12/12/2024
சம்மாந்துறை அஸீஸ் அவர்களுக்கு இலக்கிய வித்தகர் விருது கெளரவம்
(ஏ.பி.எம்.இம்றான்)
சம்மாந்துறையில் மிக நீண்ட காலமாக பல்வேறு படைப்புகளை
கவிநயத்துடன் வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற கலை ஆளுமை இவர்
கவிதை நூல்கள்,
ஊரின் வரலாறு,
ஊரின் தொன்மை,
ஆய்வுக் கட்டுரை,
இலக்கிய நய பாடல்கள்,
இலக்கிய தொகுப்பு என பல நூல்களை வெளியிட்டு வானொலி, தொலைக்காட்சிகளிலும் தனது கவி வல்லமையால் இடம்பிடித்த அஸீஸ்
ஏற்கனவே பல விருதுகளைப் பெற்றுக் கொண்ட நிலையில்
கிழக்கு மாகாண இலக்கிய விழா 2022 திருகோணமலை இந்து கலா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கலாபூஷணம் சம்மாந்துறை அஸீஸ் அவர்களுக்கு இலக்கிய வித்தகர் விருது கடந்த (11)ம் திகதி கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.