17/02/2024
🚨விழிப்புணர்வுக்காக🚨
கல்வியில் தனியார் கல்லூரிகள் மிக அவசியமானது என்பது உண்மையானது
ஆனால் இலங்கையில் இயங்கும் பல தனியார் கல்வி நிலையங்களின் முதல் நோக்கமும், கடைசி இலக்கும் பணம் ஒன்று தான்.
நீங்கள் எந்த கல்லூரியில் கற்றாலும் பிரச்சினை இல்லை அந்தவகையில் மாணவனொருவர் தனது கல்விக்காக தனியார் கல்லூரியை தெரிவு செய்யும் போது பல்வேறு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் அந்த வகையில் கீழ் உள்ள விடயங்களை அவதானியுங்கள்👇
அதே போல இந்த கல்லூரி இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்ட கல்லூரியா? அப்போது தான் தரப்படும் Certificates Value ஆக இருக்கும்
அதாவது குறித்த தனியார் கல்லூரி அரசாங்கத்தால் மட்டுமின்றி சர்வதேச ரீதியான முன்னணி உயர் கல்வி நிறுவனங்களால்/கல்வி அமைப்புகளால் அங்கீகரிக்கபட்டு இருக்க வேண்டும்
அதே போல CERTIFICATE கற்கைகளை DIPLOMA என கூறி பகல் கொள்ளையில் ஈடுபடாமல் உண்மையாக sri lanka certificate qualification framework சான்றிதழ்களை வழங்குகின்றதா எனவும்
அதே போல மாணவர் குறித்த பல்கலைக்கழகமொன்றில் தான் தெரிவு செய்யும் பாட நெறிகளுக்கு சர்வதேச ரீதியான Accreditation இருப்பதை உறுதி செய்வது மிக முக்கியமானது
அதே போல குறித்த பாட நெறியின் Syllabus-Contents, பரீட்சை முறைகள் குறித்தும் கவனிக்க வேண்டும்
அதாவது துறை சார் Knowledge, Skill மற்றும் நம்பிக்கையை விதைக்கும் வகையில் பாட நெறி-பரீட்சை முறை உருவாக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
முக்கியக்கமாக New Normal சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி,Critical Thinking Cognitive Skill, Soft skill போன்றவற்றின் விருத்திக்கு தெரிவு செய்த பாட நெறிகளில் வழங்கப்பட்டுள்ள இடம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்
அதாவது Placement, Internship வாய்ப்புகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். விசேடமாக Career Guidance பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
குறித்த கல்லூரி பணியாற்றும் விரிவுரையாளர்களின் Expertise யும் அவதானிக்க வேண்டும்
இவ்வாறன அடிப்படை விடயங்கள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி பணம் கொடுத்து சான்றிதழ்களை பெற்று கொள்ள முயற்சித்தால் அதனால் எந்த பலனுமில்லை
அவை போலி சான்றிதழ்களுக்கு நிகரானதாகும் .உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ள மேற்படி சான்றிதழ்கள் எந்த வகையிலும் உதவாது
அதே போல வெளிநாடுகள் நோக்கிய Skill Migration க்கும் உதவாது. உயர் கல்விக்கும் உதவாது
யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தனியார் கல்வி நிலையங்களை முன்னிறுத்தி சமூக தளங்களில் முதலீடு , பொருளாதார அபிவிருத்தி, கல்வி வாய்ப்புகள் என பல கதைகள் எழுதப்படுகின்றன
சமூக தள கதைகளை தவிர்த்து ஆழமாக சிந்தித்து கல்விக்கான முதலீடுகளை செய்து முன் நோக்கி நகர்வதே ஆரோக்கியமானது