Media X Srilanka

Media X Srilanka உறுதி செய்யப்பட்ட உண்மை தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும்

02/11/2024

" சாதனை படைத்த பாலகன்" 🔥

தொடர்ச்சியாக அடுத்தடுத்து உலக சாதனை நிகழ்த்தி வரும் கிண்ணியாவை சேர்ந்த சிறுவன் அக்லான் பிலால்.

மிகப் பெரிய எண்களை இலகுவாக ஆங்கில மொழியில் கூறியும்
10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும் ஆங்கில மொழியில் கூறிய 4 வயது சிறுவன்,
சோழன் உலக சாதனை படைத்தார்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் வசித்து வரும் இயன்முறை மருத்துவர்களான திரு.மொஹமட் நஸ்மி மற்றும் திருமதி. பாதிமா
பஸீஹா போன்றோரின் 4 வயது மகனான மொஹமட் அக்லான் பிலால் கணித அடுக்குகளின் விதிகள்
(Low of Exponents)
முறையில் 10 இன் அடுக்குகளை அவற்றின் 100 ஆம் அடுக்குகள் வரையும், மிகப் பெரிய எண்களை இலகுவாகவும் ஆங்கில மொழியில் கூறியும் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டார்.

இவருடைய உலக சாதனை முயற்சியை முறைப்படி கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களான மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் திரு. கதிரவன் இன்பராசா, திருகோணமலை மாவட்டத் தலைவர் திரு. தனராஜ், திருகோணமலை மாவட்டப் பொதுச் செயலாளர் திரு.சுயந்தன் விக்னேஸ்வர ராஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் திரு. மொஹமட் பர்சான் போன்றோர் உலக சாதனையை உறுதி செய்து சாதனை சிறுவனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை சிறப்பு விருந்தினர்களாக பங்கு கொண்டவர்களுடன் இணைந்து வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வு கின்னியா மத்திய கல்லூரியில் நடைபெற்ற அதேவேளை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருந்தன.

இந்த நிகழ்வினை கதிரவன் இன்பராசா அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைக்க கிண்ணியா வளையக்கல்வி பணிப்பாளர் திருமதி.முனவ்வரா, கின்னியா மத்திய கல்லூரியின் அதிபர் திரு நஜாத்,கின்னியாவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் திரு.சமீம் மற்றும் குறிஞ்சாகேணி சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் அஜித் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.

விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி திரு.ஹூஸைன், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியின் அதிபர் திரு.முனவ்பர், கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.நஸீரா நஜாத் போன்றோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கு கொண்டு சிறுவன் அக்லான் பிலாலை மேடையில் வாழ்த்திப் பாராட்டிப் பேசினார்கள்.

இச் சிறிய வயதில் உலக சாதனை படைத்த சிறுவன் அக்லான் பிலாலை பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் வியந்து பார்த்து வாழ்த்திப் பாராட்டினார்கள்.

இந்தியாவில் இருந்து நேரலையில் நிகழ்வைக் கண்காணித்துக் கொண்டிருந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் சிறப்பு நடுவர் திரு.சிவ ஷங்கரன் போன்றோர் சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை பாராட்டி வாழ்த்தினார்கள்.

Record Alert Mannar 🔥தேசிய மட்ட சதுரங்க போட்டியில் மன்னார் மாவட்டத்திற்கு முதலாவது 🏅 பதக்கம்.இலங்கை பாடசாலைகள் சதுரங்க ச...
31/10/2024

Record Alert Mannar 🔥

தேசிய மட்ட சதுரங்க போட்டியில் மன்னார் மாவட்டத்திற்கு முதலாவது 🏅 பதக்கம்.

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தினால் கடந்த 25, 26, 27. 10. 2024 ஆகிய தினங்களில் அநுராதபுர மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்ட தேசிய மட்ட சதுரங்க போட்டியில் எமது கல்லூரியில் இருந்து 9 மாணவர்கள் பங்குபற்றினர். அதில் 20 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் A.J. Chrishan Merit சித்தியைப் பெற்று எமது மாவட்டத்திற்கும் எமது கல்லூரிக்கும் பெருமையை தேடி தந்துள்ளார். இதுவே மன்னார் மாவட்டத்திற்கு தேசிய மட்ட சதுரங்க போட்டியில் கிடைக்கப்பெற்ற முதலாவது 🏅 பதக்கமாகும். இவர் மாகாண மட்ட போட்டியில் Champion ஆக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம் மாணவனுக்கும், இம் மாணவர்களை பயிற்றுவித்து போட்டிகளுக்கு அழைத்து சென்று சதுரங்க விளையாட்டை ஊக்கப்படுத்துகின்ற எமது கல்லூரியின் சதுரங்க பொறுப்பாசிரியர் அருட்சகோதர். ஞா. சத்தியராஜ் அவர்களுக்கும், சதுரங்கத்தை விளையாட உற்சாகப்படுத்தும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து நிற்கின்றோம். சதுரங்க விளையாட்டில் சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றி சாதனைகள் பல படைக்கவும் வாழ்த்தி நிற்கின்றோம்!

மன்னார் மாவட்டத்தில் ஊழல் அல்லது தேவையற்ற முறைப்பாடுகள்  மோசடி என எந்த ஒரு விடயங்களும் இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்த...
31/10/2024

மன்னார் மாவட்டத்தில் ஊழல் அல்லது தேவையற்ற முறைப்பாடுகள் மோசடி என எந்த ஒரு விடயங்களும் இல்லாத சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவர்

காற்றாலை. மண் அகழ்வு . சூழலியல் பிரச்சினைகள் / இயற்கை பாதுகாப்பு என
அனைத்து விடயங்களிலும் சமூக ஊடக விளம்பரங்கள் இன்றி தனது சேவையை செய்து வருகின்றார் !

இவர் சூழலியல் ஆய்வாளர்
என்பதால் மன்னாரில் இவர் இருந்தால் தங்கள் அபிவிருத்தி திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கில்
காற்றாலை மற்றும் மன் அகழ்வு செய்யும் பல நிறுவனங்கள் பல தொகை ஊதியத்துடன் அழைப்பு விடுத்த போது அவற்றை விட்டு மன்னாரின்
பாதுகாக்க இன்றுவரை போராடும் ஒருவர்

பண பலம் படை பலம் ஏதும் இல்லை
சிறந்த கல்வி அறிவு மும்மொழி தேர்ச்சி என சிறந்த ஆளுமை கொண்டவர்

ஆனால் மாற்றம் வேண்டும் என சிந்திக்கும் எவருக்கும் இவ்வாறானவர்கள்

கண்களுக்கு தெரிவதில்லை மீண்டும் மீண்டும் சட்டத்தரணி வியாபாரிகள் என அவர்களை அனுப்பி மக்கள் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட விடயம் தான் என்ன ?

"சிந்தித்து செயற்படுங்கள் "

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2024
வன்னி தேர்தல் மாவட்டம்

ஈரோஸ் ஜனநாயக முன்னணி
இலக்கம் 4

உங்கள் வாக்கு எதிர்கால சந்ததிக்கான
தூர நோக்கு.

மேரிநாதன் எடிசன்.
சூழலியலாளர்.

மக்களின் நிலையை அடையாளப்படுத்துவோம் 🙏இந்த பகுதிஇரத்தினபுரி, வங்காலை, மன்னார்....சில இடங்களில் அபிவிருத்தி திட்டம் இல்லாம...
24/10/2024

மக்களின் நிலையை அடையாளப்படுத்துவோம் 🙏

இந்த பகுதி

இரத்தினபுரி, வங்காலை, மன்னார்....

சில இடங்களில் அபிவிருத்தி திட்டம் இல்லாமையால் இந்த நிலைமை !

