SEema FM

SEema FM Welcome to SEema FM.
(1)

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று ஜனா...
15/06/2024

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“..சஜித் பிரேமதாச அநுரகுமார திஸாநாயக்க வடக்கிற்குச் சென்று 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக கூறியதை நான் பார்த்தேன். ஆனால் விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்து 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக அவர்களுக்கு முதலமைச்சரை நியமிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வடக்கில் வாக்களிக்கும் உரிமையைக் கூட புலிப் பயங்கரவாதிகள் மட்டுப்படுத்தியிருந்தனர் .

13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், வடக்கில் வாக்குகளுக்காகவும், அரசியல் இலாபங்களுக்காகவும் காத்துக்கொண்டு ஏனைய கட்சிகள் இவ்வாறு பேசுவது உண்மையில் வருத்தமளிக்கிறது .

எனவே 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் மாகாணசபை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எவரும் சத்தம் போடாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு முன் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும் அவர்கள் வடக்கில் மக்களின் உணர்வுகளுடன் இந்த விளையாட்டை ஆடுவதால், வாக்குகளை மூட அரசியல் கருவியாகப் பயன்படுத்துகின்றனர்..”

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

கிறிஸ் கெயில் சிறுவயதில் வாழ்ந்து வீடு ❤SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்
14/06/2024

கிறிஸ் கெயில் சிறுவயதில் வாழ்ந்து வீடு ❤

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

எதிர்வரும் தேர்தல்கள் யார் என்ன சொன்னாலும் உரிய நேரத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் சிரேஷ்ட ஆலோசகர்...
12/06/2024

எதிர்வரும் தேர்தல்கள் யார் என்ன சொன்னாலும் உரிய நேரத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தாமல் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவார் எனவும் கூறியுள்ளார்.

கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் எனவும், ஏனைய கட்சிகளிடமும் ஆதரவைப் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வெற்றியடைவதாகவும் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.


SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக்குழு இன்று(12) நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் கூடவுள...
12/06/2024

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக்குழு இன்று(12) நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் கூடவுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்து மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கு அமைய இலங்கைக்கு 330 மில்லியன் டொலர் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர் ICC - International Cricket Council

மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற விமானம் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச...
12/06/2024

மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற விமானம் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியுடன் மேலும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போனதாக அந்நாட்டின் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

தலைநகர் Lilongwe-இலிருந்து நேற்று(10) காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடர் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மாயமான விமானம் விபத்தில் சிக்கியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் விபத்தில் சிக்கி, துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக மலாவி அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்...
10/06/2024

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை நிர்வகித்தாலும், 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இதுவரை பல்வேறு தரப்பினரும் போராட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இதன்படி, அரச திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் , உள்ளிட்ட அரசாங்க சபைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் முழுமையான தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்கத்திற்கு எத்தனை தேவைகள் இருந்தாலும் 2024 வரவு செலவுத்திட்ட ஆவணத்தின் மூலம் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற முடியாது. கடந்த நான்கு தசாப்தங்களாக ஒரு அரசாங்கத்தின் அன்றாட அலுவல்களை மேற்கொள்வதற்குப் போதுமான வருமானம் இருக்கவில்லை என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டளவில், வெளிநாட்டு வள இடைவெளி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு போதுமானதாக இருக்காது. கடந்த வருட அனுபவத்தின்படி அதற்கு 5018 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் எந்த அரசாங்கமும் இந்த நிதியை ஈடுசெய்ய வேண்டும். அதற்காக சர்வதேச நாணய நிதியம் 663 மில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்க இணங்கியுள்ளது. அதன்போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் உடன்பாடு தெரிவித்துள்ள உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சிக்கு வர எதிர்பார்க்கும் தரப்பினர்கள் செயற்படுவார்களா? இல்லையா? என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும். அதன்படி, சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்காத எந்த ஒருவருக்கும் நாட்டின் எதிர்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வேறு மாற்றுவழி கிடையாது என்பதைக் கூற வேண்டும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

10/06/2024

பண மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊடாக இங்கிலாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பண மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் தலைமையின் கீழ் இந்த பண மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிரதான சந்தேக நபரான தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் புகைப்படமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறியத்தருமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

0718591643 அல்லது 0718137373 என்ற மிரிஹான பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்ட...
09/06/2024

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒக்டோபர் முதல் தொழில்துறை மற்றும் கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் கனரக வாகனங்கள் இறக்குமதியுடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் சொகுசு மற்றும் அதி சொகுசு வாகனங்கள் இறக்குமதி தொடங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனினும், வாகன இறக்குமதியில் மின்சார கார்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

SEema FM ICC - International Cricket Council

ஒடிசா சட்டசபை தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோன்று காங்., சார்பில் முஸ்லிம் பெண் எம்.எ...
09/06/2024

ஒடிசா சட்டசபை தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோன்று காங்., சார்பில் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்றுள்ளார்.

ஒடிசாவின் பாராபதி கட்டாக் தொகுதி வேட்பாளராக காங்., கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டவர் சோபியா பிர்தவுஸ். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

32 வயது இளம் எம்.எல்.ஏ.வான சோபியா பிர்தவுஸ் அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவராவார். இவரது தந்தை ஒடிசா காங்., கட்சியின் மூத்த தலைவரான முகமது மொகிம் ஆவார்

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவ...
08/06/2024

4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “குகுல் சமிந்த“ என்பவர் சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ள நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகநபர் தாக்கப்படவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளர் நாயகமுமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வெலிஓயா பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சந்தேகநபர், அண்மையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றினால் உத்தரவிட்டப்பட்ட்டது.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கா...
08/06/2024

களனி ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்காக புதிய நகரமொன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக மருத்துவமனைகள், பாடசாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களின் நலன்களைத் தேடியறியும் நோக்கில் நேற்று(07) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டபோதே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியில் IDH மருத்துவமனை, இ.போ.ச டிப்போ போன்ற அரச நிறுவனங்கள் உள்ளன. எனவே புதிய நகரை உருவாக்குவது குறித்து இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி எதிர்கால செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு அனைவரின் இணக்கப்பாட்டுடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் இத்திட்டம் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மீண்டும் ஏற்படாமல் இருக்க தகுந்த திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அனுமதியற்ற நிர்மாணங்கள், காணிகளை நிரப்புதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனவே, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் காணி நிரப்புப் பணிகளை நிறுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெறவும் எதிர்பார்க்கப்படுவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிடுவேன் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொடகமையில் இன்ற...
07/06/2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிடுவேன் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொடகமையில் இன்று (07) இடம்பெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களுடனான சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.

பார்த்து பழகுடா பாஸ்கர் SEema FM

பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்...
07/06/2024

பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், எந்த தலைவர் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் மேற்படி இணக்கப்பாட்டுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சரியான திட்டத்துடன் செயற்பட்டால் மாத்திரமே சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று (06) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தாார்.

எதிர்காலம் நிலையற்றததென நினைக்கும் இளையோருக்காக அடுத்த மூன்று வருடங்களில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த தொழிற்சாலைகள் வாயிலாக இளைஞர் யுவதிகளுக்கான பல தொழில் வாய்ப்புக்கள் உதயமாகியுள்ளன. இவ்வாறான நல்ல தொழில் துறைகள் நாட்டுக்கு அவசியம். தொழில் இன்மை நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. குறைந்த வருமானம் பெறுவோரும் பெருமளவில் உள்ளனர். கொவிட் பரவல் – பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் புதிய தொழில்துறைகள் உருவாகவில்லை. 04 வருட தொழில் இன்மை பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 15 – 25 சதவீதம் வரையில் நாட்டின் வறுமை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் இளையோருக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். இளையோருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே எமது முதற் கடமையாகும். அதற்காக நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். அதனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டாது. ஒரே இடத்தில் இருந்தால் நாம் மீண்டும் வீழ்ந்துவிடுவோம். அதனால் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

நாம் முன்னோக்கிச் செல்வதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கக் கூடாது. பலரும் போலி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் எம்மீது பல பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்டு போலி வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும்.

