Palmyrah Tamil News

Palmyrah Tamil News We Palmyrah Tamil News editorial stand and its reliable and balanced presentation of the news won for it the serious attention and regard of the people.

25/08/2022

நேற்றைய தினம் 105 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 05 மரணங்கள் பதிவாகியுள்ளன

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள்நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (16.03.2022)அதி வணக்கத்திற்குரிய மகா சங்...
16/03/2022

ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள்
நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை. (16.03.2022)

அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன்,
ஏனைய மதத் தலைவர்களே,
தாய்மார்களே, தந்தையர்களே,
சகோதர சகோதரிகளே,
அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே

இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன். பொதுமக்கள் அனுபவிக்கும் ஒரு சில சிக்கலான வாழ்க்கை முறைகளுக்கு தீர்வு காண இன்று நான் கடுமையான முடிவுகளை எடுக்க உறுதிபூண்டுள்ளேன். அதற்கு உதவ தேசிய பொருளாதார சபையையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க ஒரு ஆலோசனைக் குழுவையும் நியமித்தேன். இதன் மூலம், நான் எடுக்கும் முடிவுகள் செயற்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனவே, மக்களுக்காக நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்குமாறு நான் உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நான் மக்களின் சிரமங்களை நன்கு அறிந்த ஒருவர். நாங்கள் எதிர்கொண்ட கொடூரமான பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் முன்னணியில் இருந்த படைவீரர் மற்றும் யுத்தத்தில் சிக்கிய அப்பாவி பொதுமக்கள் எதிர்கொண்ட அனைத்து சிரமங்களையும் நன்கு புரிந்துகொண்டு அவற்றை முறையாக நிர்வகிக்க என்னால் முடிந்தது.

இன்றைய இக்கட்டான நிலைமை, நம் நாடு மட்டும் முகங்கொடுக்கும் ஒரு விடயமல்ல. முழு உலகமும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிக்கலான சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொவிட் நோய்த் தொற்றினால் அதிகரித்த கப்பல் கட்டணங்கள், பொருட்களின் விலை அதிகரித்தல் மற்றும் சில பொருட்களின் தட்டுப்பாடு ஆகிய அனைத்தும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. ஆனாலும் நாம் மக்களின் பக்கம் நின்று நிவாரண நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

இந்த நெருக்கடி ஒரு போதும் என்னால் உருவாக்கப்பட்டதொன்று அல்ல. அன்று இந்த நெருக்கடியை உருவாக்குவதற்கு காரணமானவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் அரசாங்கத்தை விமர்சித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை விரைவில் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சிக்கிறேன்.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், ஒரு நாட்டின் அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளினதும் பொறுப்பு ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வு காண்பதேயாகும்.

இன்றைய பிரச்சினைகளுக்கு மூலகாரணம் நமது அந்நிய செலாவணி நெருக்கடி ஆகும்.

ரூபாய் நெகிழ்வுடன் இயங்குவதற்கு இடமளிக்கப்பட முன்னர் இருந்த நிலைமையின் பிரகாரம், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்கள் ஆகும். கடந்த இரண்டு மாத கால தரவுகளின்படி, இந்த ஆண்டு 22 பில்லியன் டொலர்கள் இறக்குமதி செலவை நாம் ஏற்க வேண்டியுள்ளது. அதன்படி, 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறை உருவாகும்.

அண்மைக்கால தரவுகளின்படி, இந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்தும் அதேபோன்று தகவல் தொழிநுட்பம் போன்ற சேவை ஏற்றுமதியில் இருந்தும் சுமார் 03 பில்லியன் டொலர்கள் கிடைக்கக்கூடியதோடு, வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 02 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன்படி, வர்த்தகப் பற்றாக்குறை 05 பில்லியன் டொலர்களாக இருக்கும்.

இதற்கிடையில், இந்த ஆண்டு 6.9 பில்லியன் டொலர் கடன் தவணைகள் மற்றும் இறையாண்மை பத்திரங்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அப்போது 11.9 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படும்.

ஏனைய கடன் உதவிகள் மற்றும் முதலீடுகளாக 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் அந்நியச் செலாவணியில் மொத்தம் 9.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்றது.

