Metro Mirror

Metro Mirror Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka

♦️ஏறாவூரில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி.!♦️விசேட தேவை உடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!ஏறாவூர...
09/12/2023

♦️ஏறாவூரில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி.!

♦️விசேட தேவை உடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!

ஏறாவூர் நகர பிரதேச செயலக பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகள் மற்றும் விசேட தேவை உடையவர்களுக்கு சக்கர நாற்காலிகள் என்பன நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன் வழி காட்டலில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிகாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன் சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் 2 பெண்களுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அலியார், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் நளீம், ஏறாவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் நஜிமுதீன், முன்னாள் நகர சபை உறுப்பினர் நிசார், அஹமட் ஹாஜி, முன்னாள் அதிபர் சயீத் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

-செயிட் ஆஷிப்

காத்தான்குடியில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி.!காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்...
09/12/2023

காத்தான்குடியில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி.!

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன் வழி காட்டலில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறிதர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அலியார், காத்தான்குடி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

-செயிட் ஆஷிப்

காரைதீவு கடற்பரப்பில் உயிருடன் கரையொதுங்கிய இராட்சத சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்...
09/12/2023

காரைதீவு கடற்பரப்பில் உயிருடன் கரையொதுங்கிய இராட்சத சுறாமீன் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீண்டும் கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பப்பட்டது.!

09/12/2023
மருதமுனையில் மு.கா. கிளைகள் புனரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.!மருதமுனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட...
09/12/2023

மருதமுனையில் மு.கா. கிளைகள் புனரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.!

மருதமுனை பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் புனரமைப்பு தொடர்பாக அரசியல் அதி உயர் பீட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுக்கு இடையிலான விஷேட சந்திப்பு நேற்று மருதமுனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மாவட்டக் குழுவின் செயலாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சி.சமால்டீன், மருதமுனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை முன்னாள் மேயருமான சட்டத்தரணி ஏ.எம். றகீப், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும்,கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.ஆர். அமீர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, எம்.எஸ்.எம். ஹரிஸ் (நவாஸ்), ஏ.எல். எம்.முஸ்தபா மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று CTB சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பணிப் பகிஷ்கரிப்பு.!(அபு அலா, அப்துல் ஹமீட்)இலங்கை போக்குவரத்து அக்கரைப்...
08/12/2023

அக்கரைப்பற்று CTB சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பணிப் பகிஷ்கரிப்பு.!

(அபு அலா, அப்துல் ஹமீட்)

இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களால் இன்று காலை முதல் (08) பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்று அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சபை ஆகிய இரு போக்குவரத்து சபைகளும் ஒருங்கிணைந்த சேவைகளை நேர அட்டவணையின் பிரகாரம் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சேவையில் ஈடுபடுகின்ற தனியார் போக்குவரத்து பஸ் சாரதிகளும், நடத்துநர்களும் நேர அட்டவணையின் பிரகாரம் ஒருபோதும் நடப்பதில்லை. இத்த தவறுகளை உரியவர்களுக்கு சுட்டிக்காட்டியும் அத்தவறுகளை தொடர்ந்தும் செய்து வருவதாக அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் தெரிவித்தார்.

இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை 7.30 மணிக்கு அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்று பஸ் தரிப்பிடத்திற்கு வந்தடைய வேண்டிய தனியார் பஸ் ஒன்று, நேரம் தவறி வந்த விடயத்தை இலங்கை போக்குவரத்து அக்கரைப்பற்று சாலையின் போக்குவரத்து கண்காணிப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தரினால் சுட்டிக்காட்டப்பட்டபோது குறித்த பஸ் சாரதியும், நடத்துநரும் அந்த உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதலில் காயமுற்ற அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்தை எதிர்த்தும், உரிய சாரதியும் நடத்துநரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் எங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், இது தொடர்பில் எங்களின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளோம் என அக்கரைப்பற்று சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஹாறூன் மேலும் தெரிவித்தார்.

இப்பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் அம்பாறை, கல்முனை, பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கு செல்கின்ற பிரயாணிகள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்ற அமையும் குறிப்பிடத்தக்கது.

🛑DCC கூட்டங்களை சிரமங்களுக்கு மத்தியில் நடத்துகின்ற போதும் சில அதிகாரிகள் சமூகமளிக்க தவறுவதால் தீர்மானங்களை எடுப்பதிலும்...
08/12/2023

🛑DCC கூட்டங்களை சிரமங்களுக்கு மத்தியில் நடத்துகின்ற போதும் சில அதிகாரிகள் சமூகமளிக்க தவறுவதால் தீர்மானங்களை எடுப்பதிலும் சேவைகளை வழங்குவதிலும் இழுத்தடிப்பு நடக்கிறது.!

