இலங்கையின் மலைநாட்டில் அமைந்துள்ள #ஹட்டன் நகரில் இருந்து மலையக மக்களின் குரலாய் #மலைஒலி இணைய வானொலி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. மலைகளால் சூழப்பட்ட அழகிய இயற்கை வனப்புள்ள மலையக மண்ணில் வசிக்கும் மக்களின் குரல்கள் மலைகளை தாண்டி ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலைஒலி என்று உங்கள் வானொலிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மழை மற்றும் குளிர்ச்சியான வானிலையால் எப்போதுமே சில்லென்று காணப்படும் மலையகத்தில் வ
சிக்கும் மக்களின் பொழுதுகளை மேலும் இனிமையாக்க பல்வேறு நிகழ்ச்சிகளை தாங்கி வருகின்றது #மலைஒலி இணைய வானொலி.
இன்று இணையம்தான் உலகை ஆக்கிரமித்து வருகின்றது. அதற்கு மலையகமும் விதிவிலக்கல்ல. அன்று முதல் வானொலிக்கென்றே ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு மற்றும் ஆர்வம் மலையக மக்கள் மத்தியில் ஊறிக்கிடக்கின்றது. இன்று பாரம்பரிய வானொலி அலைவரிசை முறை மாறி இணையத்தின் ஊடாக வானொலியை செவிமெடுக்கும் நிலைக்கு உலகம் மாறிக்கொண்டிருக்கின்றது.
அலைவரிசைகளில் இயங்கும் வானொலிகள்கூட இன்று இணையத்திலும் தமது வானொலி நிகழ்ச்சியை நேரலையாக ஒலிபரப்பி வருகின்றன. அந்தளவுக்கு இணையத்தின் ஊடாக வானொலி ஒலிபரப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகின்றது.
இன்று யார் வேண்டுமென்றாலும் இணைய வானொலிகளை இயக்கி விடலாம். ஆனால், அது மக்களுக்கு எந்த விதத்தில் பயனை கொடுக்கின்றது என்பதும் எவ்வாறான முறையில் காத்திரமாக செயற்படுகின்றது என்பதுதான் முக்கியத்துவம் பெறுகின்றது.
மலையக மக்களின் பாரம்பரியங்களுடன், மலையக மண்வாசனையுடன் மலையகத்துக்கான தனித்துவமிக்க வானொலியொன்றின் தேவையை உணர்ந்து மலைஒலி இணைய வானொலி உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது பரீட்சார்த் ஒலிபரப்பில் உள்ள மலைஒலி இணைய வானொலி 24 மணிநேரமும் உங்கள் ரசனைக்கு ஏற்ப பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் வழங்குவதற்கு தயாராக உள்ளது. விரைவில் நேரடி நிகழ்ச்சிகளுடன் உங்களை சந்திக்க வருகின்றோம்.
உங்கள் பேராதரவுடன் என்றும் மக்களின் குரலாய் மலைஒலி ரீங்காரமிடும்.
வானொலி - www.radio.malaioli.com
இணையத்தளம் - www.malaioli.com