Ezhuna

Ezhuna ஈழக்கற்கைகள் சார்ந்த ஆய்வுகளுக்கான உரையாடல் தளம்

2012 இல் உருவாக்கப்பட்ட எழுநா, உலகெங்கும் பரந்து வாழும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சார்ந்து, சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி ஆகிய தளங்களில் கருத்துருவாக்கம் - நூலுருவாக்கம் - பரவலாக்கம் - சார்ந்த உரையாடல்களுடன் தன்னை புதிப்பித்து கொண்டு செயற்படுகின்றது.

ஒரே கருப்பொருளில் தொடர்ச்சியாக எழுத்துக்களையும் உரையாடல்களையும் உருவாக்குவதும் உரையாடல்கள் முதிர்ச்சியாகும் போது அவற்ற

ை நூலுருவாக்கி உரையாடலை விரிவாக்கி சமூக மட்டத்தில் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் எழுநாவின் தற்போதைய இயங்கியல் வடிவமாக உள்ளது.

மலையகப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு | மலையகம் 200 | மாரிமுத்து சசிரேகா1935 களில் தொழிற்சங்க ரீதியி...
03/07/2024

மலையகப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு | மலையகம் 200 | மாரிமுத்து சசிரேகா

1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையகப் பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் மீனாட்சியம்மை ஆவார். அவரின் குரல் வழி மலையக நிலத்தில் இரவும் பகலும் பாடுபட்ட பெண்களின் துயர் சூழ்ந்த வாழ்வும், சமூகசார் பிரச்சினைகளும் வெளிவரத் தொடங்கின. ஆணாதிக்க ஒடுக்கு முறைகளை மனதில் நிரப்பியும், கொழுந்துக்கூடையை முதுகில் சுமந்தும், குடும்பச் சுமையை தலையில் சுமந்தும் வாழும் மலையகப் பெண்களின் பாரம் இன்று சிறிது குறைந்திருந்தாலும் முழுமையாக வேரறுக்கப்படவில்லை.

மலையகப் பெண்களின் பாடுகளைப் பற்றி சி.வி. வேலுப்பிள்ளை, குறிஞ்சித் தென்னவன் முதலியோர் கவிதைகளைப் பாடியிருந்தாலும், பெண்களின் பிரச்சினைகளை பெண்களின் குரல் வழியாகக் கேட்கும் போது மாபெரும் சக்கி பிறக்கின்றது. மலையகச் சூழலில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் கவிஞர்கள் காணப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/200-e2ljjqm

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/ek9vaj3z

1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையகப் பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் மீனாட்சியம்மை ஆவார். அவரின் குரல் வழி மலை...

யாழ்ப்பாணத்தில்  உருவான சில ஆரம்பகால நூலகங்கள் - 14 | யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் | நடராஜா செல்வராஜாயாழ்...
02/07/2024

யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் - 14 | யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம் | நடராஜா செல்வராஜா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பின்வீதியில், அமைதியான சூழலில் கம்பீரமாகக் காட்சிதந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனம், கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் அவர்களால் 1964 இல் மறைந்துவிட்ட அவரது அன்பு மனைவி அமரர். ஈவ்லின் விஜயரட்ன இரத்தினம் அம்மையார் அவர்களின் ஞாபகார்த்தமாக 1981 இல் கட்டப்பட்டது.

இலாப நோக்கற்ற நிறுவனமாக, பல்லினங்களின் பண்பாட்டுத் தொடர்புகளை ஆராய்ந்து அதன் மூலம் மனித சகவாழ்வு உணர்வினையும் பரஸ்பர நல்லிணக்க உணர்வினையும் வளர்ப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாக வரையறுக்கப்பட்டிருந்தது. பழைய பண்பாடுகளையும் இன்றைய பண்பாடுகளையும் ஆராய்தல், பண்பாடுகள் பற்றிய அறிவுப் பரிவர்த்தனையை வளர்த்தல் ஆகியவற்றில் இந்நிறுவனம் சிறப்பான ஆர்வத்தைக் கொண்டிருந்தது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/--14-e2libbs

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/2nmdb6cp

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பின்வீதியில், அமைதியான சூழலில் கம்பீரமாகக் காட்சிதந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் ....

பெருங்கற்பண்பாட்டுக் கால இலங்கையில் தமிழரும் பௌத்தமும் | இலங்கையில் தமிழ் பௌத்தம் | பரமு புஷ்பரட்ணம்பிராகிருதம் பௌத்த மத...
01/07/2024

பெருங்கற்பண்பாட்டுக் கால இலங்கையில் தமிழரும் பௌத்தமும் | இலங்கையில் தமிழ் பௌத்தம் | பரமு புஷ்பரட்ணம்

பிராகிருதம் பௌத்த மதத்திற்குரிய மொழியாக இருந்தும், இலங்கையில் உள்ள பல பிராமிக் கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கேயுரிய சிறப்பெழுத்துக்களைக் கொண்டிருப்பதுடன், அவற்றில் தனிநபர், உறவுமுறை, பட்டம், சமூகம் சார்ந்த பெயர்கள் தமிழிலும், பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களாகவும் எழுதப்பட்டிருப்பது அக்கல்வெட்டுகளைப் பொறித்தவர்கள் பௌத்த மதத்தவர்களாக அல்லது பௌத்த மதத்தை ஆதரித்தவர்களாக இருந்துள்ளனர் என்பதைக் காட்டுவதாக உள்ளன.

அண்மையில் பேராசிரியர் கிருஸ்ணராஜா கந்தரோடையில் பௌத்த சின்னங்கள் காணப்படும் சுற்றாடலில் மேற்கொண்ட ஆய்வின்போது பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனங்கள் சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளார். அச்சாசனங்கள் தமிழ் மற்றும் பிராகிருத மொழிகளில் அமைந்திருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2lgmdk

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/yxxvepfd

கி.மு.3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னர் இங்கு நிலவிய பெருங்கற்காலப் பண்பாட்டுடன....

கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பின் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 4 | இலங்...
30/06/2024

கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பின் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 4 | இலங்கையின் அரசியல் 1900 - 1981 : பன்முகநோக்கு | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

சிங்கள பௌத்த தேசியவாதக் கருத்தியல், கிராமத்து இளைஞர்களிடம் பல தப்பெண்ணங்களை உருவாக்கியது. தமது பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம், தம் மத்தியில் உள்ள பணம் படைத்த உயர் குழுக்களும், தமிழர்கள் போன்ற இனத்துவ பிறத்தியார்களும் (ETHNIC OTHER) தான் என அவர்கள் நம்பத் தொடங்கினர். மக்களிடமும் இக்கருத்துப் பரவலாக்கப்பட்டு உட்செரிக்கப்பட்டது.

சிங்கள வன்முறைக் கும்பல்கள் கண்டிப் பிராந்தியத்தின் தோட்டத் தொழிலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தின. தோட்டத் தொழிலாளர்களைத் தோட்டங்களில் இருந்து துரத்தியடித்து விட்டால், சிங்கள விவசாயிகளின் காணிப் பஞ்சம் (LAND HUNGER) நீங்கி விடும்; இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/---4----1900---1981-e2lfna3

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/tucusjny

கண்டியின் கிராமங்களில் வேலையின்மைப் பிரச்சினை 1970 களில் மேலும் மோசடைந்தது. வேலையைப் பெற்றுக் கொள்வதற்கு அரசின.....

கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பின் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 3 | இலங்...
29/06/2024

கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பின் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 3 | இலங்கையின் அரசியல் 1900 - 1981 : பன்முகநோக்கு | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

கண்டி நீதிமன்றில் அக்காலத்தில் பறங்கி இனத்தவர்களும் உயர் சாதி சிங்களவர்களுமான அட்வகேட், புறக்டர் ஆகிய சட்டவாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ‘ஹேன’ சாதியைச் சேர்ந்த ஒருவர் தம்மோடு சம ஆசனத்தில் அமர்ந்து நீதிமன்றில் வழக்குரைஞர் தொழில் புரிவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நீதிமன்றில் ஜோர்ஜ்.ஈ.டி. சில்வாவிற்குச் சம ஆசனம் வழங்கியதை ஆட்சேபித்து அவ் வழக்குரைஞர்கள் வெளிநடப்புச் செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சில்வா, இவ்வாறான சமூகத் தடைகளை உடைத்து, தனது தொழிலை வெற்றிகரமாக நடத்தியதோடு அரசியலிலும் பிரகாசித்தார். அவர் டச்சுப் பறங்கிய இனத்துப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கண்டிச் சமூகத்திற்கு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்தார். இத்திருமணத்தால் பறங்கிய இனத்தவர்களான வழக்குரைஞர் பலரும் சில்வா மீது கோபமும் வெறுப்பும் கொண்டவர்களாக இருந்தனர் என்று அவருடைய வரலாற்றை எழுதியோர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/---3----1900---1981-e2les62

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/mze8anys

கண்டி நீதிமன்றில் அக்காலத்தில் பறங்கி இனத்தவர்களும் உயர் சாதி சிங்களவர்களுமான அட்வகேட், புறக்டர் ஆகிய சட்டவா...

அக்கபோதியின் மனைவி : அக்கபோதி கவர்ந்து சென்ற அக்கபோதியின் மகள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்த...
28/06/2024

அக்கபோதியின் மனைவி : அக்கபோதி கவர்ந்து சென்ற அக்கபோதியின் மகள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்

உரோகணம் தொடர்ச்சியாக தனிநாடாக நீடிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து கொண்ட ஆறாம் அக்கபோதி, இடையில் கொஞ்சநாள் விடுபட்டிருந்த வழமையொன்றை மீளத்துவங்கினான். அதன்படி ஆரியபாதனின் (அல்லது ஆதிபாதனின்) ஆட்சி உரோகணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வழக்கத்தின் படி, அரசனுக்கு அடுத்து ஆட்சியுரிமை உள்ளவன், அனுராதபுரத்தில் யுவராசன் பட்டம் சூட்டப்பட்ட அரசகுமாரன் “ஆரியபாதன்” என்ற பெயரில் உரோகணத்துக்குப் பொறுப்பானவனாக நியமிக்கப்படுவான். ஆரியபாதன் அனுரை அரச குருதியில் வருவதால், உரோகணத்தின் சுதந்திரமும் கட்டுக்குள் கொண்டுவரப்படும். முழு நாட்டையும் ஆளும் அனுரை அரசனுக்கு அரசியல் பயிற்சி கொடுத்ததாகவும் ஆயிற்று.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/--e2ldkrl

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/3wmyyc87

அனுராதபுரத்தை ஆறாம் அக்கபோதி மன்னன் ஆண்டு வந்த காலத்தில் ( 722 – 734 ) சுவையான ஒரு சம்பவம் இடம்பெற்றது. அவன் தன் மகள் .....

பொற்கொல்லன் நாகன் பற்றிக் கூறும் அனுராதபுரம் - வெஸ்ஸகிரி கல்வெட்டுகள் | இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் | என். கே. ...
27/06/2024

பொற்கொல்லன் நாகன் பற்றிக் கூறும் அனுராதபுரம் - வெஸ்ஸகிரி கல்வெட்டுகள் | இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் நாகர் | என். கே. எஸ். திருச்செல்வம்

அனுராதபுரம் புனித நகரில் உள்ள இசுருமுனிய விகாரையின் தெற்குப் பக்கத்தில் சுமார் 600 மீற்றர் தூரத்தில் வெஸ்ஸகிரிய கற்குகைகள் மற்றும் கட்டிட இடிபாடுகளைக் கொண்ட வளாகம் அமைந்துள்ளது. சுமார் 500 மீற்றர் நீளம் கொண்ட இவ்வளாகத்தின் மத்தியில் உள்ள நீண்ட பாறைத் தொடரில் 10 இற்கும் மேற்பட்ட கற்குகைகளும், இங்கிருந்து சற்று தூரத்தில் இன்னும் சில கற்குகைகளும் உள்ளன. இங்கு மொத்தமாக 24 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றைத் தவிர ஏனையவை முற்கால பிராமிக் கல்வெட்டுகளாகும்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/--e2lc3em

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/4unhbnmv

அனுராதபுரம் புனித நகரில் உள்ள இசுருமுனிய விகாரையின் தெற்குப் பக்கத்தில் சுமார் 600 மீற்றர் தூரத்தில் வெஸ்ஸகிரி...

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்...
26/06/2024

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 2 | இலங்கையின் அரசியல் 1900 - 1981 : பன்முகநோக்கு | ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

தென்னாசியாவில் ஜனநாயக அரசியல் சாதியுடன் கலப்புற்று, சாதியால் மாற்றம் பெறுகிறது. ஜனநாயக நிறுவனங்களைச் சாதிமயப்படுத்தல் இடம்பெறுகிறது. இப்புதிரான, முரண்பட்ட போக்கைச் சமூகவியலாளர்கள் ‘உள்ளூர்ப் பண்பாடு, வழமைகள், நடைமுறைகளுக்கு ஏற்ப ஜனநாயகத்தை மாற்றுதல்’ (INDIGENISATION OF DEMOCRACY) எனக் கூறுவர்.

ஜனநாயகத்தை இவ்வாறு திரிவுபடுத்துவதற்குப் பல உதாரணங்களை நாம் காட்டலாம். ரியுடர் சில்வாவின் ஆய்வு, கண்டியச் சிங்களச் சமூகத்தில் ஜனநாயகத்தினைச் சாதியுடன் கலப்புறச் செய்து திரிவுபடுத்துவதை உதாரணங்களுடன் சித்திரிக்கிறது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/---1----1900---1981-e2las81

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/2vt32m2w

தென்னாசியாவில் ஜனநாயக அரசியல் சாதியுடன் கலப்புற்று, சாதியால் மாற்றம் பெறுகிறது. ஜனநாயக நிறுவனங்களைச் சாதிமயப...

பொலநறுவைக் கால சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் நடைமுறைகள் : சாசனங்களை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு | ...
25/06/2024

பொலநறுவைக் கால சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் நடைமுறைகள் : சாசனங்களை ஆதாரமாகக் கொண்ட ஆய்வு | மகேந்திரன் சானுஜன்

சோழ நிர்வாகத்தில் இருந்த தமிழ் மன்னர்களைப் போல், சோழருக்கு பின் ஆட்சி பீடம் ஏறிய சிங்கள மன்னர்களும் பிரதேசங்களை மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்யும் முறையைக் கடைப்பிடித்தனர். உதாரணமாக முதலாம் பராக்கிரமபாகு தக்கண தேச அதிபதியாகியபோது மண்டலிகரை நியமித்தானென அவனால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றான தெவனகலக் கல்வெட்டு கூறுகின்றது.

சிங்கள அரசர்களின் ஆட்சியில் சோழர் ஆட்சிக் காலத்தைப் போலவே வேளக்காரர், அகம்பாடியர், வீரக்கொடியர் போன்றோர் போர்களில் முக்கியம் பெற்றிருந்தனர். மற்றும் முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் தமது அரசையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பை வேளக்காரப் படைப் பிரிவிடம் ஒப்படைத்தனர்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2l9d10

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/mtn3j46r

சிங்கள அரசர்களின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட சோழர்களின் அரசியல் நடைமுறைகள், சோழர் இலங்கையை விட்டு நீங்கிய ...

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்:இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் -பகுதி 08 | டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் தம...
24/06/2024

அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள்:இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் -பகுதி 08 | டெனிஸ் மெக்கில்ரே ஆய்வுகளில் தமிழரும் முஸ்லிம்களும் : பண்பாட்டு மானிடவியல் நோக்கு | ஜிஃப்ரி ஹாசன்

தமிழர்களதும், சோனகரதும் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் ஒரே தன்மையானதாகவே இருக்கும். அவை மணல் பாதைகளில் ஒரு தளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டுப் பகுதியும் சுற்றுச்சுவர்களால் அல்லது வலிமையான கம்பி வேலிகளால் பாதுகாக்கப்பட்டு, செம்பருத்திச் செடிகள், தென்னை, பாக்கு மற்றும் மா போன்ற மரங்கள் செழிப்பாக நடப்படுகிறது.

சாதாரணத் தமிழ் வீடுகள், கிழக்கே கவனமாகப் பெருக்கப்பட்ட மணல் முற்றத்தை நோக்கிய பாரம்பரியத் தரைத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. அத்தோடு, மேற்குச் சுவரின் நடுவில் ஜன்னல் இல்லாத உட்பக்கமாக பூசை-அறையை இணைக்கின்றன. சோனக வீடுகள் இந்த அடிப்படைத் தரைத் திட்டத்திலிருந்து அதிக மாறுபாட்டைக் காட்டுகின்றன.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/--08-e2l84fi

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/4kva7mmh

தமிழர்களதும், சோனகரதும் குடியிருப்புப் பகுதிகள் பெரும்பாலும் ஒரே தன்மையானதாகவே இருக்கும். அவை மணல் பாதைகளில்...

‘சி- நோர்’ : நோர்வே யாழில் நிறுவிய மீன்பிடி நிறுவனம் | வை.ஜெயமுருகன்‘மாலு மீன் எண்டர்பிரைஸ்’ என்ற பெயர் முதலில் திட்டமிட...
23/06/2024

‘சி- நோர்’ : நோர்வே யாழில் நிறுவிய மீன்பிடி நிறுவனம் | வை.ஜெயமுருகன்

‘மாலு மீன் எண்டர்பிரைஸ்’ என்ற பெயர் முதலில் திட்டமிடல் கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டது. 'மாலு' என்றால் சிங்களத்தில் மீன். 'மீன்' என்பது தமிழ்ச் சொல். இலங்கையின் சிறுபான்மை மற்றும் பெரும்பான்மையினருக்கு இடையிலான சகோதரத்துவத்தை அடையாளப்படுத்துவதற்காக அவர்கள் வேண்டுமென்றே அப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.

திட்ட ஆரம்பத்துக்கு காரைநகர் தீவில், தோப்புக்காடு கிராமத்தில், மீன்பிடிப் பிரதேசத்தின் மத்தியில் ஒரு நிலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆழ்கடல் படகுகள் யாழ்ப்பாணக் குடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லக்கூடிய அளவுக்குக் கரையோரப் பகுதியின் நீர் ஆழமாக இருந்ததால், இந்த இடம் சரியானதாக இருந்தது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/--e2l708j

முழுமையான கட்டுரைக்கு
https://ezhunaonline.com/article/story-of-c-nor/

நவீன மீன்பிடித் துறை பற்றி மேற்படிப்பு, அனுபவம் பெறவேண்டும் என்று அந்தோணி இராஜேந்திரம் அவர்களுக்கு ஒரு கனவு இ....

பகிர்வுப் பொருளாதாரமும் அதன் நுணுக்கங்களும் | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | கணபதிப்பிள்ளை ரூபன்எமது வீடுகளிலும் அல்...
22/06/2024

பகிர்வுப் பொருளாதாரமும் அதன் நுணுக்கங்களும் | ஈழத்திலிருந்து சிலிக்கன் வலி வரை | கணபதிப்பிள்ளை ரூபன்

எமது வீடுகளிலும் அல்லது தொழில் செய்யும் வியாபார இடங்களிலும், எமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்திருப்போம். ஆனால் அவற்றின் பாவனை பத்து வீதம் முதல் அதி கூடியது ஐம்பது வீதத்திற்கும் குறைவாக இருக்கும். அப்படிப் பாவிக்காமல் இருக்கும் போது, அதற்குச் செலவு செய்த முதல் விரயமாக்கப்படும்.

இக் குறையைத் தீர்க்க பொருட்களை மறுபயன்பாடு செய்யலாம். அதன் மூலம் வியாபாரத்தை தொடங்குவது பகிர்வுப் பொருளாதாரத்தின் அடிப்படையாக உள்ளது. அது மட்டுமன்றி இப் பொருட்களை பலரும் வாங்குவதால் உலகின் இயற்கை வளங்கள் விரயமாக்கப்படாது அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2l6180

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/vr2udn6f

வலைத்தளங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மூலம் பகிர்வுப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எளிதாக்கப்பட்டுள்ளது. இப்பட...

ஐந்து இலட்சம் கால்நடைப் பண்ணையாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த 'மந்தன்' திரைப்படம் : கூட்டுறவின் முன்னுதாரணம் | கூட்டுறவு இய...
21/06/2024

ஐந்து இலட்சம் கால்நடைப் பண்ணையாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த 'மந்தன்' திரைப்படம் : கூட்டுறவின் முன்னுதாரணம் | கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும் | வை. ஜெயமுருகன்

1949 இல் குரியன், குஜராத்தில் உள்ள ஆனந் நகருக்கு வந்தபோது அவருக்கு வயது 28. அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளை நம்பவைத்தார்; அவர்கள் உற்பத்தி செய்யும் பால் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது, அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவர்களின் பாலில் உரிமை கோர அதிகாரம் இல்லை என கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வழிகாட்டினார்.

வர்கீஸ் குரியன் மற்றும் பிறரின் முயற்சியால் கூட்டுறவு மேலும் வளர்ச்சி பெற்றது. எருமைப் பாலில் இருந்து பால் பவுடரை உருவாக்கும் கண்டுபிடிப்பு, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட பால் தொழிலில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு தொழில்நுட்ப முன்னேற்றமாகும். குரியன் உதவியுடன், இந்தச் செயல்முறை வணிக ரீதியாக விரிவாக்கப்பட்டது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2l52dh

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/2vrzkpjs

1949 இல் குரியன், குஜராத்தில் உள்ள ஆனந் நகருக்கு வந்தபோது அவருக்கு வயது 28. அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளை நம்பவை....

வடக்கு மாகாணத்திற்கு மருத்துவப் பணிகளைக் கொண்டுவரும் யாழ்ப்பாணத்தின் மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம் | வளரும் வடக்கு | ...
20/06/2024

வடக்கு மாகாணத்திற்கு மருத்துவப் பணிகளைக் கொண்டுவரும் யாழ்ப்பாணத்தின் மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம் | வளரும் வடக்கு | ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா | தமிழில் : த.சிவதாசன்

அமெரிக்க - சிலோன் மிஷனால் 1848 இல் ஆரம்பிக்கப்பட்ட, மானிப்பாயில் இருக்கும் 'கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனை, இலவச சேவைகள் உட்பட மிகவும் மலிவான மருத்துவச் சேவைகளை வழங்கி வருவது உங்களில் பலருக்குத் தெரியும். இக் கட்டுரைக்குக் காரணமான மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம் கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையில் இருந்துதான் இயங்குகிறது.

2011 இல் இலண்டனில் சில மருத்துவர்களைச் சந்தித்தபோது மருத்துவ விஞ்ஞானக் கல்வி நிலையம் பற்றிய எண்ணக்கரு உருவாகியது. தற்போது இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் - நான் டாக்டர் சுரேன் என அழைக்கும் - டாக்டர் ராஜேந்திரா சுரேந்திரகுமாரன் இக்காலத்தில் இலண்டன் செயிண்ட் பார்த்தலோமியூ மருத்துவமனையில் முனைவருக்கு அடுத்த நிலைப் பட்டத்துக்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2l3l7l

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/bdee5esf

அமெரிக்க - சிலோன் மிஷனால் 1848 இல் ஆரம்பிக்கப்பட்ட, மானிப்பாயில் இருக்கும் 'கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனை, இலவச சே...

ஷியாம் செல்வதுரையின் 'பசித்த பேய்கள்' | இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள் | இளங்கோ 'பசித்த‌ பேய்கள்' நாவல் 1983 இனக்கல...
19/06/2024

ஷியாம் செல்வதுரையின் 'பசித்த பேய்கள்' | இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள் | இளங்கோ

'பசித்த‌ பேய்கள்' நாவல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதையாகும். சிவன் தனது 19 ஆவது வயதில் இலங்கையில் உயர்தரப் பரீட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 1984 இல் நிகழ்கின்றது.

சிங்களத் தாய்க்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், ‘83’ கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் காப்பாற்றுகின்றது. இக்கலவரம் நிகழ்வதற்கு முன், சிவன் அவரது தமிழ்த் தந்தையை இழந்துவிடுகின்றார். சிவனின் தாயார், சிவனோடும், அவரது சகோதரி ரேணுவோடும், சிவனின் அம்மம்மாவின் வீட்டுக்கு வந்து வாழத் தொடங்குகின்றார்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2l2e2m

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/2p9z7jtk

'பசித்த‌ பேய்கள்' நாவல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதையாகும். சிவன் தனது 19 ஆவது வய...

ஆன்மிக நாத்திகம் | தமிழ்ப் பண்பாடு : ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன்சாதிப் பிளவாக்கமடைந்து உருவான எமக்குரிய ஏற்ற...
18/06/2024

ஆன்மிக நாத்திகம் | தமிழ்ப் பண்பாடு : ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன்

சாதிப் பிளவாக்கமடைந்து உருவான எமக்குரிய ஏற்றத் தாழ்வான வாழ்க்கை முறைக்கு ஏற்புடைய கருத்தியலை வழங்கிய பிரமாணியம் வலுப்பட்ட பின்னர் அதனை முறியடிப்பதற்கு முனைந்த சமூக சக்தியாக வணிகச் சாதி தோற்றம் பெற்றது; அத்தகைய புதியதொரு முழுச் சமூக சக்தியின் (திணையின்) கருத்தியலாகப் பௌத்தம் வெளிப்பட்டிருந்த நடைமுறை வட இந்தியாவுக்கு உரியது.

நவீன சமூக உருவாக்கத்தில் நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி உறவையும் அதற்கு அனுசரணையான சாதியத்தையும் தகர்ப்பதற்கெனப் பௌத்தத்தைக் கையேற்கும் போது அதனுள் உறைந்துள்ள வணிகத்திணை மேலாதிக்கப் பண்பு ஏற்படுத்தும் வரம்பிடுதலைத் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது. தனிமனித விடுதலை பற்றிய பௌத்தத்தின் அக்கறை சமூக விடுதலைக்கானதாக விரிவாக்கம் பெற இயலாததாய் இருந்தது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2l0r8m

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/ybwecbbp

சாதிப் பிளவாக்கமடைந்து உருவான எமக்குரிய ஏற்றத் தாழ்வான வாழ்க்கை முறைக்கு ஏற்புடைய கருத்தியலை வழங்கிய பிரமாண....

எழுநா | இதழ் 23 | யூன் | 2024பொருளடக்கம்1.நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் : அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளை அடிப்படை...
17/06/2024

எழுநா | இதழ் 23 | யூன் | 2024

பொருளடக்கம்

1.நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும் : அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – பகுதி 1,2
பரமு புஷ்பரட்ணம்

2.‘இலங்கையின் போரும் சமாதானமும்’ : நோர்வேயின் சமாதானத் தோல்வியின் விளைவுகள் – நோர்வேஜியப் பேராசிரியர் ஒய்வின்ட் புக்லறூட் எழுதிய நூல் – பகுதி 2
சிவராஜா ரூபன்

3.ரோஹண விஜயவீரவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களும் : சமூகவியல் நோக்கு – பகுதி 1,2
ஆங்கில மூலம் : சரத் அமுனுகம
தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

4.இலங்கையில் நீர் மின்சாரம் : தன்னிறைவின் விலை
மீநிலங்கோ தெய்வேந்திரன்

5.நன்மையின் நம்பிக்கையுரு கிங்கிலியர்
தி. செல்வமனோகரன்

6.யாழ்ப்பாணத்தில் உருவான சில ஆரம்பகால நூலகங்கள் – 12
நடராஜா செல்வராஜா

7.தமிழ்ப் பௌத்த மீட்டுருவாக்கம்
நடேசன் இரவீந்திரன்

8.லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் யாழ்ப்பாணத்தின் நான்கு பிரிவுகளும் தீவுகளும்
இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

9.NurtureLeap : யாழ்ப்பாணத்தின் திறன்வளம் கொண்டோரை வல்லுநர்களாக்கும் நிறுவனம்
ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா
தமிழில் : த. சிவதாசன்

