29/11/2024
சிவகௌரி சமூக அமைப்புகளும் இளையோர் அமைப்பினரும் இணைந்து கடந்த நாட்களாக(27,28) பெய்த தொடர் கனமழை வெள்ளம் காரணமாக காரைநகர் வடகிழக்கு(J/47) மற்றும் காரை கிழக்கு(J/42) பிரதேசங்களில் அப்பிரதேச கிராம அலுவலகரினால் முன்மொழியப்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு இளையோர் அமைப்பு வளாகத்தில் உணவு வகைகளினை சமைத்து மதியம் மற்றும் இரவு வேளைகளில் வழங்கி வருகின்றோம்.
மேற்படி பணியினை சிறப்புற நாடாத்துவதற்கு தாமாகவே முன்வந்து நிதியுதவி மற்றும் பொருளுதவியினை தந்துதவிய புலம்பெயர் உறவுகள் மற்றும் எமது கிராம நலன்விரும்பிகள் அனைவருக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து மகிழ்கின்றோம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤️