31/03/2024
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மகளிர் தின சிறப்பு நிகழ்வு
'' இஸ்லாமிய சமூகத்திலும் , மேற்குலக சமூகத்திலும் பெண்களும் குடும்பமும்" எனும் தொனிப்பொருளில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த இவ்வருடத்திற்கான 2024 மகளிர் தின சிறப்பு நிகழ்வு போரத்தின் முன்னாள் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் கடந்த 6ஆம் திகதி புதன் கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு 7, ஹோர்ட்டன் பிளேஸில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு வளவாளர்களாக Dr. Zahra Osati, Assistant professor of women’s Studies - iran
கொழும்பு பல்கலைக்கழக புவியல்துறை தலைவி பேராசிரியர் பரீனா ருஸைக் மற்றும் தபிந்து கூட்டமைப்பின் - நிர்வாக பணிப்பாளர் திருமதி ஷமிலா துசாரி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரைகளை ஆற்றினர்
Dr. Zahra Osati
Assistant professor of women’s Studies - iran அவர்கள் உரையின் சுருக்கம்
இஸ்லாத்தில் சுதந்திரம் என்பது பெண்களுக்கு முழுமையாக வழங்க பட்டிருக்கின்றது அதிலும் பெண்களுக்கென்று தனியான இடமும் கொடுக்க பட்டிருக்கின்றது, மேற்கத்தைய பின்னணியில் இதனை பார்க்கின்ற போது நடைமுறைகள் மிகவும் சிக்கல் உள்ளதாகவே காணப்படுகின்றது .அதன் அடிப்படியில் அரசிலியல் சிக்கலும் காணப்படுகின்றது .
இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் தலைமைத்துவம் வகிக்கின்ற சூழலை காணக்கூடியதாக உள்ளது .
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, நிறுவனர்களில் முகாமைத்துவ தலைவிகளாக கூட செயற்பட்டு வருகிறார்கள் .அதனை அவர்கள் பெருமையாக பேசிக்கொள்கின்ற சூழ்நிலையும் காணப்படுகின்றது
பொதுவாக ஆண்களுக்கு வழங்கப்படுகின்ற அதே அந்தஸ்த்து பெண்களும் வழங்கப் பட வேண்டும் என்ற தொனிப் பொருளில்தான் அவர்களுடைய வாதம் இருந்து கொண்டிருக்கின்றது .
ஆனால் இஸ்லாமிய எண்ணக்கருவிலே இதை பார்க்கின்ற பொழுது மணித பண்புகளுக்கான ஒரு சமத்துவம் இஸ்லாத்தில் அதிகம் காணக்கூடியதாக இருக்குன்றது .
சில மேற்கத்தைய நாடுகளில் இடம் பெறுகின்ற குற்றச்செயல்கள் கூட ஜனநாயக செயற்பாடாக சித்தரிக்கின்ற விடயங்களும் இடம் பெறுகின்றன . தற்போது காசாவில் இடம் பெற்று வருகின்ற மனித கொலைகள் , பெண்கள் , சிறுவர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் இடம் பெரும் கொலைகள் கூட அவர்கள் ஜனநாயக செய்யற்பாடாக பெருமையாக பேசிக்கொள்கின்ற அளவுக்கு கூட இன்று நிலைமை வந்திருக்கின்றது .
இஸ்லாத்தில் நிச்சயமாக பெண்களுக்குரிய இடம் வழங்கபட்டு , அவர்கள் கெளரவிக்கப்படுகின்றார்கள் என்ற ஒரு சிறந்த ஒரு விடயத்தை எங்களால் காணக்கூடியதாக இருக்கிறது