10.வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்தல் : பொருளாதார முன்னேற்றமும் சமூகப் பொறுப்பும்
ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா
தமிழில் : த. சிவதாசன்

11.தனிநாயகம் அடிகளாரின் கல்விச் சிந்தனைகள் – பகுதி 1,2
கு. சின்னப்பன்

12.எதியோப்பியாவின் சமஷ்டி அரசியல் யாப்பு : ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்களின் ஆய்வுரையை முன்வைத்து ஓர் உரையாடல் – பகுதி 1,2
கந்தையா சண்முகலிங்கம்

13.மண்முனையில் பற்சின்னம் கொணர்ந்தவளும் மல்வத்தையில் புத்தர் சிலை அமைத்தவனும்
விவேகானந்தராஜா துலாஞ்சனன்

14.இலங்கையில் ஆசீவகச் சமயம்
ஜெகநாதன் அரங்கராஜ்

15.அனுக் அருட்பிரகாசத்தின் ‘ஒரு குறுகிய திருமணத்தின் கதை’
இளங்கோ

16.மன்னார்ப் படுகை எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வும் அகழ்வும் : அபிவிருத்திக்கான வாய்ப்பா, சாபமா?
வை. ஜெயமுருகன்

17.நாக யுவராஜனின் தவறான சமய நம்பிக்கை பற்றிக் குறிப்பிடும் திஸ்ஸமகராம கல்வெட்டு
என். கே. எஸ். திருச்செல்வம்

18.பிதுரங்கல பிராமிக் கல்வெட்டுகளில் நாகர்
என். கே. எஸ். திருச்செல்வம்

19.இலங்கையின் வடக்குப் பகுதியின் மழைவீழ்ச்சி
நாகமுத்து பிரதீபராஜா

20.அரபுக்கள், சோனகர், முஸ்லிம்கள் : இலங்கை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தின் பரிணாமம் – பகுதி 07
ஜிஃப்ரி ஹாசன்

21.கிழக்கிந்தியக் கம்பெனிகளும் அவற்றின் வியாபாரத் தந்திரங்களும்
சை. கிங்ஸ்லி கோமஸ்

22.இலங்கையின் கறவை மாடுகளைப் பாதிக்கும் முக்கியமான தொற்று நோய்கள்
சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

23.வரலாற்றின் வழியில் மலையகத் தமிழரும் இலங்கை அரசியலும்
எம். இராமதாஸ்

24.வணிக நகர்வுகளில் துணிவுடமையின் வகிபாகம்
கணபதிப்பிள்ளை ரூபன்

சஞ்சிகையைத் தரவிறக்கம் செய்வதற்கு👇
https://tinyurl.com/tjxs4c7m

வல்லிபுரப் பொற்சாசனம் : பேராசிரியர் பரணவிதான அவர்களின் வாசிப்பின் மீதான விமர்சனமும் மீள் வாசிப்பும் | இலங்கையில் தமிழ் ப...
16/06/2024

வல்லிபுரப் பொற்சாசனம் : பேராசிரியர் பரணவிதான அவர்களின் வாசிப்பின் மீதான விமர்சனமும் மீள் வாசிப்பும் | இலங்கையில் தமிழ் பௌத்தம் | சிவ தியாகராஜா

1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த லூயிஸ், வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் விஷ்ணு கோயிலின் பூசகர் அப்பகுதியிலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகளை அரசாங்க அதிபரைக் கூட்டிச் சென்று காண்பித்தார்.

இதைத் தொடர்ந்து வல்லிபுரத்திலிருந்த பௌத்த கோயில்களின் அழிபாடுகள் இருந்த இடத்தில் 1936 இல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழ்வுகளின் போது புராதன பௌத்த விகாரம் ஒன்றின் அஸ்திவாரத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த பேழையில் வல்லிபுரப் பொற்சாசனம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2kufe9

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/4v4umh2r

1916 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராக இருந்த லூயிஸ், வல்லிபுரத்தைப் பார்வையிடச் சென்ற சமயம் விஷ்ணு கோ...

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்...
15/06/2024

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 1 | இலங்கையின் அரசியல் 1900 - 1981 : பன்முகநோக்கு | ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்

தென்னாசியாவில் சாதிக்கும் ஜனநாயக அரசியலிற்கும் உள்ள உறவு குறித்துப் பல விவாதங்கள் நடந்துள்ளன. ஜனநாயகத்திற்கு முற்றிலும் வேறுபட்டது சாதி, ஜனநாயகம் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி பரம்பரை பரம்பரையாகத் தொடரும் சமத்துவமின்மையை ஆதாரமாகக் கொண்ட சமூக முறையை நியாயப்படுத்துவது, இதனால் சாதிக் கட்டமைப்பின் அடிநிலையில் இருப்போரின் குடியுரிமைகளை சாதி மறுக்கிறது.

ஜனநாயகம் வழங்கும் குடியுரிமைச் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை உறுதி செய்கிறது. சாதி சமத்துவத்தை ஏற்பதில்லை. இதனால் அது ஜனநாயகத்திற்கு முரணானது; எதிரானது. ஆயினும் ஜனநாயக அரசியல் செயல்முறையில் சாதியடிப்படையிலான சங்கங்களும் அமைப்புகளும் அரசியல் கூட்டணிகளை அமைத்துச் செயற்படுவதையும் பங்கேற்பதையும் காண்கிறோம்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/---1----1900---1981-e2ktmsv

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/mr3bun9k

தென்னாசியாவில் சாதிக்கும் ஜனநாயக அரசியலிற்கும் உள்ள உறவு குறித்துப் பல விவாதங்கள் நடந்துள்ளன. ஜனநாயகத்திற்க....