சில இடங்களில் முறையற்ற ஆய்வு இல்லாமல் போடப்பட்ட வீதிகளாலும் அதிக அளவிலான வெள்ளப்பெருக்கு மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது

உலகில் தமிழ் அடையாளங்களும்தமிழ் சொற்களும் பயன்படுத்தும்Passport இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றது 🇱🇰
22/10/2024

உலகில் தமிழ் அடையாளங்களும்
தமிழ் சொற்களும் பயன்படுத்தும்

Passport இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றது 🇱🇰

இலங்கையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆடம்பர நட்சத்திர விடுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வாளிவடபகுதியை சேர்ந்த...
22/10/2024

இலங்கையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆடம்பர நட்சத்திர விடுதியில்

காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வாளி

வடபகுதியை சேர்ந்த காட்சிகளை குறித்து நிற்கின்றது ! இதன் பின்னணியில் வரலாற்றில் இடம்பெற்ற சிறுபான்மையினருக்கு எதிராக இடம் பெற்ற கொடூரமான செயற்பாடுகளில் இந்த வாளியும் பங்கு பெறுகின்றது

மீண்டும் ஒரு அழிவு நாட்டில் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலேயே இது காட்சிப்படுத்தப்படப்பட்டுள்ளது !

சாதனை படைத்த மாணவி 🔥🔥🔥*அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் முதலாம் இடம்*〰️〰️...
21/10/2024

சாதனை படைத்த மாணவி 🔥🔥🔥

*அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் முதலாம் இடம்*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2024 ம் ஆண்டிற்கான அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் 18 வயது பெண்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்வில் மன்/தோட்டவெளி G T M S பாடசாலையை சேர்ந்த மாணவி செல்வி A. யதுர்சிகா அவர்கள்

தனது திறமையை வெளிப்படுத்தி 37.39 மீற்றர் தூரம் ஏறிந்து தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.🥇🏵️🏆

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

சாதனை படைத்த மன்னார் மாணவன் 🔥அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் மன்/சித்தி விநாயகர் இ...
21/10/2024

சாதனை படைத்த மன்னார் மாணவன் 🔥

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில்
மன்/சித்தி விநாயகர் இந்து கல்லூரியைசேர்ந்த மாணவன் P. #நவீன் 110M தடைதாண்டல் போட்டியில் 14.79 வினாடிகளில் ஓடி வர்ண சான்றிதழை பெற்று கொண்டுள்ளார்..

வாழ்த்துக்கள் 🔥🔥

மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பேசாலை மக்கள்  மன்னார் தீவுப் பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் கனியவள மணல் அகழ்வு மற்றும...
21/10/2024

மாற்றத்தை நோக்கிய பயணத்தில் பேசாலை மக்கள்



மன்னார் தீவுப் பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் கனியவள மணல் அகழ்வு மற்றும் இப்பகுதி மக்களை பாதித்து வரும் மின் காற்றாலைகள் அமைக்கும் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என பேசாலை மக்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கால காலமாக ஒரு பக்க சார்பாக இருந்த இந்த மக்கள் தங்கள் பகுதியில் இடம்பெறும் பிரச்சனைகள் பொதுவாக போராட்டம் கோரிக்கை என பல முறைகளில் செயற்பட்டும் தோல்வியில் முடிந்தது கடந்த கால எந்த அரசியல் கட்சியும் தலைவர்களும் பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை

தென் பகுதி நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் சகோதர மொழியை சேர்ந்த பலர் எடுத்த முயற்சிகள் கூட மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் செய்யாதது குறிப்பிடத்தக்கது

இதனை தொடர்ந்து இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் மாற்றத்தை நோக்கி

மன்னார் பேசாலைப் பகுதியில் வியாழக்கிழமை (17.10.2204 பிற்பகல் 2.45 மணியளவில் தேசிய மக்கள் சக்தி உப அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டபோதே மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட வேட்பாளர்கள் அன்ரன் கமிலஸ் , மற்றும் இராமையா ராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியின் பேசாலை ஒருங்கிணைப்பாளர் கொணோரியஸ் சிராய்வாவின் ஏற்பாட்டில் பேசாலை ஜோன் மேரி சுற்றுலா விடுதியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் நிசங்க மற்றும் இளைஞரணி உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் , தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் , ஊர்த்தலைவர்கள் , மொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகவுரை இடம்பெற்றதோடு. சமகாலத்தில் மன்னார்த்தீவுப் பகுதியில் மக்கள் பாரியளவில் முகம் கொடுத்துவரும் கனியவள மண்ணகழ்வு மற்றும் காற்றாலைப் பிரச்சினைகள் மக்களால் முன்வைக்கப் பட்டது.

