23/12/2023
எனது கட்டுரையின் இரண்டாம் தொடராக...
இந்த இட்டுக்கட்டப்பட்ட சம்பவம் இமாம் ஜலாலுத்தீன் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அல்-ஹாவி லில் பதாவா எனும் கிரந்தத்தில் வருவதாக கூறிய மெளலவி சபா நஜாஹி அவர்கள் இந்த வீடியோவில் நபியவர்களின் இரண்டு கரங்களும் கப்ர் பிளந்து வெளியே வந்ததாக கிதாபில் உள்ளதற்கு மாற்றமாக பொய் உறைத்துள்ளார்.
(குறிப்பு:- அந்த கிதாபில் என்ன இருந்தது என்பதனையும் அது ஆதாரமற்ற கட்டுக்கதை என்பதனையும் ஏற்கனவே எனது முன்னைய கட்டுரையில் தெளிவுபடுத்திவிட்டேன்)
அந்த கிதாபில் கூட
فامدد يمينك كي تحظى بها شفتي
"(நபிகள் நாயகமே) உங்கள் வலக்கரத்தை நீட்டுங்கள் அதனை எனது உதடு முத்தமிட" என்றும்
ஒருமையில் ஒரு கைதான் கப்ரில் இருந்து வெளி வந்ததாகவும் உள்ளது. (கிதாபின் படம் கீழே அடையாளமிடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது)
மிம்பரில் கூறியதே ஆதாரமற்ற கட்டுக்கதை அதிலும் பிழையாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார் ஒரு கை அதுவும் வலது கை என கிதாபில் வந்ததை இரண்டு கைகளும் என்று கூறி ஏற்கனவே இட்டுக்கட்டப்பட்ட செய்தியில் அவர் மேலதிகமாக இட்டுக்கட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி ரிபாயி நாயகம் நபியவர்களின் கைகளை முஸாபஹா செய்ததாக பொய்யுறைத்திருக்கின்றார் அவர் ஆதாரம் என்று காட்டிய கிதாபில் எந்த வாசகமும் முஸாபஹா செய்ததாக இடம்பெறவில்லை முத்தமிட்டார் என்றே வந்துள்ளது ஆனால் குறித்த வீடியோவில் முஸாபஹா செய்து முத்தமிட்டார் என பிழையான மொழிபெயர்ப்பை கூறியுள்ளார்.
இவைகள் மேலும் மேலும் அவரது பலயீனத்தையும், செய்தியின் பலயீனத்தையும் மக்கள் புரிந்திட போதிய சான்றாகும்.
இமாம் சுயூதியின் கிதாபை நான் சரியாகவே மொழிபெயர்ப்புச் செய்துள்ளேன் அது பிழை என்றால் அல் - ஹாவி லில் பதாவா கிரந்தத்தை மெளலவி சபா நஜாஹி அவர்கள் எடுத்து வரிக்குவரி வாசித்து அறிவிப்பாளர் வரிசை, தான் கூறிய இரண்டு கைகள், மற்றும் முஸாபஹா செய்தது போன்ற வாசகங்களை மொழிபெயர்ப்பு செய்து காட்டி தனது நிலைப்பாட்டை வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த புராணக் கதைகளை சாதரண இஸ்லாமிய அறிவுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சம்பவத்தை கேட்ட மறுகனமே இது இட்டுக்கட்டப்பட்டது என்று ஒருவருக்கு இலகுவில் புறிந்துவிடும் ஆனாலும் அதனை நியாயப்படுத்த முன்வந்தவர்கள் ஆதாரத்தை நிறூபிக்க தவறி தேவையற்ற விடையங்களூடாக திசைமாறிச் செல்வது மேலும் இதன் பலகீனத்தை உறுதி செய்துள்ளது.
அதுமாத்திரமன்றி இந்த கட்டுக்கதை ஷரீஅத்தின் பல விதிகளுக்கும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் முரணாணது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முடிந்தால் இன்னுமொரு தொடரில் தெளிவுபடுத்துகின்றேன் இன்ஷா அழ்ழாஹ்.
ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி)