மலைநாடு

மலைநாடு Malainaadu (மலைநாடு) page and www.malainaadu.lk are shares daily political, cultural and public

மலைநாடு (https://www.facebook.com/Malainaadu/) முகநூல் ஊடாக மலையக மக்களின் அரசியல், கலாசார, பண்பாட்டு, சமூக பொருளாதார தகவல்களை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

ஐதேக நாடாளுமன்றக்குழு தலைவராக ஜீவன் நியமனம்!ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக நுவரெலியா மாவட்ட நாடாளும...
06/12/2024

ஐதேக நாடாளுமன்றக்குழு தலைவராக ஜீவன் நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலின்போது ஐதேகவின் யானை சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் இதொகா போட்டியிட்டது. 46 ஆயிரத்து 438 வாக்குகளைப் பெற்று ஜீவன் தொண்டமான் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவனை வென்ற சிறீதரன்!- அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியாகத் தெரிவுஅரசமைப்புக் கவுன்ஸிலுக்கு ...
06/12/2024

ஜீவனை வென்ற சிறீதரன்!

- அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியாகத் தெரிவு

அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமானை 11 இற்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார்.

எதிர்க்கட்சித் தரப்பில் காஸ் சிலிண்ட.ர் சார்பில் தெரிவான தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும், ரோஹித அபேகுணவர்தன எம்.பியும் இந்தத் தேர்வில் பங்குபற்றாத நிலையில் சிறீதரன் வெற்றி பெற்றிருக்கின்றார்.

இதேசமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற விவகாரக் குழுவுக்குப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புக்கும் தம்மைத் தெரிவு செய்ய சிறீதரன் விருப்பம் தெரிவித்த போதிலும், அந்தப் பொறுப்பைச் சாணக்கியனுக்கு வழங்குவதென தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாக அறியவந்தது.

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூல...
06/12/2024

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் இதர கடன் சேவைக்கான அனுமதியை பெறும் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால கணக்கறிக்கை மீது நேற்று வியாழக்கிழமை மற்றும் இன்று வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதுடன், இன்று மாலை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் சபையில் இருந்த போதிலும் வாக்கெடுப்பை எவரும் கோரவில்லை என்பதால் இடைக்கால கணக்கறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இடைக்கால கணக்கு அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு கடந்த நவம்பர் 25ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2600 பில்லியன் ரூபா முதல் நான்கு மாதங்களுக்கு அரச செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கையின் பிரகாரம் முதல் நான்கு மாதங்களுக்கான அரசின் வருவாய் 1600 பில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை கடன் வரம்பு 1000 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் மீண்டெழும் செலவீனங்களுக்காக 1000 பில்லியன் ரூபாவும், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, வட்டிச் செலுத்தல் மற்றும் இதர கடன் சேவைகளுக்கு 1175 பில்லியன் ரூபாவும், மூலதன செலவுக்காக 425 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோபா குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு: அரசு உறுதி!அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் ( கோபா) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்...
06/12/2024

கோபா குழுவின் தலைமைப் பதவி எதிரணிக்கு: அரசு உறுதி!

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் ( கோபா) தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் இன்று (6) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். நீங்கள் அதை கேட்கவில்லை. அதேபோன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு தேவை என்று கூறினோம். முதல் காலகட்டத்தில், முந்தைய அரசாங்கத்தின் விடயங்களை பரிசீலிக்க வேண்டும். அந்த அரசின் அமைச்சர் ஒருவர் கோப் குழுவின் தலைவராக வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மலையக மக்களின்‌ பிரச்சினைக்கு நிச்சயம்‌ நிரந்தர தீர்வு வழங்கப்படும்‌- பதுளை மாவட்ட பா.உ அம்பிகாவின் கன்னி உரைமலையக மக்கள...
04/12/2024

மலையக மக்களின்‌ பிரச்சினைக்கு நிச்சயம்‌ நிரந்தர தீர்வு வழங்கப்படும்‌
- பதுளை மாவட்ட பா.உ அம்பிகாவின் கன்னி உரை

மலையக மக்களின்‌ வீடு, காணி மற்றும்‌ சம்பளப்‌ பிரச்சினைக்கு தேசிய மக்கள்‌ சக்தி ஆட்சியில்‌ நிச்சயம்‌ நிரந்தர தீர்வு வழங்கப்படும்‌ என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்‌ அம்பிகா சாமுவேல்‌ தெரிவித்தார்‌.

நாடாளுமன்றத்தில்‌ இன்று (04) உரையாற்றுகையிலேயே அவர்‌ இவ்வாறு கூறினார்‌.

மலையக மக்களின்‌ பிரதிநிதியாக தன்னை நாடாளுமன்றம்‌ அனுப்பிவைத்த மக்களுக்கும்‌, தனக்கு வாய்ப்பளித்த தேசிய மக்கள்‌ சக்திக்கும்‌ அவர்‌ நன்றிகளைத்‌ தெரிவித்தார்‌.

மலையக பெருந்தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ளனர்‌ எனவும்‌, நிரந்தர தீர்வுகளுக்கு பதிலாக அவர்களுக்கு தற்காலிக தீர்வுகளே வழங்கப்பட்டுள்ளன எனவும்‌, நிரந்தர தீர்வுகளை காண்பதே தனது நோக்கம்‌ எனவும்‌ தனது 1ஆவது நாடாளுமன்ற உரையில்‌ அம்பிகா
விவரித்தார்‌.

மலையகத்‌ தமிழர்கள்‌ என்ற அடையாளத்துடன்‌ இலங்கையர்‌ என்ற ரீதியில்‌ எமது மக்கள்‌ தேசிய நீரோட்டத்தில்‌ இணைக்கப்பட்டு கல்வி ,விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும்‌ எமது சமூகமும்‌ பிரகாசிக்க வேண்டும்‌. இதற்குரிய வாய்ப்பை தேசிய மக்கள்‌ சக்தி பெற்றுக்கொடுக்கும்‌.

அதேபோல கல்வி, சுகாதாரம்‌ போன்ற பிரச்சனைகளுக்கும்‌ உரிய தீர்வு வழங்கப்படும்‌ எனவும்‌ அம்பிகா மேலும்‌ குறிப்பிட்டுள்ளார்‌. ஹட்டன்‌ பிரகடனத்தில்‌ சில தீர்வு முன்மொழிவுகள்‌ முன்வைக்கப்பட்டுள்ளன எனவும்‌ அம்பிகா சுட்டிக்காட்டினார்‌.

அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக தெரிவு!!பெண் பாராளுமன்ற உறுப்பினர்க...
04/12/2024

அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக தெரிவு!!

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது.

இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.

அத்துடன், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே பிரதி இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி விஜேரத்ன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார்.

மேலும் மற்றுமொரு பிரதி இணைத்தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும் என்றார். எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

அத்துடன், ஒன்றியத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு துணைத் தலைவர்கள் தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவின் பரிந்துரைக்கு அமைய பாலின அடிப்படையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான தினத்தை எதிர்வரும் 06ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சமன்லி குணசிங்க, சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, தீப்தி வாசலகே, துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, லக்மாலி ஹேமச்சந்திர, கீதா ஹேரத், ஹிருனி விஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, சாகரிக்கா அதாவுத, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, நிலாந்தி கொட்டஹச்சி, ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அர்ச்சுனா எம்.பி மீது தாக்குதல் : நாடாளுமன்றில் சர்ச்சை👉👉👉முழுமையாக வாசிக்க ;- https://malainaadu.lk/Attack-on-Archuna-M...
03/12/2024

அர்ச்சுனா எம்.பி மீது தாக்குதல் : நாடாளுமன்றில் சர்ச்சை

👉👉👉முழுமையாக வாசிக்க ;- https://malainaadu.lk/Attack-on-Archuna-MP:-Controversy-in-Parliament

👨‍💻எங்கள் குழுவில்
இணைய ;- https://chat.whatsapp.com/1bhq2JxP4aFH1Luo02vyM2
👋 முகநூல் பக்கத்தில் எம்மை பின்தொடர ;- https://web.facebook.com/Malainaadu
👮‍♀️ தளத்தில் எங்களை பின்தொடர ;- https://twitter.com/malainaadu
#மலைநாடு #மலையகம்

நாடாளுமன்றத் தேர்தல் 2024 : எவ்வளவு வீதம் வாக்குப் பதிவானது?👉👉👉முழுமையாக வாசிக்க ;- https://malainaadu.lk/1297-people-fr...
30/11/2024

நாடாளுமன்றத் தேர்தல் 2024 : எவ்வளவு வீதம் வாக்குப் பதிவானது?

