Pothikai FM media news

Pothikai FM media news #1 இணையதள ஒலிபரப்பு சேவை - இலங்கை
(1)

04/07/2024.  Pothikai.fmஇரு மாணவர்களின் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியாகியுள்ளது.கொழும்பு - கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அ...
04/07/2024

04/07/2024. Pothikai.fm
இரு மாணவர்களின் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியாகியுள்ளது.
கொழும்பு - கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரு மாணவர்களின் சி.சி.ரி.வி காணொளிகள் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு. 02/07/2024. இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன், மாணவி மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் கொலையா, தற்கொலையாக என தகவல் தெரியவராத நிலையில் வெளியான இந்த சிசிரிவி காணொளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இருவரும் கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் பயின்று வந்தவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.

04/07/2024.  Pothikai.fm
04/07/2024

04/07/2024. Pothikai.fm

04/07/2024

Pothikai.fm
இன்றைய வானிலை
2024.07.04

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி.மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் அடிக்கடி காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் காற்று வீசும்.இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

03/07/2024.  Pothikai.fm19,6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி போலி தங்க ஆபரணங்களைப் பயன்படுத்தி 19,6 மில்லியன் ரூபாய் நிதி மோ...
03/07/2024

03/07/2024. Pothikai.fm
19,6 மில்லியன் ரூபாய் நிதி மோசடி
போலி தங்க ஆபரணங்களைப் பயன்படுத்தி 19,6 மில்லியன் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன் அதிகாரி பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்க நகைகளை அடகு வைக்கும் பிரிவில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்

போலி தங்க ஆபரணங்கள்
அதோடு சந்தேகநபரிடம் இருந்து 41 போலி தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். நிதி நிறுவனத்தில் மக்கள் நகைகளை அடகு வைக்கும் போது அவர் போலியான ஆவணங்களை அவர்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

அத்துடன் தங்க ஆபரணங்களுக்கு சமமான போலி ஆபரணங்களை இணையம் மூலம் இறக்குமதி செய்து அதனை குறிப்பிட்ட ஆபரணங்களின் பைகளில் இட்டு உண்மையான நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்

03/07/2024.   Pothikai.fmசல்மான் கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்ப இருந்த குழு கைது பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்...
03/07/2024

03/07/2024. Pothikai.fm
சல்மான் கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்ப இருந்த குழு கைது

பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர் இந்திய நடிகரான சல்மான் கானை கொலை செய்யத் திட்டமிட்ட சதி தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சல்மான் கான் பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, அவர் மீது மற்றொரு கொலை முயற்சி திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யும் நோக்கில் சதித் திட்டம் தீட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை முயற்சி
தனஞ்சய் தபேசிங் என்ற அஜய் காஷ்யப், கௌரவ் பாட்டியா என்ற நஹ்வி, வாப்சி கான் என்ற வசீம் சிக்னா மற்றும் ரிஸ்வான் கான் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்வதற்கு நான்கு பேர் அடங்கிய கும்பல் ஒன்று செயற்பட்டதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

03/07/2024

03/07/2024. Pothikai.fm
நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான எஸ்.வி.ரங்கராவ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதில் எங்களுடன் சேருங்கள்

03/07/2024.  Pothikai.fmபுங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் பரிதாபகரமாக மரணமானார் பொருட்கள் ஏற்றும் படகு விபத்துக்குள்ளாகியதில...
03/07/2024

03/07/2024. Pothikai.fm
புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் பரிதாபகரமாக மரணமானார் பொருட்கள் ஏற்றும் படகு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் மரணம்

குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு கல், மண் ஏற்றி வந்த படகு குறிகாட்டுவான் துறைமுகத்தில் நேற்று இரவு விபத்துக்குள்ளாகியதில் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவர் பரிதாபகரமாக மரணமானார்.

03/07/2024

03/07/2024. Pothikai.fm

03/07/2024

03/07/2024. Pothikai.fm
121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம்
சாமியாரை தரிசிக்க சென்ற 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த மத நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்மிக சொற்பொழிவு
அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆன்மிக நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்

03/07/2024.  Pothikai.fmமாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன கொழும்பில் பாடசாலையில் கல...
03/07/2024

03/07/2024. Pothikai.fm
மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது

கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

03/07/2024.  Pothikai.fmபழுது நீக்க வந்த 3க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து வருகின்றன சென்னை மதுரவாயலில் தனியார் கா...
03/07/2024

03/07/2024. Pothikai.fm
பழுது நீக்க வந்த 3க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து வருகின்றன

சென்னை மதுரவாயலில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து. பழுது நீக்க வந்த 3க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து வருகின்றன.