👉முஷாரப் எம்.பி. விசனம்..!

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது ஜனாதிபதியின் திட்டமாகும் என பிரதேச அபிவிருத்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்டம் மண்டபத்தில் (8) இடம்பெற்றது

நாவிதன்வெளி பிரதேச செயலாளர்
ஆர். ராகுலநாயகி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது,

நமது நாட்டில் அரச சேவையாளர்கள் அதிக அளவில் உள்ளனர் இவர்களுக்கான செலவினங்கள் வருடாந்தம் பல மில்லியன் ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐ.எம்.எப் அறிக்கையின் பிரகாரம் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆலோசனை வழங்கப்படுகிறது. எனினும் ஒவ்வொரு ஆண்டும் இருந்த அரசியல் சூழல்கள், நெருக்கடிகளால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திடீரென அவர்களை இப்போது தூக்க முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும் இதற்காக சுற்றுலா பயணிகளை அதிகளவில் நம் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

2013 ஆம் ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது ஒரு பெரிய அடைவாகும். 2024ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வர வைப்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய எண்ணமமாகும்.

அண்மையில் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் இலங்கையில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதி இலங்கைக்கு இருக்கிறது.

இலங்கையினுடைய சுற்றுலா தளங்கள், காலநிலை, இயற்கை போன்ற அம்சங்கள் இதற்கு வழி வகுக்கின்றன. ஐந்து மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்குள் கொண்டு வருவது ஜனாதிபதி அவர்களுடைய எண்ணத்தில் உள்ள விடயமாகும். அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து செல்வதால் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.

இதற்கு நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாம் ஒழுங்கமைக்கும் போது சில திணைக்களின் பொறுப்பு அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை அதனால் தீர்மானங்களையும் பொதுமக்களுக்கான சேவைகளையும் வழங்குவதில் நாம் இழுத்தடிப்பு செய்கின்றோம்.

எனவே 2024 ல் முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டி உள்ளது திணைக்களங்களுடைய பொறுப்புதாரிகள் கட்டாயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் எதிர்கொள்ளும் வீட்டு திட்டம், காணி, குடிநீர், கல்வி அபிவிருத்தி, சுகாதாரம், மின்சாரம், வீட்டுதிட்டம், வீதி அபிவிருத்தி, காட்டு யானைகளால் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

அதேநேரம் திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளரின் கணக்காளர் றிஸ்வி யஹ்சர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராசா, பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்பாளர்கள் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பொறுப்பு உத்தியோகத்தர்கள், சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

🛑தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கிறார்களா?👉அதிபர்கள் பதில் சொல்லட்டும...
08/12/2023

🛑தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் போதுமானளவு இருக்கிறார்களா?

👉அதிபர்கள் பதில் சொல்லட்டும் என்கிறார் மனோ கணேசன் எம்பி

தமிழ் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, ஆங்கில, தொழில்நுட்ப ஆசிரியர்கள் நாட்டில் போதுமானளவு இருக்கிறார்களா? அல்லது இல்லையா? இது இன்று தமிழ்_பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையா? அல்லது இல்லையா?

நேற்று பாராளுமன்றத்தில், தமிழ் பாடசாலைகளில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடுமையாக நிலவுகிறது என்று சொன்னேன்.

மலையக பல்கலைகழகம் கட்டாயம் வேண்டும். ஆனால், அதற்கு முன் நமது மாணவர் பல்கலை செல்வதற்கான “கல்வி பாதையை” வெட்டுவோம் என்றும் சொன்னேன். அதுதான் மேலே சொன்ன பாட விதானங்களுக்கான விசேட தமிழ் மொழிமூல ஆசிரியர் பயிற்சி கலாசாலை என்றும் சொன்னேன்.

எனது கருத்துகள் சரியா? பிழையா? என தமிழ் பாடசாலை அதிபர்கள் முதலில் பதில் சொல்லட்டும். அதையடுத்து, அரசாங்க பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை நம்பி அனுப்பும் அப்பாவி தாய்மார், தந்தைமார் பதில் கூற வேண்டும். கல்வியிலாளர்கள், சமூக உணர்வாளர்கள் பதில் கூறட்டும். எனது நேரடி 0777312770 வாட்சப் எண்ணுக்கு அல்லது எனது நேரடி [email protected] என்ற மின்னஞ்சலுக்கு பதில்களை அனுப்பட்டும்.

