Udunuwara Update

Udunuwara Update இதுவும் கடந்து போகும்

பெண்கள் இவற்றைத் தவிர்த்தல் நல்லது1- கணவனை தவிர வேறு ஆண்களிடம் தொலைபேசியில் பேசினால் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு ...
22/06/2024

பெண்கள் இவற்றைத் தவிர்த்தல் நல்லது

1- கணவனை தவிர வேறு ஆண்களிடம் தொலைபேசியில் பேசினால் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது.

2-அப்பா அண்ணன் தம்பி கணவனை தவிர மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டாய், எப்போது தூங்கினாய், என்ன உடை அணிந்து இருக்கிறாய் என்றெல்லாம் கதை பேசக்கூடாது.

3-பிற ஆண்களுடன் பேசும் போது என்ன விஷயம் அதை பேசி விட்டு கதையை முடித்துக்கொள்வது நல்லது

4- அலுவலகத்தில் கூடவே பணிபுரிவராக இருந்தாலும் நல்லவராகவே இருந்தாலும் அலுவல் விஷயங்கள் தவிர வேறு பேச்சுவார்த்தை வைத்து கொள்ள கூடாது.

5- நண்பர்கள் இருந்தால் அளவுடன் கையாளுதல் நல்லது

இவ்வாறான விஷயங்களில் பல பிரச்சினைகள் & divorce நடைபெற்றுவருகின்றன இது நமக்கு அமையும் கணவரை பொறுத்தே மாறுபடும்♥️🤝

நீ ஒளியைத் தேர்வு செய்யவில்லை என்றால் இருளில் விழுந்து விடுவாய்! பிறகு நீ குருடன் தான்!♥️

- காலித் அபு அல் ஃபழ்ல்

ALLAH IS THE BEST PLANNERமிகவும் அசாதாரண ஹஜ் கதை. இந்த மனிதர் கானா நாட்டைச் சேர்ந்தவர். ஏழையான இவர் ஊருக்கு வெளியே வசிக்...
20/06/2024

ALLAH IS THE BEST PLANNER

மிகவும் அசாதாரண ஹஜ் கதை. இந்த மனிதர் கானா நாட்டைச் சேர்ந்தவர். ஏழையான இவர் ஊருக்கு வெளியே வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கிய செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் அவரது வீட்டின் பக்கத்தில் விழுந்தது. துருக்கிய பத்திரிகையாளர்கள் அதைத் தேடி வந்தபோது, ​​​​அந்த நபரை கையில் வைத்திருந்த ஆளில்லா விமானத்தைக் கண்டார்கள், அவர் அவர்களிடம் "என்னை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லக்கூடிய பெரியது உங்களிடம் உள்ளதா" என்று கேலியாக கேட்டார்.

பத்திரிகையாளர் கதையை வெளியிட்டார், துருக்கிய அரசாங்கம் அந்த நபரை ஹஜ்ஜுக்கு அனுப்ப முடிவு செய்தது, அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்டன. இதோ அவர் தனது ஹஜ்ஜுக்குத் தயாராக மக்காவில் இருக்கிறார்.

கதையின் தார்மீகம்: அல்லாஹ் உங்களை மக்காவிற்கு வருமாறு அழைத்தால், உங்கள் பயணத்தை சாத்தியமாக்க அவர் எதை வேண்டுமானாலும் பயன்படுத்துவார்.

அல்லாஹ் சிறந்த திட்டமிடுபவர்.

A Palestinian father leaves Eid clothes on his daughter's grave (8 year's old)
17/06/2024

A Palestinian father leaves Eid clothes on his daughter's grave (8 year's old)

Sleepover in Mazdalfa ♥️No palaces, no luxury buildings, no families and no expensive shedsA night where the rich and th...
15/06/2024

Sleepover in Mazdalfa ♥️
No palaces, no luxury buildings, no families and no expensive sheds
A night where the rich and the poor are equal
We plough the earth and cover ourselves is a mercy from Allah, Glory be to His servants
And your arm is rotting
A sleep is incomparable to anyone who wants to be considered
Very tired, she sleeps a deep sleep.
As if on the Day of Judgment, you find yourself among the dead, white bodies shaking the whole body for the greatness of the situation
Everything in His wisdom, Glory be to Allah, she wakes up from sleep with joy, collecting stones and preparing to walk and stretch the journey after the morning prayer directly to the feelings of Mona

O Allah, grant us Hajj to your Holy House for many years and a long time
And every longing, O Lord of the worlds 🤍🕋
copied

14/06/2024
இதை மறுபதிவிடுவதை நிறுத்தாதீர்கள்..உங்கள் குரலை உயர்த்துங்கள் இந்த ட்ரெண்டில் இணையுங்கள்   .. 🇵🇸♥️
30/05/2024

இதை மறுபதிவிடுவதை நிறுத்தாதீர்கள்..

உங்கள் குரலை உயர்த்துங்கள் இந்த ட்ரெண்டில் இணையுங்கள் .. 🇵🇸♥️

The world has left them alone. Oh Allah SWT. have mercy on them!💔
29/05/2024

The world has left them alone. Oh Allah SWT. have mercy on them!💔

Liked
14/05/2024

Liked

01/05/2024

இன்ஷா அல்லாஹ் எங்களால் முடிந்த உதவியை செய்வோம் நான்கு பிள்ளைகளின் வாப்பா முகமது ஃபாரிஸ் அவர்களால் நடக்க முடியாமல் வேலைக்கு செல்ல முடியால் அவதிப்படுறார்

29/04/2024

மகனிடம் சொல்லி வளருங்கள்....
"மனைவிக்காக பெற்றோரை கைவிடாத"
என்று.
மகளிடம் சொல்லி வளருங்கள்....
"கணவனின் பெற்றோரையும் உன் தாய்
தந்தையைப்போல் அன்புடன் கவனி" என்று.

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....அவர்களுக்காக .....1. முதல் தக்பீருக்கு...
28/04/2024

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....

அவர்களுக்காக .....

1. முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________

இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39

3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!

குறிப்பு:
இதை மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள்

28/04/2024

90 வயதைக் கடந்த ஒரு ஸாலிஹான தாயின் மகன் சொல்லுகிறார்:
நான் வீட்டில் தாயாரின் அருகில் அமர்ந்திருந்தேன், அந்நேரம் அங்கே வந்த நண்பர் ஒருவர் 'மாஷா அல்லாஹ்' அம்மா உங்களுடன்(உங்கள் வீட்டில்) இருக்கிறாரே! என்றார்.

நான் மரியாதை கருதி சொன்னேன் "இல்லை நான் தான் அம்மாவுடன்இருக்கிறேன்" என்று.
அப்பொழுது என் அம்மா சொன்னார்: "மகனே! அவ்வாறு சொல்லாதே சிறு வயதில் நீ என்னிடம் இருந்தாய் நாங்கள் முதிய வயதை அடைந்து விட்ட பின் நாங்கள் உன்னிடம் இருக்கிறோம்"
என்று சொல்லிவிட்டு இந்த குர்ஆன் வசனத்தை படிக்கவில்லையா?
" #உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ
முதுமையை அடைந்தபோது"(அல்குர்ஆன் 17:23)
என்ற வசனத்தை ஓதி காட்டினார்
அந்நேரம் எனக்கு இப்பொழுதுதான் அந்த வசனத்தைக் கேட்பது போல் தோன்றியது"
சகோதரர்களே!
பெற்றோருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, எலும்பு உடல் சக்தி என அனைத்தும் வலுவிழந்து விடுகிறது..தாய் தந்தை, பாசத்தைத் தவிர
அந்த பாசமும் பரிவும் வயதாக ஆக அதிகரித்துக் கொண்டே போகும் அந்த அன்பையும் பாசத்தையும் உங்களுக்கான உணர்ச்சிகளால் நீங்கள் நீர்த்துப் போகச் செய்துவிடாதீர்
உங்கள் கீழ்ப்படியாமையால் உங்கள் பெற்றோர்களைச் சோர்வடையச் செய்யாதீர், ஏனென்றால் அல்லாஹ் வின் மீது ஆணையாக தாயின் கன்னத்திலோ அல்லது பெருமூச்சு விடும் தந்தையின் நரைத்த தாடியிலோ ஒரு சொட்டுக் கண்ணீர் வழிகிறது என்றால்
அது உங்கள் வாழ்க்கையை இருள் மயமாக்கப் போதுமானது!
அதிகமாக இந்தப் பிரார்த்தனையைக் கேளுங்கள்: {இறைவா, என்னையும் என் பெற்றோரையும் மன்னிப்பாயாக},,,
இந்தப் பிரார்த்தனை மூன்று வழிபாடுகளை ஒருங்கிணைக்கிறது..
#பிரார்த்தனை, #பெற்றோருக்குக் காட்டும் நன்றி,
#பாவமன்னிப்புத் தேடுதல்
சகோதரர்களே!
உங்கள் பெற்றோரைப் பராமரிப்பது என்பது என்பது உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்கும் இடையே முறை வைத்து செய்யும் வேலை அல்ல.
ஒரு மாதம் நீ பார்த்துக் கொள் ஒரு மாதம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு.
பெற்றோரைப் பேணுவது கூட்ட நெரிசலில் சொர்க்க வாசலுக்குள் இலகுவாக செல்லும் வழியாகும்
இது சிலர் கவனிக்காத உண்மை.
எந்த அளவு தாய், தந்தையருக்குச் செலவு செய்கிறீர்களோ அந்த அளவு உங்களது வாழ்வாதாரங்கள் மேம்படும்.
அகிலத்தார்களுக்கு அருட் கொடையாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
'உங்களிடையேயுள்ள பலவீனர்களின் பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது''(புகாரி2896)
உங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற அவர்களின் துஆவைப் பெறுங்கள்
ஹதீஸில் வருகிறது:
மூன்று துஆக்கள சந்தேகமில்லாமல் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும்
1அநீதி இழைக்கப் பட்டவனின் துஆ
2.(நல்ல நோக்கத்தோடு) பிரயாணம் செய்பவரின் துஆ
3. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் துஆ (திர்மதி1905)
கருணையாளனான அல்லாஹ் நம்மையுடைய நம் பெற்றோர்களுடைய
அனைத்துப் பாவங்களையும் மன்னித்து சொர்க்கத்தில் நம்மை ஒன்றிணைப்பானாக
-----கணியூர் முஹம்மது இஸ்மாயீல் நாஜீ பாஜில் மன்பயி

இன்று  #சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது பரவி வருகிறது. இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-M...
26/04/2024

இன்று #சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது பரவி வருகிறது.
இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை - கால் - வாய் நோய் என பொருள்படும்.
இது ஒரு வகையான வைரஸால் (Coxsackie Virus) ஏற்படும் ஒரு மிருதுவான (இலேசான) நோயாகும்.
தற்போதைய அதிக வெப்பமான காலநிலையால் இந்த நோய் அதிகமாக பரவி வருகின்றது.
இது குறிப்பாக பத்து வயதிற்கு குறைந்த குழந்தைகளை தாக்கும். அதிலும் குறிப்பாக ஐந்து வயதுக்கு குறைவான முன்பள்ளி சிறுவர்களை அதிகமாக பாதிக்கிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள்
• இலேசான காய்ச்சல்
• தொண்டை வலி
• சிறு கொப்பளங்கள் கை கால் (குறிப்பாக முழங்கால்) வாய் மற்றும் பின் பகுதிகளில் (Buttocks) தோன்றுதல்.
இந்த கொப்பளங்கள் சிலவேளைகளில் சிறு வலியையும், கடியையும் ஏற்படுத்தும் ( கீழுள்ள படங்களில் இந்த கொப்பளங்களைப் பார்க்கலாம்)
நாம் பொதுவாக இந்தப் கொப்பளங்களை பார்த்து அம்மை நோய் (அம்மாள் நோய்) வந்துவிட்டதாக கருதினாலும், இது உண்மையில் அம்மை நோய் அல்ல.
இந்த நோய் பரவும் வழிகள்
இது குறிப்பாக பாதிக்கப்பட்ட மற்றைய சிறுவர்களிடமிருந்து பரவுகிறது
• உமிழ் நீரின் மூலம்
• மூக்கில் இருந்து வழியும் நீர்மூலம்
• கொப்பளங்களில் இருந்து வரும் நீர்மூலம்
• இருமும் போது ஏற்படும் துகள்களின் மூலம்
இந்த நோய்க்கான மருந்துகள்
இது ஒரு இலேசான நோய் என்றாலும் சில வேளைகளில் குழந்தைகளுக்கு சிக்கல் நிலைமையை ஏற்படுத்திவிடுகிறது. பொதுவாக வாயில் ஏற்படும் கொப்புளங்கள் காரணமாக அவர்கள் உணவு உண்பதை தவிர்ப்பதால் உடலிலிருந்து நீரிழப்பு (Dehydration) ஏற்படுகின்றது.
அதைவிட மிக மிக அரிதாக மூளைக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.
இது வைரஸால் ஏற்படும் நோய் என்பதால் இதற்கென்று குறிப்பிட்ட மருந்துகள் ஏதுமில்லை. பொதுவாக 3 தொடக்கம் 5 நாட்களில் குழந்தை சாதாரண நிலைக்கு திரும்பிவிடும்.
குழந்தை அதிகமாக சாப்பிடாத இடத்தில் வைத்தியரின் உதவியை நாடுதல் நல்லது. மேலும் கடித்தல் தன்மை கூடுதலாக இருந்தால் அதற்கும் மருந்தை எடுக்கலாம்.
இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியமில்லை
இந்த நோயை தடுக்கும் முறைகள்
• இதற்கென்று எந்த விதமான தடுப்பு மருந்துகளும் இல்லை.
பொதுவான சுகாதார நிலைமைகளைப் பேணுவதன் மூலம் நோயை தவித்துக் கொள்ளலாம்.
• ஒழுங்கான கை சுகாதாரத்தைப் பேணுதல்.
• மலசல கூடத்தை உபயோகித்தபின் அல்லது குழந்தையின் மலசல தேவைகளை நிறைவேற்றிய பின் கைகளை நன்றாக சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்.
• குழந்தைகளுக்கும் இவ்வாறான நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல்.
• இயலுமானவரை இந்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தையை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்தல்.
• முன்பள்ளி செல்லும் சிறுவர்களை இந்த நோய் ஏற்பட்ட காலங்களில் வீட்டிலேயே வைத்து பராமரித்தல்.
சாராம்சமாக, இந்த Hand-Foot-Mouth Disease ஆனது வைரஸால் ஏற்படும், ஒரு மிருதுவான, தானாகவே சுகப்படும் ஒரு நோயாகும். மிக மிக அரிதாகவே சிக்கல் நிலைமைகளை ஏற்படுத்தும்.

https://m.facebook.com/story.php?story_fbid=3536430273298693&id=2469107900030941



Dr. விஷ்ணு

25/04/2024

🔴🔵🔴Let the Countdown begin 🔴🔵🔴

Katugastota Youth Cricket Club
ROYAL LIONS
Udunuwara Cricket
Hijrapura Sports Club Digana
Havelocks Cricket Club
Udathalawinna .C.C

      கட்டாரில் இருந்து வந்த மகனை காணவில்லை!தேடி அலையும் பெற்றோர்.கட்டாரில் சுமார் 2 வருட காலம் பணிபுரிந்து விட்டு நாடு ...
25/04/2024


கட்டாரில் இருந்து வந்த மகனை காணவில்லை!
தேடி அலையும் பெற்றோர்.

கட்டாரில் சுமார் 2 வருட காலம் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய தமது பிள்ளையை காணவில்லையென பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்து தேடிவருகின்றனர்.

#மாவனெல்லை சபியா வத்தையை சேர்ந்த A.S.முஹமட் #ரஷாட் எனும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

விமான நிலைய CCTV காணொளிகளின் படி கடந்த மாதம் 28ம் திகதி இலங்கைக்கு வந்த மேற்படி ரஷாட் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து மாலை 6:35 மணியளவில் வெளியேறி உள்ளார்.

அதன் பின்னர் எந்த வாகனத்தில் யாருடன் எங்கு சென்றார் என்ற விபரம் எதுவும் இதுவரைக்கும் இல்லை.

ரஷாட் பயன்படுத்திய தொலைபேசி இலக்கமும் இணைப்பில் இல்லை.

இதனால் பெற்றோர்கள் பெரும் மன உழைச்சலுக்கு ஆட்பட்டுள்ளனர்.

எனவே படத்தில் காணப்படும் இவர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக பெற்றோர்களை தொடர்பு கொண்டு அறியத்தாருங்கள்.

“எங்கள் பிள்ளை எங்கேனும் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியாவது கிடைத்தால் எங்களுக்கு அதைவிடவும் நிம்மதியான செய்தி எதுவுமில்லை” என பெற்றோர் அழுகின்றனர்.

எனவே #ரஷாட் பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தவர்கள் உடனடியாக கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு வேண்டுகிறோம்.
👇👇
தாய் : 077 114 5645
தந்தை : 077 186 5828


எச்சரிக்கை + அவதானம் அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!1. நீண்ட நேரம் ஜன்னல்களைத்  த...
24/04/2024

எச்சரிக்கை + அவதானம்

அதிக வெப்பநிலை காரணமாக பாம்புகள் குளிர்ந்த இடங்களை தேடும் காலம் இது..!

1. நீண்ட நேரம் ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள். நாக பாம்பு மற்றும் சில பாம்புகள் மிக உயர்ந்த உயரத்தை எட்டும்.

2. மாலை வேளைகளில் வீட்டு முன், பின் கதவுகளை திறந்து வைப்பதை தவிர்க்கவும். இந்த ஊர்வன முற்றிலும் அமைதியாகவே நடமாடுவதால் அதன் ஓசை நமக்கு கேட்காமலே வீட்டிற்குள் நுழையலாம்.

3 குளிர்ச்சியான நிழல் கொண்டிருக்கும் மரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதற்கு முன்னர், கிளைகள் மீது பாம்புகள் உள்ளனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

4.படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலை சுற்றி பரிசோதித்துக்கொள்ளுங்கள். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம்.

5. வீட்டுக்கு வெளியே மாலை நேரங்களில் பாய்கள் மற்றும் கட்டில்களைப் போட்டு தூங்கும் பழங்காலத்து பழக்கத்தை தவிர்க்கவும். மாலையானதுமே கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வேட்டையாட வெளியேறுகின்றன.

6. பாம்புகள் மட்டுமல்ல பூரான், தேள், நட்டுவக்காலி போன்ற விஷ ஜந்துக்களும் இரவிலேயே நடமாடும்.

7. உங்கள் வீட்டை சுற்றியுள்ள புதர்களை அகற்றிச் சுத்தப்படுத்துங்கள். கொடிய பாம்புகள் விரும்பி உண்ணக்கூடிய எலி போன்றவை புதர்களில் பதுங்கிக் கிடக்கின்றன.

8. பாம்பு விரட்டும் தூள் வாங்கி அதை உங்கள் வீட்டை சுற்றியுள்ள முற்றத்தில் தூவிவிடுங்கள். அது உங்கள் வீட்டிற்குள் பாம்புகள் நுழைவதனை 90% குறைத்துவிடும்.

உங்கள் வீடுகளில் நுழைந்த பாம்புகளை கொல்லும் போது (சில பாம்புகள் எளிதில் கொல்லப்படலாம்) சில பாம்புகளைக் கொல்ல முயற்சிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில் அதிக வெப்பத்தின் காரணமாக பதுங்க இடம் தேடும் பாம்புகள் அதிக கோபம் கொண்டிருக்கும். நம்மைத் தாக்க முற்படும்.

நீங்கள் இதனை பகிர்வதன் மூலம் அதிகமானனவர்களை இந்த ஆபத்தில் இருந்து காத்துக்கொள்ள உதவும். கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு அதிகம் பலனளிக்கக்கூடும்.

