வரப்பெற்றால் உடனடியாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பேரிடர் மேலாண்மை பிரிவு,
புதுக்கோட்டை.

24/12/2023

கந்தர்வகோட்டையில் இதுவரை பெய்துள்ள மழையளவு கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைவாக உள்ளது.
எனவே ஆழ்குழாய் பயன்பாட்டை முறைமைப்படுத்தி பயன்படுத்துவது
அவசியம்...
விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் செய்யுங்கள்...
கந்தர்வகோட்டையில் இருக்கும் அரசு மானியத்துடன் சொட்டு நீர் அமைக்கும் நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

இதுபற்றி கூடுதல் தகவலுக்கு

சு.சித்திரவேல்
சொட்டு நீர் பாசன ஆலோசகர்.
+91 94865 06874

22/11/2023

கந்தர்வகோட்டையில் 11 மணி தொடங்கி ஒரு மணி வரை மிகக் கனமழை...

இந்த ஆண்டின் அதிகபட்ச மழையளவாக இது இருக்கலாம்

சிறப்பு முகாம் பள்ளிக்கல்வித்துறை அழைப்பு
19/11/2023

சிறப்பு முகாம் பள்ளிக்கல்வித்துறை அழைப்பு

மருத்துவக் கழிவுகள் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை -கந்தர்வகோட்டையில் மட...
18/11/2023

மருத்துவக் கழிவுகள் கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை -
கந்தர்வகோட்டையில் மட்டும் பல பேர் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்....

ஆஞ்சநேயர் கோவில் தொடங்கி பிசானத்தூர் விலக்கு வரை அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டுவதோடு அபரிமிதமாக மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுகிறது....

இதன் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிக மோசமான நோய் தொற்று அபாயம் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை

-

“தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சட்டத் ...

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Senthilkumar Senthilkumar, Chitravel Chi...
15/11/2023

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Senthilkumar Senthilkumar, Chitravel Chitra Vel, Ambethkar Rathi, Vadamalai Vada, Shandhar Shandhar

பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை கந்தர்வகோட்டைநகர தேசிய நெடுஞ்சாலையில் அலங்கார வளைவு....
06/11/2023

பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை கந்தர்வகோட்டைநகர தேசிய நெடுஞ்சாலையில் அலங்கார வளைவு....

கொப்பம்பட்டி கிராமத்தில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளால் மனம் உடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.மகனை இழந்த பெற்றோருக்கு ம...
06/11/2023

கொப்பம்பட்டி கிராமத்தில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளால் மனம் உடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
மகனை இழந்த பெற்றோருக்கு மாவட்ட திராவிடர் கழக குழுவினர் ஆறுதல் கூறினர்

கந்தர்வகோட்டையில் வேலை வாய்ப்பு தேடுபடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்...
28/10/2023

கந்தர்வகோட்டையில் வேலை வாய்ப்பு தேடுபடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்...

பல லட்சம் செலவு செய்து கட்டிய வீட்டை காப்பாற்ற நல்வாய்ப்பு....அடுத்த மாதம் முதல் இதற்கான தீர்வை வழங்கிட புதிய வரவு ....ர...
27/10/2023

பல லட்சம் செலவு செய்து கட்டிய வீட்டை காப்பாற்ற நல்வாய்ப்பு....

அடுத்த மாதம் முதல் இதற்கான தீர்வை வழங்கிட புதிய வரவு ....

ரூஃப் டாக்டர்

கந்தர்வகோட்டையில் ஒரு வாரமாக சாலையை சாவகாசமாக அமைக்கும் நிலை பொதுமக்கள் அவதி
23/10/2023

கந்தர்வகோட்டையில் ஒரு வாரமாக சாலையை சாவகாசமாக அமைக்கும் நிலை பொதுமக்கள் அவதி

கந்தர்வகோட்டை துப்புரவு தொழிலாளர் போராட்டத்தால் ஒரு வாரமாக சாலைகளில் கொட்டிக்கிடக்கும் குப்பைக்குவியல்
23/10/2023