இல்லாவிட்டால், நான் சொல்வதை எல்லாமே எதிர்த்து கட்சி அரசியல் செய்கின்ற, கல்வியை பற்றி எந்தவித தூரப்பார்வையும் இல்லாத அரசியல்வாதிகள் கையில், தமிழ் பிள்ளைகளின் கல்வியை ஒப்படைத்து விட்டு, தந்தை செல்வா சொன்னது போல், “கடவுள் காப்பாற்றுவார்” என ஒதுங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மத்திய கொழும்பு பாடசாலை பெற்றோர்-பழைய மாணவர் மத்தியில் உரையாடிய மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

மலையகம் என்றால், “மலைகளை” மட்டும் தேடி ஓடாதீர்கள். கொழும்பின் அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், இங்கு வந்து தொழில் நிமித்தம் குடியேறியுள்ள பாமர மலையக மக்களின் பிள்ளைகள்தான் என்றும் கூறினேன். அதேபோல் கிளிநொச்சி, வன்னி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இருந்தும் தொழில் நிமித்தம் குடியேறியுள்ள பிள்ளைகளுதான் கொழும்பின் அரசாங்க பாடசாலைகளில் மாணவர்கள்.

எனது நோக்கம், இத்ஹுதான். தமிழ் மொழிமூல, இரசாயனம், பௌதிகம், உயிரியல், புவியல், அரசறிவியல், கணக்கீடு, வணிகவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களை விசேட பயிற்சி அளிக்கும் ஆசிரிய பயிற்ச்சி கலாசாலை அமைய வேண்டும்.

அவர்களை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை, கம்பஹா, மொனராகலை, குருநாகலை, புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்ட தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்பதாகும். அவசியப்படும் வன்னி, கிழக்கு மாகாண பாடசாலைகளிலும் நியமிக்க வேண்டும்.

நியமிக்கப்படுபவர்கள் குறைந்த பட்சம் பத்து வருடங்கள் அதே பாடசாலையில் பணி செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத இடமாற்றம் வேண்டுமென்றாலும்கூட, அதே பாடத்துக்கான மாற்று ஆசிரியர் கிடைத்தே பிறகே இடமாறி செல்ல வேண்டும்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை நோக்கி நேற்று நாடாளுமன்றத்தில், தயவு செய்து பாரத பிரதமர் மோடி, மலையக மக்கள் நல்வாழ்வுக்காக தருவதாக உறுதியளித்துள்ள, இலங்கை ரூபா.300 கோடிக்கும் குறையாத நிதியை “தமிழ் மொழிமூல” ஆசிரியர் பயிற்சிக்கான விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலை அமைக்க பயன்படுத்துங்கள் என்றும் சொன்னேன்.

மலையக பல்கலைக்கழகம் அதையடுத்து வரட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு இப்போது அவசரப்பட வேண்டாம் என்றுதான் சொன்னேன்.

இந்த வருடம், 2023 ஜனவரி மாதமே இதுபற்றி நான் இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் கோபால் பாகலே உடன் நான் உரையாடியுள்ளேன். எமக்கான விசேட ஆசிரியர் பயிற்சி கலாசாலையும், எமது பெண்களுக்கான விசேட தாதியர் பயிற்சி கல்லூரியும் அமைத்து கொடுங்கள் என எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தேன். அதற்கான நிதியை பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டு பெற்று தாருங்கள் எனக்கூறினேன்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்கள் மலையக மக்கள் தொடர்பில் நடக்கட்டும். ஆனால், பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கும் நிதியை, இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும், இலங்கை அரசின் கல்வி அமைச்சும் இணைந்து பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள “இலங்கை தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளையை, மீண்டும் புதுபித்து, அதன் நோக்கங்களை விரிபுபடுத்தி இதை செய்து தாருங்கள் என நேற்றுக் கூட நான் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை நோக்கி சிங்கள மொழியிலும், ஆங்கில மொழியிலும் கூறினேன்.

நான் கூறிய விடயங்களை புரிந்துக்கொள்ள முடியாத தமிழ் எம்பிக்களை பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால், அரசாங்க பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை நம்பி அனுப்பும் அப்பாவி பெற்றோருக்கு புரியும் என நினைக்கிறேன். தமிழ் பாடசாலை அதிபர்களுக்கும் புரியும் என நம்புகிறேன்.