இதன் போது புதிய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் திருப்தியளிப்பதாகவும் முக்கியமாக ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்க முனைவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் எனவே இந்த விடயத்தையும் அவர் கருத்திற் கொண்டு மன்னார் மக்களுக்காக இந்தக் கனியமண்ணகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்களை நிறுத்துவார் என்று தாங்கள் நம்புவதாகவும் மக்கள் தெரிவித்தனர்

21/10/2024

மன்னார் மாவட்டத்தை கண்டல் தாவரங்களால் அழகு படுத்தும் இளம் சமுதாயம் !

அவர்களுக்கு ஆதரவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏனைய சக நிறுவனங்களின் ஊழியர்கள் இளைஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களோடு இணைந்து சிறு பிள்ளைகளும் இந்த நிகழ்வை அழகு படுத்தியுள்ளனர் ☘️🌿

https://www.facebook.com/share/v/3yLoJTBR3xVG6CsC/?mibextid=oFDknk

18/10/2024

Alert 🚨

மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள சங்குப்பட்டி பாலம் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு கேட்டுகொள்ளடுகிறீர்கள்
பேருந்துகள் பயணிகள் இறக்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படும்

As Sangupatti Bridge located on Mannar Jaffna Road has been damaged to the extent that heavy vehicles cannot pass through it, heavy vehicle's drivers are requested to proceed to Jaffna via Paranthan until further notice.

வன்னித் தொகுதியில் களம் இறங்கும்றஹ்மான்  அவர்களின் பரப்புரை அன்பின் உறவே...!உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகுக...
18/10/2024

வன்னித் தொகுதியில் களம் இறங்கும்
றஹ்மான் அவர்களின் பரப்புரை

அன்பின் உறவே...!

உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகுக...
வணக்கம்

பத்திரிகையாளராக, சிவில் சமூக செயற்பாட்டாளராக பின்னர் அரசியல் செயற்பாட்டாளராக சுமார் 25 வருடங்களாக செயற்பட்டு வருகிறேன். அதன் அடுத்த நகர்வாக தற்போது நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இரட்டைக் கொடிச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

ஊழலுக்கு எதிரான கோஷம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், வெறும் கோஷங்களோடு மட்டும் அள்ளுண்டு கண்மூடிக்கொண்டு போகாமல் நாட்டு நலன்கள் மற்றும் சமூக நலன்கள் என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த மாற்றத்தை எவ்வாறு அர்த்த பூர்வமானதொன்றாக மாற்றி அமைத்துக் கொள்வது என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கும் பெரிய சவாலாகும்.

இந்நிலையில்தான் ஊழலற்ற மாற்று சக்தி ஒன்று பாராளுமன்றத்தில் தனித்துவமாகவும், சுதந்திரமாகவும் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது.

எனவே, கரைந்து போகாமல், பாராளுமன்றத்தில் தனித்துவ குரலாக ஒலிக்கவும், நீதியான அபிவிருத்தியை மேற்கொள்ளவும், சமூக மேம்பாடு, சகவாழ்வு, நல்லிணக்கம் என்பவற்றை மலரச் செய்யவும்.

உங்கள் வாக்குகளை வீனடிக்காமல் எமது இரட்டைக் கொடிச் சின்னத்திற்கு அளித்து, உங்களது தனித்துவ, சுதந்திரக் குரலாக ஒலிக்க எம்மை வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு

உங்கள் சகோதரன்
P.M. முஜீபுர் றஹ்மான் (LL.B),
உளவளதுணையாளர்,
பத்திரிகையாளர்.

2-1 என அதிரடியாக தொடரை வென்றது இலங்கை 🔥🔥🇱🇰
17/10/2024

2-1 என அதிரடியாக தொடரை வென்றது இலங்கை 🔥🔥🇱🇰

16/10/2024

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் அனைவரும் கொண்டாடும்

இசையமைப்பாளர் 🔥 அனிருத் ரவிச்சந்திரன்

Wishing the musical magician, Anirudh Ravichander a rocking birthday!

