மக்கள் நண்பன்

மக்கள் நண்பன் News and More
மக்களுடன் மக்களுக்காக

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் - 7 பேர் கைது.
28/12/2024

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் - 7 பேர் கைது.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

ஜனாஸாவிற்கான  கபன்கிழித்தல்  மற்றும் கபனிடும் முறை பற்றிய தெளிவூட்டல் நிகழ்வு மாவடிப்பள்ளியில்...!
26/12/2024

ஜனாஸாவிற்கான கபன்கிழித்தல் மற்றும் கபனிடும் முறை பற்றிய தெளிவூட்டல் நிகழ்வு மாவடிப்பள்ளியில்...!

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 67 பேருடன் கஜகஸ்தானில் சற்றுமுன் விபத்துக்குள்ளானது:பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென...
25/12/2024

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 67 பேருடன் கஜகஸ்தானில் சற்றுமுன் விபத்துக்குள்ளானது:

பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று இன்று(25/12/25) புதன்கிழமை கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்ச்சி செய்யும் போது இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என கஜகஸ்தானின் அவசரகால மீட்பு குழு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் உட்பட 67 பேர் இருந்ததாக கசாக் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 25 பேர் காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

அஜர்பைஜான் ஏர்லைன்ஸ், எம்ப்ரேயர்190 என்ற J2-8243 எண் கொண்ட அந்த விமானம், பாகுவிலிருந்து ரஷ்யாவின் செச்சினியாவின் தலைநகரான க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது, ஆனால் கசாக் நகரத்திலிருந்து சுமார் 3 கிமீ (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது

கஜகஸ்தானில் உள்ள அதிகாரிகள் விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பறவை மோதியதில் விமானத்தை அவசர தரையிறக்கத்தை விமானி தேர்வு செய்ததாக முதற்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன என்று ரஷ்யாவின் விமான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. க்ரோஸ்னியில் கடும் மூடுபனி காரணமாக விமானம் அக்டோவுக்கு திருப்பி விடப்பட்டதை கஜகஸ்தானின் அவசர அமைச்சகம் உறுதிப்படுத்தியது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இந்த விமானம், விபத்துக்கு முன் விமான நிலையத்தை பலமுறை வட்டமிட்டது. அந்த இடத்தில் ஏற்பட்ட தீயை விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பணியாளர்கள் அணைத்து வருவதாக அந்நாட்டின் அவசரகால மீட்பு குழு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துயரமான விபத்தின் மனதை கனக்கச் செய்யும் முழுமையான வீடியோவின் Link:
https://www.facebook.com/share/v/8RdocR2SVH647i99/

சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம்.
24/12/2024

சம்மாந்துறை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மாதாந்த கூட்டம்.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது !
24/12/2024

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது !

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

சம்மாந்துறை பிரதேசத்தில் அரச ஒசுசல மற்றும் பஸ் டிப்போ நிறுவுவது தொடர்பில் ஆலோசனை.
24/12/2024

சம்மாந்துறை பிரதேசத்தில் அரச ஒசுசல மற்றும் பஸ் டிப்போ நிறுவுவது தொடர்பில் ஆலோசனை.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

சம்மாந்துறை பொலிஸார் விடுக்கும் அறிவித்தல் - இவர் தொடர்பில் தகவல் தேவை.
24/12/2024

சம்மாந்துறை பொலிஸார் விடுக்கும் அறிவித்தல் - இவர் தொடர்பில் தகவல் தேவை.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

ஐஸுடன் இளைஞன் கைது, நிந்தவூர் பொலிஸார் சட்ட நடவடிக்கை.
21/12/2024

ஐஸுடன் இளைஞன் கைது, நிந்தவூர் பொலிஸார் சட்ட நடவடிக்கை.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில், சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து  சந்தேக நபர் தப்பியோட்டம்.
21/12/2024

சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில், சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?கணவன்: ஒகே, வெட்டிக்கோ.மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.க...
21/12/2024

மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஆனால் முடியை கம்மியா வெச்சிக்கிறதுதான் இப்ப ஃபேஷன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: வெட்டிக்கிட்டால், என்னோட ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணினாலும் பண்ணுவாங்க.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: வெட்டிக்கிட்டால் என்னோட சின்ன முகத்திற்கு நல்லாருக்கும்னு எங்கம்மா சொன்னாங்க.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: சலூன் கடையில் கேவலமாக வெட்டி விட்டுட்டால் என்ன செய்றது?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: பரவாயில்லை, வெட்டிக்கிறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: முடி வெட்டுனதுக்கு அப்புறம் நல்லா இல்லைன்னா நீங்கதான் பொறுப்பு.

கணவன்: சரி வெட்டிக்காதே.

மனைவி: முடி கம்மியா இருந்தால் பராமரிக்கிறது ஈஸியா இருக்கும்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அசிங்கமாக போயிடுமோன்னு பயமாகவும் இருக்கு.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: என்ன வந்தாலும் சரி, நான் முடி வெட்டிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு எனக்கு தெரியலை.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: சரி இதை விடுங்க. என் தொண்டை வலிக்கு எப்ப டாக்டரை பார்க்க போறது?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: என்னது? நான் டாக்டரை பற்றி பேசிட்டு இருக்கேன்.

கணவன்: சரி, வெட்டிக்காதே.

மனைவி: ஹலோ, உங்களுக்கு என்னாச்சு? நீங்கள் என்ன பேசுறீங்க?

கணவன்: ஒகே, வெட்டிக்கோ.

மனைவி: அடக்கடவுளே, உங்களுக்கு என்னங்க ஆச்சு?

கணவன்: சரி, வெட்டிக்காதே.

இந்த பாவப்பட்ட கணவன் இப்ப கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரில உக்காந்துட்டு நாள்முழுவதும் "வெட்டிக்கோ", "வெட்டிக்காதே" அப்டின்னு சொல்லிட்டு இருக்கானாம்.

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

நல்லபடியாக பார்த்துக்குங்க.. உங்கள் கூந்தலை மட்டுமல்ல. உங்கள் கணவனையும்...

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற போதைப்பொருள் தடுப்புச் செயலமர்வு.
19/12/2024

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற போதைப்பொருள் தடுப்புச் செயலமர்வு.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

மாவடிப்பள்ளி விபத்தினை தடுப்பதற்கு முன் ஆயத்தம் எதுவும் செய்யாத உரிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல்.
19/12/2024

மாவடிப்பள்ளி விபத்தினை தடுப்பதற்கு முன் ஆயத்தம் எதுவும் செய்யாத உரிய அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல்.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

சம்மாந்துறை வீரமுனையில் 20 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!
16/12/2024

சம்மாந்துறை வீரமுனையில் 20 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியின் புகைப்படப் பிரிவில் விருது பெற்றார் சம்மாந்துறை பிரோஸ்.
14/12/2024

அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியின் புகைப்படப் பிரிவில் விருது பெற்றார் சம்மாந்துறை பிரோஸ்.

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
14/12/2024

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Sammanthurai24,Sammanthurai,str,www.sammanthura

திருடர்களின் அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.விபரம் - https://www.sammanthura...
14/12/2024

திருடர்களின் அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

விபரம் - https://www.sammanthurai24.com/2024/12/sammanthurai-police.html

சுய ஒழுக்கம் (Self Discipline) :1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்  அவர்கள் முக்கிய வேலையாக இரு...
28/11/2024

சுய ஒழுக்கம் (Self Discipline) :

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள் அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டு கொடுங்கள்.. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Characterரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. இது போன்ற தர்மசங்கடமான போன்ற தவிர்க்கலாம்...
இன்னும் #கல்யாணம் ஆகலயா?
#குழந்தைகள் இல்லையா?
இன்னும் #சொந்தவீடு வாங்கவில்லையா?
ஏன் இன்னும் #கார் வாங்கவில்லை?
இது நமது பிரச்சினை இல்லைதானே?

5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்.