👉👉👉முழுமையாக வாசிக்க ;- https://malainaadu.lk/1297-people-from-344-families-affected-in-Nuwara-Eliya-district

👨‍💻எங்கள் குழுவில்
இணைய ;- https://chat.whatsapp.com/1bhq2JxP4aFH1Luo02vyM2
👋 முகநூல் பக்கத்தில் எம்மை பின்தொடர ;- https://web.facebook.com/Malainaadu
👮‍♀️ தளத்தில் எங்களை பின்தொடர ;- https://twitter.com/malainaadu
#மலைநாடு #மலையகம்

தலைநகர் கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் காலத்தின் அவசியம்!- இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் - நடந்து முடிந்த நாடாளும...
20/11/2024

தலைநகர் கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் காலத்தின் அவசியம்!

- இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் -

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மலையக மாவட்டங்களில் இருந்தும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவாகியுள்ள நிலையில், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கபட்டுள்ளது. தலைநகரில் தமிழ் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியது காலத்தின் அவசியம் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன், தலைநகர் கொழும்பில் மூன்று தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வாய்ப்பிருந்தும் ஒருவர்கூட தெரிவாகவில்லை.

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் என்பது காலத்தில் கட்டாயமாகும். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொழும்பில் வாழ்கின்றனர். அவர்களுக்கு கட்டாயம் தமிழ் பிரதிநிதி ஒருவர் இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தலைநகரில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில், இம்முறை இப்பிரதிநிதித்துவத்தை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இழந்துள்ளனர்.

இ.தொ.கா மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இடையில் கொள்கை ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும், தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதில் இ.தொ.கா உட்பட ஏனைய தமிழ் கட்சிகளின் ஒருமித்த நிலையிலேயே உள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலதிகமாக 2 மேற்பட்ட ஆசனங்களை பெறக்கூடிய நிலையில், தேர்தலில் வெற்றிப் பெற போவதில்லை என அறிந்தும் பல்வேறு தமிழ் சுயேட்சை குழுக்கள் தமிழ் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டன. இதனூடாக கடந்த காலங்களில் மக்களுக்காக பல்வேறு சேவைவைகளை முன்னெடுத்த மருதப்பாண்டி ராமேஸ்வரன் சொற்ப சில நூறு வாக்கு குறைவால் பாராளுமன்றம் தெரிவு செய்வதற்கு தடையாக அமைந்தது.
அதனை தொடர்ந்து அதற்கு அடுத்தப்படியாக இருக்கும் சக்திவேலுக்கும் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது. இவர்கள் இருவரைவிட குறைந்த வாக்குகளை பெற்ற சிலர் இன்று பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் ஏனைய கட்சிகளை விட ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் மனோ கணேசன் அதிக தமிழ் வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அவர் கடந்த காலங்களில் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுத்த சேவைகள்.அதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமிழர் ஒருவருக்கு தேசிய பட்டியல் வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. கொழும்பில் தமிழ் வேட்பாளர்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று, கடந்த காலங்களில் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு மனோகணேசனுக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கி கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்க வேண்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

www.malainaadu.lk

🛑 தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது கண்டி🛑 இரத்தினபுரி மாவட்டத்தில் வரலாற்று சாதனை🛑  மலையகத்தில் முதல் தமிழ்...
17/11/2024

🛑 தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது கண்டி

🛑 இரத்தினபுரி மாவட்டத்தில் வரலாற்று சாதனை

🛑 மலையகத்தில் முதல் தமிழ் பெண் அமைச்சர்
தெரிவாகும் சாத்தியம்

2024 பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டிருந்தாலும், கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது வெறும் எம்.பி. பதவி மட்டுமல்ல, அது கண்டி தமிழர்களின் அரசியல் அடையாளம். மக்களின் அபிலாஷைகள் அதிஉயர் சபையில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வழங்கும் அங்கீகாரம். உரிமையுடனும், உணர்வுடனும் சம்பந்தப்பட்ட உன்னதமான அரசியல் உறவு அது. எதிரணிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள்மீது அதிருப்தி இருந்திருக்கும் எனில், ஆளுங்கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரையாவது வெற்றிபெற வைக்கும் வகையில் தமது வாக்குரிமையை தமிழ் மக்கள் பயன்படுத்தாமை கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் முதன்முதலில் 1947 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை, இந்திய காங்கிரஸ் போட்டியிட்டது.

நாவலப்பிட்டிய தொகுதியில் களமிறங்கிய மலையக காந்தி என போற்றப்படும் கே. இராஜலிங்கம் 7,933 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இதுவே கண்டி மண்ணுக்குரிய முதலாவது தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம். (அப்போது தொகுதிவாரி முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது.) இராமானுஜம் என்பவரும் அக்காலப்பகுதியில் கண்டி மண்ணை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்தார்.