யத்தத்திற்குப் பிறகு வியட்நாம் அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிந்தது. இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளும் இந்தப் பொருளாதாரப் பயணத்தில் செல்ல முடிந்தது. எப்பொழுதும் பிச்சைக்காரர்களின் தேசமாக நாம் வாழ முடியாது. இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். அதற்கு ஒரு நாடாக நாம் சுயமான பலத்துடன் எழுந்து நிற்க வேண்டும். ” என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

நல்ல மனைவி இருந்தால் உயரம் ஒரு தடையில்லை எவ்வளவு வேண்டுமானாலும் உயரலாம்...SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்              ...
07/06/2024

நல்ல மனைவி இருந்தால் உயரம் ஒரு தடையில்லை எவ்வளவு வேண்டுமானாலும் உயரலாம்...
SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

மேல் மாகாணத்தில் கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு ம...
06/06/2024

மேல் மாகாணத்தில் கொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவை கல்வி வலயங்களில், வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் நாளையும் (07) கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 55-இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல கல்வி வலயத்தின் எலபாத மற்றும் அயகம பிரிவுகளிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளையும் நாளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

SEema FM

இன்று (05) இரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.சோற்றுப் பொதி ஒன்றின் வ...
06/06/2024

இன்று (05) இரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதி ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சோற்றுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், முட்டை ரொட்டி உட்பட சோர்ட்ஈட்ஸ் வகைகள் 10 ரூபாவினாலும், தேநீர் 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர் ICC - International Cricket Council

A tough start to the   as we fall to South Africa in the opener. We'll regroup, refocus, and come back stronger!   SEema...
04/06/2024

A tough start to the as we fall to South Africa in the opener. We'll regroup, refocus, and come back stronger!


SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர் ICC - International Cricket Council Virat Kohli Pat Cummins Rohit Sharma LADbible New Zealand Seeman

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.இதன்பட...
04/06/2024

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதன்படி வெற்றி பெறும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு எதிர்பார்க்கப்படும் தொகையான 1.28 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அரையிறுதிச் சுற்றில் தோல்வியடையும் அணிகளுக்கு 787,500 அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு முழுப் போட்டியிலும் அணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை 11.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று ஐசிசி கூறுகிறது.

டி20 உலகக் கிண்ணத்தில் இதுவரை கிடைத்த அதிகபட்ச பரிசுத் தொகை இதுவாகும்.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

🔴பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும்🔴உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க...
03/06/2024

🔴பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும்🔴

உயர்கல்வி பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க,

“.. பல மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை முகநூலில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். அதை செய்யக்கூடாது. அந்த பரீட்சை எண்ணில் இருந்து வேறு ஒருவரின் விண்ணப்பம் அல்லது தேசிய அடையாள அட்டையின் எண் யாருக்காவது தெரிந்தால், அந்த விண்ணப்பத்தை நிரப்பினால், கேள்விக்குரிய மாணவருக்கு அதை மீண்டும் நிரப்ப இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது. அது நடந்தால், நீண்ட காலத்திற்குப் பிறகு, முழு கணினி செயல்முறையையும் மாற்றிய பின்னரே சட்டப்பூர்வ உரிமையாளரால் இந்த அணுகலைப் பெற முடியும். அப்படி நடந்தால், அந்த மாணவர்களை ஆணைக்குழு பார்த்துக்கொள்ளும். பயப்பட வேண்டாம். ஆனால் தயவு செய்து உங்களது பரீட்சை எண்ணை ஃபேஸ்புக் அல்லது சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்கவும்..”

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர் Thadam News Rohit Sharma

பலஸ்தீனுக்கு மற்றுமொரு சவாலாக மெக்சிகோ மாறிவிடுமோ என்ற அச்சம் இப்பொழுது உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டின் ஜனாதிப...
03/06/2024

பலஸ்தீனுக்கு மற்றுமொரு சவாலாக மெக்சிகோ மாறிவிடுமோ என்ற அச்சம் இப்பொழுது உருவாகியுள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டின் ஜனாதிபதியாக அதுவும் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் ஜனாதிபதியாக யூத இனப் பெண் தெரிவாகியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா இஸ்ரேலுக்கு நேரடியாக தோல் கொடுக்கும் நிலையில் அதன் பக்கத்து நாடான மெக்சிகோவில் இவ்வாறு யூத ஆட்சி அமைவது என்பது பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலிய யுத்தத்தில் மேலும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அந்நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் 58.4% வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை க்ளோடியா ஷெய்ண்போம் (Claudia Sheinbaum) பெற்றுள்ளதோடு எதிர் உறுப்பினர் வெறும் 28 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் ஜூன் மாதம் 08 ஆம் திகதிதான் இறுதியான முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆனால் இப்பொழுது அந்நாட்டு ஜனாதிபதி 61 வயதான க்ளோடியா ஷெய்ண்போம் (Claudia Sheinbaum) என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

ஒரு யூதப்பெண்ணின் ஆட்சி மெக்சிகோவில் அமைவது என்பது நான் மேலே சொன்னது போல இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தில் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் மெக்சிகோ ஜனாதிபதியாக இருந்த லோபஸ் ஓப்ராடர் இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தத்தில் நடுநிலை வகித்ததையே அவதானிக்க முடிந்தது. அவர் அவ்வாறு நடுநிலை வகித்தார் என்ற காரணமும் அவருடைய தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் புதிதாக 06 வருடங்களுக்கு அந்த நாட்டை பொறுப்பெடுக்கவுள்ள க்ளோடியா ஷெய்ண்போம் இஸ்ரேல் பலஸ்தீன் யுத்த விடயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

காரணம் சர்வதேச வலையை சரியாக பின்னுவதற்கு முன்னர் சொந்த நாடான மெக்சிகோவின் வலையை அவர் பின்ன வேண்டியுள்ளது. அந்நாட்டின் குற்றங்களை குறைக்க அவருக்கு பல காலம் செல்லும். காரணம் அந்நாட்டின் குற்றங்கள் அடிப்படையில் உலக நாடுகளில் மெக்சிகோ 42 ஆவது இடத்தில் இருக்கிறது.

இன்னொரு பக்கம் அந்நாட்டின் தேசிய உற்பத்தியும் வருடா வருடம் குறைந்து வருவதால் அது அவர்களின் வரவு செலவின் பாரிய குறைகளை தோற்றுவித்து வருகின்றது.

எனவே உள்நாட்டில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே அவர்களுக்கு நேரம் போதாமல் இருக்கும் பொழுது பலஸ்தீன் இஸ்ரேல் யுத்தத்தில் அவர்கள் மூக்கு நுழைக்க விரும்பமாட்டார்கள் என்று கூறப்படுகின்றது. காலம் கடக்கும் பொழுது நிலைப்பாடு வெளியில் வரும்.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றவர்களின் பட்டியல் இதோ. உங்கள் கணிப்பில் 2024 டி20 உலகக் கோப்பையின் வெற்றியாளர்கள் யார்? ...
03/06/2024

இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றவர்களின் பட்டியல் இதோ.

உங்கள் கணிப்பில் 2024 டி20 உலகக் கோப்பையின் வெற்றியாளர்கள் யார்?

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர் ICC - International Cricket Council FM ICC - International Cricket Council

ai munai

building Material




Materal nitect
munai

நாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையுடன் கூடிய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத...
03/06/2024

நாட்டில் தற்போதைய சீரற்ற காலநிலையுடன் கூடிய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

நடிகை கிருஷ்ண குமாரி லக்ஸ் சோப் காலண்டர் விளம்பரத்தில்  (ஆண்டு 1954)SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர் Suriya Sivakumar
02/06/2024

நடிகை கிருஷ்ண குமாரி லக்ஸ் சோப் காலண்டர் விளம்பரத்தில் (ஆண்டு 1954)

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர் Suriya Sivakumar

அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த ...
02/06/2024

அரசியலமைப்பிற்கு அமைவாக பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கொள்கையை பாதுகாக்கும் பொறுப்பு நிறைவேற்று, சட்டவாக்க, நீதி உள்ளிட்ட 3 துறைகளுக்கும் இருப்பதை எவரும் மறுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

எவரேனும் அதனை மாற்ற விரும்பினால் உடனடியாகச் சென்று அரசியலமைப்பை மாற்றுமாறு ஜனாதிபதி கூறினார்.

ஹோமாகம, கிரிவத்துடுவவில் நிர்மாணிக்கப்பட்ட “குருதேவ சுவ அரண” பிக்குகளுக்கான நிலையத்தை இன்று (01) திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் நிறைவேற்று, சட்டவாக்க, நீதித்துறை உள்ளிட்ட 3 துறைகளுக்கும் பௌத்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கு ஆதரவளிக்காதது அரசியலமைப்பை மீறும் செயல் எனவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்தப் பொறுப்பு உள்ளதெனவும் வலியுறுத்தினார்.

மக்கள் இறைமை, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குதல், ஒருமைப்பாட்டைப் பேணுதல் என்பனவே இந்நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை கோட்பாடுகளாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கோட்பாடுகளைப் பாதுகாத்து எப்பொழுதும் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் அவற்றுக்கு எதிராகப் பேசுவது அரசியலமைப்பை மீறுவதாகும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், இறக்கும் நிலையில் உள்ள நோயாளியை குணப்படுத்தும் பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது நோயாளி படிப்படியாக குணமடைந்து வருவதாகவும், அந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை மகா சங்கத்தினரிடமிருந்து கிடைத்த வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

கொஹுவளை விகாரையின் விகாராதிபதியாகவும், இலங்கை ரமண்ய நிக்காயாவின் தலைமைப் பதிவாளராவும் இருந்த, மறைந்த வண. மாபாலகம சிறி சோமிஸ்ஸர நாயக்க தேரரின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை மற்றும் வெளிநாட்டு பிக்குகளுக்காக இந்த “குருதேவ சுவ அரண” நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாடிக் கட்டிடம் கொண்ட இந்த நிலையத்தில், 3 மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது பிக்குகள் சிகிச்சை பெறலாம். அலுவலக அறைகள், வார்டு, அம்யூலன்ஸ், மருந்தகம், மருத்துவர்களுக்கான தங்குமிடங்கள், அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன.

பிக்குகளுக்கான தியான வசதிகளும் இங்கு காணப்படுவதோடு, இந்த நிலையத்தை அமைக்க, கொரியாவில் வசிக்கும் விஜிதவங்ச தேரர், கொரிய உல்சான் பௌத்த வைத்தியசாலையின் பணிப்பாளர் Neunghaeng பிக்குனி மற்றும் தாய்வான் கொசோன் Long Fong ஆசிரமத்தின் சிந்தாவோ (SinDaw) பிக்குனியும் இந்த நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான உதவிகளை வழங்கியுள்ளனர்.

இந்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
குருதேவ சுவ அரண பிக்கு வைத்திய நிலையத்தின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

இதன்போது, வைத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்காக காணியை நன்கொடையாக வழங்கிய சந்தியா காந்திலதாவுக்கு ஜனாதிபதியால் நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

மே மாதம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியி...
01/06/2024

மே மாதம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், 452,979 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவ...
31/05/2024

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2024 மே மாதம் கொடுப்பனவுகளை வழங்குவதற்குத் தேவையான சுமார் 1518 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப காரணங்களினால் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தின் பின்னர் பிரதேச செயலகங்களில் வழமையான முறையில் முதியவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் ஜுன் மாத கொடுப்பனவும் குறித்த மாதத்திலேயே வழங்கப்படும் என்றும், அஸ்வெசும கொடுப்பனவு கட்டமைப்பின் கீழ் உரிய வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை அறிவித்துள்ளது.

இதனிடையே தற்போது அஸ்வெசும நலன்புரித் தொகையைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களிலிருந்தும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது

SEema FM

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முத...
31/05/2024

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல மாதங்களாகப் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போரைத் தொடங்கியுள்ளது.

இந்த போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு சர்வதேச அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே ஹமாஸ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது காஸாவில் உள்ள மக்களுக்கு எதிரான போரையும் ஆக்கிரமிப்பையும் இஸ்ரேல் நிறுத்தினால், முழுமையான உடன்படிக்கைக்குத் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்குச் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், தெற்கு காஸா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் ஹமாஸ் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே மற்றொரு பக்கம் எங்கள் மக்கள் மீது இனப்படுகொலை நடத்தும் இஸ்ரேலின் இந்த பாலிசியை ஹமாஸ் மற்றும் பலஸ்தீனிய அமைப்புகள் ஏற்க மாட்டோம்.

காஸாவில் உள்ள எங்கள் மக்களுக்கு எதிரான போரையும் ஆக்கிரமிப்பையும் இஸ்ரேல் நிறுத்தினால் முழுமையான உடன்பாட்டை எட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். பணய கைதிகளை விடுவிப்பது தொடங்கி விரிவான ஒப்பந்தத்திற்கு நாங்கள் தாயாக உள்ளோம். எங்களது இந்த நிலைப்பாட்டை மத்தியஸ்தர்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம்” என்றார்.

இதற்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை. அதேநேரம் ஹமாஸ் கடந்த காலங்களில் முன்மொழிந்த தீர்வுகளை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்து இருந்தது. ஹமாஸை முழுமையாக வேரறுப்போம் என்றும் அதன் ஒரு பகுதியாக ரஃபா தாக்குதலில் கவனம் செலுத்த உள்ளதாகவும் இஸ்ரேல் கூறி வந்தது. மேலும், காஸாவில் ஹமாஸ் மீதான அதன் போர் ஆண்டு முழுவதும் தொடரும் என்று செவ்வாயன்று இஸ்ரேல் கூறியுள்ளது.