6. நண்பருடன் டாக்ஸியில் சென்றால் இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்.. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்.. அவரை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள். "நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்... அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்.. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர #அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள், அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால் ஸ்டைலாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. பொது இடங்களில் மற்றும்
பொது பேருந்தில் /ரயிலில் மொபைல் போன் உபயோகப்படுத்தும் போது ஹெட்போனை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. ஸ்பீக்கரை அலறவிடக்கூடாது .

 #மாணவர்களின்  #இத்தகைய  #நிலைக்கு  #மத்ரஸா  #நிர்வாகமும்  #காரணம்  #அவர்களே  #இதற்குப்  #பொறுப்புக்  #கூற  #வேண்டும்.நா...
27/11/2024

#மாணவர்களின் #இத்தகைய #நிலைக்கு #மத்ரஸா #நிர்வாகமும் #காரணம் #அவர்களே #இதற்குப் #பொறுப்புக் #கூற #வேண்டும்.

நாடுபூராகவும் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ள இத்தகைய சூழ்நிலையில் மத்ரஸா நிர்வாகம் ஏன் மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள்...?? அதிலும் அனைத்து மாணவர்களும் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சம்மாந்துறைக்கு செல்வதென்றால் தற்போது முற்றாக மூழ்கியுள்ள காரைதீவு-மாவடிப்பள்ளி வீதியைக் கடந்துதான் சம்மாந்துறை செல்ல வேண்டும் என்றிருக்கையில் அதனைக் சிறிதேனும் கருத்தில் கொள்ளாது ஏன் மாணவர்களை அனுப்பி வைத்தார்கள்...??

பகுத்தறிவுள்ள யாராவது வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பகுதியை கடந்து பயணம் செய்ய அனுமதித்திருப்பார்களா...??

மாணவர்களை இயற்கை சீற்றம் சீராகும் வரை மத்ரஸாவிலேயே தங்க வைத்து அவர்களை பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கலாமே...?? உயிரிழப்பு ஏற்பட்டுள்ள மாணவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்...?? உங்களது முறையற்ற மத்ரஸா நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்.

மாணவர்களின் கல்விக் கட்டணம் போன்ற பணம் அறவிடும் விடையத்தில் அதி கூடிய கவனம் செலுத்துவீர்களே, முறையாக கேட்டு வாங்கிக் கொள்வீர்களே ஆனால் பேரிடர் நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏன் கரிசனை கொள்ளவில்லை....??

இயற்கை அனர்த்தத்திற்கு நாம் என்ன செய்ய முடியும், இறைவனின் நாட்டத்திற்கு நாம் என்ன செய்ய முடியும் என சப்பையாகக் காரணம் சொல்லாது இதற்கு முழுப் பொறுப்பையும் நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் மாணவர்களிடம் பணம் அறவிடுதில் காட்டும் கரிசனையில் பாதியையாவது மாணவர்களின் பாதுகாப்பு சார்ந்த நலன்களில் காட்டுங்கள்.

காணாமல் போன மாணவர்களில் எனது மருமகனும் உள்ளடக்கம், அவரது தந்தை எனது மச்சான் சவுதியில் உள்ளார், அவர் கடந்த மாதம்தான் ஊருக்கு விடுறைக்காக சென்று மீண்டும் சவுதி வந்து சேர்ந்தார், தற்போது மகனின் நிலையறிந்து அழுகிறார், புலம்கிறார் அவரது நிலையினை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கே அதனை தாங்க முடியுவில்லை ஏனைய மாணவர்களில் குடும்பத்தாரும் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்களோ..??

காணாமல் போன மாணவச் செல்வங்கள் உயிருடன் மீண்டு விடுவார்கள் என்ற நம் எல்லோரது நம்பிக்கையை கபூல் செய்து எல்லாம் வல்ல இறைவன் அவர்களை நம்மிடம் உயிரோடு ஒப்படைத்து விடுவானாகா...ஆமீன்.

அன்சார்.
சம்மாந்துறை.

Address

Amparai 12th Road, Udanga/01, Ampara Main Road
Sammanthurai
32200

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் நண்பன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மக்கள் நண்பன்:

Videos

Share