🛑யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீண்டும் பெற்றுக் கொடுங்கள்..!👉தௌபீக் MP பாராளுமன்றில் கோரிக்கை..!2024 ஆம் ஆ...
08/12/2023

🛑யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீண்டும் பெற்றுக் கொடுங்கள்..!

👉தௌபீக் MP பாராளுமன்றில் கோரிக்கை..!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருபது இலட்சம் காணி உறுதிகள் வழங்குவதற்கு சுமார் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக் கொடுங்கள் எனவும் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

கடந்த காலங்கள் நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் சொந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கழிந்தும் அவர்களுடைய சொந்த காணிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்திலும் இப்பிரச்சினை தொடர்ச்சியாக காணப்படுவதாகவும் பல முயற்சிகள் செய்தும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணிய, தோப்பூர், செல்வநகர் பிரதேசங்களின் குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக காணப்படுவதாகவும் இந்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துத்தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

அவருடைய பாராளுமன்ற உரையில், நாட்டில் தற்போது வாழ்வாதார செலவு உச்சநிலையில் காணப்படுகின்ற நிலையில் அரச ஊழியர்களது பத்தாயிரம் சம்பள அதிகரிப்பானது கண்துடைப்பு என்றும் இந்த காலகட்டத்தில் எதற்கும் போதுமானதாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

மஸ்கெலியா பிரதேச மக்களின் கனவு நிறைவேறியது.!-செ.தி.பெருமாள்பல தசாப்தங்களாக மஸ்கெலியா பிரதேசத்தில் மக்களுக்கு நியாயவிலை ய...
08/12/2023

மஸ்கெலியா பிரதேச மக்களின் கனவு நிறைவேறியது.!

-செ.தி.பெருமாள்

பல தசாப்தங்களாக மஸ்கெலியா பிரதேசத்தில் மக்களுக்கு நியாயவிலை யில் பொருட்களை பெற்று கொள்ள சதொச நிறுவனம் ஒன்று இல்லாத குறையை தற்போதைய வர்த்தக அமைச்சர் தீர்த்து உள்ளார்.

இன்றைய தினம் மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் சதொச நிருவனம் காலை 9.45. மணிக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை முதல்வர் கோவிந்தன் செம்பகவள்ளி மற்றும் சதொச நிருவன தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ சண்முகநாத ஆலய குருக்கள், மற்றும் சுமனா ராம விகாரையின் பௌத்த மத குரு மஸ்கெலியா பள்ளி வாயில் மத குரு மார்களின் ஆசியுடனும், மற்றும் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலை மாணவர்கள் களின் பேன்ட் வாத்தியங்கள் முழங்க பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க ஊர் வலமாக அழைத்து வரப்பட்டு சுப வேளையில் சதொச திறந்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது மதரஸாவில் மாணவன் மர்ம மரண சம்பவம்; கைது செய்யப்பட்ட ஹாபிழுக்கு 14 நாட்கள்  விளக்கமறியல்..!CCTV DVR மீட்பு; ...
08/12/2023

சாய்ந்தமருது மதரஸாவில் மாணவன் மர்ம மரண சம்பவம்; கைது செய்யப்பட்ட ஹாபிழுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..!

CCTV DVR மீட்பு; ஆதாரங்கள் அழிப்பில் தொடர்புடைய 4 பேர் கைது.!

கல்முனை ஸாஹிராசதுரங்கத்தில் தொடர் சாதனை.!இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் கடந்த 2ம் மற்றும் 03ம் (2023/12...
08/12/2023

கல்முனை ஸாஹிரா
சதுரங்கத்தில் தொடர் சாதனை.!

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் கடந்த 2ம் மற்றும் 03ம் (2023/12/02,03) திகதிகளில் கந்தளாய் மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி இடம்பெற்றது.

இதில் 15வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1ம் இடத்தினையும், 17வந்திற்குட்பட்ட பிரிவில் 2ம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று 17வயதுப் பிரிவில் IM. சம்லி சாஹி, MZM.சானிப், ASM. மிஜ்வாத் மற்றும் 15 வயதுப் பிரிவில் IKM.ஆக்கில் கான், MJI.சஹ்மி, AA.பர்வீஸ் ஆகியோரும் Board Champion ஆக தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் சுஹ்தான் ஆகியோரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அதிபர்,
பிரதி அதிபர்கள்,
கல்வி சார்/ கல்வி சரா ஊழியர்கள்,
SDEC/ OBA

-ஊடக பிரிவு ZCK-

♦️திறமைக்கு கிடைத்த பரிசு.!👉ஷஹீலாவின் நியமனத்துக்குயஹியாகான் வாழ்த்து..!கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப...
08/12/2023

♦️திறமைக்கு கிடைத்த பரிசு.!

