பொங்கல் நிகழ்வும் கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன- மன்னார்
----------------
மன்னார் மாவட்டத்தின் நாகதாழ்வு முள்ளிப்பளம் முல்லைக்குமரன் அறநெறி பெருமையுடன் நடாத்திய பொங்கல் விழாவும் கிராமிய விளையாட்டுகளும் நேற்றையதினம் வன்னி மண் அறக்கட்டளையின் அனுசரணையில் ஆலய வளாகத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
கிராமிய விளையாட்டுகளில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்து தமது திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இதற்கான நிதி அனுசரணையை - தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி 1985 (சா/த) & 1988(உ/த) பழைய மாணவர்கள் வழங்கி வைத்தனர்.
கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிகழ்வை நடாத்துவதற்கு எமக்கு நிதி அனுசரணையை ஒழுங்குபடுத்தி தந்த வைத்தியர் குலசிங்கம் சுரேஸ்குமார் அவர்களுக்கு எமது நன்றி
பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது
----------------------
மன்னார் மாவட்டத்தின் பண்டிவிரிச்சான் கிராமத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வருட நிறைவை முன்னிட்டு கிராமத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் இன்றி கற்றல் நடவடிக்கையில் இடர்படும் மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அந்நிகழ்வில் வைத்து கற்றல் உபகரணங்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வன்னி மண் அறக்கட்டளையினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையை
தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி 1985 (சா/த) & 1988(உ/த) பழைய மாணவர்கள் வழங்கிவைத்தனர்.
இடர்கால உதவித்திட்டம்
இன்றைய பயணம்
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உரை 24.03.2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் பாதிக்கப்படட மக்கள் சார்பாக பிரித்தானியா அரசாங்கத்தினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.இப் பிரேரணையில் பாதிக்கப்படட தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் இல்லாவிடடாலும் கூட இந்த பிரேரணையை கொண்டுவந்த பிரித்தானியா அரசாங்கத்துக்கும் அதற்க்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கும் நடுநிலை வகித்த நாடுகளுக்கும் பாதிக்கப்படட தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரம் சிவன் கோவிலிலும் தொல்பொருள் திணைக்களம் கைவைத்துள்ளது!
உருத்திரபுரம்-உருத்திரபுரீஸ்வரம்
சிவன்கோவில் குளம்