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ‘டெங்கு’ ஏற்படுத்தும் பொருளாதாரச் சுமை | வை.ஜெயமுருகன்தற்போதைய இலங்கையின் சுகாதா...
14/06/2024

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ‘டெங்கு’ ஏற்படுத்தும் பொருளாதாரச் சுமை | வை.ஜெயமுருகன்

தற்போதைய இலங்கையின் சுகாதாரத்துறை, வரலாற்றில் மிகவும் ஒரு மோசமான சமூக, பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சிக்கியுள்ளது. ஒரு காலத்தில் வலுவான சுகாதார அமைப்பு என புகழப்பட்ட ஒரு துறை வீழ்ச்சியை நெருங்குகிறது. மருத்துவக் கட்டமைப்பானது மின் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் ஆபத்தில் வீழ்ந்துள்ளது.

நான்கு தசாப்த கால உள்நாட்டுப் போர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவற்றின் தாக்கம் ஏற்கனவே இலங்கையின் சுகாதாரத் துறையை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார அமைப்பின் நிலைத்தன்மைக்கு அதிக அழுத்தத்தைச் சேர்த்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2ksi1j

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/3vv8aw59

தற்போதைய இலங்கையின் சுகாதாரத்துறை, வரலாற்றில் மிகவும் ஒரு மோசமான சமூக, பொருளாதார நெருக்கடியின் மத்தியில் சிக.....

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு...
13/06/2024

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்' என்னும் தலைப்பிலான ஆவணப்படம் நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திரையிடப்படவுள்ளது.

உள்ளூர் நீர் மூலங்களின் முக்கியத்துவம், அவற்றிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அவற்றை பாதுகாப்பதில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள கடப்பாடு என்பவற்றை ஆவணப்படத்தினூடாக சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் இந்தத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தில் கால்நடை வளர்ப்பில் பெண்களும் அவர்களின் சவால்களும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | சிவபாத ச...
13/06/2024

தமிழர் தாயகத்தில் கால்நடை வளர்ப்பில் பெண்களும் அவர்களின் சவால்களும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

இனப் பிரச்சினையும் அதனோடு இணைந்த யுத்தமும் எமது தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை பல தசாப்தங்களுக்கு பின்தள்ளி விட்டது. குறிப்பாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றை சூனிய நிலைக்கு இறக்கியிருந்தது எனலாம். இந்தப் பின்னடைவு இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் (GDP) வடக்கு, கிழக்கின் பங்களிப்பை புறக்கணிக்கும் அளவுக்கு மாற்றி இருந்தது.

கொடிய யுத்தம் மரணங்களை ஏற்படுத்தியதோடு ஏராளமான அங்கவீனர்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் பல ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்களையும் (women headed families) ஏற்படுத்தியுள்ளது. அங்கவீனமுற்ற ஆண் குடும்பங்களை பெண்கள்தான் தலைமை ஏற்று நடத்த வேண்டிய நிலை.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2kr55g

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/yc699bsz

இனப் பிரச்சினையும் அதனோடு இணைந்த யுத்தமும் எமது தமிழர் தாயகப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை பல தசாப்தங்களுக...

மட்டக்களப்புப் பூர்வகுடிகளின் சடங்குகள் - உளவியலும் அழகியலும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன்வேடர்களின் வழிபாட்...
12/06/2024

மட்டக்களப்புப் பூர்வகுடிகளின் சடங்குகள் - உளவியலும் அழகியலும் | வேடர் மானிடவியல் | கமலநாதன் பத்திநாதன்

வேடர்களின் வழிபாட்டு முறைகளில் உத்தியாக்களின் வழிபாடு என்பது மிகத் தோழமையுடனும், உறவுமுறையுடனும் ஆற்றுகை செய்யப்படுகின்றதோர் வழிபாடாகும். இச்சடங்கிலே காணப்படுகின்ற குணமாக்கல் தன்மை என்பதும் மிகவும் தனித்திறம் கொண்ட இயல்புகளினைக் கட்டமைத்துக் காணப்படுகின்றது.

அதாவது, இவர்களின் கடவுளர் என்பது கண்ணுக்குத் தெரியாத மாய உருவங்களோ அல்லது உண்மைத் தன்மையற்ற கருத்துத் திரிபுகளோ கிடையாது. மாறாக தாம் ஒன்றாகக் கூடி வாழ்ந்த, வளர்ந்த, நல்ல கெட்ட நிகழ்வுகளுடன் ஒன்றித்துப் போன தமக்கு முந்தைய உறவுகளினை வழிபாடு செய்பவையாகவே காணப்படுகின்றன.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/--e2kpqfo

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/3f8dzuaa

வேடுவர்களின் வழிபாட்டுச் சடங்குகளிலே முதலாவதாக வழிபாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படுவது உத்தியாக்கள் வழிபாடு ...

சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம் | வளரும் வடக்கு | ஆங்கில மூ...
11/06/2024

சிவன் அருள் இல்லம் : உலகம் முழுவதும் வாசனைத் திரவியங்களை ஏற்றுமதி செய்யும் வட மாகாண நிறுவனம் | வளரும் வடக்கு | ஆங்கில மூலம் : ஜெகன் அருளையா | தமிழில் : த. சிவதாசன்

"தொண்டு, வீட்டில் ஆரம்பிக்கிறது" என்பார்கள். வடமாகாணத்தை தளமாகக் கொண்ட சிவனருள் இல்லம் என்னும் தொண்டு நிறுவனம் ஒரு குழந்தைகள் அனாதை இல்லமாகத்தான் ஆரம்பமானது. 2004 ஆழிப்பேரலையால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளை எடுத்து அது பராமரித்தது.

