02/02/2023
பவளம் காணும் எம் தாய்!!
பவளத்தின் நிறைவையொட்டி நேற்று 02.02.2023 (வியாழக்கிழமை) வெகு விமர்சையாக பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று முடிந்தன.
பாதிபிய்யா விழாக்கோலம் காணும் இந்நாளை காண அதன் குழந்தைகள் அணி திரண்டிருந்தனர். இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் M.Z.M நபீல் (பேராதனை பல்கலைகழகம் ) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு மாவனல்லை கல்விப்பணிமனையிருந்து கல்விப் பணிப்பாளர் உட்பட ஆசிரிய ஆலோசகர் திருமதி முபீதா ஆசிரியர் மற்றும் அதிகாரிகளும்,அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்,SDEC, OBA, OGA, ஊரிளுள்ள சங்கங்களின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஊரவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காலையில் ஆரம்ப நிகழ்வாக Band அணிவகுப்புடன் ஓலான சந்தியில் இருந்து பாடசாலை வரை அதிதிகளையும் வருகை தந்திருப்போரும் மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.மதியம் 1.30 மணியளவில் முதலாம் கட்ட நிகழ்வுகள் நிறைவுற்றன.
இரண்டாம் கட்ட நிழ்வாக மாலை 3.00 மணியளவில் பழைய மாணவிகளின் கலை நிகழ்சிகள் இடம்பெற்றன. அந்நிகழ்ச்சி நிரல் நல்ல சுவாரசியமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்தன.
இரவில் பழைய மாணவர்களுக்கான கலை நிகழ்சிகள் இடம்பெற்றன. அதில் நாடகம், பாடல்கள் மற்றும் சாகசங்கள் அரங்கேற்றப்பட்டு செவிகளுக்கும் கண்களுக்கும் அருவிருந்தாய் அமைந்தன.
பவளவிழாவின் ஆரம்ப நாளான இன்றைய நிகழ்வுகளை சிறப்புற நடாத்திய பவள விழா நிறைவேற்றுக்குழு அதன் இணைப்பாளர் திருவாளர் ஹிப்பதுல்லாஹ் பாருக் ஆகியோருக்கு நன்றிகளையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.....
'பவள விழாவை
வாழ்த்தி வரவேற்போம்;
பாதிபிய்யா வளர உழைத்திட ஒன்றுபடுவோம்'
Badhibiyan Media Unit