சங்குநாதம்

சங்குநாதம் பல்சுவை இணையம்

சங்குநாதம் எனும் பல்சுவை இணையத்தளமூடாக‌ உங்கள் அனைவருடனும் அளவளாவுவதில் மகிழ்ச்சி.
அன்றாடம் நிகழ்கின்ற உள்நாட்டு வெளிநாட்டு முக்கிய செய்திகளை; உண்மைத்தன்மைகளை உறுதிப்படுத்திக்கொண்டு, விரைவாக உங்களுக்கு வழங்குவதோடு, விளையாட்டு, தொழில்னுட்பம், அறிவியல், மருத்துவம், சினிமா, இலக்கியமென பல்வேறுபட்ட தகவல்களையும் ஆக்கங்களையும் தாங்கி தங்களது அறிவுப்பசிக்கு சிறிதளவாவ‌து தீனி போடலாம் எனும் நம்பிக்கையில் உங

்கள் விரல்களுக்குள் தவழ்கிறது சங்குநாதம்.மீழ்பிரசுரம் செய்யப்படும் பதிவுகள் அதன் மூலம் குறிப்பிடப்பட்டே சங்குநாதத்தில் பிரசுரமாகும் எனும் செய்தியோடு முக்கியமான மொழிபெயர்ப்புகளையும் உங்களுக்காக தந்து கொண்டிருக்கிறோம்.நமது முயற்சியும் சேவையும் நிலைபெற வாசகர்களாகிய உங்களது ஆதரவும், உற்சாகமும், ஆலோசனைகளையும் சங்குநாதம் எதிபார்த்து காத்திருக்கிறது.

23/11/2022

நாளை (நவம்பர் 24) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. புதிய விலைகள் வருமாறு:
✅வெள்ளை சீனி 1கிலோ - ரூ.229
✅ மா 1 கிலோ - ரூ.265
✅ பூண்டு 1 கிலோ - ரூ.495
✅ பெரிய வெங்காயம் 1 கிலோ - ரூ.255

13/11/2022

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு இரண்டாவது பிணைத் தொகையான அவுஸ்திரேலிய 200,000 டொலர்களை திரட்டுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை (SLC) போராடி வருவதாகவும், அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் பிணை கோரி மேல்முறையீடு செய்வதற்காக மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் சில நபர்களிடமிருந்து நன்கொடைகளை ஏற்கனவே கோரியுள்ளனர் மற்றும் கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க ஏற்கனவே பாரிய தொகையை கையளித்துள்ளார். அடுத்த வழக்கு விசாரணை ஜனவரி 12-ம் திகதி எடுத்துக் கொள்ளப்படும்.

-dailymirror-

10/11/2022

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் செயற்பாடுகள் ‘பொறுப்பற்ற தனிப்பட்ட செயல்’ என சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை அரசாங்கம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது

அதே இலங்கையில்,

1996 ஆம் ஆண்டு செல்வி வேலாயுதம்பிள்ளை ரஜனி என்கிற இளம் பெண் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு மலசல கூட குழியில் கொன்று போடப்பட்டு இருந்தார்

1996 ஆம் ஆண்டு சிவசோதி என்ற பெண் மீது இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவு புரிந்து படுகொலை செய்து இருந்தது

1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் 19 வயதான பாடசாலை மாணவி செல்வி கிருசாந்தி குமாரசாமி கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு,படுகொலை செய்யப்பட்டார்.

1996 ஆம் ஆண்டு இளம் குடும்ப பெண்(பெயர் வெளியிடப்படவில்லை) ஒருவர் அவரின் கணவருக்கு முன்பாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, செம்மணியில் புதைக்கப்பட்டார்

1997 ஆம் ஆண்டு அம்பாறை பொலிஸ் அதிகாரிகளால் 35 வயதான திருமதி கோணேஸ்வரி முருகேசபிள்ளை என்பவர் பாலியல் வல்லுறவுக்கு பின்னர் பிறப்புறுப்பில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்

1998 ஆம் ஆண்டு திருமதி பிரேமலதா என்கிற தமிழ் பெண் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு , உட்பட்டு கொலை செய்யப்பட்டார்

1998 ஆம் ஆண்டு கேட்கும்,பார்க்கும் சக்தியை இழந்த இளம் பெண் செல்வி செல்வராணி மீது பாலியல் வல்லுறவு புரிந்து, கோரமாக கொன்று இருந்தார்கள்

1998 ஆம் ஆண்டு வசந்தி எனும் குடும்பப்பெண் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார்

1998 ஆம் ஆண்டு செல்வி இராயேஸ்வரி எனும் பெண் இராணுவத்தின் காமவெறியாட்டத்துக்குப் பலியானாள்.

1999 ஆம் ஆண்டு கடற்படை அதிகாரிகளால் 29 வயதான திருமதி சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் என்பவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்

2005 ஆம் ஆண்டு இராணுவத்தால் 20 வயதான செல்வி இளையதம்பி தர்சினி என்னும் இளம் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்

2006 ஆம் ஆண்டு பிள்ளையான் தலைமையிலான ஓட்டுக்குழு கும்பல் கிழக்கு பல்கலை மாணவியான செல்வி பிரேமினி தனுஸ்கோடி என்பவரை கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்து இருந்தது

2009 ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியாளரான திருமதி இசைப்பிரியா என்கிற பெண் இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி என்ற சிறுமி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி அமைப்பை சேர்ந்தவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்

2013 ஆம் ஆண்டு மண்டைதீவில் நான்கு வயது குழந்தையான சுடரினியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ. பி. டி. பி அமைப்பை சேர்ந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார்

2013 ஆம் ஆண்டு கடற்படை அதிகாரிகளால் யாழ் கரைநகர் பாலவோடையில் சிறுமி ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை) பாலியல் வல்லுறுவுக்கு உடபடுத்தப்பட்டுக் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

1987 ஆம் ஆண்டு சுதாகர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். குழு ஒன்று பரத் அவர்களின் சகோதரி ரஞ்சிதா என்பவரை பாலியல் வல்லுறவுவிற்கு உட்படுத்தி கொன்று இருந்தது

1987 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் பாலியல் வல்லுறவுவிற்கு உட்படுத்தி கொன்று இருந்தார்கள்

உண்மையில் இலங்கையில் தமிழருக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தீவின் இனப் பிரச்சினையின் போது பரவலாக இடம்பெற்றன.

முதல் நிகழ்வாக 1958 கலவரத்தின் போது தமிழ்ப் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டமை பதியப்பட்டுள்ளது.

1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் படைத்துறையினரின் குவிக்கப்பட்ட காலத்தில் தமிழ்ப் பெண்கள் பலர் வன்முறைக்குட்படுத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்தன.

1977, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களின் போது தமிழ்ப் பெண்கள் பலர் சிங்களக் கும்பல்களால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர்.

ஆனால் கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கு தவிர்ந்த எந்த மேற்குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் நீதியை நிலைநாட்ட தவறி இருப்பதோடு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குறைந்த பட்ச விசாரணையை கூட நடத்தவில்லை

நன்றி - இனமொன்றின் குரல்..

🚨வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில்  இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன...
05/11/2022

🚨வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவரில்-

✅ யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23)

நாவலப்பிட்டியில் இருந்து யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையில் கல்வி கற்றுக்கற்ற முதலாம் வருட மாணவி , நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்

✅ சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32),

✅இன்பர்சிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்து கட்டுப்பாடை இழந்து விபத்துக்குள்ளான போது அதேதிசையில் பயணித்த மற்றொரு சொகுசு பேருந்து விபத்தை தடுக்க வீதியை விட்டு விலகி சென்று நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விபத்துக்குள்ளான அதி சொகுசு பேருந்துகளை மீட்கும் பணியை இராணுவத்தினர் இணைந்து பாரந்தூக்கியுடன் துணையுடன் அகற்றினர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

04/11/2022

🚨ஏறக்குறைய 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்றுடன் (31) நள்ளிரவுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றும் கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​52% மக்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

29/10/2022

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்க முடியாது என்ற சரத்து அடங்கிய 22 ஆம் அரசியலமைப்புத் திருத்தம் கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணைக்குப் பிறகு விரைவில் அரசிடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அரச உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதில் அனேகமாக இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தமிழ் எம்.பி.க்கள் எனவும் அவர்கள் கனடா மற்றும் நோர்வே பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(Lankadeepa)

நாங்கள் அப்பொழுது வைத்தியசாலையின் கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம்.  அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியட...
21/10/2022

நாங்கள் அப்பொழுது வைத்தியசாலையின் கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம்.

அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றார்கள்.

எங்களுடன் இருந்த வைத்தியர் கணேசரெத்தினம் அறையை விட்டு அப்போது தான் வெளியே சென்றார்

சமநேரத்தில் இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வைத்தியசாலைக்குள் வந்தார்கள்

வந்த இந்திய இராணுவத்தினர் கதிரியக்கப்பிரிவு, மேற்பார்வையாளர் அலுவலகம் உட்பட வைத்தியசாலை அலுவலகம் எங்கு நுழைந்து சுட கண்ணிமைக்கும் நேரத்தில் சுட தொடங்கினார்கள்

ஐயோ ஐயோ என்ற கூக்குரல்கள் முருகா! நல்லூரானே! அம்மாளாச்சி காப்பாற்று காப்பாற்று என எல்லா குல தெய்வங்களையும் கூறி சிலர் கதற தொடங்கினார்கள்

’வி ஆர் சிவிலியன்ஸ், வி ஆர் சிவிலியன்ஸ்’ என்ற சத்தங்களும் சிலவும் கேட்டன

’ஜயோ என்னைக் காப்பாற்றுங்கோ! என்னைக் காப்பாற்றுங்கோ!’ என்ற, ஒரு பெண்ணின் அவலக்குரல் ஓங்கி ஒலித்து பின்னர் தளர்ந்து அடங்கி விட்டது

என்னோடு பணிபுரிந்த ஊழியர்கள் பலரும் கண்மூடித்தனமாக தாக்குதல்களில் என் கண் முன்னால் இறந்து வீழந்து கொண்டு இருந்தார்கள்

ஏறத்தாழ ஒரு மணித்தியாலத்தின் பின் பெரிய அளவில் அழுகுரல் சத்தங்கள் கேட்கவில்லை

அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும்.

இன்னொரு இடத்தில் கைளை உயர்த்தியபடி ஒருவர் எழுந்து உரக்கக் கத்தினார்: “நாங்கள் அப்பாவிகள் இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு…அவர் உரத்துச் செல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் மீது ஒரு கைக்குண்டை எறிந்தார்கள்.

அவரும் அவருக்கு அருகில் கிடந்த சகோதரரும் இறந்துபோனார்கள்

நடு இரவில் ஒருவர் ’வீ ஆர் சிவிலியன்ஸ் பிளீஸ் டோன்ற் கில் அஸ்’ என சத்தமாகக் கத்தினார்

அதைத்தொடர்ந்து குரல் வந்த பகுதியை அதிரவைத்த குண்டு சத்தமும் தொடர்ந்து கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்ததையும் தொடர்ந்து அந்த மனிதரின் சத்தம் கேட்கவேயில்லை.

ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்த ஒருவருக்கு இருமல் இருந்தது. உரத்து இருமினால் இந்தியப் படையினரின் காதுகளில் விழுந்தவிடும். அதனால் இரவு முழுவதும் முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார்.

அவரது மெல்லிய முனகல்கூட ஒரு இந்தியப்படையினனது காதில் விழுந்துவிட்டது.

ஒரு கைக்குண்டை அவர் மீது வீசி எறிந்தான்.

அந்த மேற்பார்வையாளரும், அவரது அருகில் கிடந்தவர்களும் பலியானார்கள்.

இவ்வாறு கோரமான படுகொலைகளுக்கு மத்தியில் இரவு கடந்து போய் காலையாகிவிட்டது.

காலை 8.30 மணியளவில் வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம் அவர்கள் மூன்று தாதிகள் சகிதம் கைகளை மேலே தூக்கிக்கொண்டு

“நாங்கள் சரணடைகின்றோம் '

நாங்கள் ஒன்றுமே அறியாத வைத்தியர்களும் , தாதிகளும் தான்..என்று உரத்துக்கூறிபடி தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார்.

இந்தியப் படையினரை வைத்தியர் நெருங்கியதும், அவர் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தார்கள்

அந்த இடத்திலேயே வைத்தியர் சிவபாதசுந்தரம் துடிதுடித்து வீழ்ந்து இறந்தார்

இதேபோன்று இந்திய இராணுவம் வரும் அறையை விட்டு வெளியேறி சென்ற வைத்தியர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு புறம் பிணமாகக் கிடந்தார்.

நாங்கள் சிலர் அடுத்த நாள் காலை 11 மணி வரை 18 மணித்தியாலங்கள் இம்மி கூட அசையாமல் சடலங்கள் அடியில் படுத்துக் கிடந்து உயிர் பிழைத்தோம் என சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரு பொது மகன் கொடூர படு கொலை நிகழ்வுகளை நினைவு மீட்டினார்

இந்த கொடூர படுகொலையின் போது 3 வைத்திய அதிகாரிகள் , 2 தாதியர்கள், மேற்பார்வையாளர்கள் என 21 வைத்தியசாலை பணியாளர்களையும், 47 நோயாளர்களையும் இந்தியர்கள் கொன்று போட்டார்கள்

மறக்கமுடியாத இரத்தமும் கண்ணீரும் மரண ஓலமுமாகக் கழிந்த நிமிடங்கள் நாட்கள்

இன்றுவரை நீதி வழங்கப்படாத இப்போது நினைத்தாலும் மனதை உலுக்கும் கோர சம்பவம் இது .

பட்ஜெட் சர்ச்சைக்குள்ளாகி பொருளாதார நெருக்கடி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்...
20/10/2022

பட்ஜெட் சர்ச்சைக்குள்ளாகி பொருளாதார நெருக்கடி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்.

இவர் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நமது நிதித் திட்டங்களை வழங்குவதற்கும் நமது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும்" ஒரு வாரத்திற்குள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

20/10/2022

எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.

அதற்கு பதலீடாக 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும். - கல்வி இராஜாங்க அமைச்சர்.

18/10/2022

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது.

உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் மாதாந்த வருமான வரி தொடர்பான சமீபத்திய நிலவரத்தை விளக்கிய அமைச்சர், உத்தியோகபூர்வ வங்கி முறைக்கு வெளியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இந்த வரிச்சலுகைக்கு உரிமையில்லை என்று கூறினார்.

"நீங்கள் சம்பாதித்தவுடன் பணம் செலுத்தும் வரி முறை இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி நாட்டின் வரிக் கொள்கைகளுக்கு உட்பட்டவர். எனவே, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் அந்த நாடு தொடர்பான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டுப் பணத்துக்கு இனி ஒருபோதும் வரி விதிக்க மாட்டோம். அவ்வாறு செய்வது நெறிமுறை அல்ல. ஆனால், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ வங்கி முறை மூலம் வெளிநாட்டு நாணயங்களில் பணம் அனுப்பப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரிச் சலுகை கிடைக்கும். மற்றபடி சட்ட விரோதமான வேறு வழிகளுக்கு இந்த நாட்டுக்கு பணம் அனுப்பி வரிச்சலுகையை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் கண்டிப்பாக புதிய வருமான வரி விதிப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்”. என்றார்

மேலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் நபர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

09/10/2022

சொல்ல ஒண்டுமில்லை நீங்களே பாருங்கோ..

09/10/2022

🚨தொலைபேசி நிறுவனங்கள் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன. இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிட உள்ளன.

ஈழத்தின் மூத்த கவிஞர் அமரர் முருகையன் அவர்களின் ஏகபுத்திரர் கவிஞர் நாவலன் அவர்கள் அமரத்துவம் அடைந்தார்.
07/10/2022

ஈழத்தின் மூத்த கவிஞர் அமரர் முருகையன் அவர்களின் ஏகபுத்திரர் கவிஞர் நாவலன் அவர்கள் அமரத்துவம் அடைந்தார்.

02/10/2022
🚨சமுர்த்தி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு QR குறியீடு நடைமுறை.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பல்வேறு திட்டங்க...
02/10/2022

🚨சமுர்த்தி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு QR குறியீடு நடைமுறை.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பல்வேறு திட்டங்களின் கீழ் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கு தகுதியான பயனாளிகள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண அரசாங்கம் QR குறியீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமுர்த்தி, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் வாழ்வாதாரத் திட்டங்கள் போன்ற சமூக நலத்திட்டங்களை சீரமைக்க இதே முறை பின்பற்றப்பட உள்ளது.

சமூக நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள், நலன்புரி நன்மைகள் சபை அலுவலர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் கணினிமயமாக்கப்பட்டு, விண்ணப்பதாரருக்கு QR குறியீடு ஒதுக்கப்படும் என்றார்கள். இந்த செயல்முறை ஒக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும்.

கிராம அலுவலர் பிரிவு அளவில் கள அலுவலர்கள் மொபைல் போன் விண்ணப்பம் மூலம் தரவுகளை சேகரித்த பிறகு, விண்ணப்பதாரருக்கு QR குறியீடு அடங்கிய ஆவணம் வழங்கப்படும்.

டிசம்பர் 15 ஆம் திகதிக்குள், கல்வி, சுகாதாரம், பொருளாதார நிலை, சொத்துகள், வீட்டு நிலை மற்றும் குடும்ப மக்கள்தொகை ஆகிய அளவுகோல்களின் கீழ், நலன்புரி நன்மைகள் சபை வறுமைகோட்டு நிலைகளைக் கணக்கிடும்.

22 குறிகாட்டிகள் மற்றும் நலன்புரி நலன்களுக்கு தகுதியானவர்களின் பட்டியலையும், பிரதேச செயலக மட்டத்தில் வறுமை மதிப்பெண்ணையும் காட்சிப்படுத்தப்படும்.

பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை விசாரித்து தீர்மானத்தை பிரதேச செயலாளர் அல்லது சபைக்கு தெரிவிப்பதற்கு சபை மேன்முறையீட்டு குழுக்களை நியமிக்கும்.

இறுதியாக பயனாளிகளின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும், அது அங்கீகரிக்கப்பட்டு பட்டியல் பகிரங்கப்படுத்தப்படும்.

கிட்டத்தட்ட 3.9 மில்லியன் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

02/10/2022

🚨கொழும்பில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்யும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்.

இதையடுத்து ஐ.நா.மற்றும் மனித உரிமை ஆணைக்குழு என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

27/09/2022

🚨முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவிக்கு அழைப்பெடுத்து 10 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய சந்தேக நபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவையைச் சேர்ந்த குறித்த நபர் 30 தடவை அழைப்பு எடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இன்்று தியாக தீபத்்தின் இறுதி நாள்..
26/09/2022

இன்்று தியாக தீபத்்தின் இறுதி நாள்..

இன்று கிராமப்புற பாடசாலை மாணவர்களின் கைகளுக்கு கூட போதைவஸ்து பரவி இருக்கிறது அதிகார மையத்தில்  இருக்கும் தரப்புகளுக்கும்...
24/09/2022

இன்று கிராமப்புற பாடசாலை மாணவர்களின் கைகளுக்கு கூட போதைவஸ்து பரவி இருக்கிறது

அதிகார மையத்தில் இருக்கும் தரப்புகளுக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்புகளே போதை வியாபாரத்தின் மத்திய நிலையமாக இலங்கை இருப்பதற்கான காரணமாக இருக்கின்றது

அதே போன்று வடக்கு கிழக்கு மாகாணத்தில் போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபடும் பலரும் கடற்படை மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கின்றார்கள்

குறிப்பாக போதை பொருள் வியாபரிகளின் பங்காளிகளாக கடற்படை அதிகாரிகள் செயல்படுகின்றார்கள்

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த பொது போதைவஸ்து கடத்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய வணிகம் சில அமைச்சரவை அமைச்சர்களின் வாகனங்களின் மூலம் நடைபெற்ற பல சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றது.

ஆனால் இது பற்றி எந்தவொரு விசாரணைகளும் நடைபெறவில்லை.

மாறாக இது பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

பொலிஸ் அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டனர் .

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் போதைபொருள் வாணிபத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்கிற உண்மை கூட பேசு பொருளாக மட்டுமே இன்று வரை இருக்கின்றது .

குறிப்பாக பாராளமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் மேற்குறித்த தரவுகளை பாராளமன்றத்திலேயே முன்வைத்து இருக்கின்றார்கள் .

இதுமட்டுமில்லாது, இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களில் சிலர் கூட போதை பாவனை உள்ளவர்கள் என்கிற விடயத்தை முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அம்பலப்படுத்தி இருந்தார் .

மேற்குறித்த குற்றசாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட அதிகாரம் உள்ள எந்த தரப்பு மீதும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை .

அதே போன்று கிழக்கு மாகாணத்தில் முன்னாள் ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றிய பிள்ளையான் குழுவை சேர்ந்த இனியபாரதி என்பவன் கிழக்கு மாகாணத்தில் மிக பிரபலமான போதைப்பொருள் வியாபாரியாக இருக்கின்றான்.

மன்னாரிலிருந்து அம்பாறை திருக்கோயில் பகுதியை நோக்கி 164 kg போதைப்பொருட்களை அரசுக்கு சொந்தமான VIP வாகனத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் கடத்திய நிலையில் இனியபாரதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டு இருக்கின்றான் .

அதே போல வடக்கில் யாழ்ப்பாணத்தில் " அருண் சித்தார்த்" என்கிற போதைப்பொருள் கடத்தல் பேர்வழியை தமிழ் சிவில் சமூகத்தின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட இலங்கை இராணுவம் கடந்த சில வருடங்களாக முயற்சித்து வருகின்றது.

இந்த சம்பவங்கள் எல்லாம் அரச தலைமையின் அனுசரணையுடன் தான் நடைபெற்று வருகின்றது.

தென்னிலங்கையின் பிரபல போதைவஸ்து வியாபாரிகளாக இருந்த வெல சுதா , குடு நவ்பர், கஞ்சிப்பானை இம்ரான் போன்ற போதைவஸ்து வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ள இலங்கை அரசியல்வாதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரின் பெயர் விபரங்கள் அடங்கிய தகவல்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கைகளில் இருக்கின்ற போதும் அரசியல் தலையீடுகள் காரணமாக யார் மீதும் இன்று வரை விசாரணைகள் நடத்தப்படவில்லை.

குறிப்பாக பிரபல போதைவஸ்து வியாபாரியாக இருந்த மாக்கந்துர மதூஷ் என்பவருக்கும் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய சகாக்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் இருந்த தொடர்புகள் பற்றிய நீண்ட விபரங்களை தென்னிலங்கை ஊடகங்களே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

பிரபல போதைப்பொருள் வியாபாரிகளுடன் நெருக்கிய தொடர்பு மற்றும் கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட்ட குற்றசாட்டை எதிர்கொள்ளும் திரு அனுராத ஜயரத்ன அவர்கள் தான் தற்போது சிறைச்சாலை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்

இதுமட்டுமின்றி வெல சுதா போன்றோருக்கு ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய சகாவான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மகிந்த பலசூரியா அவர்களின் ஒத்துழைப்பு இருந்தது என்கிற விடயம் அம்பலப்படுத்த பட்ட போதும் நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை .

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அவர்கள் பிரதமராக இருந்த போது அவரின் செயலாளராக இருந்த ஒருவருக்கும் போதைவஸ்து கடத்தல் கும்பல் ஒருவருக்கும் இடையே இருந்த தொடர்புகள் பற்றிய சம்பவம் பதிவாகி இருந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை

அதே போன்ற நல்லாட்சி காலத்தில கல்கிஸ்ஸை கடற்கரையில் மூத்த அமைச்சர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார் . ஆனால், பொலிஸார் அவரை விடுத்து அவரது வாகன சாரதியை மட்டுமே நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக நிறுத்தினர் .

அதே காலப்பகுதியில் போதை வியாபாரத்துடன் தொடர்புபட்டு இருந்த பதுளையைச் சேர்ந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இலங்கை பொலிஸ் போதை தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கி இருந்தார்

எந்த விசாரணைகளும் நடைபெறவில்லை . இவ்வாறு தொடரும் இலங்கை போதை வணிகம் அதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய நெருக்கனமாக வலையமைப்பாக இருகின்றது

மேற்குறித்த அரசியல் அதிகார மையத்தை விசாரணைக்கு உட்படுத்தாமல் போதை வியாபாரத்தின் மத்திய நிலையமாக செயல்படும் இலங்கை தீவை காப்பாற்ற முடியாது
நன்றி-இனமொன்றின் குரல்.

இதென்னடா புதுசா இருக்கே..!
24/09/2022

இதென்னடா புதுசா இருக்கே..!

24/09/2022

இலங்கையில் நிறைவேற்றுதர முதலாம் தர் உத்தியோகத்தர் ஒருவரின் மொத்த சம்பளம் Rs. 92,000. அமெரிக்க டொலரில் சொல்வதானால் $ 255. ஆம் இது ஒரு அரச நிர்வாகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரின் மாதாந்த மொத்த சம்பளம். இதுவே ஒரு அபிவிருத்தி/முகாமைத்துவ உத்தியோகத்தரை பொறுத்தவரை கிட்டத்தட்ட 45,000 ரூபாய் என எடுத்துக்கொண்டால் சுமார் 120 டாலர். அதாவது நாளாந்த சம்பளம் 4 டாலர். ஒரு குடும்பத்தின் சராசரி அளவு 4 பேர் என எடுத்து கொண்டால் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு வெறும் 1 டாலர். உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலைத்திருக்கும் அபிவிருத்தி குறிகாட்டிகளின் அண்மைய (2017) அளவீடுகளின் படி 2.15 டாலருக்கும் குறைவான நாளாந்த வருமானம் உடைய ஒருவர் மிக மோசமான வறுமையின் (extreme poverty line) கீழ் பீடிக்கப்பட்டுள்ளார். இந்த அளவீடானது முன்னர் 1.75 டாலராக இருந்தது. மேற்படி தரவுகளின் படி குடும்பத்தில் ஒருவர் மட்டுமே உழைக்கும், வேறு வருமான மூலங்கள் ஏதுமற்ற அரச ஊழியர்களில் 95% க்கும் அதிகமானோர் மிக மோசமான வறுமை கோட்டின் (under extreme poverty line) கீழ் உள்ளனர். இவர்களுக்கே இந்த நிலை என்றால் தனியார் துறையில் குறிப்பாக ஆடை உற்பத்தி, தோட்ட தொழிலில் ஈடுபடும் மக்களின் நிலை என்னவென்று விளக்க வார்த்தைகள் தேவை இல்லை. இது ஒருபுறம் என்றால் மறுபுறம் உணவு பொருளுக்கான பணவீக்கம் சென்ற மாதம் 85% ஆக உயர்ந்துள்ளது. அதாவது மக்களின் கொள்வனவு சக்தி சரிபாதியாகிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் தமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக குற்றசெயலில் ஈடுபடும் நிலையும் தோன்றலாம்,அது இலங்கை வாழ்வதற்கு பாதுகாப்பற்ற, பிரயாணம் செய்ய பாதுகாப்பு இல்லாத நாடு என்ற இழிபெயரை சுமக்கவும் செய்யலாம், இதையெல்லாம் சீர் செய்ய வேண்டியவர்கள் இன்னும் தாம் சார்ந்தோரை திருப்திபடுத்தவௌம் தமது இருப்பை உறுதிபடுத்தவும் மிக மும்முரமாண முயற்சியில் உள்ளனர்,பாவம் இந்த பாவப்பட்ட மக்கள்.

🚨மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல ஹைலண்ட் தொழிற்சாலையில் 2019 முதல் 2021 வரையிலான மூன்று வருட காலப்பகுதியில் 132,...
22/09/2022

🚨மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல ஹைலண்ட் தொழிற்சாலையில் 2019 முதல் 2021 வரையிலான மூன்று வருட காலப்பகுதியில் 132,000 லீற்றருக்கும் அதிகமான டீசல் மோசடியான முறையில் வேறொரு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்படும் விசாரணையில், இரண்டு அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்வதற்கும் மற்றுமொருவரை பொலனறுவைக்கு இடமாற்றம் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்தார்.

மூன்று அதிகாரிகளைத் தவிர வேறு யாராவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரவுள்ளதாக மில்கோ தலைவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்தக் குற்றச்செயல் நீண்ட காலமாக இரகசியமாகவே இருந்தது என தலைவர் தெரிவித்தார்.

இந்த மோசடியை மேற்கொள்வதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சில அதிகாரிகளின் உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக மில்கோ தலைவர் தெரிவித்தார்.

22/09/2022

*⭕ போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு பதிவு

*போதைப்பொருள் பழக்கம் பொதுவாக இளைஞர்கள் மத்தியிலேயே காணப்படுவதால் , அவர்கள் அதிகமான நேரங்களை கழிக்கும் பாடசாலைகள் மேலதிக வகுப்புக்கள் , பல்கலைக்கழகங்கள் , மற்றும் கல்வி நிறுவனங்களில் இப்போதைப்போருளை கட்டுப்படுத்தும் , மற்றும் கண்காணிக்கும் ஓர் பொறிமுறையாக இப்பதிவு இடப்படுகிறது . இவை வெறும் அனுமானங்கள் அல்ல நடந்த பல சம்பவங்களின் மூலம் தொகுக்கப்பட்டவை எனவே தாம் சார்ந்த நிறுவனங்களில் அதிபர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் இவற்றை கடைப்பிடிக்க முயற்சியுங்கள் . இது நமது சமூகத்தின் எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .*

*♦️ மாணவர்களின் கண்கள் சிவப்பாக அல்லது அரைவாசி மூடிய நிலையில் இருக்கின்றதா என அவதானியுங்கள்*

*♦️காரணமின்றி புன்னகைக்கும் தேவையில்லாமல் பேசும் , அதிகமாக தூங்கும் , மற்றும் நடுக்கம் , அதிக வியர்வை ஏற்படும் மாணவர்களை சந்தேகியுங்கள்.*

*♦️ வகுப்பறையின் குப்பைக்கூடையை எதேச்சையாக ( random பரிசோதியுங்கள் அதனுள் பேனா குளிசை கவர்கள் பற்ற வைத்த தாள் சுருட்டிய பேப்பர்கள் கச்சான் தகடுகள் , கண்ணாடி குழாய்கள் தலை கழற்றப்பட்ட lighter போன்றன காணப்பட்டால் உஷாராகுங்கள்.*

*♦️ Interval நேரம் , பாடசாலையின் எல்லைகளை ( கதவுகள் , சுவர்கள் மேலால் அவதானியுங்கள் . அதனூடாக இவ்வியாபாரம் அதிகமாக இடம்பெறுகிறது இந்நேரம் வெளி யாரும் உள்ளே உலாவுகிறார்களா என அவதானியுங்கள்.*
*ஏனெனில் , interval நேரம் யாரும் அறியாமல் போதை பாவிப்பது மாணவர்களுக்கும் இலகு .*

*♦️கென்டீன் சிற்றூழியர்களும் அடிக்கடி அவதானியுங்கள் , காரணம் இதுவே மிக இலகுவாக விற்கக்கூடிய இடம் .*

*♦️மிக நேரத்தோடு வரும் மாணவர்களையும் , மிகப்பிந்தி செல்லும் மாணவர்களையும் , அவர்களின் செயற்பாடுகளையும் அவதானியுங்கள்.*

*♦️ அனுமதி இல்லாத , interval நேர ஐஸ்பழம் , கடலை , இனிப்புப்பண்டம் போன்ற வியாபாரங்களை தடை செய்யுங்கள் . டொபி , இனிப்பு வகைகள் போன்றவை புது வகையான brand எனின் , அல்லது brand பெயர்கள் இல்லை எனின் , அவதானியுங்கள் .*

*♦️மாணவர்களின் பெருவிரல் , சுட்டுவிரலை அவதானியுங்கள் . வித்தியாசமான மணம் , நிறம் உள்ளதா என பாருங்கள் . பற்கள் ஒரு வகையான பழுப்பு நிறத்தில் ( m**h mouth ) உள்ளதா எனவும் உதடுகளின் உட்பகுதி சிதைவடைந்துள்ளதா மேலும் சில வேளை வாயிலிருந்து உமிழ்நீர் வழிகின்றதா எனவும் பாருங்கள் .*

*♦️பாடசாலை தொடங்கும் நேரமும் , விடும் நேரமும் வெளியில் வித்தியாசமானவர்கள் யாரும் நடமாடுகின்றனரா என அவதானியுங்கள் .*

*♦️ மாணவர்களின் புத்தகம் , கொப்பி , கொம்பாஸ் , பேர்ஸ் ஆகியவற்றை random ஆக திறந்து பாருங்கள் ஏதும் வெள்ளை நிற பவுடர்கள் பக்கங்களுக்கிடையில் உள்ளனவா என்று . இவ்வாறான போதைப்பொருளே இப்போது அதிகமும் பாவிக்க இலகுவும் ஆகும் .*

*♦️மன்னிக்கவும் , சில staff , மற்றும் சிற்றூழியர்கள் மீதும் அவதானமாக இருங்கள் . " இவர் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் செய்ய மாட்டார் " , " இது பெண் பிள்ளை செய்யாது " என அலட்சியமாயிராதீர்கள்*

*♦️தேவைக்கு மேலதிகமாக பணம் வைத்திருக்கும் மாணவர்கள் மீது பார்வையை செலுத்துங்கள் . அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ளுங்கள் .*

*♦️ அடிக்கடி நீர் அருந்தும் , தாகம் ஏற்படும் மாணவர்களை அவதானியுங்கள்.*

*♦️ கல்வியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்ட மாணவர்களை சந்தேகியுங்கள்*

*♦️சொல்லாமல் இருக்க முடியாது பாடசாலைக்கு அடிக்கடி வந்து போகும் பெற்றோர்களின் மீதும் விழிப்பாயிருங்கள்*

*♦️போதைப்பொருளின் தீங்குகளை மாணவர்களுக்கு அறிவுறுத்துங்கள் பிடிபட்டால் தமது வாழ்க்கைக்கு ஏற்படும் நிரந்தர பாதிப்புகளை பற்றியும் எடுத்துரையுங்கள் , மாணவர்களுக்கான ஆன்மீக வழிகாட்டல்களை ஊக்குவியுங்கள்*

*♦️தனிமையிலேயே திரியும் மாணவர்களையும் , அடிக்கடி மலசல கூடம் செல்லும் மாணவர்களையும் அவதானியுங்கள் .*

*♦️ சந்தேகத்துக்கிடமான போதை பொருட்கள் ஏதும் கண்டெடுக்கப்பட்டால் இது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நாடி அது போதைவஸ்து என ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்பே தகவலை வெளியிடுங்கள் .*

*♦️இவ்வளவு காலமாக # மாணவர்கள் # சப்பாத்து # அணிந்தார்களா , # முடி # வெட்டினார்களா , # நகம் # வெட்டினார்களா என பார்த்ததெல்லாம் சற்று ஒதுக்கிவிட்டு இந்த பயங்கர சீரழிவை இல்லாதொழிக்க மேற்கூறியவற்றின் மீது அவதானம் செலுத்துங்கள் .*

*♦️இதன் அர்த்தம் சகலரின் மீதும் சந்தேகியுங்கள் என்பதல்ல . நியாயமான சந்தேகம் தவறல்ல . இக்கொடிய தீங்கிலிருந்து சமூகத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் முன்வாருங்கள் .*

*எதிர்காலம் ஆபத்தானது*

20/09/2022

🚨நாளை முதல் பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதி.

கொவிட் நிலைமை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கான அனுமதி கிடைக்காத நிலையில் நாளை (20ம் திகதி) முதல், கூட்டத்தொடர் இல்லாத நாட்களில், மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முன்பு போலவே நாடாளுமன்றத்திற்கு வர முன் அனுமதி பெற வேண்டும்.

இந்த வாய்ப்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்கள், உயர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது குமார்  சங்கக்காரவின் உருவச்சிலை ❤️  Sangakkara SriLankaCricket😍  சமூக வ...
20/09/2022

யாழ் பல்கலைக் கழகத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது குமார் சங்கக்காரவின் உருவச்சிலை ❤️

Sangakkara SriLankaCricket😍


சமூக வலைத்தளங்களில் பல விதமான கருத்துக்கள் உலாவருகின்றன. சங்கக்காராவினை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அண்ணன் யாரும் உரிமை கோரும் அதிகாரம் அண்ணனை தவிர யாருக்கும் இல்லை. பல சாதனைகளுக்கு சொந்தக்காரன். சில விசமிகளால் ஓரங்கட்டப்பட்டவர். அண்ணனின் வரலாறு தெரியாதவர்கள் என்ற முகநூலில் மூலம் அறிந்து கொள்ளலாம். சாதிக்கப்பிறந்தவன் பல தடைகளையும் தாண்டி .....

20/09/2022

🚨மலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பல பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலை அதிகரிக்கப்பட்டது. தற்போது பல பொருட்களின் விலை குறைந்துள்ளதால் பிஸ்கட் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பிஸ்கட் விலை அதிகரித்துள்ளதால், முக்கிய பிஸ்கட் நிறுவனங்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, பிஸ்கட் வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தன. அவ்வாறு செய்யாவிட்டால் தங்களது நிறுவனங்கள் மூடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து செல்வங்களுக்கும்  #வாழ்த்துக்கள் 💐💐💐💐💐கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 பிள்ளை செல்வங்களுக்கு ஒரே நேரத்தி...
19/09/2022

அனைத்து செல்வங்களுக்கும் #வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 29 பிள்ளை செல்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
உலகப் பரப்பில் உன்னதப்பதிவு
பண்பாட்டைப் பேணும் வகையில்
பூப்புனித நன்நீராட்டுவிழா (மஞ்சள் நீராட்டு )மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட மகிழ்வான தருணம்
விசேடமான பந்தல் அமைப்பில்
சகல சம்பிரதாயங்கள் எதுவும் தவறவிடாது
இருபத்தொன்பது(29 )மங்கையருக்கு
மங்கைப் பருவ மஞ்சள் நீராட்டு நிகழ்வு
பலரும் இரசிக்கவும் பாராட்டவும் வாழ்த்தவும் சிறப்பாக நடைபெற்றது
அனைத்து அன்புள்ள கண்களுக்கும்
உள்ளங்களுக்கும் பேரன்பான பெருநன்றியும் பாராட்டும்


மஞ்சள் நீராடி மங்களம் தேடி வரும்..
கொஞ்சும் குல மகளாய் 'ஆனந்த செல்விகளே'..!

தீராத விளையாட்டையும் - தினம்

திகட்டாத சிறு குறும்பையும் புறந்தள்ளி..

பாரதி கண்ட புதுமைப்பெண்களாய்....
பால்நிலா தாங்கும் வான்முகிலாய்..

தெளிந்த வெண்பனியாய், திசைபல வென்று..
திரவியம் பலதேடி, தெள்ளு தமிழாய்..

மலர்கோடி சூடி மணிமகுடம் தாங்கி..
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் நாங்களும்..!!

Address

Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when சங்குநாதம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சங்குநாதம்:

Videos

Share