•He Won millions of Hearts 💖
16/04/2024

•He Won millions of Hearts 💖

16/04/2024

Heart breaking 💔 video

கடமை முடிந்து திரும்பி செல்கிறேன் 😂❤️
10/04/2024

கடமை முடிந்து திரும்பி செல்கிறேன் 😂❤️

10/04/2024

Musjid ul Aqsa

இந்த மனிதர் கடந்த 40 ஆண்டுகளாக மஸ்ஜிதில் தொழுகையைத் தவறவிடுவதில்லை.அது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பு . அல்லாஹ் ...
09/04/2024

இந்த மனிதர் கடந்த 40 ஆண்டுகளாக மஸ்ஜிதில் தொழுகையைத் தவறவிடுவதில்லை.

அது உண்மையிலேயே ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பு .
அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் எண்ணற்ற அருட்கொடைகளை வழங்குவானாக.
அவருடைய இறையச்சம் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக நமது பிரார்த்தனைகளில் நிலைத்தன்மை மற்றும் நேர்மைக்காக பாடுபடுவதற்கு ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது.
சுப்ஹானல்லாஹ்!

120,000 பேர் இன்று அல்-அக்ஸா பள்ளிவாசலில் ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றினர்.(05-04-2024)
08/04/2024

120,000 பேர் இன்று அல்-அக்ஸா பள்ளிவாசலில் ரமழானின் கடைசி வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றினர்.

(05-04-2024)

 #படித்ததும் பகிர்த்தூண்டிய வரலாறுதினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகம...
07/04/2024

#படித்ததும் பகிர்த்தூண்டிய வரலாறு

தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.

அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.

ஒருநாள்….
அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).

குடிசைக்குள் நுழைந்தார்… வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார்.

பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:

"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”

மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார்.
ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.

அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.

அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.

அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:

"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”

உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”

மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.

நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).
நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):

"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”

இப்போது நாம்…

அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?

உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?

அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.

மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்”
(36:12)

Copied

அல்லாஹ் கூறுகின்றான் 👇🏿وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ(முஹம்மதே!)  #அகிலத்தாருக்கு_அருளாகவே  #உம்மை_...
06/04/2024

அல்லாஹ் கூறுகின்றான் 👇🏿

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

(முஹம்மதே!)
#அகிலத்தாருக்கு_அருளாகவே #உம்மை__அனுப்பியுள்ளோம்.

"And We have not sent you,
[O Muhammad], except as a mercy to the worlds."

(Quran) Al-Anbiyaa: 21 - Verse : 107

இந்த துன்யா உங்களுக்கு எவ்வளவு வலியை ஏற்படுத்தினாலும், பொறுமையுடன் பொறுத்துக்கொள்ளுங்கள்.  தவறான நபரிடமிருந்தோ அல்லது தவ...
05/04/2024

இந்த துன்யா உங்களுக்கு எவ்வளவு வலியை ஏற்படுத்தினாலும், பொறுமையுடன் பொறுத்துக்கொள்ளுங்கள். தவறான நபரிடமிருந்தோ அல்லது தவறான இடத்திலோ ஏதேனும் ஆறுதல் தேடுவதை விட அல்லாஹ்விடம் அழுவது சிறந்தது. நீங்கள் ஒவ்வொரு இரவும் கண்ணீர் சிந்தலாம் ஆனால் பரவாயில்லை, உங்கள் உணர்ச்சிகளும் உணர்வுகளும் சரியானவை. மழைக்குப் பிறகும் சூரியன் மீண்டும் எழுந்து பிரகாசிக்கும், சோர்வடைந்த ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அல்லது நபருக்கும் நம்பிக்கையைத் தரும். அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையை இழக்காதீர்கள். அவனிடம் தவக்குல் வைத்து அது எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள் ♡

அல்லாஹ்வின் திருப்தியை அடைய முயலும் போது கடைசி சிரிப்பு சிரிப்பாய்... இன் ஷா அல்லாஹ் ♥️✨
02/04/2024

அல்லாஹ்வின் திருப்தியை அடைய முயலும் போது கடைசி சிரிப்பு சிரிப்பாய்... இன் ஷா அல்லாஹ் ♥️✨

Address

Gelioya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udunuwara Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Gelioya

Show All