👉ஷஹீலாவின் நியமனத்துக்கு
யஹியாகான் வாழ்த்து..!

கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளராக டொக்டர் ஷஹீலா இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டமை உண்மையில் பாராட்டுக்குரியது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

டொக்டர் ஷஹீலா இஸ்ஸதீனின் நியமனம் நிச்சயமாக அவரது திறமைக்கு கிடைத்த பரிசாகவும் அங்கீகாரமாகவும் பார்க்கிறேன்.

சாய்ந்தமருதில் கௌரவமிக்க குடும்பத்தில் பிறந்த டொக்டர் ஷஹீலா எங்களுக்கு அருகிலேயே வாழ்ந்து வருகின்றார் என்பதனால் அவரை எனக்கு நன்றாகவே தெரியும். சிறந்த ஆளுமையும் பண்பும் கொண்டவர் அவர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண் அதிகாரி என்ற பெருமை மட்டுமன்றி - சாய்ந்தமருதின் முதலாவது பெண் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தர் என்பதும் பாராட்டுக்குரியது.

மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட டொக்டர் ஷஹீலா மேலும் பல சேவைகளை வழங்கி இப் பிராந்தியத்தில் மகத்தான பணியாற்ற வாழ்த்துகிறேன்.

ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களுக்கு குழாய்க் கிணறுகள் அன்பளிப்பு.!சமீபகாலமாக நிலவி வரும் பொருள...
07/12/2023

ரஹ்மத் பவுண்டேசன் மூலம் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களுக்கு குழாய்க் கிணறுகள் அன்பளிப்பு.!

சமீபகாலமாக நிலவி வரும் பொருளாதார பிரச்சினையின் காரணமாக அதிகரித்திருக்கின்ற நீர்க் கட்டணங்களினால் மிகுந்த அசெளகரியங்களுக்கு உள்ளாகி இருக்ககூடிய கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கின்ற மிகவும் ஏழ்மையான சில பயனாளர்களை இனங்கண்டு இவ் அசெளகரியங்களை நிவர்த்தி செய்யும் முகமாக அவர்களுக்கான குழாய்க்கிணறுகள் YWMA பேரவையின் அனுசரணையில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் அன்பளிப்புச் செய்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பவுண்டேசன் உறுப்பினர்களுடன் குறித்த பயனாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் என பலர் கலந்து கொண்டனர்.

- RM ஊடகப் பிரிவு

07/12/2023

மருதமுனையில் போதைப்பொருள் கடத்திய ஆலாவுக்கு விளக்கமறியல்.!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த ஆலா என்ற பறவையின் செல்லப்பெயர் கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் எனும் இயற்பெயருடைய இளைஞனை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்ட இளைஞன் தடுமாறிய நிலையில் அருகில் உள்ள கடலுக்கு சென்று பாய்ந்து தப்பி செல்ல முயற்சித்தார்.

இந்நிலையில் நீச்சல் தெரியாது திணறிய ஆலா என்ற இளைஞனை கைது செய்த பொலிஸ் குழு 100 கிராம் கஞ்சாவினை உடமையில் இருந்து மீட்டுள்ளது.

நேற்று முன்தினம் இவரை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

07/12/2023

பேஸ்புக்கில் பெண்ணின் நிர்வாணப் படம்; 2 வருட சிறை.!

-அக்கரைப்பற்று நீதிவான் உத்தரவு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படத்தை தனது "பேஸ்புக்" கணக்கில் நபர் ஒருவர் பதிவு செய்து இருந்ததாக குறித்த பெண் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக நடவடிக்கை மேற்கொண்ட குற்ற புலனாய்வு திணைக்களதினர் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து இன்று (07) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு தொடர்பான விசாரணையின் போது குறித்த சந்தேகநபர் தமது குற்றத்தினை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அக்கரைப்பற்று நிதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்ஹம்சா உத்தரவிட்டார்.

