13/02/2024
இன்று உலக வானொலி தினம்!
இன்று உலக வானொலி தினமாகும். ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளால் முதன் முதலில் 2011 இல் வானொலி தினம் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2013 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதற்குத் தங்களின் ஒப்புதல் முத்திரையைக் கொடுத்து, சர்வதேச தினமாக அங்கீகரித்தது.
வானொலியானது மனிதகுலத்தை அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் கொண்டாடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக திகழ்கிறது.
உலக அளவில், வானொலி மிகவும் பரவலாக பாவிக்கப்படும் ஊடகமாக உள்ளது. பல்வேறு சர்வதேச அறிக்கைகளின்படி, உலகில் மிகவும் நம்பகமான மற்றும் பயன்படுத்தப்படும் ஊடகங்களில் ஒன்றாக வானொலி திகழ்கிறது. வாழ்வியலோடு ஒன்றுபட்ட பல அம்சங்களின் கண்ணாடியாய் வானொலி சேவைகள் திகழ்கின்றன.
பிப்ரவரி 13, 2024 அன்று கொண்டாடப்படும் உலக வானொலி தினத்தின் கருப்பொருள் "வானொலி: ஒரு நூற்றாண்டு தகவல், பொழுதுபோக்கு மற்றும் கல்வி" என்பதாகும்.