மதுரவாயல், விருகம்பாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராட்டம்.
கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்து வருவதால் மக்கள் அச்சம்.

03/07/2024

03/07/2024. Pothikai.fm
சிவ பெருமானின் அருளை பெறுவதற்காக இருக்கப்படும் முக்கியமான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் வரும் திரியோதமி திதியில் மாலையில், சிவனுக்கு நடைபெறும் பூஜையே பிரதோஷ பூஜை எனப்படுகிறது.

வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வருவதுண்டு. இந்த ஆண்டு ஜூலை மாத பிரதோஷம் ஜூலை 03ம் திகதி புதன்கிழமை வந்துள்ளது. இந்த பிரதோசமானது தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச பிரதோஷமாகும்.

முற்பிறவி கர்மாக்களால் தொடரும் பாவங்கள், துன்பங்கள் ஆகியவற்றை நீக்கும் விரதத்திற்கு பிரதோஷ விரதம் என்று பெயர். இரவின் ஆரம்பம், மாலையுடன் தொடர்புடையது ஆகியனவும் பிரதோஷத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

திரியோதசி திதியில் சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முந்தைய காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். இது சிவ வழிபாட்டிற்குரிய காலமாகும். மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றுடன் சிவ பெருமானின் அருளையும் தந்து, இறுதியில் முக்தியையும் தரக் கூடியது பிரதோஷ விரதமாகும்.

கிடைக்கும் பலன்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் நோய்கள் குணமாகும், தீய சக்திகள் எதுவும் நெருங்காது, சிவனின் அருள் கிடைக்கும், மன அமைதி அடையும். மரணத்தில் இருந்த பாதுகாக்கும். துன்பம், மனஅழுத்தம் ஆகியவற்றை நீக்கும். ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் தொடர்ந்து உச்சரித்து வந்தால் அதன் பலன் பல மடங்காக கிடைக்கும்.

03/07/2024.  Pothikai.fmஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார் யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்...
03/07/2024

03/07/2024. Pothikai.fm
ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்

யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார்

பொலிஸ் விசாரணை
குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகு ஒன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று 02/07/2024. நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.

இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்திய வேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

03/07/2024

Pothikai.fm
இன்றைய வானிலை
2024.07.03

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட ங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி.மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு, காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் அடிக்கடி காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் காற்று வீசும்.இக் கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

02/07/2024.  Pothikai.fmபெண்ணின் சடலம் உருக்குலையாத நிலையில் ஆடை எதுவுமின்றி காணப்படுவதாகவும் பொலிஸார் கூறின புத்தளத்தில...
02/07/2024

02/07/2024. Pothikai.fm
பெண்ணின் சடலம் உருக்குலையாத நிலையில் ஆடை எதுவுமின்றி காணப்படுவதாகவும் பொலிஸார் கூறின

புத்தளத்தில் பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று 02/07/2024. பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பூனைப்பிட்டி கடற்கரையோர பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் அங்கு சடலமொன்று கிடப்பதை அவதானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

பின்னர் உடனடியாக பிரதேச மக்களுடன் இணைந்து அந்த பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உடப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதேவேளை, சடலமாக கரையொதுங்கிய பெண் 40 வயது முதல் 50 வயதுக்கு இணைப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் சடலம் உருக்குலையாத நிலையில் ஆடை எதுவுமின்றி காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், சிறுநீர பட்டை பொருத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது. அந்த பெண் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.வசீம் ராஜா, சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை அடுத்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கரையொதுங்கிய குறித்த பெண்ணின் சடலம் யாருடையது என்பது தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

02/07/2024.  Pothikai.fmஇளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெர...
02/07/2024

02/07/2024. Pothikai.fm
இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார்

உடற்கூற்றுப் பரிசோதனை
இந்நிலையில் முதியவரின் இறப்பில் சந்தேகம் காணப்பட்டமையால் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இளைஞனைக் கைது செய்த பொலிஸார் அவரை நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தினர். இதன்போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

02/07/2024.  Pothikai.fmஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும்...
02/07/2024

02/07/2024. Pothikai.fm
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று 02/07/2024. குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சபாநாயகர் கூறியுள்ளார்.

02/07/2024

02/07/2024. Pothikai.fm
சென்னை அடையாறில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

02/07/2024

02/07/2024. Pothikai.fm
அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லமொன்றில் மாணவிகள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இடம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டிருந்தது.

அதிகாரிகள் விசாரணை
குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது

இந்நிலையில் அது தொடர்பிலும் வேறு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி குறித்த பகுதிப் பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அதிகாரிகள் குறித்த இல்லத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது

02/07/2024

02/07/2024. Pothikai.fm
லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694 ரூபாவாகும்.

