
21/01/2025
அதிக ஞாபக சக்தி கொண்ட காத்தான்குடி சிறுவன் அயாஷ் அஹமட்
================================
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் எம்.எச். முஹம்மட் நபீல், எம்.ஆர். றிப்ரத் றினா ஆகியோரின் புதல்வரான 2 வயது 3 மாதங்களேயான அயாஷ் அஹமட் தனது ஞாபக சக்தி மூலமாக புதிய வரலாரொன்றை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன் முதற் கட்டமாக உலக நாடுகளின் கொடிகள்,மிருகங்கள், வாகனங்கள், பழங்கள், உணவுகள் மற்றும் வாகனங்களின் சின்னங்கள் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களை அறிந்து மிகத் துரித வேகத்தில் சொல்லி நடாத்தும் முயற்சியில் வெற்றி ஈட்டியுள்ளார்.
இவரது எதிர்காலம் சிறப்பாக அமைய எமது வாழ்த்துக்கள்.
Edit Video: https://youtu.be/uQPHQmNhC94
Full Video: https://youtu.be/iL9_JHBPPWE