1948 இல் மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டதால் 1952 முதல் 1994 ஆம் ஆண்டுவரை கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கவில்லை.

1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 9 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் எஸ். இராஜரட்னம் 38, 343 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவானார்.
கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் சென்ற மூன்றாவது தமிழர் இவர். விகிதாசார தேர்தல் முறையின்கீழ் கண்டி மாவட்டத்திலிருந்து சபைக்கு சென்ற முதல் தமிழர் இவர்.

1947 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 4 தசாப்தங்களாக தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமின்றி கண்டி தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றிருந்தாலும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு அது நீடிக்கவில்லை.

அதன்பின்னர் நடைபெற்ற 2000, 2001, 2004 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களின்போதும் கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை.

இவ்வாறு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஆயுள் ஒரு தவணைக்கு மாத்திரம் மட்டுப்படுவதும், அதன்பிறகு பல ஆண்டுகள் இல்லாமல்போவதுமான அரசியல் நிலைமையால் அபிவிருத்தி மற்றும் உரிமைசார் விடயங்களில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம். ( அந்த காலப்பகுதி அரசியல் நிலைவரம் அவ்வாறே காணப்பட்டது.)

இந்நிலையில் 2015 பொதுத்தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பட்டதாரி ஆசிரியரான வேலுகுமார் வெற்றிபெற்றார்.

2020 பொதுத்தேர்தலிலும் கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது. தமிழ் பேசும் சமூகமாக முஸ்லிம் உறவுகளும் இதற்கு வழங்கிய பங்களிப்பு மகத்தானது. வேலுகுமார் மீண்டும் சபைக்கு சென்றார்.

இம்முறை கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறவில்லை. தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றிபெறவில்லை.

அதேவேளை, மலையக வரலாற்றில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து, மக்கள் பிரதிநிதித்துவம்மூலம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறாத நிலையில், இம்முறை தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட ஆசிரியர் சுந்தரலிங்கம் பிரதீப் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 711 விருப்பு வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவாகியுள்ளார்.

மலையக அரசியல் வரலாற்றில் 1947 முதல் 2020 ஆம் ஆண்டுவரை மலையகத்திலிருந்து தமிழ் பெண் எம்.பியொருவர் தெரிவாகவில்லை. இம்முறை தேர்தலில் இந்நிலைமை மாறியுள்ளது. மூன்று மலையக பெண் எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அம்பிகா சாமுவேலும், நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய கலைச்செல்வியும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராசும் வெற்றிபெற்றுள்ளனர். மாத்தறை மாவட்டத்திலிருந்து மலையக தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். அதேபோல சரோஜாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படுவதற்குரிய சாத்தியமும் உள்ளது.

2020 பொதுத்தேர்தலில் மலையகத்திலிருந்து 9 எம்.பிக்கள் தெரிவாகி இருந்தனர். இவர்களில் அறுவர் இம்முறை தோல்வி அடைந்துள்ளனர். மனோ கணேசன், வேலுகுமார், உதயகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ், மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரால் சபைக்கு தெரிவாக முடியாமல்போனது. இம்முறை மக்கள் வாக்குமூலம் 8 எம்.பிக்கள் சபைக்கு தெரிவாகியுள்ளனர்.
ஜீவன் தொண்டமான், பழனி திகாரம்பம், இராதாகிருஷ்ணன் ஆகியோரைதவிர ஏனைய ஐவரும் புது முகங்கள். தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சனத்

முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்!!நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்...
16/11/2024

முர்து பெர்னாண்டோவை பிரதம நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்!!

நாட்டின் பிரதம நீதியரசராக திருமதி முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார்.

1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.

புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க: சபை முதல்வர் விஜித ஹேரத்!!பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப...
16/11/2024

புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க: சபை முதல்வர் விஜித ஹேரத்!!

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபைத் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நிலையியற் கட்டளைகளின்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு நாடாளுமன்றம் ஆரம்ப நாளிலேயே நியமிக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்தவுள்ளார்.

நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிற்பகல் 3 மணிக்கு கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை

பிரகடன உரை நிகழ்த்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் தமக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இரண்டு மையங்களைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 03 நாள் செயலமர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி,25, 26, 27 ஆகிய திகதிகளில் செயலமர்வு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (16.11) வெளியிடப்படவுள்ளது.

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

16/11/2024

பதுளை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான அம்பிகாவின் தேர்தலுக்கு முந்திய உரை......