ரஃபா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அதை இஸ்ரேல் ஏற்பதாகத் தெரியவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை ரஃபாவின் மையப்பகுதிக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

தெற்கு காஸாவில் அமைந்துள்ள முக்கிய நகரம் தான் ரஃபா. பெரும்பாலான பலஸ்தீனர்கள் வாழும் இந்த பகுதியில் பல அகதிகள் முகாம்களும் இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்கா தொடங்கிப் பல உலக நாடுகள் இந்த நகரின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலைக் கடுமையாக எச்சரித்தன. இருப்பினும், அதையும் தாண்டி கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ரஃபாவில் 35க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

ரஃபா தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியது. பல்வேறு நாடுகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், All Eyes on Rafah என்ற தொடர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் பலஸ்தீனத்தை தனி நாடாகவும் பல நாடுகள் அங்கீகரித்துள்ளன.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

All eyes on Rafah என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம்...
30/05/2024

All eyes on Rafah என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.

All eyes on Rafah – இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு தொடர் இதுதான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது.

இஸ்ரேல் காசா இடையே கடந்த பல மாதங்களாக மோதல் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக காசாவில் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வந்தது. ஏற்கனவே, வடக்கு காசாவில் தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், அடுத்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தது.

இருப்பினும், ரஃபா என்பது பலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றாகும். காசாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 50%, அதாவது 10 லட்சம் பேர் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ரஃபா நகர் எகிப்து எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. அங்குப் பல அகதிகள் முகாம்களும் உள்ளன. இதனால் ரஃபாவில் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவைத் தரும் என்று உலக நாடுகள் எச்சரித்தன. அவ்வளவு என் அனைத்து விஷயங்களிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா கூட ரஃபா மீது தாக்குதல் வேண்டாம் என்றே இஸ்ரேலை எச்சரித்தது.

அதேபோல சர்வதேச நீதிமன்றமும் காசா பிராந்தியத்தில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இருப்பினும், இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதலைத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் ஏவுகணைகளில் ஒன்று ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் முகாமை தாக்கியது. இதில் 45 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவின் UNRWA அமைப்பு இந்த கொடூர தாக்குதல் குறித்து மிகவும் காட்டமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், “பூமியில் உள்ள நரகமாக காசா மாறிவிட்டது. காசா மக்கள் தாக்குதலில் இருந்து தப்பித்துப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயல்கிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக காசாவில் பாதுகாப்பான இடம் என்றே ஒன்று இப்போது இல்லை” என்றார்.

முதலில் தெற்கு ரஃபா பகுதியில் நடந்த தாக்குதலில் ஹமாஸை சேர்ந்த இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. இருப்பினும், இதற்கு உலகெங்கும் மிகப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்திவிட்டு இஸ்ரேல் இப்படி அறிவிப்பதை ஏற்கவே முடியாது என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்தச் சூழலில் தான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ரஃபா தாக்குதல் துரதிர்ஷ்டவசமானது என்றும் அது பெரிய தவறு தான் என்றும் கூறினார். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடாது என்று பல்வேறு முயற்சிகளை தாங்கள் எடுத்த போதிலும் அதையும் தாண்டி இந்த தவறு நடந்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். இருப்பினும், ஹமாஸை அழிக்கும் நடவடிக்கை தொடரும் என அவர் கூறியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே All eyes on Rafah என்ற சொற்றொடர் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன. shahv4012 என்ற இன்ஸ்டா யூசர் முதலில் இந்த போஸ்டரை பகிர்ந்தார். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த போஸ்டரில் All eyes on Rafah என்ற சொற்றொடர் முதலில் இடம்பெற்றிருந்தது. உலக சுகாசார அமைப்பின் காசாவுக்கான பிரதிநிதியான ரிச்சர்ட் பீபர்கார்ன் என்பவர் All eyes were on what is happening in Rafah என்று கூறியிருந்த நிலையில், அதில் இருந்த இந்த All eyes on Rafah என்ற சொற்றொடர் உருவாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.

SEema FM பார்த்து பழகுடா பாஸ்கர்

Address

Colombo
Dehiwala
10350

Opening Hours

Friday 18:30 - 22:30
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEema FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEema FM:

Videos

Share