Bsnsrilanka

Bsnsrilanka Welcome to 𝐁𝐬𝐧𝐬𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚™ is Official page!!!
---------
We Ready to Publish Worldwide News stories | Srilankan Favourite News forum

©𝐁𝐬𝐧𝐬𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚™ 𝟐𝟎𝟐𝟏
(1)

31/01/2023
அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க கோட்டாபய ராஜபக்ஷ விண்ணப்பம்࿇ LK | 02 MON/01/2023 ࿇இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாப...
02/01/2023

அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க கோட்டாபய ராஜபக்ஷ விண்ணப்பம்

࿇ LK | 02 MON/01/2023 ࿇

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளார்.

முன்னதாக 2019ஆம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை துறந்தார்.

இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று கூறப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் இருந்து வெளியேறியபோது, எந்த நாடும் அவருக்கு புகலிடம் வழங்கவில்லை.

இதனையடுத்தே தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ விண்ணப்பித்துள்ளதாக தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பினார்.

இந்தநிலையில் மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கான கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது துபாயில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 6ஆம் திகதியன்று இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு࿇ LK | 02 MON/01/2023 ࿇மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்றைய தி...
02/01/2023

புதிய மின் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு

࿇ LK | 02 MON/01/2023 ࿇

மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும், மின் உற்பத்திக்கான செலவினத்தையும் கருத்திற்கொண்டு மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறைந்தளவில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, 2023ஆம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டண திருத்தம், அதிக தாக்கத்தை செலுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய திருத்தங்களுக்கு அமைய 0 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணத்தின் கீழ் அலகொன்றிற்கான கட்டணம் உள்ளிட்ட நிலையான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 0 முதல் 30 வரையில் அலகொன்றுக்கான 8 ரூபா என்ற கட்டணத்தை 30 ரூபாவாகவும், 120 ரூபா என்ற நிலையான கட்டணத்தை 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 வரையில் அலகொன்றுக்கான 10 ரூபா என்ற கட்டணத்தை 37 ரூபாவாகவும், 240 ரூபாவாக காணப்பட்ட நிலையான கட்டணத்தை 550 ரூபாவரையிலும் அதிகரிப்பதற்கு புதிய யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

61 முதல் 90 வரையான அலகொன்றுக்கு 16 ரூபாவாக காணப்பட்ட கட்டணம் 42 ரூபாவாகவும், 360 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 650 ரூபா வரையிலும் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவையினால் முன்வைக்கப்படும் எந்தவொரு யோசனையையும் பரிசீலிக்க போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்!இன்று (01) முதல் வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாண எழுத்துகள் குறிப்பிடப்பட மாட்...
01/01/2023

இன்று முதல் வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்!

இன்று (01) முதல் வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாண எழுத்துகள் குறிப்பிடப்பட மாட்டாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் இடமாற்றம் செய்யும் போது இலக்கத் தகட்டின் மாகாணத் தன்மை நீக்கப்படும் என ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் ஒரு வாகனம் பல தடவைகள் விற்பனை செய்யப்படுவதனால் புதிய இலக்கத் தகடு அச்சிடப்பட்ட போதும் சாரதிகள் அதனை பெற்றுக் கொள்ள வராத சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அதற்கமைய இந்த செலவை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குடிநீர் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படும்!மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, ​​நீர் கட்டணங்களும் அதிகரிக்க...
01/01/2023

குடிநீர் கட்டணமும் விரைவில் அதிகரிக்கப்படும்!

மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது, ​​நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதுடன், நீர் விநியோகத்திற்காக அதிகளவு மின்சாரம் செலவிடப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடிநீர் வினியோகத்தில் பம்பிங் செய்யும் பணிக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால், மின் கட்டணத்தை உயர்த்தினால், அதற்கேற்ப குடிநீர் கட்டண உயர்வை தடுக்க முடியாது என்று அதிகாரி மேலும் கூறினார்.

இன்று முதல் அமுலாகும் வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள்࿇ LK | 01 SUN/01/2023 ࿇2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட...
01/01/2023

இன்று முதல் அமுலாகும் வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள்

࿇ LK | 01 SUN/01/2023 ࿇

2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஞாயிறு (டிச.1) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தனியார் வருமான மாத வரி அறவிடல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது.

மாதம் ஒரு இலட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர் மாத வரி செலுத்த வேண்டும்.

இதற்கமைய ஒரு மாத சம்பளம்,

💰 ஒரு இலட்சம் பெறுபவர் 3,000 ரூபாவும்,

💰 2 இலட்சம் சம்பளம் பெறுபவர் 10,000 ரூபாவும்,

💰 2,50000 ரூபா சம்பளம் பெறுபவர் 21,000 ரூபாவும்,

💰 3 இலட்சம் சம்பளம் பெறுபவர் 35,000 ரூபாவும்,

💰 3,50000 ஆயிரம் சம்பளம் பெறுபவர் 52,500 ரூபாவும்,

💰 4 இலட்சம் சம்பளம் பெறுபவர் 70,500 ரூபாவும்,

💰 5 இலட்சம் சம்பளம் பெறுபவர் 10,6000 ரூபாவும்,

💰 7,50000 ரூபா சம்பளம் பெறுபவர் 19,6500 ரூபாவும்,

💰 10 இலட்சம் சம்பளம் பெறுபவர் 28,6500 ரூபாவும் மாத வரி செலுத்த வேண்டும்.

அத்துடன் பொருள் மற்றும் சேவை,விவசாயம்,கல்வி, சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய சேவைகளுக்கான வரி 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர்,சமூக பாதுகாப்பு வரிகளை கட்டம் கட்டமாக மறுசீரமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது

“இன்றைய விடுமுறையில் சந்தேகம் நிலவுகிறது” – மரிக்கார் 🧐 (26)࿇LK | 26 MON/12/2022࿇உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பு தொட...
26/12/2022

“இன்றைய விடுமுறையில் சந்தேகம் நிலவுகிறது” – மரிக்கார் 🧐 (26)

࿇LK | 26 MON/12/2022࿇

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானியை தாமதப்படுத்துவதற்காக இன்றைய தினம் (26) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்;

“திங்கட்கிழமை விடுமுறை. என்று எங்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அன்றே தேர்தல் ஆணையம் வர்த்தமானியினை வெளியிட்டிருக்க வேண்டும். அச்சகம் மூடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. தேர்தல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இப்போது நீதிமன்றங்களுக்கு விடுமுறை, நாடாளுமன்றத்துக்கு விடுமுறை. எனவே, புதிய அரசாணைகளை கொண்டு வர கால அவகாசம் இல்லை. அட்டவணையின்படி, மார்ச் 20 ஆம் திகதிக்குள், புதிய உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்பட்டு, வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தேர்தலை அறிவித்து ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய குறைந்தபட்சம் ஐந்து வாரங்கள் தேர்தலுக்கு அவகாசம் அளிக்க வேண்டும். அதன் பிறகு அவை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அதன் பின்னர் சபைகள் தேவையான ஆட்களை நியமிக்க வேண்டும்.

இந்தக் காலக்கெடுவைப் பார்க்கும்போது, ​​இந்தத் தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்பட வேண்டும். கஞ்சியில் தேர்தல் முடிந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வேட்புமனுவை தள்ளி வைக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன..” எனத் தெரிவித்திருந்தார்.

26/12/2022

🌊 ஆழிப்பேரலை : மக்களின் உயிர்களை காவுகொண்டு இன்றுடன் 18 ஆண்டுகள்‼️

࿇LK | 26 MON/12/2022࿇

‘சுனாமி’ என்ற வார்த்தையை கேட்கும் போதே மனதில் தானாகவே பதற்றம் தொற்றி கொள்கிறது. இந்த வார்த்தை ஜப்பானிய சொல் ஆகும். தமிழில் ஆழிப்பேரலை என்று சுனாமி குறிப்பிடப்படுகிறது.

அரிதான நிகழ்வாக பார்க்கப்படும் சுனாமி, மிகவும் ஆபத்தான அதிக அழிவை ஏற்படுத்த கூடிய பேரழிவு என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். கடலில் உள்ள நீரின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் அலைகளின் தொடர். தாக்குதலாக வெளிப்படும் சுனாமி பொதுவாக எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு அல்லது நீருக்கடியில் வெடிப்பு போன்ற பல காரணங்கள் ஏற்படுகின்றன.