07/12/2023

சாய்ந்தமருது மத்ரஸாவில் உயிரிழந்த மாணவன்; கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை-மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக முஷாரப் எம்.பி தெரிவுபாராளுமன்ற வளாகத்தில் இன்று (07.12.2023) நடை...
07/12/2023

இலங்கை-மாலைதீவு பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக முஷாரப் எம்.பி தெரிவு

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (07.12.2023) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கை - மாலைதீவு பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டதுடன், சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தத் தெரிவு, முஷாரப் எம்.பியின் திறமையான தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஏதுக்களை உருவாக்கியிருக்கிறது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான மாலைதீவின் பிரதி உயர்ஸ்தானிகர் திருமதி பாத்திமா கினா, இலங்கைளின் பாராளுமன்ற சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் மற்றும் அர்ப்பணிப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நட்புறவுச் சங்கத்தின் பணியாற்றலை வெகுவாக கட்டமைக்க, தலைவர் பாராளுமன்ற உறுப்பினர், SMM முஷாரப் அவர்களோடு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்கள்:

பாராளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன்

பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க

செயலாளர்:

பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் டெனிபிட்டிய

துணை செயலாளர்:

பாராளுமன்ற உறுப்பினர் செல்வன் அடைக்கலநாதன்

பொருளாளர்:

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்

இந்த நிகழ்வின் போது இலங்கை - மாலைதீவு உறவுகள் குறித்து சாதகமான கருத்துக்கள் பகிரப்பட்டன.

தன்னை சங்கத்தின் தலைவராக தெரிவு செய்தமைக்காக நன்றியைத் தெரிவித்த முஷாரப் எம்.பி, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகியவற்றின் நீண்டகால வரலாறு பற்றி சிலாகித்துப் பேசினார்.

இலங்கை-மாலைதீவு உறவுகளின் எதிர்காலத்திற்கான தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்,

இரு நாடுகளும் ஒரு வளமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும் இந்த சங்கம் போன்ற முன்முயற்சிகள் மூலம், பலப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் புரிதலின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் கட்டமைக்க முடியும். ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், பெரிய விடயங்களைச் சாதிக்க முடியும்- எனவும் தெரிவித்தார்.

🛑மாலைதீவு, ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா என்பன பெளத்த நாடுகளே.!👉பாராளுமன்றத்தில் சரத் வீரசேகர எம்.பி. தெரிவிப்பு
07/12/2023

🛑மாலைதீவு, ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா என்பன பெளத்த நாடுகளே.!

👉பாராளுமன்றத்தில் சரத் வீரசேகர எம்.பி. தெரிவிப்பு

🛑மரண விசாரணை அதிகாரிகளுக்கு   எதிரான முறையற்ற நடவடிக்கைகளை நிறுத்துங்கள்.!👉சபையில் மு.கா.தலைவர் ஹக்கீம் வலியுறுத்தல்.!நா...
07/12/2023

🛑மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகளை நிறுத்துங்கள்.!

👉சபையில் மு.கா.தலைவர் ஹக்கீம் வலியுறுத்தல்.!

நாட்டில் மரணங்கள் சம்பவிக்கும்போது சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் மரண விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக சில பிரதேசங்களில் தேவையற்ற விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதை நிறுத்தி, அவர்களுக்கு நியாயம் வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

நீதி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதனை நீதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார் .

அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மரண விசாரணை அதிகாரிகள் கடந்த பல்லாண்டு காலமாக மிக பொறுப்பு வாய்ந்ததொரு காரியத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அவர்களை கண்காணிப்பது என்ற போர்வையில் நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு எதிராக முறையற்ற விதத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக அறியக் கிடைக்கின்றது.

இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கம் (Coroners Association of Sri Lanka) அதன் உறுப்பினர்கள் நடத்தப்படும் மீதம் குறித்தும், அவர்களது நிலைமையைச் சுட்டிக்காட்டியும் நீண்ட மகஜர் ஒன்றைத் தயாரித்திருந்தது.

அதை முன்வைத்தே அவர்களுக்கு நியாயம் வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதி அமைச்சரிடம் பாராளுமன்றத்தில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

இறந்தவரின் நோய் நிர்ணய அட்டை, மருத்துவ குறிப்புகள் மற்றும் நம்பத்தகுந்த போதிய சாட்சியங்கள் என்பன இருந்தால், கட்டாயமாக உடற்கூற்று பரிசோதனை (Postmortem) நடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தமற்ற சடலங்களை விடுவிக்கும் அதிகாரம் மரண விசாரணை அதிகாரிகளுக்கு இருக்கின்றது.

ஆயினும், அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்ளும் போதிலும் தேவையற்றவிதத்தில் குறை கண்டு அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் முயற்சிப்பதாகவும் அதனை பற்றி கண்டறிந்து முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்றுகின்ற மரண விசாரணை அதிகாரிகளுக்கு அநீதி இழைக்காதவாறு இதில் நியாயமான ஒரு முடிவை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் நீதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார் .

ஏ.பி.தாசிம் மறைவு:மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி.!ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால போராள...
07/12/2023

ஏ.பி.தாசிம் மறைவு:

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால போராளிகளில் ஒருவரான சகோதரர் ஏ.பி. தாசிம் அவர்கள் காலமான செய்தி அறிந்து கவலை அடைந்தேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகப் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் காலத்தில் இருந்தே பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மக்கள் மயப்படுத்துவதில் தாசிம் முன்னர் அமைப்பாளராகவும் உயர்பீட உறுப்பினராகவும் இருந்து செயலாற்றி வந்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தேர்தல் தொகுதியில், மருதமுனையை பூர்வீகமாகக் கொண்ட மர்ஹூம் தாசிம் பின்னர் பொலன்றுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லை புறக் கிராமங்களில் ஒன்றான அளிஞ்சிப் பொத்தானையில் வசித்து வந்த நிலையில்,பயங்கரவாத படுகொலைகள் நடத்தப்பட்ட அசாதாரண சூழ்நிலையில் மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குடியிருப்புக் காணியில் அதுகலைக்கு சமீபமாக சேனபுர கிராமத்தில் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்தார்.

மக்களோடு மக்களாக புன்முறுவல் பூத்த முகத்துடன் அவர்களுடன் நெருங்கி பழகி, அந்தப் பிரதேசத்தில் மட்டுமல்லாது, பொலன்னறுவை மாவட்டத்தில் எல்லா குக்கிராமங்களிலும் கூட கூட நன்கு அறியப்பட்டவராக அவர் அறிமுகமாகியி ருந்தார் .

விவசாய நடவடிக்கைகளிலும் சிறிய அளவிலான வியாபார முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்த அவர், கொழும்புக்கு வரும் சந்தர்ப்பங்களில் அன்பளிப்பாக சுத்தமான தேன்பாணி, நெய் போத்தல், தயிற்றுச் சட்டி ஆகியவற்றுடன் எங்களை வந்து சந்தித்து பிரதேச மக்களின் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடி வந்தார்.

என்னையும் எங்களது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் அணுகி மாவட்ட மற்றும் வெலிகந்த பிரதேசத்தை சூழவுள்ள கிராமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

வெலிகந்த பிரதேச சபை தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கின்றார்.

அன்னாருடைய இழப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொறுத்தவரை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவன பாக்கியத்தை அருள்வானாக. அவரின் பிரிவினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மன ஆறுதலையும் வழங்குவானாக.

🛑ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை.!👉பாராளுமன்றில் தௌபீக் எம்....
06/12/2023

🛑ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை.!

👉பாராளுமன்றில் தௌபீக் எம்.பி.

(எஸ். சினீஸ் கான்)

"2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பிற்பாடு பள்ளிவாசல் மற்றும் அரபு மத்ரஸாக்களை புதிதாக பதிவு செய்ய முடியவில்லை எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்துதாருக்கள்" என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக் தெரிவித்தார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சு, புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் 2024 வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் புதன்கிழமை (6) நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே தௌபீக் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து நீண்டகாலமாகியும் காணிப்பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை. இது தொடர்ப்பில் பல சந்தப்பங்களில் பேசியும் உரிய அதிகாரிகளை சந்தித்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. கிண்ணியா கல்லறிப்பு காணி, உப்பாறு தளவா காணிகள், குச்சவெளி ஆலம்குளம், புல்மோட்டை மற்றும் ஏனைய உரியர்களுக்கு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் பிரதேசங்களுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்படவேண்டும் எனவும் தெரித்தார்.

திருகோணமலை மாவட்டமானது சுற்றுலாத்துறைக்கு பிரசித்தி பெற்ற மாவட்டம் என்பதால் அதற்கான
அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கோள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உத்தியோகத்தர்தர் குறைபாடு காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.

காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.!–மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் நாடாளுமன்றில்...
06/12/2023

காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.!

–மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் நாடாளுமன்றில் வேண்டுகோள்..!

(அஸீம் கிலாப்தீன்)

எதேச்சாதிகாரத்தில் நடந்து கொள்ளும் இஸ்ரேலின் போக்குகளை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், காஸாவை கைப்பற்றும் திட்டங்களை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சமாதான உடன்படிக்கையை மீறியுள்ள இஸ்ரேல் மீண்டும் கொலைகாரன்போல் செயற்படத் தொடங்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவிகளைக் கொன்று குவித்து, காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் யூத அரசின் போக்குகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகுக்கே ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலக நாடுகள் இஸ்ரேலின் காட்டுமிராண்டிச் செயற்பாடுகளை கண்டிக்காதுள்ளன.

