SAMMANTHURAI NEWS

SAMMANTHURAI NEWS Sammanthurai Official Number 1 News Media Official Hot🔥News 📰
0763443860
Since 26/9/2019
5 Year ✅

சட்டவிரோத மணல் அகழ்வினை தடைசெய்வது சம்மந்தமான கலந்துரையாடல்========================சம்மாந்துறைப் பிரதேசத்திட்குட்பட்ட  ந...
17/01/2025

சட்டவிரோத மணல் அகழ்வினை தடைசெய்வது சம்மந்தமான கலந்துரையாடல்
========================

சம்மாந்துறைப் பிரதேசத்திட்குட்பட்ட நெல்லிக்காட்டு வட்டை, ஆலையடி வட்டை ஆகிய பிரதேசங்களில் சட்ட விரோத மண் அகழ்தல் சம்மந்தமாகவும், ஏனைய ஆறுகளில் மணல் அகழ்தல் சம்மந்தமாகவும் கலந்துரையாடல் (16) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த சட்ட விரோத மண் அகழ்தல் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் சம்மந்தமாகவும் சட்ட விரோத மண் அகழ்தலை கட்டுப்படுத்தும் பொறிமுறைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மணல் அகழ்வது சம்மந்தமான முறையான பொறிமுறைகள் சம்மந்தமாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் உதவித் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB),பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,பிராந்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் ஆர்.வேல்கஜன்,அம்பாறை புவிச்சரிதவியல்,அளவை சுரங்கங்கள் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் எம்.ஆர்.எம்பாரீஸ், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட், சம்மாந்துறை அனைத்து விவசாய சம்மேளனத்தின் தலைவர்
ஏ.எம்.எம் நெளசாத்,சம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம் நெளபர், மல்வத்தை விவசாய போதனாசிரியர் எம்.டி,ஏ.கரீம்,காணி உத்தியோகத்தர் டி.கே.எம் ஜவாஹீர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் நளிர் உட்பட திணைக்களங்களின் பிரதிநிதிகள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை மணல் அகழ்வோர் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

✅👉அம்பாறையில் பெய்த மழை காரணமாக, ✅👉வயல் நிலங்கள் நாசமாகின..! ⭕  #விவசாயிகள்  #கவலை
16/01/2025

✅👉அம்பாறையில் பெய்த மழை காரணமாக,

✅👉வயல் நிலங்கள் நாசமாகின..!

⭕ #விவசாயிகள் #கவலை

✍️அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரந்தனிகல மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட...
14/01/2025

✍️அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

ரந்தனிகல மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பால் இந்த நிலை உருவாகியுள்ளதாக அறிய முடிகிறது. இன்னும் சில நேரங்களில் / (மணித்தியாலத்தில்) நிலைமை சீராகும் என தகவல் கிடைத்துள்ளது.

சம்மாந்துறை சமத்துவ எழுச்சி குரல் அமைப்பு ஏற்பாடு செய்த சுஹதாக்களை சுமந்த சந்தூக்குகள்". நினைவுகூறும் நிகழ்வுக்கு அனைவரை...
03/01/2025

சம்மாந்துறை சமத்துவ எழுச்சி குரல் அமைப்பு ஏற்பாடு செய்த சுஹதாக்களை சுமந்த சந்தூக்குகள்". நினைவுகூறும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்பும் அக்கறையும் நிறைந்த அழைப்பு!

கடந்த நவம்பர் 26 அன்று வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிர் நீத்த சுஹதாக்களை நினைவுகூறவும், அவர்களின் ஜனாஸாக்களை மீட்க உழைத்த நம் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு எதிர்வரும்,

📆️திகதி: 05.01.2025 (ஞாயிற்றுக்கிழமை)

⏰️நேரம்: காலை 7.30

🏢இடம்: சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நமது சமூகத்திற்காக உழைத்தவர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு, நமது ஒற்றுமையையும் பெருமையையும் வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி,
சமத்துவ எழுச்சி குரல் அமைப்பு
சம்மாந்துறை.

