Max 24 News

Max 24 News தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல்

MISSING ALERT‼️ நேற்று காலை முதல் இவர்களை காணவில்லை!சிபானா எனும் இளம் தாயுடன் 2 பிள்ளைகளையும் காணவில்லையென அம்பாரை, தமண ...
10/12/2023

MISSING ALERT‼️
நேற்று காலை முதல் இவர்களை காணவில்லை!

சிபானா எனும் இளம் தாயுடன் 2 பிள்ளைகளையும் காணவில்லையென அம்பாரை, தமண பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இறக்காமத்தில் வசித்து வந்த இவர்களை நேற்று (09) சனிக்கிழமை காலை முதல் காணவில்லை என்றும் இவர்கள் தொடர்பான தகவல் ஏதும் தெரிந்தால் உடனே தம்மை தொடர்பு கொள்ளுமாறும் கணவர் மற்றும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

தகவல் தெரிந்தால் மாத்திரம்
தொடர்பு கொள்ளவும்👇👇

0757240003 (கமால்)
+974 6691 1650‬ (மாஹிர்)


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.10

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக பௌதாலோக மாவத்தை வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பெரிய பந்தல் மழையுடன் கூட...
10/12/2023

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக பௌதாலோக மாவத்தை வீதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பெரிய பந்தல் மழையுடன் கூடிய பலத்த காற்றினால் இன்று (10) இடிந்து வீழ்ந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.10

ஹற்றன் ஜும்ஆப்பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரை கொன்று உண்டியல் கொள்ளைஹற்றன் நகரில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு...
10/12/2023

ஹற்றன் ஜும்ஆப்பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரை கொன்று உண்டியல் கொள்ளை

ஹற்றன் நகரில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியர்
கொலை செய்யப்பட்டு பள்ளிவாசலின் உண்டியல பணம் திருடப்பட்டுள்ளது......

கடந்த இரண்டு வருடங்களாக இப்பள்ளி வாசலில் பாதுகாப்பு கடமையில் இருந்து வந்த ஹற்றன் ஹிஜ்ராபுரவில் வசித்து வந்த 67 வயதான எம்.இப்ராஹிம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் இப்பாதுகாப்பு ஊழியரின் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலீசார் தெரிவிக்கின்றனர்

கொலைச் சந்தேக நபர் பள்ளிவாசல் மதிலால் பாய்ந்து பாதுகாப்பு ஊழியரின்
அறைக்குள் செல்வது பின் உண்டியல் பணத்தை திருடுவது போன்ற காட்சிகள் பள்ளிவாசலில் CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது பள்ளிவாசல் உண்டியல் பணம் பலமுறை கொள்ளையடிக்கப் பட்டதால் இதனை பாதுகாப்பதற்காக இப்பாதுகாப்பு ஊழியரை நிர்வாகம் நியமித்தமாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் AJM famis தெரிவித்துள்ளார்

இக்கொலை தொடர்பிலான நீதவான் களப்பரிசோதனையின் பின் மரண விசாரணை மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரியின் பரிசோதனைகள் இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.10

அம்பாறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை,துஸ்பிரயோகம் செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை..!வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய...
10/12/2023

அம்பாறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை,

துஸ்பிரயோகம் செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை..!

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய திருமணமான பெண், வாவிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்த போது,

அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரை குற்றவாளியாக இனங்கண்ட மேல் நீதிமன்றம்,

அவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அம்பாறையில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் திருமணமான பெண்ணே,அன்றையதினம் கடமை முடிந்து நீராடிக்கொண்டிருந்த போது, சந்தேகநபர் இந்தக் குற்றத்தை புரிந்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளியாக இனங்கண்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி நலிந்த ஹேவாவசம், குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதற்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்த தவறினால், 3 மாதங்கள் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 150,000 ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் செலுத்த தவறின் ஒரு வருடம் ஒரு தளர்வான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது,

தண்டப்பணம் மற்றும் நட்டஈடு செலுத்தாவிடின் சிறைத்தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்கவேண்டுமென வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.10

இன்று (10) காலை நமுனுகுல புடவத்த பகுதியில் பொத்குல் ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் குழியில் விழுந்து நீரில் மூழ்கி ...
10/12/2023

இன்று (10) காலை நமுனுகுல புடவத்த பகுதியில் பொத்குல் ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மொனராகலை அலியாவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நமுனுகுல புடாவத்தையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்ததாகவும், மேலும் இரு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது ஆழமான குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் முன்னெடுப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.10

09/12/2023

வார மாசம் கிளினிக் போக ரெடியா பிரண்ஸ்🤣🤣

09/12/2023

UPDATE from CEB :
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பல புறநகர் பகுதிகளிலும் மின்சார விநியோகம் மீளமைக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்திலும் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன: CEB


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

பொகவந்தலா டின்சின் 51 கம்பி சந்தியில் மண் சறிவு பொகவந்தலாவ ஹட்டன் பாதை முற்றாக போக்குவரத்து தடை  வாகனங்கள் தாமதமாகலாம் இ...
09/12/2023

பொகவந்தலா டின்சின் 51 கம்பி சந்தியில் மண் சறிவு பொகவந்தலாவ ஹட்டன் பாதை முற்றாக போக்குவரத்து தடை வாகனங்கள் தாமதமாகலாம் இதை உடன் அகற்ற நோர்வூட் பிரதேச வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன் வர வேண்டும் என சாரதிகள் மற்றும் பயனிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

மாங்குளத்தில் இருவரைக் கொலை செய்ய ஒட்டு தாடியுடன் வந்து வாளுடன் பிடிபட்ட கொலையாளி!!மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்...
09/12/2023

மாங்குளத்தில் இருவரைக் கொலை செய்ய ஒட்டு தாடியுடன் வந்து வாளுடன் பிடிபட்ட கொலையாளி!!

மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.இன்று மதியம் 02 மணியளவில் மாங்குளம் நகரப்பகுதியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு சென்ற ஒருவர் கிந்துஜனின் வீட்டிற்கு செல்ல வேண்டுமெனக்கூறி முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு பிடித்துள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த சாரதி எதற்காக செல்கிறீர்கள் என கேட்டபோது அவருக்கு Surprise gift delivery செய்ய வேண்டுமெனக்கூறியுள்ளார்.
சற்று நேரத்தில் அவர் தன்னை உருமறைப்பதற்காக ஒட்டியிருந்த தாடி உரிந்துள்ளது. இதையடுத்து அவர் தப்பியோடி வீதியால் வந்த இ.போ.ச பேருந்தில் ஏறமுயற்சித்த போது அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒன்றரை அடி நீள வாள், கயிறு மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.அவரை விசாரித்ததில் அவர் பிறேம் மற்றும் கிந்துஜனை கொல்லவந்ததாக கூறியுள்ளார். அதனையடுத்து அவர் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். நாளை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

🇱🇰இலங்கை மின்சார சபையின் சமீபத்திய புதுப்பிப்பில், இன்று முற்பகல் ஏற்பட்ட பாரிய மின்தடைகளினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்...
09/12/2023

🇱🇰இலங்கை மின்சார சபையின் சமீபத்திய புதுப்பிப்பில், இன்று முற்பகல் ஏற்பட்ட பாரிய மின்தடைகளினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு வெற்றிகரமாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

அதன்படி கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.

மற்ற அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை முழுமையாக மீட்பதற்கு தோராயமாக இரண்டு மணித்தியாலங்கள் ஆகும் என CEB தெரிவித்துள்ளது


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, அனைத்து நாடு முழுவதிலும் மின் தடை ஏற்பட்டுள்ளத...
09/12/2023

கொத்மலையில் இருந்து பியகம வரை செல்லும் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, அனைத்து நாடு முழுவதிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது.

"தற்போது பல பகுதிகளுக்கு மின்சாரம் புனரமைக்கப்பட்டுள்ளது, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, சில மணிநேரங்களில் முழு மின் விநியோகம் மீட்டமைக்கப்படும்" என்று CEB தெரிவித்துள்ளது.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

09/12/2023

நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

09/12/2023

இருளில் மூழ்கியது
இலங்கை

09/12/2023

ஊருக்குள் திருடர்கள் அதிகம் கரண்டும் இல்ல! கேட், கதவு, ஜன்னல்களை மூடுங்கள்! வீட்டுக்குள் புகுந்திடுவான். கவனம்!