தானமாகக் கிடைத்த பணத்தில் ஆரம்பித்த இவ்வில்லம் இப்போது வருமானமீட்டும் ஒரு பெரிய நிறுவனமாக வட மாகாணமெங்கும் பரந்து நிற்கிறது. அதன் குழந்தைகள் வளர்ந்து முதியவர்களாகும்போது அவர்களுக்கும், வடக்கு-கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட இதர மக்களுக்கும், நிலையான வருமானம் பெற்றுத்தரும் வேலைகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே சிவனருள் இல்லம்.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2kodc8

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/4ebdmwdj

"தொண்டு, வீட்டில் ஆரம்பிக்கிறது" என்பார்கள். வடமாகாணத்தை தளமாகக் கொண்ட சிவனருள் இல்லம் என்னும் தொண்டு நிறுவனம்...

பிரசவ செவிலி கொத்தியாத்தை | ஈழத்து நாட்டார் தெய்வங்கள் | தி. செல்வமனோகரன்இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நட...
10/06/2024

பிரசவ செவிலி கொத்தியாத்தை | ஈழத்து நாட்டார் தெய்வங்கள் | தி. செல்வமனோகரன்

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின.

நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், முன்னோர், அவலச்சாவுற்ற மனிதர், ஆவியாய் இயல்பிறந்த ஆற்றல் பெற்று தெய்வமாதல் அல்லது பேயாதல் எனப் பல்வேறு தெய்வங்களும் நம்பிக்கைகளும் காணப்பட்டன, காணப்படுகின்றன.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2kmvl8

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/98y27pzv

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற....

இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள் | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய...
09/06/2024

இலங்கையில் தமிழ் அரச மரபின் தோற்றத்தை அடையாளப்படுத்திக் காட்டும் பிராமிச் சாசனங்கள் | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இலங்கைக்கு அறிமுகமாகிய போது அம்மதத்தையும் அம்மதம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றின் வரலாற்றையும் வாய்மொழிக் கதையாகப் பேணும் மரபும் தோற்றம் பெற்றதே காரணமாகும்.

அவ்வாறு பேணப்பட்ட வரலாற்றுக் கதைகளை அடிப்படையாகக் கொண்டே தீபவம்சம், மகாவம்சம, சூளவம்சம் முதலான பாளி வரலாற்று இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவ்விலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டு வரை இலங்கையில் இருந்த இராசதானிகளின் வரலாற்றையும், அவற்றில் ஆட்சிபுரிந்த மன்னர்களின் வரலாற்றையும் கால அடிப்படையில் எடுத்துக் கூறுகின்றன.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/ep-e2klt67

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/3m2f6fe9

தென்னாசியாவில் தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு கொண்ட நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இதற்கு, கி.மு. 3 ஆம் ....

இலங்கையின் பொருளாதாரப் பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை | மலையகம் 200 |  வி.எஸ்தர்தேயிலைத் தோட்டங்கள் சிதைந்து வரும் நில...
08/06/2024

இலங்கையின் பொருளாதாரப் பேரிடரில் மலையகப் பெண்களின் நிலை | மலையகம் 200 | வி.எஸ்தர்

தேயிலைத் தோட்டங்கள் சிதைந்து வரும் நிலையில், தற்போது சம்பளமென்பது மாறி பறிக்கும் தேயிலையின் அளவுக்கேற்ப கூலியே வழங்கப்படுகின்றது. போதிய உரமின்மை, பராமரிப்பின்மை ஆகிய பிரச்சினைகளால் தேயிலைக் கொழுந்தையும் போதியளவிற்கு எடுக்க முடிவதில்லை.

இந்நிலையில் இத்தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலையின் அளவும், கிடைக்கும் கூலியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இலங்கையின் மந்தமடைந்து வரும் பொருளாதாரமும் இம் மக்களைக் கடுமையாகத் தாக்குகின்றது. அதிலும் மலையக பெண்களின் நிலை மிகவும் மோசமான பேரிடரை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறது.

ஒலி வடிவில் கேட்க
https://podcasters.spotify.com/pod/show/ezhuna/episodes/200-e2kl928

முழுமையான கட்டுரைக்கு
https://tinyurl.com/5bfth2r2

1972 ஆம் ஆண்டு சிறீமா அரசாங்கத்தால் உள்ளூர் உற்பத்தியினால் தன்னிறைவு எனும் தொனிப்பொருளில் ஒரு பொருளாதாரத் திட்.....

Address

#63, Sir Pon Ramanathan Road, Kallady, Thirunelvelly

Alerts

Be the first to know and let us send you an email when Ezhuna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ezhuna:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Ezhuna Media Foundation is a non - profit, charitable independent media organization founded in 2012. The primary objective of this organization is to record the various voices of the people, especially those occupying the margins of society. Operating in the social spaces closely related to Sri Lanka’s Tamil speaking communities, Ezhuna aims at recording, preserving and engaging with various forms of arts and culture associated with these communities. It also aims to specialize in print medium, visual medium, radio broadcasting and internet medium covering a range of social, cultural, political and economical issues. As an independent body, Ezhuna Media Foundation will bring together different social groups, and organizations representing conflicting ideological positions. The foundation looks forward to collaborating with individuals and organizations that are interested in contributing to its endeavors in the above mentioned domains. Objectives * Initiate the traditional print medium efforts that publishes books, journals, magazines and newspapers * Introduce the most powerful visual medium to specialise in producing documentries, short-films and talk shows * Provide a radio broadcasting service which broadcasts content that is popular and relevant to Sri Lanka's Tamil speaking communities and provide a mechanism for enabling individuals, groups to tell their own stories and to share experiences. * Build a more interactive internet and mobile medium that would connect rest of the mediums and also function in all possibilities.