Kin TV Tamil

Kin TV Tamil KinTV
எமது தேசத்தின் குரல்

24X7 Latest Tamil News Update :: Fastest Online News Agency, Flashing From Eastern Sri Lanka. Powered By: Kinniya NET Media Network

எம் மண்ணின் பெருமையை உலகமெங்கும்
உரத்துச் சொல்வோம்!


அரசியல்
கல்வி
கலை
கலாசாரம்
அபிவிருத்தி
மற்றும்
எதிர்பார்ப்புக்கள்

என அத்தனை பதிவுகளையும் பார்வையிட
www.kinniya.net

இலங்கை ஊடக அமைச்சின் அங்கீகாரம் பெற்ற
24 மணி நேர செய்திச் சேவை!

கிண்ணியா CBT Campus இல் ஆங்கில மொழித்திறன் பாடநெறி ஆரம்பம்
01/01/2025

கிண்ணியா CBT Campus இல் ஆங்கில மொழித்திறன் பாடநெறி ஆரம்பம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களத்தில் 2025ம் ஆண்டிற்கான அரச கடமைகளை ஆரம்பித்தல் # # # # # # # # # # # # # #கிளீன...
01/01/2025

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்
2025ம் ஆண்டிற்கான அரச கடமைகளை ஆரம்பித்தல்
# # # # # # # # # # # # # #

கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் அரச கடமைகளை ஆரம்பித்தல் அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று 01.01.2025 காலை 8.30 மணிக்கு திணைக்கள வளாகத்தில் திணைக்கள கௌரவ பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, தேசிய நலன், அபிவிருத்தி, முன்மாதிரியாக செயற்படல் மற்றும். கூட்டுப் பொறுப்பு என்பனவற்றினூடாக மாற்றத்ததைக் ஏற்படுத்தல் என்ற நோக்கத்தினை மையப்படுத்தி இன்றைய கடமை ஆரம்ப நாள் அமையப் பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்காகவும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட க்ளீன் சிறி லங்கா வேலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது

இந் நிகழ்வில் இந்து மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உட்பட அனைத்து திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் பிரியாவிடை வைபவம் # # # # # # # # # # # # # # #திருகோணம...
01/01/2025

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் பிரியாவிடை வைபவம்
# # # # # # # # # # # # # # #

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் இடமாற்றம் பெற்று ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை நாளை (01) பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் இன்று (31) ஏற்பாடு செய்யப்பட்டது. 2023.07.27 ஆம் திகதி முதல் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இவர் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களுக்கு இன, மத, மொழி வேறுபாட்டின்றி அளப்பறிய சேவையை வழங்கியுள்ளார்.

மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதிலும், உரிய திணைக்களங்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து செயற்படுவதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்.

இலங்கை நிருவாக சேவை திறந்த பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட இவர் 2000 -2006 ஆம் ஆண்டு வரை திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் உதவி செயலாளர், சிரேஸ்ட்ட உதவி செயலாளர், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், மின்சக்தி மற்றும்
வலுசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

# தகவல்கள் - District Media Unit
Trincomlaee

31/12/2024

திருமலை கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
-------------------------------------------------------------------------
திருகோணமலை குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (31) காலை கரை ஒதுங்கியுள்ளது. குறித்த நபர் கலவத்த தன்கொட்டுவ பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது

குறித்த சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை திருமலை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
# Source- Viral Media

31/12/2024

கிண்ணியாவில் அப்பியாசக் கொப்பிகள் புத்தகங்கள் காகிதாரிகளை மிக மிக மலிவாக பெற்றிட நாடுங்கள் Book Mart

கிண்ணியாவில் இயங்கும்  AL Matham Hotel இற்கு பின்வரும் வெற்றிடங்களுக்கு பணியாட்கள் தேவை # Ban Maker  # Juice Maker # Ric...
29/12/2024

கிண்ணியாவில் இயங்கும் AL Matham Hotel இற்கு பின்வரும் வெற்றிடங்களுக்கு பணியாட்கள் தேவை
# Ban Maker
# Juice Maker
# Rice Maker
# waiter
அழைக்கவும் - 0771013017

29/12/2024

இன்று காலை (29-12-2024) கொரியா விமான நிலையத்தில் விமானம் 183 பயணிகளுடன் தரையிறங்கும் போது 25 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மீட்புப் பணிகள் தொடருகின்றன

# இதன் போது பதிவான காட்சி

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம் # # # # # # # # # # # #( முஹம்மத் மர்ஷ...
27/12/2024

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம்
# # # # # # # # # # # #

( முஹம்மத் மர்ஷாத் )

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருது - மாவடிப்பள்ளி செல்லும் வண்டு வீதி நீண்ட காலமாக குன்றும்,குழியுமாக உடைந்து காணப்படுவதால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் , விவசாயிகள் ,வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக் காட்டுகின்றனர்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்தமருது - மாவடிப்பள்ளி செல்லும் உள்ளக வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்திருந்தது, இதனால் தற்போது இந்த வீதிகள், ஆங்காங்கே உடைந்து காணப்படுகின்றன.

மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால், குறித்த இந்த வீதியை பயன்படுத்தும் போது வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

விவசாயிகள்,பொது மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இந்த வீதியின் சரியான வடிகான்களை புணரமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது.

சோலன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கிண்ணியாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் நஜிமுல் ஹக் அரீப் அவர்களை கிழக்கு மாகாண ...
27/12/2024

சோலன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கிண்ணியாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் நஜிமுல் ஹக் அரீப் அவர்களை கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி ஜெயந்த லால் ரட்ணசேகர வாழ்த்திய போது.

27/12/2024

சோலன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கிண்ணியா 4 வயது சிறுவன்


25/12/2024

கிண்ணியாவில் பைத்துல் மால் ஆரம்பம்

உதைபந்தாட்ட வீரர்களுக்கான கௌரவம் # # # # # # # # # # # # # #கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சம்மே...
22/12/2024

உதைபந்தாட்ட வீரர்களுக்கான கௌரவம்
# # # # # # # # # # # # # #

கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சம்மேளன கூட்டமும் கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான கௌரவிப்பு விழாவும் இன்று நடைபெற்றது

# கிண்ணியா குறிஞ்சாக்கேணி Nams College of higher studies நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது

# 2023 இல் கிண்ணியா உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட போட்டித் தொடரில் A பிரிவில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஜீனியஸ் இரண்டாம் இடத்தைப் பெற்ற பைனியர்ஸ் B பிரிவில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கென்வூட் இரண்டாம் இடத்தைப் பெற்ற ரேஞ்சர்ஸ் C பிரிவில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அந்நூர் இரண்டாம் இடத்தைப் பெற்ற இடிமன்ஸ் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு அணிகளுக்கான கௌரவிப்பு இந்நிகழ்வில் இடம்பெற்றது

20/12/2024

எமது முன்னோர்கள் பாவித்த வாகனங்கள்


14/12/2024

கிண்ணியா கல்வி வலய பாடசாலை தேசிய ரீதியில் சாதனை

அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவ...
13/12/2024

அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

# நன்றி UTV

கிண்ணியா அல் அமீன் பாடசாலை உதைபந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாதனை  # # # # # # # # # # # # # # # திருகோணமலை மாவட்டத்தை பிர...
10/12/2024

கிண்ணியா அல் அமீன் பாடசாலை உதைபந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாதனை
# # # # # # # # # # # # # #

# திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட
தி /கிண் /அல் அமீன் வித்தியாலயம் தேசியரீதியிலே இரண்டாம் இடத்தை பெற்று எமது மாவட்டத்திற்கும் எமது மண்ணுக்கும், கிண்ணியா வலயத்திற்கும் பெருமையை தேடி தந்திருக்கிறார்கள்

# பக்கபலமாகவும்,உறுதுணையாகவும் இருந்த பாடசாலை அதிபர் AWM.பைசல் பொறுப்பாசிரியர் மற்றும்
இந்த சாதனைக்காக முழுமூச்சாக பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் நண்பர் Nafeer Rfm போன்றோருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

⚽️நடைபெற்ற போட்டி விபரம்

●1st match
Al Ameen -03
Tb jaya -00

●2nd match
Al Ameen-01
Darussalam-00

●3rd match
Al Ameen -02
Starnford quttar-01

●Quater final
Al Ameen -03
Royal College-00

●Semifinal
Al Ameen -04
Zahira college -03

●Final lost
Al Ameen -00
Hameediya-01

M. Manas தொடரின் சிறந்த வீரர்
KM. Rikas சிறந்த கோல் காப்பாருக்கான விருதுகளை அல் அமீன் பாடசாலை சார்பாக பெற்றுக் கொண்டனர்

கட்டார் நாட்டு பாடசாலையுடனான போட்டியிலும் கூட இரண்டு கோல்களால் வெற்றி கொண்டுள்ள இவர்களை கௌரவித்த வாழ்த்தி வரவேற்று இவர்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்து இவர்களை ஊக்குவிப்பது மாவட்ட தலைமைகள் உற்பட வலயக்கல்விப் பணிமனையும் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்

# இலங்கையில் பாடசாலை உதைபந்தாட்ட போட்டிக்கு பெயர்போன பாடசாலையான ஸாஹிரா கல்லூரியின் Zahira Soccer 7s உதைபந்தாட்ட போட்டியில் ஸாஹிரா கல்லூரியை கிண்ணியா வலய பாடசாலை அல் அமீன் மஹா வித்தியாலயத்தின் உதைபந்தாட்ட அணி 4-3 என்ற கோல் கணக்கில் அல் அமீன் உதைபந்தாட்ட அணி வெற்றி பெற்றது

# இலங்கையின் பிரபல பாடசாலையான றோயல் கல்லூரியை இரண்டாம் முறையாகவும் அல் அமீன் உதைபந்தாட்ட அணி தோற்கடித்துள்ளது.

# இவ்வாறு உதைபந்தாட்ட துறையில் பிரபலமான பாடசாலை அணியை வீழ்த்தி எமது கிண்ணியா வலயத்தின் அல் அமீன் பாடசாலை பல சாதனைகளை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

08/12/2024

கிண்ணியாவில் டெங்கை ஒழிக்க கூட்டுச் சேர்ந்தது பல அமைப்புகள்

கிண்ணியாவில் தொடர் அடர் மழையினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் # # # # # # # # # # # # # # # # # # ...
08/12/2024

கிண்ணியாவில் தொடர் அடர் மழையினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்
# # # # # # # # # # # # # # # # #

# தொடர் அடை மழை காரணமாக தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் கிண்ணியா பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பின்தங்கிய சில கிராமங்களுக்கு வியாழன்(5)தொடக்கம் சனிக்கிழமை (7) வரை MBM பௌண்டேசனின் அனுசரணையுடன் வழங்கப்பட்டன.

# உப்பாறு, மயிலப்பன்சேனை சோலைவெட்டுவான், கலிபா நகர், பெரியாற்றுமுனை போன்ற பிரதேசங்களில் உள்ள குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கே உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

# இந்நிகழ்வில் அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலாளர் எச்.எம்.கனி,கிண்ணியா பொலிஸ் நிலைய பொறு ப்பதிகாரி( OIC ) பெணார்ன்டோ, சமூக செயற்பாட்டாளர் ஆசிரியர் MF .பர்சித் ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

# இவ் உலர் உணவுப் பொதிகளுக்கான நிதி உதவியினை லண்டனில் வசித்து வரும் கிண்ணியாவைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி MBM பௌமி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Address

Periya Kinniya

Alerts

Be the first to know and let us send you an email when Kin TV Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kin TV Tamil:

Videos

Share