கந்தர்வகோட்டை துப்புரவு தொழிலாளர் போராட்டத்தால் ஒரு வாரமாக சாலைகளில் கொட்டிக்கிடக்கும் குப்பைக்குவியல்

NH 36 தஞ்சாவூர், மானாமதுரை சாலை ஓரத்தில்,கந்தர்வகோட்டை நகரப் பகுதி தொடங்கி பல்வேறு இடங்களில், வளர்ந்து கிடக்கும் கருவை ம...
15/10/2023

NH 36 தஞ்சாவூர், மானாமதுரை சாலை ஓரத்தில்,
கந்தர்வகோட்டை நகரப் பகுதி தொடங்கி பல்வேறு இடங்களில், வளர்ந்து கிடக்கும் கருவை மரங்கள்....மறைக்கிறது.

இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை...உள்ளது

சாலையை பராமரிக்காமல் சுங்கக் கட்டணம்
வசூலிப்பது சரியா...?

உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்டவர்கள் தயங்குவதின் உள்நோக்கம் என்ன...?

மக்கள் விபத்துக்குள்ளாகும் வரை காத்திருக்காமல் சாலை ஓரத்தில் மரங்களை அகற்ற வேண்டும்...

National Highways Authority of India - NHAI
Nitin Gadkari
District Collector, Pudukkottai
M. Chinnadurai MLA

கந்தர்வகோட்டைபயன்பாட்டுக்கு பெருமை.... பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும்,வாகை சூடிய விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுக்க...
14/10/2023

கந்தர்வகோட்டைபயன்பாட்டுக்கு பெருமை.... பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும்,
வாகை சூடிய விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டுக்கள்

11/10/2023
10/10/2023

கந்தர்வகோட்டையில் வேலை வாய்ப்பைத் தரும்பெருந்தொழில் நிறுவனங்கள் ஏதுமில்லை....

வறண்ட நிலப்பகுதியை வளமாக்கும் தொழில் நிறுவனங்கள் நம் பகுதியில் அமைந்திட நம்மவர்கள் முனைப்பு காட்ட வேண்டும்....

கனரக இரும்புத்தொழில் ,
உணவு உற்பத்திப் பொருட்கள்,பதப்படுத்தும் தொழில்கள்,
கட்டுமான தளவாடப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், உலோக
ஊருக்குத் தொழில் நிறுவனங்கள் இங்கு அமைந்தால் சிறப்பாக இருக்கும்....
சாத்தியமாகுமா...?

உங்கள் ஊரில் மின்கம்பம் உடைந்து கிடக்கிறதா...?அச்சம் தரும் வகையில் உள்ளதா..? உடனே படத்தை எடுங்க..சரியான இடம் , ஊர் விபரத...
10/10/2023

உங்கள் ஊரில் மின்கம்பம் உடைந்து கிடக்கிறதா...?
அச்சம் தரும் வகையில் உள்ளதா..?

உடனே படத்தை எடுங்க..சரியான இடம் , ஊர் விபரத்துடன்,

திருச்சி,
தஞ்சாவூர்,
பெரம்பலூர்,
அரியலூர்
புதுக்கோட்டை
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
கரூர் மாவட்டத்தினர்

9486111912
என்ற எண்ணிற்கு வாட்சப் பண்ணுங்க...

தீர்வு காணுங்கள்...

சிவன்கோவில் நுழைவு வளைவு....
08/10/2023

சிவன்கோவில் நுழைவு வளைவு....

அதிகாலை காந்தி சிலை முக்கம்
07/10/2023

அதிகாலை காந்தி சிலை முக்கம்

அனைவருக்கும் பகிருங்கள்...புதிய தலைமுறை நேரலையில் ....கந்தர்வகோட்டைபயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையத்தை,ஏதேனும் ஒரு  ம...
06/10/2023

அனைவருக்கும் பகிருங்கள்...
புதிய தலைமுறை நேரலையில் ....

கந்தர்வகோட்டைபயன்பாட்டுக்கு வராத பேருந்து நிலையத்தை,
ஏதேனும் ஒரு
மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நம் கோரிக்கை குறித்த செய்தியை வெளியிட்ட புதிய தலைமுறைக்கு நன்றி....

