25/03/2023
#இனி_வரும் #தலைமுறைக்கு #வேண்டாம்_வெளிநாடு...
அடுத்த தலைமுறையிடமாவது வெளிநாட்டு மோகத்தையும் ஆசைகளையும் கனவுகளையும் வளர்க்காமல் இருங்கள் சொந்தங்களே
இப்படி தான் சின்ன சின்ன விசயத்திலும் வெளிநாடு என்ற வார்த்தையை சேர்த்து வெளிநாட்டு மோகத்தை நம்மில் விதைத்து விடுகிறார்கள் விட்டார்கள்
வெளிநாட்டு வாழ்க்கையில் காசை எடுத்து விடுகிறார்கள்
ஆனால் சந்தோசத்தை தொலைத்து விடுகிறார்கள்
வாழ்க்கை #ஆரம்பம் ஆகும் காலத்தில் #விமானம் ஏற்றி விடுகிறார்கள் வாழ்க்கை #முடியும் நேரத்தில் இறக்கி விடுகிறார்கள்
வெளிநாட்டில் சம்பாதிக்க வந்தவர்கள் சந்தோசமாக வாழ்ந்தேன் நிம்மதியாக வாழ்ந்தேன் என்று சொன்னதை விட 10 வருடமாக 20 வருடமாக 40 வருடமாக இங்கே தான் இருக்கிறேன் வாழ்கிறேன் என்ற சொல் தான் அதிகமாக கேட்க முடிகிறது
இரண்டு வருடம் ஒரு முறை ஒரு மாத கால விடுமுறையோ அல்லது இரண்டு மாத கால விடுமுறையோ கிடைக்கிறது அதில் என்ன சந்தோசம் கிடைக்கின்றது எதை அனுபவிக்க முடிகிறது
இங்கே அடைந்ததை விட #இழந்தது தான் அதிகம்
அம்மா,
அப்பா,
அக்கா,
தங்கை,
அண்ணன்,
தம்பி,
மனைவி
குழந்தைகள்
சொந்தங்கள்
நண்பர்கள்
நம் பிறந்த மண்
நல்லது
கெட்டது
சந்தோசம்
துக்கம்
என எல்லாத்தையும் அனைவரையும் விட்டுவிட்டு அனைத்து சந்தோசங்களையும் இழந்து விட்டு #காசு என்ற ஒன்றே என்று #அனாதைகளாக வாழும் வாழ்க்கை தான் #வெளிநாட்டு_வாழ்க்கை
இனி வரும் தலைமுறையாவது வெளிநாடு என்பது #சுற்றிப்_பார்க்க தகுந்த இடம் சம்பாதிக்க வேண்டாம் என்ற எண்ணத்தை கொடுங்கள் உருவாக்குங்கள்
வேண்டாம் வெளிநாடு.
கால் வயிறு கஞ்சி குடித்தாலும் பிறந்த மண்ணிலே குடும்பத்துடன் இருந்து குடிக்க வேண்டும்
காலனா சம்பாதித்தாலும் பிறந்த மண்ணிலே சம்பாதிக்க வேண்டும் அதுவே சிறப்பு அதுவே சந்தோசம் அதுவே திருப்தி.
★ஆக இனி வரும் தலைமுறைக்கு வெளிநாடு வேண்டாம்