![யாழ்.ஆரிய குளம் துரித அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!யாழ். மாநகர முதல்வரின் “தூய கரங்கள் தூய நகரம்” எனும் திட்டத்தின் ஒரு...](https://img4.medioq.com/403/192/181562484031928.jpg)
24/07/2021
யாழ்.ஆரிய குளம் துரித அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்!
யாழ். மாநகர முதல்வரின் “தூய கரங்கள் தூய நகரம்” எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்.நகரில் அமைந்துள்ள நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியமுடைய யாழ்.ஆரிய குளம் துரித அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(23) நடைபெற்றது.
யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தியாகி அறக்கொடை நிலையத்தின் நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் மற்றும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் சுபநேரமான இன்று மதியம்-12.05 மணியளவில் பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்து மேற்படி திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இதேவேளை, ஆரியகுள அபிவிருத்தி தொடர்பான திட்ட வரைபு மேற்படி நிகழ்வில் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பப்பட்டதுடன், தற்போது சமூக வலைத் தளங்களிலும் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்வையிட்டு மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டுள்ள ஆரியகுளம் துரித அபிவிருத்தித் திட்டத்தைப் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.அத்துடன் குறித்த திட்டம் தடையின்றி வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.