RadioTamizha FM

RadioTamizha FM உலகத்தமிழ்பேசும் மக்களின் குரலாய் 24 ?
(39)

24 மணிநேரமும் இடைவிடாத சிறந்த சப்தம் ஒவ்வெரு நொடிப்பொழுதும் உங்கள் மூச்சுக்காற்றோடு எப்பொழுதும் கலந்திருக்கும் எமது வானொலி

09/04/2024
புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.தமிழர் வா...
09/04/2024

புத்தாண்டு பிறந்தால் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும்.

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும்.இன்னும் ஓரிரு நாட்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கின்றது. அந்த வருடமானது குரோத வருடம் என அழைக்கப்படும்.

மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.

இதனால் 12 ராசிகளின் வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

செல்வ வளம் பெருகும்.
வெளிநாட்டு யோகம் எட்டிப் பார்க்கும்.
பூர்வீக சொத்துகள் கிடைக்கும்.
வேலையில் பதவி உயரும்.
பெண்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.
பொண் மற்றும் பொருள் அதிகரிக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் அற்புத மாற்றம் ஏற்படும்.
வேலையில் இடமாற்றம் ஏற்படும்.
புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு.
தொழிலின் முன்னேற்றம்.
பதவி உயரும்.
சம்பளம் உயரும்.
மன நிம்மதி கிடைக்கும்.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வேலையில் பதவி உயரும்.
அந்தஸ்து அதிகரிக்கும்.
சுப காரியங்கள் வீட்டில் நிறைவேறும்.
நல்ல வேலை கிடைக்கும்.
செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.
மன நிம்மதி ஏற்படும்.
கடகம்

கடக ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
சகோதரியின் திருமணம் நடைபெறும்.
கடன் தொல்லை நீங்கும்.
வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.
கோடி கணக்கில் செல்வம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பதவி உயரும்.
வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
சம்பளம் உயரும்.
வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
பணப்பிரச்சினைகள் நீங்கும்.
வீடு நிலம் போன்றவை வாங்கலாம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு.
பதவி உயரும்.
சமூகத்தில் மரியாதை உண்டாகும்.
நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
குபேர யோகம் உண்டு.
வாகனம் வாங்குவீர்கள்.
துலாம்

துலாம் ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தேக ஆரோக்கியம் சுகமாக முடியும்.
வீண் விரயங்கள் ஏற்படும்.
கடன் தொடர்பாக பிரச்சினைகள் நீங்கும்.
வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
பண தொடர்பில் இருந்த பிரச்சினை நீங்கும்.
வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உடலில் உள்ள நோய்கள் குணமாகும்.
வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.
வருமானத்தில் சேமிப்பு உயரும்.
கடன் தொல்லை நீங்கும்.
வெளிநாட்டு யோகம் வந்து சேரும்.
பதவி உயரும்.
சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும்.
தனுசு

தனுசு ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

குழந்தை வரம் கிடைக்கும்.
தொழிலில் முன்னேற்றம் உண்டு.
சுபகாரியம் நிகழும்.
புதிய வேலைகள் வரும்.
பதவி உயரும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வருமானத்தில் சேமிப்பு முக்கியம்.
மகரம்

மகர ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வெற்றியை சுலபமாக பெறுவீர்கள்.
வீடு மனை யோகம் சிறப்பாக அமையும்.
வீட்டில் சுப காரியம் நிகழும்.
நினைத்த காரியம் அனைத்தும் நிகழும்.
பதவி உயரும்.
நல்ல வேலைகள் கிடைக்கும்.
புத்திர பாக்கியம் உண்டு.
மனநிம்மதி உண்டு.
கும்பம்

கும்ப ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

திருமண பேச்சு வார்த்தைகள் ஏற்படும்.
மனை யோகம் உண்டு.
புதிய வாகனம் யோகம் உண்டு.
மரியாதை கிடைக்கும்.
வாகனம் வாங்க நேரிடும்.
கடன் தொல்லை நீங்கும்.
கிடைக்க வேண்டிய பணம் கைவந்து சேரும்.
வியாபாரத்தில் லாபம் உண்டு.
மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் தேவை.
மீனம்

மீன ராசியினருக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வங்கியில் சேமிப்பு உயரும்.
சுப காரியம் நடக்கும்.
குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவீர்கள்.
தடைப்பட்ட திருமணம் நிகழும்.
வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும்.
நல்ல வேலை கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் உண்டு.
மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.

மோடி மீண்டும் பிரதமராவார்2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என்று உலக புகழ்பெற்ற ஜோதிட...
09/04/2024

மோடி மீண்டும் பிரதமராவார்
2024 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என்று உலக புகழ்பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பிரதாப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19 -ல் தொடங்கி ஜூன் மாதம் 2-ம் திகதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது.இந்நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 60 வயது முதல் 90 வயது வரையிலான வயதுகளை உடைய 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்ப...
09/04/2024

இலங்கையில் 60 வயது முதல் 90 வயது வரையிலான வயதுகளை உடைய 57 பேர் நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranavaka) தெரிவித்துள்ளார்.