அதிரடியான வெற்றியை பதிவு செய்துள்ளது இலங்கை அணி 🇱🇰🔥
15/10/2024

அதிரடியான வெற்றியை பதிவு செய்துள்ளது இலங்கை அணி 🇱🇰🔥

யாழ்ப்பாணத்தில் தனித்துவமாக சுயேச்சை குழுவில் தடம் பதிக்கும்"கமல்" 2024 பாராளுமன்றத் தேர்தல் வடக்கு பகுதியில் பெரிய அளவி...
15/10/2024

யாழ்ப்பாணத்தில் தனித்துவமாக சுயேச்சை குழுவில் தடம் பதிக்கும்
"கமல்"

2024 பாராளுமன்றத் தேர்தல் வடக்கு பகுதியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நிலையில் பலரும் தங்கள் சுயநலங்களுக்காகவும் பின் பலன்களை தக்க வைப்பதற்காகவும் போட்டியிட்டு வரும் இந்த நிலையில்

அடுத்த சமுதாயத்திற்கு ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனையோடு சுயேசையாக களமிறங்குகின்றார் கமல்

இவருக்கு வாக்கு செலுத்துவது என்பது மிகவும் கேள்விக்குறியாக மக்கள் மனதில் இருக்கும் காரணம் இவருக்கு எந்த பின்புலமும் அல்லது மிகப் பெரிய ஆடம்பர வாழ்வியலோ காணப்படவில்லை

வளமையான ஒரு செயலையே மக்கள் மீண்டும் செய்வார்களா? அல்லது புதிய மாற்றத்திற்கு வழி வகுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

பாராளுமன்ற தேர்தல்  2024-------------------------------------------------------------- பாராளுமன்றத் தேர்தல் - 2024 வன்னி...
14/10/2024

பாராளுமன்ற தேர்தல் 2024
-------------------------------------------------------------- பாராளுமன்றத் தேர்தல் - 2024 வன்னி தேர்தல் தொகுதிக்காக போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இளம் வேட்பாளர் திரு A.ரோஜன் அவர்களின் வெற்றிக்காக, மன்னார் மாவட்ட இளைஞர்கள் தொடர் கால நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் 13.10.2024 அன்று மாலை 4:30 மணி அளவில் வேட்பாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர் போராளி யசோதினி அவர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள்.

இளைஞர்களின் ஏகோபித்த தெரிவாக வேட்பாளர் ரோஜன் அவர்கள் இருப்பதாகவும், இவரை வெற்றி பெற வைப்போம் என இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட இளைஞர்கள் திட்டவட்டமாக கூறியிருந்தார்கள்.

14/10/2024

தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கும்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்வதற்கு "நாங்கள் தயார்"

அனுப்பப்படும் அனைத்து கட்சிகளின் விளம்பரங்கள் தேர்தல் பிரச்சாரம் என்பன இந்த பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் !

"இது ஒரு பொது பொழுதுபோக்கு சேவை"

"மீடியா எக்ஸ் சிறீலங்கா "

மாகாண மட்டத்தில் சாதனை படைத்தபேசாலை புனித மரியாள் பாடசாலை மாணவி தரம் 5இல் கல்வி பயின்று வரும் மாணவி செல்வி.றஜிஸ் பாத்திம...
14/10/2024

மாகாண மட்டத்தில் சாதனை படைத்த
பேசாலை புனித மரியாள் பாடசாலை மாணவி

தரம் 5இல் கல்வி பயின்று வரும் மாணவி செல்வி.றஜிஸ் பாத்திமா சஸ்னா 2024ம் ஆண்டிற்கான மாகாண மட்ட ஆங்கில தின உறுப்பழுத்துப் போட்டியில் பங்கு பற்றி முதல் இடத்தை வெற்றி பெற்றுள்ளார்.
பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி சஸ்னாவிற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 👏👏..

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் புதிய இளைஞர் அணி சுயேட்சையாக போட்டி.     #மலையகத்தின் புதிய எழுச்ச...
14/10/2024

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் புதிய இளைஞர் அணி சுயேட்சையாக போட்டி. #மலையகத்தின் புதிய எழுச்சி

மன்னார் மாவட்டத்தில் அதானியின் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக மக்கள் பலர் எதிராக குரல் கொடுத்தும் சமூக செயற்பாட்டாளர்களா...
14/10/2024

மன்னார் மாவட்டத்தில் அதானியின் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக மக்கள் பலர் எதிராக குரல் கொடுத்தும் சமூக செயற்பாட்டாளர்களால் பல செயற்பாடுகள் இடம்பெற்று தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது !

இந்த வழக்கு 14.10.2024 இன்றைய தினம் இடம்பெற உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இவ் இரு அமைப்புக்கள் மூலமாக அதானி காற்றாலை செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது !

இலங்கைக்கான கனேடிய மற்றும் மாலைதீவு க்கான உயர்ஸ்தானிகர் எறிக் வோல்ஸ் (Eric Walsh) குழுவினரின்  யாழ்ப்பாணம் தீவக பககுதிக்...
13/10/2024

இலங்கைக்கான கனேடிய மற்றும் மாலைதீவு க்கான உயர்ஸ்தானிகர் எறிக் வோல்ஸ் (Eric Walsh) குழுவினரின் யாழ்ப்பாணம் தீவக பககுதிக்கான விஜயத்தின்போது (12.10.2024) புங்குடுதீவு பகுதியில் காணப்படும் சிவில் சமுக பிரதிநிதிகள் மற்றும் பல மீனவ சமூக பிரதிநிதிகள் தீவக பெண்கள் வலையமைப்பு ஆகிய பிரதிநிதிகளுடன் தீவக பகுதியில் தற்போதைய நிலமைகள் சவால்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது .

ஓவியாவின் Open Talk 🔥"இங்க பாரு..உன்னைய இப்படி போட்டோ எடுத்துருக்கேன்...அப்படி வீடியோ எடுத்துருக்கேன்...இதை வெளில விட்ரு...
13/10/2024

ஓவியாவின் Open Talk 🔥

"இங்க பாரு..உன்னைய இப்படி போட்டோ எடுத்துருக்கேன்...அப்படி வீடியோ எடுத்துருக்கேன்...இதை வெளில விட்ருவேன்...அதை பரப்பி விட்ருவேன்..."

-- என பெண்களை மிரட்டும் சல்லிப் பயலுகளுக்கு நடிகை ஓவியா செவிட்டில் அறைந்தது போல தந்திருக்கும் பதில் தான் பதிவில் இருப்பது.

நடிகை ஓவியா Leaked Video என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ சுற்றி வருகிறது.அதைப் பற்றி நடிகை ஓவியாவிடம்,அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று,

"வீடியோ HD தரத்தில் இல்லையே..." என்றும்,

"அவ்வளவு தானா வீடியோ? நீளம் பத்தலையே?" என்றும் கேள்விகள் கேட்க,

அதற்கு நடிகை ஓவியா நிதானமாக அளித்த பதில்கள்,

"HD வேணுமா? அடுத்த தடவை தர்றேன்.."

"வீடியோ பாத்தியா? Enjoy..."

-- என பாயிண்ட் பிளாங்கில் அடித்த பதில்களை தந்திருக்கிறார்.

வீடியோ உண்மையோ,பொய்யோ அது ஓவியாக்கு தெரிந்து நடந்ததோ அல்லது தெரியாமல் நடந்ததோ அதெல்லாம் வேற விசயம்...

"இப்ப என்ன அதனால?" என்ற நடிகை ஓவியாவின் அந்த Attitude தான் பெண்களுக்கான மிக முக்கியமான பாடம்.

தமிழ்நாடு காவல்துறை சொல்வதும் இதைத் தான்,

"பெண்களே,யாராவது உங்களை,ஆபாச படம் இருக்கு,வீடியோ இருக்கு என்று மிரட்டினால்.அதற்காக துளி கூட பயப்படாதீர்கள்.வேறு எந்த விதமான முடிவையும் எடுத்து விடாதீர்கள்.நிதானமாக வந்து புகார் மட்டும் கொடுங்கள் போதும்....உறித்து உப்பை தடவி விடுகிறோம்..."

Copy From Facebook

13/10/2024

சஞ்சு சாம்சன் சம்பவம் 🔥 111Run in (47Balls)

🔥🔥🔥

IND 297-6
BAN 164-7

Address

Mannar

Telephone

0761265041

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media X Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media X Srilanka:

Videos

Share