இவ்விடயத்தில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை நன்றியுடன் நோக்குகிறேன். இருந்தாலும், இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்பும் கேவலமான முடிவை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் மத்திய கிழக்கு நாடுகளின் உறவு, ஆதரவுகளை நாம் இழக்க நேரிடும். இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளே தொழில்வாய்ப்புக்களை வழங்கியுள்ளன. இதனால், அதிகளவு அந்நியச்செலாவணி நாட்டுக்கு கிடைப்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

தாக்குதலை நிறுத்துமாறு கோரி, 150 எம்.பிக்கள் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தை ஐ.நாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுங்கள். இஸ்ரேலின் விடயத்தில், ஜனநாயக நாடுகள் இனியும் மெத்தனப்போக்குடன் நடந்துகொள்ளக் கூடாது.

காதி நீதிமன்றங்களை வினைத்திறனாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம். சிறந்த கல்விமான்களை காதி நீதிபதிகளாக நியமியுங்கள். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் போதுமானதாக இல்லை. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டங்களை செயலுருப்படுத்தியமைக்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்ரஸா மாணவன் உயிரிழப்பு.!சாய்ந்தமருது மார்கட் வீதியில் அமைந்துள்ள மத்ரஸாவில் காத்தான்குடியை சேர்ந்த எம்.எஸ். முஷாப் (வய...
05/12/2023

மத்ரஸா மாணவன் உயிரிழப்பு.!

சாய்ந்தமருது மார்கட் வீதியில் அமைந்துள்ள மத்ரஸாவில் காத்தான்குடியை சேர்ந்த எம்.எஸ். முஷாப் (வயது-13) எனும் மாணவன் உயிரிழந்த நிலையில் ஜனாஸாவாக மீட்பு.!

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹும் மயோன் முஸ்தபா அவர்களின் 100 வது நினைவு நாளை முன்னிட்டு "Organic Green Society"...
05/12/2023

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மர்ஹும் மயோன் முஸ்தபா அவர்களின் 100 வது நினைவு நாளை முன்னிட்டு "Organic Green Society" / "Next Gen (UYOS) இன் ஏற்பாட்டில் Rizley Musthaffa Education Aid - Social Organization இன் நிதிப் பங்களிப்புடன் மாபெரும் இரத்ததான முகாம்.!

2023.12.16 ஆம் திகதி சாய்ந்தமருதில்..

பாயிஸா பாடசாலைக்கு கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ் 2.5 மில்லியன் நிதி உதவி.!-நூருல் ஹுதா உமர் மாணவர்களையும் இளைஞ...
05/12/2023

பாயிஸா பாடசாலைக்கு கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ் 2.5 மில்லியன் நிதி உதவி.!

-நூருல் ஹுதா உமர்

மாணவர்களையும் இளைஞர்களையும் அறிவியல் ஆக்கம் கொண்டவர்களாக, புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்குபவர்களாக, புதிய தொழில் முயற்சிகளை தொடங்குபவர்களாக, ஒன்றிணைந்து இயங்குபவர்களாக, மாற்றவேண்டும் என்ற கருத்துக்களை விதைப்பதோடு அதற்கான உதவிகளையும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானி எஸ்.எம். சபீஸ் செய்து வருகின்றார்

மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை எங்கும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இணைப்பாடவிதான செயற்பாடுகளை பாடசாலையில் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். பெயர் பெற்ற சர்வதேசப் பாடசாலைகள் இணைப்பாட செயற்பாடுகளுக்கே அதிகம் முக்கியத்துவம் அளித்து பாடசாலையின் பெயரை தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டம் வரை தக்கவைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் இம்முறை க.பொ.த சா. தரப் பரீட்சை பெறுபேறுகளில் மிகச் சிறந்த பெறுபேறினைப் பெற்ற அக்/பாயிஷா மகா வித்தியாலயத்தில் இணைப்பாட செயற்பாடுகளை ஊக்கப் படுத்தும் முகமாக சர்வதேச பாடசாலைகளில் உள்ள டேபில் டெனிஸ் உள்ளக அரங்கினை ஒத்த ஓர் அரங்கினை தனது குடும்பத்தாரின் உதவியோடு இணைந்து 2.5 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கு கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ் அவர்கள் முன்வந்துள்ளார்

அதன் முதல் கட்ட சந்திப்பு நேற்று அக்/பாயிஷா பாடசாலையின் அதிபர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் போன்றவர்களுடன் இடம்பெற்றது.

Address

Dehiwala

Alerts

Be the first to know and let us send you an email when Metro Mirror posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Metro Mirror:

Videos

Share