எனினும், நாற்பது வயதுக்கும் குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 26 மட்டுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இளைஞர், யுவதிகள் சுதந்திரமாக அரசியலில் ஈடுபடக்கூடிய பின்னணியை உருவாக்குதல் காலத்தின் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று சூரியகிரகணம்
08/04/2024

இன்று சூரியகிரகணம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருக...
04/04/2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்று (03.04.2024) புதன்கிழமை மதியம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 07 பேர் 33 வருடங்களின் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் மூவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால் , அவர்கள் அவர்களின் உறவினர்களுடன் இணைக்கப்பட்டனர். ஏனைய நால்வர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒன்றை வருட காலமாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நால்வரில் சாந்தன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார்.

எஞ்சிய மூவரையும் உயிருடன், உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, மூவரையும் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்தனர்

கண்ணீர் அஞ்சலி  யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வதிவிடமாகவும் இருந்த  Tharmalingam Tharmaratn...
04/04/2024

கண்ணீர் அஞ்சலி
யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வதிவிடமாகவும் இருந்த
Tharmalingam Tharmaratnam இன்று Germany ல் இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் துணை தூதரகம் முற்றாக அழிக்கப்பட்டதாக வெள...
02/04/2024

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் துணை தூதரகம் முற்றாக அழிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஈரான் படையின் மூத்த அதிகாரிகள் இருவர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்று சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர்.காசா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் போராளிகளுக்கும், லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கும் ஈரான் ஆதரவு வழங்கியதே இதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதி...
01/04/2024

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புங்குடுதீவு கைட்ஸ் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் தகர்ந்தது!அமெரிக்காவின் பிரபல பல்ரிமோர் நகரப் பாலம் மீது கொள்க...
27/03/2024

கொழும்பு நோக்கிப் பயணித்த சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் தகர்ந்தது!அமெரிக்காவின் பிரபல பல்ரிமோர் நகரப் பாலம் மீது கொள்கலன் கப்பல் ஒன்று மோதியதில் அது தகர்ந்து வீழ்ந்துள்ளது. அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அனர்த்தம் இன்று செவ்வாய்க்கிழமை
அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றது
நான்கு வழி போக்குவரத்துப் பாதைகள் கொண்ட- இரண்டு கிலோ மீற்றர்கள் நீளமான - "பிரான்ஸிஸ் ஸ்கொட் கீ" என்ற பெருந் தெருப் பாலமே கப்பல் மோதிய சில நிமிடங்களில் முழுவதுமாகத் தகர்ந்து நீரில் வீழ்ந்து போயிருக்கிறது. "Star-Spangled Banner" என்று தொடங்குகின்ற அமெரிக்கத் தேசிய கீதத்தின் வரிகளை வரைந்த பிரான்ஸிஸ் ஸ்கொட் கீ (Francis Scott Key Bridge) என்பவரது பெயரே இந்தப் பாலத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது . மேரிலான்ட் மாநிலத்தை ஊடறுத்துச்
செல்கின்ற படாப்ஸ்கோ நதியின் (Patapsco River) மேலாக நிறுவப்பட்ட
இந்தப் பாலம் அமெரிக்காவின் வடக்குத் தெற்கு இடையிலான கப்பல் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான 300 மீற்றர்கள் நீளமான
டாலி(Dali) என்ற கப்பலே சிறிலங்கா நோக்கிப் புறப்பட்ட வழியில் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழந்து பாலத்தின் பிரதான தூண் ஒன்றை மோதியது.

கப்பலில் ஏற்பட்ட எலெக்ட்ரிக் சீர்குலைவுகாரணமாகப் புரொப்புலர்கள் இயங்க மறுத்ததை அடுத்தே கப்பலைப் பாதுகாப்பதற்காகத் திடீரென நங்கூரம் இடப்பட்டது என்றும் அவ்வேளை அது நிலைகுலைந்து பாலத்துடன் மோதுண்டது என்றும் சிங்கப்பூர் துறைமுக அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன.

பருத்தித்துறை கிராமக்கோடு சந்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
20/03/2024

பருத்தித்துறை கிராமக்கோடு சந்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

பெற்ற குழந்தையையே கொலை செய்த தாய் - முல்லைத்தீவில் சம்பவம்.முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்க...
20/03/2024

பெற்ற குழந்தையையே கொலை செய்த தாய் - முல்லைத்தீவில் சம்பவம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தெரியபபடுததப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.

மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் துஸ்பிரயோகம் தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறி வருகிறது.

எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடை...
20/03/2024

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது.

பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது.இதன்போது, நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடிய தாய், பெற்றோருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.குறித்த தாயின் செயலைக் கண்டு இலங்கை வாழ் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது.குறித்த கப்பல் இன்று (18.0...
18/03/2024

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் இன்று (18.03.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கப்பல் 1131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் கப்பல் நாட்டுக்கு வருகைதந்துள்ளது.அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டு பயணிகள் வருகைதந்துள்ளனர்.கப்பலில் வருகைத்தந்த பயணிகள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு செல்லவுள்ளனர்.

இந்த கப்பல் இன்று இரவு மாலைத்தீவு நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பேரனுக்காக  மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றை   தயாரித்த  சிறுவனது  தாத்தாபேரனுக்காக யாழ்ப்பாணத்தில்  ...
18/03/2024

யாழ்ப்பாணத்தில் பேரனுக்காக மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றை தயாரித்த சிறுவனது தாத்தா

பேரனுக்காக யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கர வண்டி தற்போது சிறுவனது விளையாட்டுப் பொருளாக மாறியுள்ளது

மேற்படி 'தாத்தா' தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றினை தயாரித்துள்ளார்.

இந்த முச்சக்கர வண்டியானது முற்றிலும் சாதாரண முச்சக்கர வண்டி போலவே தோற்றமளிக்கிறது. இதற்கு மோட்டார் பொருத்தினால் இயங்கக் கூடியவாறு இருக்கும் என இதனை உற்பத்தி செய்தவர் கூறுகின்றார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முச்சக்கர வண்டி போல முச்சக்கர வண்டியை செய்து தருமாறு கூறி பலர் என்னை தொடர்பு கொண்டனர். அவ்வாறு தயாரித்து கொடுப்பதாக இருந்தால் என்னால் உடனடியாக தயாரித்து கொடுக்க முடியாது. சிறிது நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஏனெனில் முச்சக்கர வண்டிகள் திருத்தம் மற்றும் ஏனைய வேலைகளுக்கு எனது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அவர்களது வேலைகளை செய்துவிட்டு நேரம் கிடைக்கும் போதே இதனை செய்து கொடுப்பேன்.

இதனை செய்வதற்கு எனக்கு 25 நாட்கள் தேவைப்பட்டன. சிறுவர்களுக்கான ஏனைய வாகனங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் சிறுவர்களுக்கா முச்சக்கர வண்டி விற்பனை செய்யப்படுவதில்லை. என்னுடைய வேலையும் முச்சக்கர வண்டி திருத்துவது தான். ஆகையால் முச்சக்கர வண்டியினை தயாரித்துள்ளேன். முழுவதும் கையாலேயே இந்த முச்சக்கர வண்டியினை தயாரித்து முடித்துள்ளேன். இதற்கு எனது மகன்களும் உதவி செய்தார்கள்.

கடையில் விற்பனை செய்யப்படும் சிறுவர்களுக்கான வாகனங்கள் பிளாஸ்டிக்கில் செய்வதால் அது இலகுவில் உடைந்துவிடும். ஆனால் இது இரும்பு மற்றும் தகரத்தினால் உருவாக்கப்பட்டது. ஆகையால் இலகுவில் உடையாது. பல ஆண்டுகளுக்கு பாவனையில் இருக்கும். இதனை உருவாக்க எனது கூலி தவிர ஒரு இலட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபா செலவாகி இருக்கும் என்றார்.

இந்த முச்சக்கர வண்டியை பார்வையிடுவதற்கு ஏராளமானோர் வருகை தருவதை அவதானிக்க முடிந்தது.

கனகராயன்குளத்தில் எழுந்தருளிய வெடுக்குநாறிமலை ஆதிசிவன்! வவுனியா கனகராயன்குளம் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் மஞ்சள்...
18/03/2024

கனகராயன்குளத்தில் எழுந்தருளிய வெடுக்குநாறிமலை ஆதிசிவன்!

வவுனியா கனகராயன்குளம் பாடசாலையின் விளையாட்டுப் போட்டியில் மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட செல்வநாயகம் இல்லம் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெறும் அடக்குமுறைகளை எண்ணக்கருவாக வைத்து இல்ல அலங்கரிப்பில் வெடுக்குநாறிமலையையும், ஆதி சிவனையும், உழவர் திருநாளாகிய தைப்பொங்கலையும் கண்முன்னே நிறுத்தி முதலிடம் பெற்றுக்கொண்டுள்ளது.