சம்மாந்துறை செய்தி பிரிவு

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது  தாக்குதல் – ஆறு சந்தேக நபர்கள் கைதுசட்டவிரோத மணல்...
03/01/2025

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் – ஆறு சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாகாடு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கி ஊடக உபகரணங்கள் பறிக்கப்பட்ட சம்பவம் இன்று (2) இடம்பெற்றுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் அச்சல உபேந்திர(வயது-50) மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளரின் புகைப்படகருவி தொலைபேசி ட்ரோன் கமெரா ஆகியவை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் செயற்பட்டு ஊடகவியலாளர் வசம் இருந்து சந்தெக நபர்களினால் அபகரித்து செல்லப்பட்ட ட்ரோன் கமெரா புகைப்படகருவி மற்றும் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.

அத்துடன் ஆறு சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனம் என்பன மீட்கப்பட்டுள்ளன.இது தவிர தாக்குதலுக்குள்ளான குறித்த ஊடகவியலாளர் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்)

சம்மாந்துறையில் வியாபார கடைகள் மூடபட்டு துக்கம் அனுஸ்டிப்பு!செய்தி நிருபர் : முபாறக் அஸ்லம் சம்மாந்துறை பிரதேச அனைத்து க...
30/11/2024

சம்மாந்துறையில் வியாபார கடைகள் மூடபட்டு துக்கம் அனுஸ்டிப்பு!

செய்தி நிருபர் : முபாறக் அஸ்லம்

சம்மாந்துறை பிரதேச அனைத்து கடை தொகுதிகளும் இன்று மூடபட்டு மக்கள் துக்க நிலையை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

30/11/2024

மாவடிப்பள்ளி : 2024/11/30

5 நாட்களின் பின்னர் 08வது ஜனாஸாவும் வொலிவோரியன் "எகெட்" வீட்டுத்திட்டத்தின் பின்னால் கண்டெடுப்பு.

Sammanthurai 😔😔😔
29/11/2024

Sammanthurai 😔😔😔

*அஸ்ஸலாமு அலைக்கும் உதவும் கரங்கள் அமைப்பு**அனைவருக்கும் பகிருங்கள்**நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அம...
27/11/2024

*அஸ்ஸலாமு அலைக்கும் உதவும் கரங்கள் அமைப்பு*

*அனைவருக்கும் பகிருங்கள்*

*நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு இருந்த போதிலும் சம்மாந்துறை பிரதேசத்தில் தொடர் மழையால் பல்வேறு குடுபங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது*

*அவர்களுக்கு உதவும் நடவடிக்கையாக பொது மக்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் அயல் ஊர் மக்கள் வெளிநாட்டில் வாழும் தமிழ் சகோதரர்கள் அனைவரும் இந்த இக்கட்டான நிலையில் எமது ஏழை மக்களுக்கு உதவ முன்வாருங்கள்*

*உங்களால் முடியுமான உதவிகளை வழங்குங்கள்*

*உதவி கோரல்*

*அவசர உதவி வழங்க ஏற்பாடு செய்து உள்ளோம் உங்கள் உதவியை நேரகாலத்துடன் செய்யவும்*

*உதவி வழங்க இருப்பவர்கள் எமது உத்தியோகபூர்வ கணக்கு இலக்கத்திற்கு உதவுங்கள்*

தொடர்களுக்கு.
0763443860
0755454035
0771832717

*HNB account*
*222020074599*
*SM.aslam*

*Boc bank*
*SM.aslam*
*87758796*.

*உதவி செய்தவர்கள் உமது பெயர் மற்றும் வங்கி பற்று சீட்டுடன் அனுப்பவும்*

4:00 pm update 😔
27/11/2024

4:00 pm update 😔

27/11/2024

மாவடிப் பள்ளி காரைதீவு பிரதான வீதியில் தற்போதைய நிலை நேரம் 4:00Pm அளவில் எடுக்கப்பட்ட காணோலி

26/11/2024

மாவடிபள்ளி காரைதீவு பிரதான வீதியில் உள்ள பாலத்துக்கு அருகில் உள்ள ஆற்றில் உழவு இயந்திர பெட்டி தடம் புரண்டு வீதியை விட்டு விலகி வெள்ளத்தில் விழுந்ததால் பல சிறுவர்கள் ஆபத்தான சூழ்நிலை சிலரை பாதுகாப்பு படையினர் மீட்டி உள்ளனர் அனைவருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்

பாதுகாப்பு படையினரும் பொதுமக்களும் இணைந்து மாணவர்களை தேடும் பணியில்.....தற்போதும் வரை மேற்கொள்ளப்படுகிறது

அனைவரும் இதை பகிர்ந்து அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்

மாவடிப்பள்ளி-காரைதீவு பிரதான வீதியில் வெள்ளம்! மக்களை பாதுகாப்பாக ஏற்றி வந்த உழவு இயந்திரம் நீரில் இழுத்து சென்று விபத்த...
26/11/2024

மாவடிப்பள்ளி-காரைதீவு பிரதான வீதியில் வெள்ளம்! மக்களை பாதுகாப்பாக ஏற்றி வந்த உழவு இயந்திரம் நீரில் இழுத்து சென்று விபத்து! வெள்ள நீர் உயர் மட்டத்தால் போக்குவரத்து மிகவும் சிரமம்!🌧

செய்தி நிருபர்: எஸ்.முபாறக் அஸ்லம். எம் டீ எம் றைசான்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் தொடர் மழை பொழிகிறது இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்து காணப்படுகிறது
மாவடிப்பள்ளி காரைதீவு பிரதான வீதியில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் அந்த வீதியில் பயணிக்கும் பொது மக்கள் பாரிய சிரமங்களை மேற் கொண்டு வருகின்றனர்
முக்கிய தேவைகளுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் அதிகாரிகள் உயர் தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் என பலரும் அந்த வீதியில் பயணிக்க வேண்டி கட்டாய கடமை ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு உதவும் வகையில் இலங்கை அனர்த்த முகாமைத்துவம் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு படை பிரிவினர் என பலரும் உதவி செய்து வருகின்றனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மழையால் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கப்படுவதுடன், இந்த வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்படும் முதலை கள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும் அபாயமுள்ளதால் அவைகளிலுமிருந்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மேற்படி விடயங்களில் அசமந்தப் போக்குடன் இருக்காமல் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை செவிமடுத்து தான் தான் தனது வீட்டில் பாதுகாப்புடன் இருக்குமாறும் வெள்ளம் ஏற்பட்ட பிரதேசங்களுக்கு பார்வை இட செல்வதை நிறுத்துமாறும் பாதுகாப்பு படை பிரிவினர்கள் மக்களுக்கு அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Mubarakaslam

26/11/2024

சம்மாந்துறை -காரைதீவு பிரதான வீதி

சம்மாந்துறை கல்லரிச்சல் வீதியில் தொடர் மழையால் பாரிய மரம் விழுந்து இருப்பதால் யாரும் அந்த வீதியில் பயணிக்க வேண்டாம்
25/11/2024

சம்மாந்துறை கல்லரிச்சல் வீதியில் தொடர் மழையால் பாரிய மரம் விழுந்து இருப்பதால் யாரும் அந்த வீதியில் பயணிக்க வேண்டாம்

அனைத்து அரசியல் விளம்பரங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் இன்று முதல் .எமது ஊரின் 1வது சமூக ஊடகம் சம்மாந்துறை செய்தி பிரிவு ஆகு...
21/10/2024

அனைத்து அரசியல் விளம்பரங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் இன்று முதல் .எமது ஊரின் 1வது சமூக ஊடகம் சம்மாந்துறை செய்தி பிரிவு ஆகும்

உங்கள் அரசியல் விளம்பரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அழையுங்கள்

0763443860

Address

Sammanthurai

Telephone

+94763443860

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAMMANTHURAI NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAMMANTHURAI NEWS:

Videos

Share