ஆனால் ரூபாய் நெகிழ்வின் பின்னர் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செலவை 22 பில்லியன் டொலரில் இருந்து 20 பில்லியன் டொலர்கள் வரை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படியானால், வர்த்தக பற்றாக்குறையை 07 பில்லியன் டொலர்கள் வரை குறைக்க முடியும். அதைத்தான் நாம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, சேவை ஏற்றுமதியின் மூலம் 04 பில்லியன் டொலர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பரிமாற்றம் மூலம் 05 பில்லியன் டொலர்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி, நமது வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், நமது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும் நாம் செயற்பட வேண்டும்.

இதற்காக, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் எங்களது கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது குறித்து நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். இதனை எமது நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய பொறிமுறையின் மூலம் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடனான நேற்றைய கலந்துரையாடலும் இந்த நோக்கத்துடனேயே இடம்பெற்றது.

அந்த கலந்துரையாடல் மூலம் நாம் எதிர்பார்ப்பது, ஒரு வருடத்துக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் ஆகியவற்றைச் செலுத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான எனது கலந்துரையாடலுக்குப் பிறகு, அனுகூலங்கள், பிரதிகூலங்களை ஆய்வுசெய்து அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு நான் முடிவு செய்தேன்.

கடந்த காலத்தில் நான் எடுத்த சில முடிவுகளால் இறக்குமதிச் செலவை பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டுகொண்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம். மேலும், உள்நாட்டில் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் கைத்தொழில்களை ஊக்குவித்தோம். அதேபோன்று, பல அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த பயிர்களை நம் நாட்டில் பயிரிடுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். அவற்றின் வெற்றிகரமான முடிவுகளை இப்போது காண்கிறோம்.

இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பிரச்சினை, உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரிப்பதாகும். சராசரியாக, நமது இறக்குமதிச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் உலக சந்தையில் எரிபொருளின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால்தான் நம் நாட்டிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. நம் நாட்டில் வாகனங்களுக்கு மட்டுமின்றி மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதனால்தான், முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களைப் பயன்படுத்த நான் தொடர்ந்தும் கலந்துரையாடி குறித்த நிறுவனங்களை ஊக்கப்படுத்தினேன்.

எனவே எரிபொருள் மற்றும் மின்சாரப் பாவனையை இயன்றவரை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களும் இந்த நேரத்தில் நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும். இந்தக் கடினமான நேரத்தில் அந்தப் பொறுப்பை நீங்கள் புரிந்துகொண்டு செயற்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

கொவிட் தொற்றுநோய் காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலா கைத்தொழில் மீண்டும் எழுச்சிபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று, தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் துரிதப்படுத்துவதால், இத்துறைகள் மூலம் நாட்டுக்கு வரும் வருமானம் அதிகரித்து வருகிறது.

நாம் வரலாற்றில் பலமுறை வீழ்ந்து, எழுந்த தேசம் ஆகும். அந்நிய படையெடுப்பு, பெரும் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளோம். கடந்த கொரோனா நோய்த் தொற்றை நாம் எதிர்கொண்ட விதம் சர்வதேச அமைப்புகளால் கூட பாராட்டப்பட்டது. தீர்வுகளை நடைமுறைப்படுத்தும்போது சில காலம் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் தைரியத்தை இழக்காமல் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் என்னிடம் பாதுகாப்பு, ஒழுக்கம், நவீனமயமான அபிவிருத்தி அடைந்த நாடு, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ஆகியவற்றையே கேட்டீர்கள். எனது பதவிக்காலத்தில் ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆரோக்கியமான தாய் நாட்டில் எனது எதிர்கால பதவிக்காலத்தை அந்த அடிப்படை இலக்குகளுக்காக அர்ப்பணிப்பேன்.

அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அரச ஊழியர்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, எமது பிள்ளைகளுக்கு சிறந்த நாட்டை வழங்குவதற்காக, எம்மிடம் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்ள நாம் ஒரு குழுவாக இலட்சியத்துடனும் தியாகத்துடனும் செயற்படுவதையே ஆகும்.

உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன்

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்!