பாராளுமன்ற தேர்தலில் வென்றுள்ள மலையக பெண் தமிழ் எம்.பிக்கள் மூவர்....மலையக அரசியல் வரலாற்றில் இம்முறையே பெண் எம்.பிக்கள்...
16/11/2024

பாராளுமன்ற தேர்தலில் வென்றுள்ள மலையக பெண் தமிழ் எம்.பிக்கள் மூவர்....

மலையக அரசியல் வரலாற்றில் இம்முறையே பெண் எம்.பிக்கள் பாராளுமன்றம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.....

1. அம்பிகா சாமுவேல் - பதுளை மாவட்டம்

2. கிருஷ்ணன் கலைச்செல்வி - நுவரெலியா மாவட்டம்

3. சரோஜா போல்ராஜ் - மாத்தறை மாவட்டம்

தமிழரசு இம்முறைதனித்துச் சாதனை!- மக்களால் நிராகரிக்கப்பட்ட நான் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என...
15/11/2024

தமிழரசு இம்முறை
தனித்துச் சாதனை!

- மக்களால் நிராகரிக்கப்பட்ட நான் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்கின்றார் சுமந்திரன்

"எங்களை விட்டு விலகி தனித்துச் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஆணையையும் கொடுக்காமல் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள். அதற்காகத் தமிழரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்."

- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

"மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை." - என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்திக்கு எங்களது வாழ்த்துதல்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதுவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்தப் பிரதிநிதித்துவ முறைமை வந்த பிறகு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தனித்து ஒரு கட்சி எடுப்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளோடு எந்தக் கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்தது இல்லை. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வித்தியாசமான தேர்தல் முறையிலே ஆறில் ஐந்து பெரும்பான்மை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசுக்குக் கிடைத்திருந்தது.

அப்படியான ஒரு பெரும்பான்மை கிடைக்காது என்ற அடிப்படையிலும்தான் இந்தப் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த கையோடு மஹிந்த ராஜபக்ஷ கூட தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்திருக்கவில்லை.

அதற்குப் பின்னர் கட்சி மாறல்கள், கட்சித் தாவல்கள் ஊடாகத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.

ஆனால், இந்தத் தடவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் சென்று 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது. இது உண்மையில் வியத்தகு வெற்றி. அப்படியான வெற்றியை ஈட்டியவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதில் இன்னொரு விடயமாக கடந்த நாடாளுமன்றத்திலே மூன்றே மூன்று ஆசனங்களை வைத்திருந்த தேசிய மக்கள் சக்தி இந்த நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைத் தனித்துப் பெற்றிருப்பது இன்னொரு சாதனை." - என்றார்.

www.malainaadu.lk

புதிய சாதனை!அமைச்சர் விஜித ஹேரத், கம்பஹா மாவட்டத்தில் 716,715 வாக்குகளை பெற்று, நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவருக்கான அதிக வா...
15/11/2024

புதிய சாதனை!

அமைச்சர் விஜித ஹேரத், கம்பஹா மாவட்டத்தில் 716,715 வாக்குகளை பெற்று, நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவருக்கான அதிக வாக்குகளின் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம் கொழும்பில் 655,289 வாக்குகள் பெற்ற பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியாவின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்!

ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655,000 விருப்பு வாக்குகள்!!ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655 299விருப்பு வாக்குகள் கி...
15/11/2024

ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655,000 விருப்பு வாக்குகள்!!

ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655 299விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருணாகலையில் பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்றுள்ளார்.

2020 இல் கொழும்பில் மகிந்த ராஜபக்ச 527,364 வாக்குகளை பெற்றிருந்தார்

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்ஆட்சியமைக்கின்றது தேசிய மக்கள் சக்தி- 3 ஆம் இடத்தில் இருக்கும் தமிழரசுக் கட்சிக்கு 8 ஆச...
15/11/2024

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்
ஆட்சியமைக்கின்றது தேசிய மக்கள் சக்தி

- 3 ஆம் இடத்தில் இருக்கும் தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள்

இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றமை இதுவே முதல் தடவை ஆகும்.

இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தமாக 159 ஆசனங்களைத் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி 35 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 5 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், ஐக்கிய மக்கள் சக்தி மொத்தமாக 40 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதுடன் தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சி மொத்தமாக 8 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டதுடன் தேசியப் பட்டியல் ஊடாக 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, புதிய ஜனநாயக முன்னணி மொத்தமாக 5 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மொத்தமாக 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Address

Hatton
22000

Alerts

Be the first to know and let us send you an email when மலைநாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to மலைநாடு:

Share