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் டிசம்பர் 26-ஆம் திகதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வாரி சுருட்டி சென்றது நினைவிருக்கலாம். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா, இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை பேரழிவுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனிடையே மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் திகதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

(Video courtesy : Ada derana)
#2004

வெள்ளத்தில் மூழ்கியது கண்டி ரயில் நிலையம்‼️࿇LK | 25 SUN/12/2022࿇மலையகத்துக்கான ரயில் சேவைகள் தாமதமடையும் என ரயில்வே திணை...
25/12/2022

வெள்ளத்தில் மூழ்கியது கண்டி ரயில் நிலையம்‼️

࿇LK | 25 SUN/12/2022࿇

மலையகத்துக்கான ரயில் சேவைகள் தாமதமடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி ரயில் நிலையத்தின் வளாகம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

🪀 இணைந்திடுங்கள் https://chat.whatsapp.com/C7Brj2dEABOBJREnkkBJBs

© Bsnsrilanka™ 2022

14/12/2022

" அ " சரியாக தான் எழுதிருக்கேன் - ஆசிரியையிடம் சுட்டுத்தனமாக அடம் பிடிக்கும் சிறுவன்...

Mathematics English & Tamil Medium📚MATHS CLASSES📏📉📐 மிகவும் எளிய முறையில் கணித பாடத்தை இன்றே க‌ற்று‌க்கொள்ள.. மிகவும் கு...
18/11/2022

Mathematics English & Tamil Medium📚

MATHS CLASSES📏📉📐 மிகவும் எளிய முறையில் கணித பாடத்தை இன்றே க‌ற்று‌க்கொள்ள..
மிகவும் குறைந்த கட்டணத்தில் பூரணமாக கணிதம் கற்க தொடர்பு கொள்ளுங்கள்.

Description : Maths classes for students from *grade 10.* ( local syllabus ) tamil or English medium. Home visits / online classes .
Conducted By : Mujeeb
Contact : 0767103477
English & tamil Medium Mathematics
⇨ ( *Grade 10* )
Individual and Group classes are available.
* Online and Home visit classes at your convenience.
- Home visits only in kalmunai area and suburbs.

99% percentage successful "A" passes last year
99%வீதம் A சித்தி உறுதி உங்கள் பிள்ளைகள் எ‌தி‌ர்‌ காலத்தை கருத்தில் கொண்டு இன்றே பதிவு செய்யுங்கள்.

இந்த வகுப்பில்,
# பாடங்கள் தனி நபர் அளவில் தெளிவாகக் கற்பிக்கப்படும்.
# பலவீனமான மாணவர்கள், மெதுவாக கற்கும் மாணவர்கள் சிறப்பாக நடத்தப்பட்டு, கற்க தூண்டப்படுவார்கள்.
# மாதாந்திர ஆய்வு மற்றும் மதிப்பீடுகள், மாதிரி தாள்கள்.
(22 வருடம் அனுபவம் வாய்ந்த ஆசான்)
WhatsApp link register now..
https://chat.whatsapp.com/K4HJ0BQfMeR6VI83tF0rnk

25/04/2022

Your BSN NEWS in your hands in a new dimension ...

C O M I N G S O O N...

| Stay tuned with your BSN...🤝🏻

© 2022 BLUE STAR NETWORK

25/04/2022

உங்கள் BSN செய்திகள் புதிய பரிமாணத்தில் உங்கள் கைகளில்...

விரைவில்...

| தொடர்ந்தும் இணைந்திருங்கள் உங்கள் BSN உடன்...🤝🏻

© 2022 BLUE STAR NETWORK

கபுடா என அழைக்கப்படும் பஷில் ராஜபக்ஷ அவர்களின் பிறந்த நாளும் சர்வதேச காக்கைகள் தினமு‌ம் ஒரே நாளில் ஏப்ரல் 27ஆம் திகதி வர...
20/04/2022

கபுடா என அழைக்கப்படும் பஷில் ராஜபக்ஷ அவர்களின் பிறந்த நாளும் சர்வதேச காக்கைகள் தினமு‌ம் ஒரே நாளில் ஏப்ரல் 27ஆம் திகதி வருவது தற்போது அதிகம் இலங்கையில் பேசப்படும் விடயமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது...😁
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

Address

Kalutara
10400

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 12:00

Alerts

Be the first to know and let us send you an email when Bsnsrilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bsnsrilanka:

Videos

Share


Other News & Media Websites in Kalutara

Show All