11/03/2022

சீமெந்து பக்கெட் ஒன்றின் விலை 350 ரூபாயால் அதிகரிப்பு

1600+350=1950

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி!.....யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர்.ந...
11/03/2022

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி!.....
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் பலியாகியுள்ளனர்.
நேற்று மதியவேளை வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது.
அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியிலே நீராடிக் கொண்டிருந்தபோது மின்சார விபத்து ஏற்பட்டு மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் ஓடிச் சென்ற நிலையில் இவருக்கும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியினருக்கு ஒரு மகள் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இருப்பினும் இவர்கள் உயிரிழந்தது அயலவர்களுக்குத் தெரியாத நிலையில் பல்கழைக்கழகம் சென்று வீடு திரும்பிய மகள் பெற்றோரைத் தேடியபோது இருவரும் கிணற்றுக்கு பக்கத்தில் இருவரும் உயிரிழந்த நிலையில் குற்றுயிராக கிடந்தனர்.
கணவனுக்கு 59 வயது எனவும் மனைவிக்கு 55 வயது எனவும்போலீசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
000

11/03/2022

உடன் அமுலாகிறது
பால் மா விலை
1 Kg -300 ரூபா
400 g - 120 ரூபாவால் அதிகரிப்பு

11/03/2022

இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாண் 30 ரூபாவால் அதிகரிக்கிறது.

11/03/2022

கோதுமை மாவின் விலை 35/- மற்றும்
40/- ஆக அதிகரிப்பு!

10/03/2022

இன்று ‌முதல் டீசல் விலை 75 ரூபாவினாலும் பெற்றோல் விலை 50 ரூபாவாலும் அதிகரிப்பு.- ஐ.ஓ.சி

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ...
07/03/2022

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறந்து வைக்கப்பட்டது.

மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும்.

முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு மில்லியன் மெற்றிக்தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கொழும்புத் துறைமுக நகர் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்டு முன்னணி நிர்மாண வேலைத்திட்டங்களுக்குத் தேவையான சீமெந்து வழங்கலை இந்தத் தொழிற்சாலையே மேற்கொள்ளும்.

மேலும் இந்தத் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து நாட்டின் சீமெந்துத் தட்டுப்பாடு இல்லாமல் போகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுங்கமுவ ராஜா என அழைக்கப்படும் நடுங்கமுவ விஜயராஜா (Nadungamuwa Vijaya Raja என்ற யானை இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிரி...
07/03/2022

நடுங்கமுவ ராஜா என அழைக்கப்படும் நடுங்கமுவ விஜயராஜா (Nadungamuwa Vijaya Raja என்ற யானை இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக யானையின் பாதுகாவலர் ஹர்ஷ தர்மவிஜய தெரிவித்துள்ளார். யானைக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே உயிரிழந்ததாக அவர் கூறினார்.

கம்பீரமான இருந்த ராஜாவிற்கு முன்னைய நோய் இல்லை, ஆனால் அது சுகயீனம் காரணமாக நேற்று உணவை உட்கொள்ளாமல் இருந்தது என்றார்.

இந்த யானை அரசுக்கு சொந்தம் என்பதால் யானை இறந்தது குறித்து வனவிலங்கு திணைக்களத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவிலங்கு அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு அடக்கம் செய்யும் திகதி அறிவிக்கப்படும் என பாதுகாவலர் தெரிவித்தார்.

நடுங்கமுவ ராஜா இறக்கும் போது 65 வயதாக இருந்து, 10.5 அடி (3.2 மீற்றர்) உயரம் கொண்ட ஒரு பிரபலமான யானையாகும் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்களைக் கொண்ட நாட்டின் மிக உயரமான அடக்கமான யானையாகும். ராஜா 90 கிமீ (55 மைல்கள்) நடந்தே கண்டியில் உள்ள எசல பெரஹராவுக்கு அழைத்து செல்லப்படும்.

படையினரின் பாதுகாப்புடன் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிமீ தூரம் நடந்து செல்லும், வானிலை குளிர்ச்சியாக இருக்கும்போது பெரும்பாலும் இரவில் பயணம் செய்யும்.

நடுங்காமுவா ராஜா 1953 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த ஒரு இந்திய யானையாகும், இது சமீப காலம் வரை கண்டியில் நடைபெற்ற எசலா ஊர்வலத்தின் புத்தபெருமானின் கலசத்தை தாங்கியபடி செல்லும் மற்றும் மைசூரு மகாராஜா ஒருவரால் அங்கு வாழ்ந்த மூத்த பூர்வீக மருத்துவர் துறவிக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளில் ஒன்றாகும்.

முத்தையா இராஜேஸ்வரி ஞாபகார்த்த கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க உள்ளக விளையாட்ரங்கு இன்றைய தினம் கோலாகலமாக அங்குரார்ப்பணம்...
06/03/2022

முத்தையா இராஜேஸ்வரி ஞாபகார்த்த கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க உள்ளக விளையாட்ரங்கு இன்றைய தினம் கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

ஏஎம்ஆர் நிறுவன தலைவர் பிரபல தொழிலதிபர் இராஜகோபாலின் முழுமையான நிதி நன்கொடையில் குறித்த உள்ளக விளையாட்ரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் மாலை 05.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சிறிரங்கா கலந்து கொள்வதோடு, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், கோப்பாய் பிரதேச சபை செயலாளர் சுபாஜினி மதியழகன், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் யாழ்ப்பாணத்தின் பிரபல இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் சேன் வோர்ன்  மாரடைப்பால் தமது 52 வயதில் மரணம்
04/03/2022

அவுஸ்ரேலிய முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் சேன் வோர்ன் மாரடைப்பால் தமது 52 வயதில் மரணம்

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்கு நன்றி – ஜனாதிபதிக்கு விமல்விமல்வீரவன்ச தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக...
04/03/2022

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்கு நன்றி – ஜனாதிபதிக்கு விமல்
விமல்வீரவன்ச தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விமல்வீரவன்சவிற்கு அனுப்பிவைத்த உத்தியோகபூர்வ கடிதத்தில் அவர் உடனடியாக பதவிநீக்கப்படுகின்றார் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள விமல்வீரவன்ச பதவி நீக்கத்திற்காக நன்றியை தெரிவித்துள்ளாhர்

புதிய அமைச்சரவை மாற்றம்.. புதிய வலுசக்தி அமைச்சராக- காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராக- பவித்ரா வன்னியாராச்சிகைத்தொழில்...
03/03/2022

புதிய அமைச்சரவை மாற்றம்..

புதிய வலுசக்தி அமைச்சராக- காமினி லொக்குகே

மின்சக்தி அமைச்சராக- பவித்ரா வன்னியாராச்சி

கைத்தொழில் அமைச்சராக- எஸ்.பி.திஸாநாயக்க

டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டை வந்தடைந்ததுமாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் ...
03/03/2022

டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது

மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று (3) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது.

இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பூதவுடலை பெற்றுக் கொள்ள அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

சடலப் பரிசோதனையின் பின் பூதவுடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் உடல் யாழ்ப்பாணத்துக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்படும்.

எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு அஞ்சலிக்காக எடுத்து வரப்படும்.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் வரும் வழியில் பூநகரி, முழங்காவில், தேவன் பிட்டி போன்ற இடங்களைச் சேர்ந்த கால்பந்தாட்ட கழக வீரர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பவனியாக எடுத்து வரப்படும்.

எதிர் வரும் திங்கட்கிழமை மாலை மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
03/03/2022

நீர்கொழும்பில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

உக்கிரேன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் பெலாரஸில்  பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
28/02/2022

உக்கிரேன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் பெலாரஸில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.

26/02/2022

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவாலும், டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவாலும் அதிகரிப்பு.

நீர்கொழும்பில் தொடரும் கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டம்!
26/02/2022

நீர்கொழும்பில் தொடரும் கையெழுத்து சேகரிக்கும் செயற்திட்டம்!

இணையத்திற்குள் சீரழியும் இன்றைய தலைமுறை.24 புகைப்படங்களுக்குள் ஒரு பெரிய தகவலை இன்றைய பெற்றோர்களுக்கு தந்திருக்கிறார்கள்...
25/02/2022

இணையத்திற்குள் சீரழியும் இன்றைய தலைமுறை.
24 புகைப்படங்களுக்குள் ஒரு பெரிய தகவலை இன்றைய பெற்றோர்களுக்கு தந்திருக்கிறார்கள்.

BREAKING: ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலைக்குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சர்வதேச போர்க்குற்றக்களின...
24/02/2022

BREAKING: ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலைக்குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சர்வதேச போர்க்குற்றக்களின் அடிப்படையில் இலண்டனில் வைத்து பொலிசாரால் கைது

வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன...
24/02/2022

வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று 24.02.2022 நடாத்திய ஆற்பாட்டம்!!!

ஆழ்ந்த அனுதாபங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடக பயிற்றுவிப்பாளரும், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தல...
21/02/2022

ஆழ்ந்த அனுதாபங்கள்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடக பயிற்றுவிப்பாளரும், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான கமல் லியனாராச்சி காலமானார்.

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
18/02/2022

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Address

Sri Jayavardhanapura

Alerts

Be the first to know and let us send you an email when Palmyrah Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Palmyrah Tamil News:

Videos

Share


Other News & Media Websites in Sri Jayavardhanapura

Show All