இன்று (2) எரிவாயு விலை திருத்தம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதேவேளை மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது

02/07/2024.  Pothikai.fmஅதிர்ச்சி தகவல் விமானங்கள் அடிக்கடி வானில் குலுங்குவது ஏன் ஸ்பெயின் தலைநகரில் இருந்து உருகுவே தல...
02/07/2024

02/07/2024. Pothikai.fm
அதிர்ச்சி தகவல் விமானங்கள் அடிக்கடி வானில் குலுங்குவது ஏன்

ஸ்பெயின் தலைநகரில் இருந்து உருகுவே தலைநகருக்கு புறப்பட்ட ஏர் யூரோபா விமானம் ஒன்று பிரேசில் விமான நிலையம் ஒன்றில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எலும்பு முறிவுகளுடன் மீட்கப்பட்ட பயணிகள்
குறித்த விமானமானது மிக மோசமான நிலையில் அந்தரத்தில் குலுங்கியதாலையே விமானம் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 40 பயணிகள், பெரும்பாலானோர் லேசான காயங்களுடன் தப்பியிருந்தனர்.

அனைவரும் நடால் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சில பயணிகள் எலும்பு முறிவுகளுடன் மீட்கப்பட்டதாகவும், பலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் குறைந்தது நான்கு பேர் திங்கள்கிழமை பிற்பகலில் வெளியான தகவலின் அடிப்படையில் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி 11.57 மணிக்கு மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்து 325 பேர்களுடன் புறப்பட்ட Boeing 787-9 Dreamliner விமானமானது உருகுவே தலைநகர் Montevideo-வில் திங்களன்று விடிகாலை தரையிறங்க வேண்டும்.

ஆனால் நள்ளிரவு 2.32 மணிக்கு அந்த விமானமானது வடகிழக்கு பிரேசிலில் அமைந்துள்ள நடால் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க கோரியுள்ளனர். Montevideo நகரில் இருந்து 4,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நடால்.

இந்த நிலையில், நடுவானில் விமானம் குலுங்கியுள்ளதை உறுதி செய்துள்ள ஏர் யூரோபா காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

73 வயதான பிரித்தானியர்
காயங்களுடன் தப்பிய 40 பயணிகளும் ஸ்பெயின், உருகுவே, இஸ்ரேல், ஜேர்மனி மற்றும் பொலிவியா நாட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

ஐவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சமீப மாதங்களில் விமானங்கள் நடுவானில் குலுங்குவது அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது.

மே மாதத்தில் லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இதுபோன்று குலுங்கியதில் 73 வயதான பிரித்தானியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைய, பலர் காயங்களுடன் தப்பினர்

02/07/2024

02/07/2024. Pothikai.fm
சேலம் முருகன்

02/07/2024.  Pothikai.fm
02/07/2024

02/07/2024. Pothikai.fm

02/07/2024.   Pothikai.fmதலைநகர் பாரீஸில் வன்முறை பிரான்ஸ்(France) தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் படி ஆளும் கட்சிக்க...
02/07/2024

02/07/2024. Pothikai.fm
தலைநகர் பாரீஸில் வன்முறை பிரான்ஸ்(France) தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் படி ஆளும் கட்சிக்கு எதிராக வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்ததுமே, ஜனாதிபதியின் இந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்

கண்ணீர் புகை குண்டுகள்
அவர்கள் கணித்ததுபோலவே, தேர்தலில் முதல் சுற்று முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்துள்ளன. எதிர்பார்த்ததுபோலவே, வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அத்துடன், மேக்ரான் கட்சிக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை, மூன்றாம் இடம்தான் கிடைத்துள்ளது.இந்நிலையில், வலதுசாரியினரின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதும், தீவைப்பு சம்பவங்களுமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடிக்க, பேரணியில் ஈடுபட்டவர்களைக் கலைக்க, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வலதுசாரியினர் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க என்ன செய்வது என்ற யோசனையில் பிற கட்சிகள் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது

02/07/2024.  Pothikai.fmசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப...
02/07/2024

02/07/2024. Pothikai.fm
சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியோடிய நபர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் 29 ஆம் திகதி இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவத்தில் வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கி சென்றுள்ளார்

இந்த நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அச் சடலத்தை மீட்டனர்.

வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் வவுனியா பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

02/07/2024.  Pothikai.fm.
02/07/2024

02/07/2024. Pothikai.fm.

Address

No 70/7, Kurumankadu
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when Pothikai FM media news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pothikai FM media news:

Share

Category


Other Radio Stations in Vavuniya Town

Show All