
10/04/2022
அமெரிக்க அரசின் இலவச Green card லொத்தர், முற்றிலும் இலவசம் வெளிநாடு செல்லும் ஆர்வம் உள்ளவர்கள் முயற்சித்து பார்க்கவும்.
· 12 வருடம் கல்வி பூர்த்தி செய்திருத்தல் வேண்டும், அதாவது இலங்கையில் உயர்தரம் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிறுவனத்தில் 2 வருடம் தொழில் அனுபவம் இருத்தல் வேண்டும்.
· கணவன் மனைவி இருவரும் தனித் தனியாக விண்ணப்பிக்கலாம், ஒருவர் தெரிவுசெய்யப்பட்டால் மற்றவரும் தகுதிபெறுவார்.
· விண்ணப்பிக்கும்போது செல்லுபடியாகக் கூடிய கடவுச்சீட்டு வைத்திருத்தல் வேண்டும்.
· விண்ணப்பிக்க பயன்படுத்தப்படும் மின்னஞ்சல், தொடர் பாவனையில் உள்ளதாகவும், உங்கள் நிரந்தரமானதாகவும் இருத்தல் வேண்டும், அனைத்து அறிவிப்புகள், தொடர்பாடல்களும் மின்னஞ்சல் ஊடாகவே நடைபெறும்.
· அனைத்திலும் மிக முக்கியமாக இந்த அமெரிக்க அரசின் இணைய பக்கத்தில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு அமைவாக புகைப்படம் இருத்தல் வேண்டும்.
எப்போதுமே இலவசமாக கிடைக்கும் வாய்ப்புக்களை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை, கடந்த வருடமும் விண்ணப்பிக்கும் திகதி ஆரம்பிக்கும் நாளில் இருந்து திரும்ப திரும்ப சொல்லியும், கடைசி நாள் வரை இருந்துவிட்டு எப்படி விண்ணப்பிப்பது என்று கேட்டவர்களும் உள்ளனர். நான் அன்றாடம் சந்திக்கும் பலர் இந்த வாய்ய்ப்பை சரியாகப் பயன்படுத்தி இங்கு வந்துள்ளனர், ஒக்டோபர் 5 தொடக்கம் நவம்பர் 8 வரை அமெரிக்க அரசின் dvlottery இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம், முற்றிலும் இலவசம் முயற்சி செய்யுங்கள்.
DV Lottery -2023 திட்டத்திற்கான ஆன்லைன் பதிவு காலம் அக்டோபர் 6, 2021 புதன்கிழமை மதியம் 12:00 மணிக்கு தொடங்குகிறது, கிழக்கு பகல் .....