கந்தர்வகோட்டையில் 9 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத பேருந்து நிலையம்.. பொதுமக்கள் கருத்து | Gandarvakkottai | PTT ...

01/10/2023

தஞ்சாவூர் சாலை ஆஞ்சநேயர் கோவில் தொடங்கி அப்துல்லா நகர் வரை கொட்டப்படும் கழிவுகளால் கந்தர்வகோட்டையின் மானம் போகுது....

இங்கே மனிதர்கள் வசிக்கிறார்களா
என்று பேருந்தில் பயணிக்கும் இருவர் பேசிக்கொண்டது
கேவலமாக இருந்தது...

உண்மையில் பொறுப்பற்ற நிர்வாகத்தின் குறியீடுதான் இந்த நாற்றம் என்கின்றனர் அவர்கள்....

வாயைப் பொத்திக்கொண்டு பயணிக்க வேண்டியிருந்தது....
தேசிய நெடுஞ்சாலைத்துறை
National Highways Authority of India - NHAI
சுகாதாரத்துறை
Department of Rural Development and Panchayat Raj Tamilnadu District Collector, Pudukkottai
ஊரக வளர்ச்சித்துறை
வருவாய்த்துறை
மக்கள் பிரதிநிதிகள்
கவனிப்பார்களா...

28/09/2023

தஞ்சாவூர் சாலை ஆஞ்சநேயர் கோவில் தொடங்கி அப்துல்லா நகர் வரை கொட்டப்படும் கழிவுகளால் கந்தர்வகோட்டையின் மானம் போகுது....

இங்கே மனிதர்கள் வசிக்கிறார்களா
என்று பேருந்தில் பயணிக்கும் இருவர் பேசிக்கொண்டது
கேவலமாக இருந்தது...

உண்மையில் பொறுப்பற்ற நிர்வாகத்தின் குறியீடுதான் இந்த நாற்றம் என்கின்றனர் அவர்கள்....

வாயைப் பொத்திக்கொண்டு பயணிக்க வேண்டியிருந்தது....
தேசிய நெடுஞ்சாலைத்துறை
National Highways Authority of India - NHAI
சுகாதாரத்துறை
Department of Rural Development and Panchayat Raj Tamilnadu
health department
ஊரக வளர்ச்சித்துறை
வருவாய்த்துறை
மக்கள் பிரதிநிதிகள்
கவனிப்பார்களா...

பாழாய்ப்போகும் அரசு சொத்து....பேருந்து நிலையம் அமைக்காவிட்டாலும் அரசின் சொத்தை பாதுகாக்க வேண்டாமா...?கந்தர்வகோட்டை நகரில...
25/09/2023

பாழாய்ப்போகும் அரசு சொத்து....

பேருந்து நிலையம் அமைக்காவிட்டாலும் அரசின் சொத்தை பாதுகாக்க வேண்டாமா...?

கந்தர்வகோட்டை நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க காய்கறி, இறைச்சி பொது விற்பனை மையமாக மாற்றினால் மக்களும் பயனடைவர், போக்குவரத்து நெருக்கடியையும் குறைக்கலாம்...

அரசு சிந்திக்க வேண்டும்....
Chief Minister of Tamil Nadu
Udhayanidhi Stalin

M. Chinnadurai MLA
District Collector, Pudukkottai
Chinnadurai Marimuthu

கந்தர்வகோட்டை நகரில் தேசிய நெடுஞ்சாலையில்.... கண்டுகொள்ளாமல் இருக்கும் NHAI...பாதசாரிகள் காலை பதம் பார்க்கும் இந்த குப்ப...
25/09/2023

கந்தர்வகோட்டை நகரில் தேசிய நெடுஞ்சாலையில்.... கண்டுகொள்ளாமல் இருக்கும் NHAI...
பாதசாரிகள் காலை பதம் பார்க்கும் இந்த குப்பைகள் அகற்றப்படுமா...?
National Highways Authority of India - NHAI
District Collector, Pudukkottai

நஞ்சில்லாத காய்கறி வாங்க+++++++++++++++கந்தர்வகோட்டையில் 100% இயற்கை முறையில்பூச்சி மருந்து , செயற்கை உரம் இல்லாத காய்கற...
17/09/2023

நஞ்சில்லாத காய்கறி வாங்க
+++++++++++++++
கந்தர்வகோட்டையில் 100% இயற்கை முறையில்
பூச்சி மருந்து , செயற்கை உரம் இல்லாத காய்கறி விற்பனையை
வேலி அறக்கட்டளை செய்து வருகிறது....

தேவைப்படுவோர் வேலி ஞானகுரு என்பவரை அழைத்து பெற்றுக்கொள்ளலாம்...

9626743459

(இதே போல முழுவதும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை இன்பாக்ஸ் மூலமாக அனுப்பினால் இத்தளத்தில்
வெளியிடப்படும்...)

17/09/2023

மீண்டும் கந்தர்வகோட்டைஅப்துல்லா நகர் அருகே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம், மீண்டும் குப்பைக்கிடங்காக மாறி வருகிறது....

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பு படுமோசமாக உள்ளது....

இதுகுறித்து உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை யினர், உள்ளாட்சி
(ஊராட்சி) நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுங்க கட்டணம் செலுத்தி நெடுஞ்சாலையில் பயணிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுப்பது நிர்வாகத்தின் கடமை....
Nitin Gadkari
District Collector, Pudukkottai
National Highways Authority of India - NHAI
Chinnadurai Marimuthu

17/09/2023

கந்தர்வகோட்டை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு நாள் பாட்டுக்கச்சேரி....
தற்போது
நடக்கிறது

17/09/2023

கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை...

மாவட்ட ஆட்சியரிடம் இல்லந்தேடிய கல்வியை சிறப்பாக கொண்டு சென்றமைக்காகவும்,மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சிறப்பாக தயாரித...
15/08/2023

மாவட்ட ஆட்சியரிடம் இல்லந்தேடிய கல்வியை சிறப்பாக கொண்டு சென்றமைக்காகவும்,மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சிறப்பாக தயாரித்து பணி செய்தமைக்காகவும் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.ரகமத்துல்லா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆ.கலையரசன் ஆகியோர் பாராட்டு சான்று பெற்றனர்...

தஞ்சாவூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான அனைத்திந்திய  கராத்தே - 2023  போட்டியில் மாவட்ட  அளவில் முதல் பரிசு வென்ற கதிர...
15/08/2023

தஞ்சாவூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான அனைத்திந்திய கராத்தே - 2023 போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்ற கதிரவன் சித்திரவேல் என்ற மாணவரை கந்தர்வக்கோட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர்,
மா. தமிழ்அய்யா , திமுக தகவல் தொழில் நுட்ப அணியைசேர்ந்த சண்முக பிரபு பிரகதீஸ்வரன், விராலிப்பட்டி ஊராட்சி செயலாளர் கொடியரசன் ஆகியோர் பாராட்டினர்.

மக்களின் கோரிக்கை சார்ந்து கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது....முக்கியமானதாக பெண்கள் மேல்நிலைப் பள...
15/08/2023

மக்களின் கோரிக்கை சார்ந்து கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது....

முக்கியமானதாக பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தருதல்,
கரம்பக்குடி மற்றும் முதுகுளம் மார்க்கமாக பள்ளி மாணவ மாணவியர்கள் மாலை நேரத்தில் செல்லும்போது கூடுதல் நெருக்கடியும் பேருந்தில் படியில் பயணம் செய்யும் நிலையும்
இருப்பதை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்,
பெரிய கடை வீதியை விரிவாக்கம் செய்து விரிவாக்கம் செய்யப்படும் இடம் முழுவதுமாக சாலையை அமைத்திட கோரிக்கை விடுக்கப்பட்டது....

பஞ்சாயத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் கடைகள் தரைக்கடைகள்
ஏலம் விட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது அப்போது இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டு முழு தொகையும் வசூலிக்கப்படுவதற்கான உத்தரவாதம் பெறப்பட்டுள்ளதாக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவித்தனர்....

