Urumpirai Flash News

Urumpirai Flash News அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன்

31/07/2021

உரும்பிராய் இளைஞனை கடத்திய கோப்பாய் பொலிஸார் ! பரபரப்பு வாக்கு மூலம்.
அப்பாவியை கடத்தி சித்திரவதை செய்த கோப்பாய் பொலிஸார்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில், இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.சுமார் 30 அடி நீளம...
15/06/2021

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில், இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சுமார் 30 அடி நீளமான திமிங்கிலமே இவ்வாறு உயிரிழந்தநிலையில், கரையொதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிகிச்சை பிரிவில் மருத்துவ சேவை பெறும் நோயாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அதிகரித்த கோவிட...
05/06/2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிகிச்சை பிரிவில் மருத்துவ சேவை பெறும் நோயாளர்கள் தற்போது நாட்டில் நிலவும் அதிகரித்த கோவிட்-19 நோய்த் தொற்று தாக்கத்தின் காரணமாக மாதாந்த மருந்துகளை வீட்டுக்கு அஞ்சலில் அனுப்பிவைக்க நடவடிக்கை.

03/06/2021
28/05/2021

நண்பர்களுக்கு வணக்கம். எமது கிராமம் உரும்பிராயில் நடைபெறும் சகல விதமான விடயங்களையும் தெரிந்து கொள்ள எமது முகப்புத்தகப் பக்கத்தை லைக் செய்யவும்.

மேலும் உங்கள் நண்பர்களிடையே எமது பக்கத்தை பகிர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள்.

வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் எமது கிராமத்தை வளர்க்கும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பக்கத்திற்கு உங்கள் முழு ஆதரவை எதிர் பார்க்கின்றோம்.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட  அதிவிசேச  வர்த்தமானி தமிழில்..
27/05/2021

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அதிவிசேச வர்த்தமானி தமிழில்..

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் ம...
27/05/2021

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தீ பரவும் கப்பலிலிருந்து Nitrogen Dioxide வாயு வெளியேறுவதால், அது காற்றுடன் கலந்து அமில மழையாக பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்...
27/05/2021

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுவதாக (சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபானசாலைகளைத் திறக்க அனுமதியில்லை என அறிவுறுத்தியுள்ளது.

அதனால் நாடுமுழுவதும் மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

கிளிநொச்சியில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுகிளிநொச்சி நகரில் இன்றைய தினம்(date 25) திறக்கப்பட்ட வியாபா...
25/05/2021

கிளிநொச்சியில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது
கிளிநொச்சி நகரில் இன்றைய தினம்(date 25) திறக்கப்பட்ட வியாபார நிலையங்களில் அத்தியாவசிய வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை பொலீஸார் உடனடியாக மூடியுள்ளனர்.
இன்று காலை முதல் கிளிநொச்சியின் நகரில் பெரும்பாலான வியாபார நிலையங்கள்
திறக்கப்பட்டிருந்தன. பொது மக்களும் வழமை போன்று நகருக்கு வந்திருந்தனர்.
ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை தவிர ஏனையவற்றை திறப்பதற்கு தடை என அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக கிளிநொச்சியில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சுன்னாகம் பொலிசார் அதிரடி......சுன்னாகம் பகுதியில் வீட்டில் மறைத்து வைத்து களவாக விற்பனை செய்யப்படவிருந்த மதுபான போத்தல்...
23/05/2021

சுன்னாகம் பொலிசார் அதிரடி......
சுன்னாகம் பகுதியில் வீட்டில் மறைத்து வைத்து களவாக விற்பனை செய்யப்படவிருந்த மதுபான போத்தல்கள் சுன்னாகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் தப்பியோட்டம்; முள்வேலிக்குள் சிக்கியவர் கைது!
21/05/2021

வடமராட்சி கிழக்கில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் தப்பியோட்டம்; முள்வேலிக்குள் சிக்கியவர் கைது!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிக...
21/05/2021

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்கு  பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு *பல்கலைக்கழக அனுமதிக் கையேடு* தொடர்பான அறிவித்தல்...
21/05/2021

2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு *பல்கலைக்கழக அனுமதிக் கையேடு* தொடர்பான அறிவித்தல் ஒன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன் முழுமையான PDF வடிவம் கீழே இணைப்பட்டுள்ளது.👇🏿

நாடளாவிய ரீதியில் இன்றைய தினத்தில் இருந்து மீண்டும் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்...
21/05/2021

நாடளாவிய ரீதியில் இன்றைய தினத்தில் இருந்து மீண்டும் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்போது அத்தியாவசிய சேவைகளை மாத்திரமே முன்னெடுக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

21/05/2021

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது.சுமார் 50 கோடி தடுப்பூசிக...
21/05/2021

ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது.

சுமார் 50 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா உறுதி அளித்துள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுவரெலியா – இராகலை பகுதியில்  42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ வண்டி  விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகா...
21/05/2021

நுவரெலியா – இராகலை பகுதியில் 42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இதில் இருவர், அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவை அமெரிக்காவின் போயிங் விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.இது தொடர்பான புரிந்துணர்வு ஒ...
21/05/2021

ஶ்ரீலங்கன் விமான சேவை அமெரிக்காவின் போயிங் விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதென ...
21/05/2021

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானதென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

20/05/2021

திரு நங்கைகளிடம் மன்னிப்பு கேட்கும் திவ்யா

இன்று(20) முதல் மறு அறிவித்தல் வரை, குடிவரவு - குடியகல்வு திணைக்கள பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் கண்டி, வவுனியா, மாத...
19/05/2021

இன்று(20) முதல் மறு அறிவித்தல் வரை, குடிவரவு - குடியகல்வு திணைக்கள பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் கண்டி, வவுனியா, மாத்தறை, குருணாகல் ஆகிய கிளைகளுக்கு பொதுமக்கள் வருவது தற்காலிக இடைநிறுத்தம்

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய மூன்று இணையதளங்களை தமிழ் ஈழ சைபர் படை முடக்கியிர...
18/05/2021

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய மூன்று இணையதளங்களை தமிழ் ஈழ சைபர் படை முடக்கியிருக்கிறது.hacked

17/05/2021

யாழ்ப்பானம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் இன்று காலை வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வயோதிபர்கள் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது, 80 வயது, 76 வயதான இரு பெண்கள் தனிமையில் வசிக்கும் குறித்த வீட்டுக்குள் இருவர் வாளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நுழைந்துள்ளதுடன்,

வயோதிபப் பெண்ணின் வாயினை மூடியபடி அவரிடம் இருந்த தோடு மற்றும் மோதிரத்தினை அபகரித்தனர். இதனை அவதானித்த மற்றைய வயோதிபப் பெண் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதையடுத்து உறவினர்கள் அங்கு வந்துனர்.

உறவினர்களைக் கண்டதும் திருடர்கள் இருவரும் தப்பித்து சென்றுள்ளனர். இது இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் முழு நேர பயணத்தடை மற்றும் இறுக்கமான கண்காணிப்புக்கு மத்தியில் நாவற்குழியில்– 5 வீட்டுத்திட்ட பகுதியில்...
16/05/2021

யாழ்.மாவட்டத்தில் முழு நேர பயணத்தடை மற்றும் இறுக்கமான கண்காணிப்புக்கு மத்தியில் நாவற்குழியில்– 5 வீட்டுத்திட்ட பகுதியில் 5 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணம், மற்றும் கோழிகளை திருடி சென்றிருக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது, ஒரு வீட்டில் 1இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணமும், மற்றொரு வீட்டில் 40க்கும் மேற்பட்ட வளர்ப்பு புறாக்கள், மற்றைய வீட்டில் 16வளர்ப்பு கோழிகள், மற்றைய வீட்டில் 6 வளர்ப்பு கோழிகள் ,

5வது வீட்டில் 5வளர்ப்பு முயல்கள் என்பன திருடப்பட்டுள்ளன. இதேவேளை, நாவற்குழி சித்திர வேலாயுதர் ஆலயத்தினுள் ஓடு பிரித்து நுழைந்த திருடர்கள், ஆலயத்தினுள் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில், வீடுகளின் உரிமையாளர்கள், ஆலய நிர்வாகத்தினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

16/05/2021

தனிமைப்பபடுத்தல் விதிளை மீறிய 306 பேர் நேற்று கைது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதில் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்து 1...
16/05/2021

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதில் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 2 ஆயிரம் பேரும், இந்தியாவில் 4 ஆயிரத்து 100 பேரும் பெருந்தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இதுவரை 33 லட்சத்து 82 ஆயிரம் பேர் கொரேனா பாதிப்பினால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகம் முழுவதும் 16 கோடியே 31 லட்சம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு இருந்தாலும், இதுவரை 14 கோடியே 25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்த...
16/05/2021

இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

16/05/2021

இன்று முற்பகல் 10மணியுடன் நிறைவடைந்த 24மணிநேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் 5பேர் உயிரிழந்ததோடு, 55பேருக்கு தொற்றுறுதி - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஏ.ஆர்.எம்.தௌபீக்

16/05/2021

#நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் அரசு கோரிக்கை

கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யுமாறு, அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப...
16/05/2021

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறையை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டுமாறு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது.இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ...
16/05/2021

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்>சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, உயிரிழந...
16/05/2021

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 941 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5465 குடும்பங்களைச் சேர்ந்த 2...
15/05/2021

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5465 குடும்பங்களைச் சேர்ந்த 20018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொ...
15/05/2021

அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நி...
15/05/2021

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது

15/05/2021

உரும்பிராய் அக்காவின் கதை எப்படி?
Video

ஊரடங்கு நேரத்தில் யாழ் கல்வியங்காடு பிரதேசத்தில் ரவுடி கும்பல் அட்டூழியம்!!!நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பெ...
15/05/2021

ஊரடங்கு நேரத்தில் யாழ் கல்வியங்காடு பிரதேசத்தில் ரவுடி கும்பல் அட்டூழியம்!!!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பொழுதும் இன்று (15/05/2021) இரவு 6.15 மணியளவில் யாழ் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இனந்தெரியாத ரவுடி கும்பல் வீட்டின் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு வீட்டு ஜன்னல் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளது.

ரவுடிசத்தை தட்டிக்கேட்ட வீட்டு இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதோடு இளைஞர் அணிந்திருந்த சங்கிலியை குறித்த கும்பல் சூறையாடி சென்றுள்ளது.

குறித்த 20 பேர் கொண்ட கும்பலால் பலத்த தாக்குதலுக்கு இலக்காகிய மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் குற்றவியல் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளின் பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா இரண்டாம் இட...
15/05/2021

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளின் பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

1. அமெரிக்கா
பாதிப்பு – 3,36,64,013, உயிரிழப்பு – 5,99,314, குணமடைந்தோர் – 2,67,12,821

2. இந்தியா
பாதிப்பு – 2,43,72,243, உயிரிழப்பு – 2,66,229, குணமடைந்தோர் – 2,04,26,323

3. பிரேசில்
பாதிப்பு – 1,55,21,313, உயிரிழப்பு – 4,32,785, குணமடைந்தோர் – 1,40,28,355

4. பிரான்ஸ்
பாதிப்பு – 58,48,154, உயிரிழப்பு – 1,07,423, குணமடைந்தோர் – 50,42,584

5. துருக்கி
பாதிப்பு – 50,95,390, உயிரிழப்பு – 44,301, குணமடைந்தோர் – 48,94,024

ஆத்தமா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்6 ஆம் ஆண்டு நினைவு நாள்....Rest In Peace Sister ...
14/05/2021

ஆத்தமா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
6 ஆம் ஆண்டு நினைவு நாள்....

Rest In Peace Sister ...

Address

Urumpirai Jaffna
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Urumpirai Flash News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Jaffna

Show All