தற்போது பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது..சில மணித்தியாலங்களில் நாடு முழுதும் மின் விநியோகம் சீராகும...
09/12/2023

தற்போது பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது..
சில மணித்தியாலங்களில் நாடு முழுதும் மின் விநியோகம் சீராகும் ; மின்சார சபை அறிவிப்பு


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..உங்கள் பிரதேசத்தில் எப்படி ❓   👉 விரிவ...
09/12/2023

தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடை பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
உங்கள் பிரதேசத்தில் எப்படி ❓


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

09/12/2023
🔴 இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டலாகிறது  #03
09/12/2023

🔴 இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலை, ஐந்து நட்சத்திர ஹோட்டலாகிறது


#03

டைட்டானிக்கை விட 5மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆர...
09/12/2023

டைட்டானிக்கை விட 5மடங்கு பெரியதும் உலகின் மிகப்பெரியதுமான பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

Icon of the Seas என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் Royal Caribbean International நிறுவனத்தினால் இயக்கப்படவுள்ளது. டைட்டானிக் கப்பலானது "dream of the seas" என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கப்பல் 18 பயணிகள் தளங்கள், ஏழு நீச்சல் குளங்கள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பார்களுடன் 5,610 விருந்தினர்கள் ஒரே நேரத்தில் தங்கக்கூடிய வசதிகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

#03

அவசர உதவி மொஹமட் அரஹாம் மற்றும் பாதிமா சஜினி தம்பதிகளின் இரட்டை புதல்வியருள் ஒருவரான  06 மாதம் நிரம்பிய  அயானா மர்யம் தி...
09/12/2023

அவசர உதவி

மொஹமட் அரஹாம் மற்றும் பாதிமா சஜினி தம்பதிகளின் இரட்டை புதல்வியருள் ஒருவரான 06 மாதம் நிரம்பிய அயானா மர்யம் திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது அக்குழந்தைக்கு அவசர ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைக்கான சிகிச்சை பரிசோதனைக்காக மட்டும் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவாகும் என‌ கூறிய நிலையில் , அப்பாரிய தொகை பணத்தை உடனடியாக திரட்ட முடியாதுள்ளதால் , உங்களது உதவியை அக்குழந்தைக்காக நல்குமாறு குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர். எனவே இயலுமானவர்கள் உங்களது உதவியை தந்துதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு 075 048 6079 (Father) Bank details (Mother)
Fathima Sajini 90287467 (BOC BANK) ADDALAICHENAI
08.12.2023


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.09

பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத...
08/12/2023

பூசாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, மாங்கேணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் பேய்,பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் ஆலயமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான நேற்று முன்தினம் குறித்த பூசாரியிடம் அண்ணன், தங்கை என இருவர் சென்றுள்ள நிலையில் குறித்த பூசாரி இருவரையும் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த அண்ணன் உயிரிழந்துள்ள நிலையில் தங்கை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை குறித்த பூசாரி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த நபருக்கும் பூசாரியின் மனைவிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததை அறிந்தே குறித்த பூசாரி தாக்குதல் மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவர் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

08/12/2023

மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பான CCTV DVR மீட்பு : ஆதாரங்கள் அழிப்பில் தொடர்புடைய நால்வர் கைது (FS)

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி லக்‌ஷபான வீதியில் சென்று கொண்டிருந்த ஹட்டன் இ.போ.ச பஸ்ஸொன்று இன்று (08) வீதியின் குறுக்க...
08/12/2023

கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி லக்‌ஷபான வீதியில் சென்று கொண்டிருந்த ஹட்டன் இ.போ.ச பஸ்ஸொன்று இன்று (08) வீதியின் குறுக்கே ஓடும் கால்வாயில் வீழ்ந்ததால் அந்த வீதியின் போக்குவரத்து அதிகாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை முற்றாக தடைப்பட்டது.

குறித்த பஸ்ஸானது எதிர்திசையில் வந்த மற்றுமொரு பஸ்ஸிற்கு வழிவிடச் சென்றபோது பிரதான வீதியை ஒட்டியிருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனினும், விபத்தினால் அவ்வீதியில் பயணித்த ஏனைய வாகனங்களின் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்...
08/12/2023

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நாடாளுமன்றத்தில் நேற்று (07) தெரிவித்தார்.

இதன்படி, தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதோடு , எதிர்காலத்தில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயக் குழுவும், தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் கூடி, சம்பந்தப்பட்ட முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள், சம்பந்தப்பட்ட விஷயங்களில் உடன்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறினார்.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித...
08/12/2023

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 11,12,13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த நீர் வெட்டு நாளை மாலை 05 மணிக்கு தொடங்கி 16 மணிந்தியாலங்களுக்கு அமுலில் இருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

நேற்றிரவு  ஏற்பட்ட பாரியமழை வெள்ளத்தை அடுத்துஅக்குரனை நகரின்தற்போதைய நிலை..குறிப்பிட்ட மழை வெள்ளத்தால் ஏராளமான பொருட் சே...
08/12/2023

நேற்றிரவு ஏற்பட்ட பாரிய
மழை வெள்ளத்தை அடுத்து
அக்குரனை நகரின்
தற்போதைய நிலை..

குறிப்பிட்ட மழை வெள்ளத்தால் ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கு இருக்கும் எமது சகோதரர்கள் தெரிவித்தனர்.
This time it’s a disaster


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

08/12/2023

அக்குறனையில் நேற்றிரவு பெய்த கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளாதாக அங்கிருக்கும் எமது சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.

பேரழிவுகளில் இருந்து இறைவன் அனைவரையும் பாதுகாப்பானாக 🤲


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

08/12/2023

நாட்டில் இன்று (08) பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யும்.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

08/12/2023

நேற்று இரவு பெய்து கொண்டிருக்கும் கடுமையான மழை காரணமாக அக்குரனை பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனை அடுத்து, கண்டி - யாழ்ப்பாணம் பிரதான
வீதியூடான வாகன போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது



👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

🔴 கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்.  #03
08/12/2023

🔴 கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்.

#03

🇱🇰 Rangiri Dambulla Cricket Stadium 🏟 new floodlightsஇலங்கை ரங்கிரி தம்புள்ள மைதானத்தின் புதிய Floodlights கொண்ட அருமையா...
08/12/2023

🇱🇰 Rangiri Dambulla Cricket Stadium 🏟 new floodlights

இலங்கை ரங்கிரி தம்புள்ள மைதானத்தின் புதிய Floodlights கொண்ட அருமையான காட்சி 📸

#03

பலாங்கொடை  ஹட்டன பிரதான பாதை போக்குவரத்து தடை.....இப்பாதையில் மின்னலை பகுதியில்  நேற்று இரவு ஏற்பட்ட பாரிய மண் சரிவினால்...
08/12/2023

பலாங்கொடை ஹட்டன பிரதான பாதை போக்குவரத்து தடை.....
இப்பாதையில் மின்னலை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய மண் சரிவினால் காரணமாக பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வாகன சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


👉 விரிவான செய்திகளுக்கு 📰

http://www.max24news.com
2023.12.08

தரம் 4 வகுப்பறையில் 5 மாணவ, மாணவிகளுக்கு முத்தமிட்டு ஆபாச வீடியோ காட்டியவன்மூன்று  மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத...
08/12/2023

தரம் 4 வகுப்பறையில் 5 மாணவ, மாணவிகளுக்கு முத்தமிட்டு ஆபாச வீடியோ காட்டியவன்

மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ - மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுனுவில பண்டிரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் தரம் 04 வகுப்பறையில் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டதன் பின்னர், தனது கையடக்கத் தொலைபேசியில் சில ஆபாச காணொளிகளை பிள்ளைகளுக்குக் காட்டியதாக அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தின் போது வகுப்பறையில் ஆசிரியர் இல்லை எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

#03

Address

Kekirawa
50142

Alerts

Be the first to know and let us send you an email when Max 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Max 24 News:

Videos

Share


Other Media/News Companies in Kekirawa

Show All