பொதுமக்கள் சார்பாக பல்வேறு இடங்களில் சாலை அமைத்தல்,
குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

14/08/2023

கந்தர்வகோட்டைக்காக அரசிடம் சில கோரிக்கைகள்...
+++++++++++++++
கந்தர்வகோட்டைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தேவை என்பதை தொடர்ச்சியாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்....
இயன்முறை மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) கந்தர்லகோட்டை மருத்துவமனையில் இல்லை,
அதற்கென தனி பிரிவு தொடங்கி விபத்து பக்கவாதம் உள்ளிட்ட காரணங்களுக்காக தனியார் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்....
மேலும் அவசரகால விபத்து சிகிச்சை பிரிவினை கந்தர்வ கோட்டையில்
தொடங்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார் என்றாலும் அது சார்ந்து உரிய முன்னேற்றம் ஏதும் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது தொகுதி மக்களின் ஏக்கமாக இருக்கிறது.....

பெரிய கடை வீதி ஆக்கிரமிப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அகற்றப்பட்டு பாதியிலேயே கைவிடப்படுகிறது அதன் பிறகு தொடர்ச்சியாக சாலையை ஆக்கிரமித்து கட்டுமானங்களும் கூரைகளும் அமைக்கப்படுகிறது,
இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் அரசு சாலை எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு தூரத்திற்கு முழுமையாக சாலையை விரிவு படுத்தி அமைக்கப்பட வேண்டும்
அதற்கான திட்டமிடுதலை அரசு செய்திட வேண்டும்.....

மிக நீண்ட நாள் கோரிக்கையாக பெண்கள் பள்ளிக்கும் கொத்தகம் கிராமத்துக்கும்
பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்த நிலையில் இது சார்ந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இது குறித்தும் அரசு உரிய முடிவினை எடுக்க வேண்டும்....

அக்கச்சிப்பட்டி,
புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர் சாலை,
பெரியவாரி கரை வழியாக திருச்சி சாலை உடன் இணைப்பு ஏற்படுத்தி,
பெரியவாரி கரை வழியாக வட்டாட்சியர் அலுவலகம்,வளவம்பட்டி-
கொத்தகம் விலக்கு சாலை,
கொத்தகம் கிராமம்,
காட்டு நாவல் கிராமம்
கரம்பக்குடி சாலை வழியாக அக்கட்சிப்பட்டியோடு இணைக்கும் வகையில் ஒரு சுற்றுப்பாதை அமைக்க சட்டப்பேரவை உறுப்பினர் முதலமைச்சரின் சட்டப்பேரவை உறுப்பினர் சிறப்பு திட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருக்கிறார் இது சார்ந்தும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்...
இவ்வாறாக பல கோரிக்கைகள் இருக்கிறது இது சார்ந்தெல்லாம் அந்தந்த ஊர்களில் நடக்கும் கிராம சபைகளில் பொதுமக்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் நல்ல தீர்வினை இந்த அரசு நிச்சயம் வழங்கும்.... அதற்கான முயற்சிகளை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்...
நல்லது நடக்கட்டும்

நாளை பவர்கட்....
22/06/2023

நாளை பவர்கட்....

அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு அரசு வழங்கியிருக்கும் சலுகை தான்,உயர்கல்...
17/06/2023

அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு அரசு வழங்கியிருக்கும் சலுகை தான்,
உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிர்வதற்கான 7.5% இட ஒதுக்கீடாகும்....

கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, கந்தர்வகோட்டை நகரைச் சேர்ந்ததிரு.சேகர் அவர்களின் புதல்வி சே.பவித்ரா 45...
14/06/2023

கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, கந்தர்வகோட்டை நகரைச் சேர்ந்த
திரு.சேகர் அவர்களின் புதல்வி சே.பவித்ரா
453 மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான தகுதியை பெற்றுள்ளார்....
மாணவிக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்,
உழைத்து அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கும் கந்தர்வகோட்டை செய்திகள் வாழ்த்து தெரிவிக்கிறது...

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த மாணவிக்கு மருத்துவப்படிப்பு
ஒதுக்கீடு கிடைக்கும்....