உக்ரெய்னின் கருங்கடல் நகரான ஒடிசா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக...
16/03/2024

உக்ரெய்னின் கருங்கடல் நகரான ஒடிசா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக உக்ரெய்ன் தெரிவித்துள்ளது. தாக்குதல் காரணமாக 70 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது ரஷ்யாவின் அதிபயங்கர தாக்குதல் எனத் தெரிவிக்கப்படுகின்றது

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி வாகனப் பேரணியும், மக்கள் எழுச்சி போ...
16/03/2024

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி வாகனப் பேரணியும், மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்றும் இன்று சனிக்கிழமை நடைப்பெற்று வருகிறது.

இலங்கை கடற்படையினரின் முன் அரங்கேறிய யாழ் குடும்பஸ்தரின்  படுகொலை CCTV காட்சிகள்
14/03/2024

இலங்கை கடற்படையினரின் முன் அரங்கேறிய யாழ் குடும்பஸ்தரின் படுகொலை CCTV காட்சிகள்

விசாரணைக்காக  சென்ற போது பொலிசாரின் முச்சக்கர வண்டி கடலுக்குள் பாய்ந்து விபத்துயாழ் பண்ணை கடற்கரை பகுதியில் சம்பவம் அவ்வ...
13/03/2024

விசாரணைக்காக சென்ற போது பொலிசாரின் முச்சக்கர வண்டி கடலுக்குள் பாய்ந்து விபத்து
யாழ் பண்ணை கடற்கரை பகுதியில் சம்பவம்
அவ்வளவு அவசரம் 😳

இந்தியாவின் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (மார...
06/03/2024

இந்தியாவின் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (மார்ச் 6) கொல்கத்தாவில் திறந்து வைக்கிறார்.

கொல்கத்தாவின் ஹூக்ளி (Hooghly) ஆற்றின் அடியில் 16.6 கிலோமீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதையானது பொறியியலின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

நீருக்கடியிலான மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தாவின் இரட்டை நகரங்களான ஹவுரா மற்றும் சால்ட் லேக்கை இணைக்கும்.

மேலும் ஆறு ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். அவற்றில் மூன்று நிலத்தடி ரயில் நிலையங்கள் ஆகும்.

சுழிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு சுகாஸ் எச்சரிக்கையாழ்ப்பாணம் சுழிபுரத்தில் புத...
06/03/2024

சுழிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு சுகாஸ் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையானது, திட்டமிட்ட ஒரு ஆக்கிரமிப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். சவுக்கடி பிள்ளையார் கோயிலை ஆக்கிரமிக்கின்ற வகையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கா விட்டால் இராணுவ முகாமை சுற்றியுள்ள அமைப்புகளுடனும் மீனவர் அமைப்புகளுடன் கதைத்து விட்டு இதற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வ...
06/03/2024

இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமவேட்ப்பாளர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவ...
03/03/2024

இந்தியாவின் முன்னாள் பிரதமவேட்ப்பாளர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவித்து மீண்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட சாந்தன் அவர்களின் இறுதிஊர்வலம் யாழ்மண்ணில்

32Km  பாக்கு நீரினையை 8 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில்  நீந்திக்கடந்த திருகோணமலை திருக்கோணஸ்வரா இந்துக்  மாணவனான  13வயத...
02/03/2024

32Km பாக்கு நீரினையை 8 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்த திருகோணமலை திருக்கோணஸ்வரா இந்துக் மாணவனான 13வயதான ஹரிஹரன் தன்வந் நல் வாழ்த்துகள்@

01/03/2024
தாங்கள் கஷ்டப்படுவதாகக் கூறி அரசு உதவி பெற்ற ஒரு சுவிஸ் தம்பதியின் வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, உண்மையில் அவர்கள் கோட...
01/03/2024

தாங்கள் கஷ்டப்படுவதாகக் கூறி அரசு உதவி பெற்ற ஒரு சுவிஸ் தம்பதியின் வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, உண்மையில் அவர்கள் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.சுவிட்சர்லாந்தின் Bern நகரில் வாழ்ந்துவரும், முறையே 71 மற்றும் 76 வயதுள்ள ஒரு தம்பதி, 2009ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை, தாங்கள் கஷ்டப்படுவதாகக் கூறி அரசு உதவி பெற்றுவந்துள்ளார்கள். அவர்கள் இதுவரை சுமார் 17 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அரசிடமிருந்து உதவித்தொகையாக பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.அவர்கள், கோடீஸ்வரர்களாக வாழ்ந்துகொண்டே, அரசின் உதவியையும் பெற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்தை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Address

Point Pedro Road
Nallur
40000

Alerts

Be the first to know and let us send you an email when RadioTamizha FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioTamizha FM:

Videos

Share

Category

Our Story

அதிரவைக்கும் இணையத்தின் தலைவனாய் 24 மணிநேரமும் தமிழ் வாழும் வரை RADIOTAMIZHA FM இன் வெற்றிநடை தொடரும்

2017RadiotamizhaFM. All Rights Reserved.


Other Nallur media companies

Show All