அரசுப் பள்ளியில் உங்களது குழந்தையை ஆறாம் வகுப்பிலேயே சேர்த்தால் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும் எனவே அருகாமைப் பள்ளியில் உங்களது குழந்தைகளை சேருங்கள் எளிதில் முக்கியமான தொழிற்கல்வி படிப்புகளை படிப்பதற்கான வாய்ப்பை உங்களது பிள்ளைக்கு வழங்குங்கள்....

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர், அக்கச்சிப்பட்டியைச் சேர்ந்த திரு.ரமேஷ் அவர்களின் புதல்வர்,...
13/06/2023

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர், அக்கச்சிப்பட்டியைச் சேர்ந்த திரு.ரமேஷ் அவர்களின் புதல்வர், ர.ஜனார்த்தனன்
நீட் தேர்வில்
351 மதிப்பெண்
பெற்றிருக்கிறார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீட்டில்
இவர் மருத்துவ படிப்பில் சேர்வது உறுதியாகியிருக்கிறது....

மாணவரின் கடுமையான முயற்சிக்கும் பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பிற்கும் ஆசிரியர் பெருமக்களின் வழிகாட்டுதலுக்கும் இது மிகப்பெரிய வெற்றியாகும்....

நமது பகுதியில் அரசு பள்ளி மாணவர் மருத்துவ படிப்பில் சேர்வது நமது பகுதிக்கு பெருமை
அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அனைத்து தொழில் படிப்புகளிலும் சேர இயலும்,
அதற்கான ஒரே நிபந்தனை ஆறாம் வகுப்பிலிருந்து
அரசுப்பள்ளியில் படிக்க வேண்டும்...

வாழ்த்துக்கள் கந்தர்வகோட்டை மருத்துவரே.....

07/06/2023

இரண்டு மணி நேரமாக கந்தர்வகோட்டையில் மின் வெட்டு...
மின் கம்பியில்
தென்னை மரம் சாய்ந்ததால் சரி செய்ய தாமதம் ஆவதாக தகவல்...

07/06/2023

கந்தர்வகோட்டை பெரிய கடைவீதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு
கொத்தகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பேருந்து இயக்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள்...

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கடை வீதியில் பேருந்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆக்கிரமிப்புகள் சமரசமின்றி அகற்றப்படுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு, பிறகு கடந்த ஆட்சியிலேயே கிடப்பில் போடப்பட்டது....

ஏற்கனவே இடித்து அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், மீண்டும் அதே நிலையை அடைந்து விட்டன....

காலை மாலை என பொதுமக்கள் அதிகம் நடமாடும் நேரங்களில், கடைகளுக்கு பொருட்களை இறக்குவதும் ஏற்றுவதுமாக சில கடைகள்,
தொடர்ச்சியாக போக்குவரத்து நெருக்கடி குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல், தனது வாகனங்களையும் சரக்கு வாகனங்களையும் சாலையிலேயே நிறுத்தி வைத்து விடுவதால்
மிக மோசமான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது...

பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும், மேலும் பெரும்பாலான கடைகள் முழுமையான ஆக்கிரமிப்புகளை செய்துள்ளனர், அவற்றை அரசியல், தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு, அப்பாற்பட்டு அகற்ற வேண்டும், பெரும்பாலான வீடுகளில் இருந்து சாக்கடை, உள்ளிட்ட கழிவு பொருட்கள் சாலையில் தான் விடப்படுகின்றன...
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சுகாதார கேடுகளுக்கு ஆளாக வேண்டி உள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், சுகாதாரக் கேடும், போக்குவரத்து நெரிசலும், ஏற்படும் இந்த நிலை மாற வேண்டும்....

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களும் , மதிப்பு மிகு மாவட்ட ஆட்சியர் அவர்களும் ,
உள்ளாட்சி த்துறை மற்றும் வருவாய்த்துறை நிர்வாகம்
இது சார்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்...
Chief Minister of Tamil Nadu
Department of Rural Development and Panchayat Raj Tamilnadu
Chinnadurai Marimuthu
M. Chinnadurai MLA
Anbil Mahesh Poyyamozhi
District Collector, Pudukkottai

Address

Gandarvakottai
Gandarvakottai
613301

Website

Alerts

Be the first to know and let us send you an email when கந்தர்வகோட்டை செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Gandarvakottai media companies

Show All