Tamilnewscut

Tamilnewscut Media

???? 🙄
03/04/2023

???? 🙄

🤔?
02/04/2023

🤔?

தமிழரசு கட்சியின் செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் ...
28/02/2023

தமிழரசு கட்சியின் செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

குறிப்பாக தெற்கில் தனக்கு மக்கள் பலம் இல்லை என்பதனையும், வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள செல்வாக்கினையும் கண்டு அஞ்சியே ஜனாதிபதி உள்ளுராட்சி மன்றத்தேர்தலினை ஒத்திவைக்க முற்படுகின்றார் என சந்தேகம் எழுந்துள்ளது எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் அடந்த சில நாட்களுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உருப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்க குறித்த திகதியில் தேர்தலை நடத்துவதே சிறந்தது எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

கான்ஸ்டபிளை தாக்கி தொலைபேசியை திருடிச் சென்ற பொலிஸ் அதிகாரி கைதுபயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை எட்டி உதைத்து காயப்படுத்தி அ...
28/02/2023

கான்ஸ்டபிளை தாக்கி தொலைபேசியை திருடிச் சென்ற பொலிஸ் அதிகாரி கைது

பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை எட்டி உதைத்து காயப்படுத்தி அவரது கைத்தொலைபேசியை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் மஹாபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

மஹாபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கு வருகை தந்து, பின்னர் சாதாரண உடையில் எவருக்கும் தெரிவிக்காமல் கடவத்தை பகுதியில் இடம்பெற்ற இசை கச்சேரியை காண சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்கு கச்சேரி பாதுகாப்புக்காக பொலிஸ் சீருடையில் வந்த பியகம பொலிஸ் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காலால் உதைத்து காயப்படுத்திவிட்டு கைத்தொலைபேசியை திருடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல் பயிரிட்டு முழு ஆசியாவுக்கும் உணவளித்தோம் -முன்னாள் ஜனாதிபதிஇலங்கையில் நெல் பயிரிடப்பட்டு முழு ஆசியாவுக்கும் உணவளிக்...
28/02/2023

நெல் பயிரிட்டு முழு ஆசியாவுக்கும் உணவளித்தோம் -முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் நெல் பயிரிடப்பட்டு முழு ஆசியாவுக்கும் உணவளிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.

ஆனால் இன்றைய நிலவரப்படி உண்பதற்குக் கொஞ்சம் கூட சோறு இல்லாமல் மக்கள் மண்டியிடுகிறார்கள்.

களனியில் நடைபெற்ற புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை பாடசாலைகள் மூடப்படுமா ? - ஜோசப் ஸ்டாலின் விளக்கம்அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை ...
28/02/2023

நாளை பாடசாலைகள் மூடப்படுமா ? - ஜோசப் ஸ்டாலின் விளக்கம்

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மார்.01) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை கருப்பு நிற ஆடைகளை அணிந்து, கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைகளுக்கு பிரசன்னமாகுமாறு, ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும்சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவி...
28/02/2023

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் – பொலிஸ் பரிசோதகர் கைதுபஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவரிடம் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின...
28/02/2023

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் – பொலிஸ் பரிசோதகர் கைது

பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவரிடம் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோதகரான இவர் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையமொன்றைச் சேர்ந்தவராவார்.

அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பயணித்த பயிற்சி தாதி ஒருவருக்கு அருகில் நின்றிருந்த குறித்த பொலிஸ் பரிசோதகர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும் இதனையடுத்து குறித்த பஸ்ஸில் சென்ற பயணிகள் ஆத்திரமடைந்து பரிசோதகரை தாக்கி பொலிஸில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்ணொருவர் கைதுகட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இன்று (28...
28/02/2023

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்ணொருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இன்று (28) காலை யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 26 வயதான பொலிவிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் இன்று காலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கேய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கையிருப்பு 04 கிலோ 600 கிராம் எடையுடையதுடன் அவற்றின் பெறுமதி 230 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு சென்றதற்காக 500 அமெரிக்க டொலர்களை அவர் பெற்றுக்கொள்ளவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பாடசாலைகள் நாளை மூடப்படுமா?மார்ச் 1 ஆம் திகதி கல்விச்சமூகம் கருப்புப் போராட்டம்!நாளை (01) கருப்பு போராட்டத்தை முன்னெடுக்...
28/02/2023

பாடசாலைகள் நாளை மூடப்படுமா?

மார்ச் 1 ஆம் திகதி கல்விச்சமூகம் கருப்புப் போராட்டம்!

நாளை (01) கருப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர்களின் முதன்மை தொழிற்சங்க கூட்டணியின் தொழிற்சங்கத் தலைவர்களின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது, மார்ச் 01 வேலைநிறுத்தம் நடத்த முன்மொழியப்பட்டதோடு, கருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அன்று பாடசாலைகளில் கறுப்பு ஆடைகளை அணிந்து அல்லது கறுப்பு துணிகளை கட்டிக் கொண்டு அதிபர், ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

போக்குவரத்து கொடுப்பனவை வழங்க ஆசிரியர்கள்-அதிபர்களுக்கு அதிகாரம் வழங்குதல், வங்கி வட்டியை உயர்த்துவதற்கும் வரி விதிப்பதற்கும் எதிராக, தேர்தலை ஒத்திவைத்து அடக்குமுறைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்?நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்...
28/02/2023

நாளை வங்கி சேவைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்?

நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், ஏனைய வங்கிகளையும் இணைத்துக்கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வங்கி சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முறையற்ற வரி வசூலிப்பிற்கு எதிராக நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு, ஏனைய அனைத்து துறையினரும் ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

28/02/2023

වැඩ කරන්න පුළුවන් නායකයෙක් අපිට ඉන්නවා

இரு புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க ஜனாதிபதி ஆலோசனைபுற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளையும்,...
28/02/2023

இரு புதிய வைத்தியசாலைகளை நிர்மாணிக்க ஜனாதிபதி ஆலோசனை

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்தியசாலைகளையும், நவீன வசதிகளுடனான சிறுவர்களுக்குரிய வைத்தியசாலை ஒன்றினையும் நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குறித்த ஆலோசனையை ஜனாதிபதியின் செயலாளர் ஈ எம் எஸ் பி ஏக்கநாயக்கவினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய்க்கான வைத்தியசாலைகளையும் பொருத்தமான இடத்தில் சிறுவர்களுக்கான வைத்தியசாலை ஒன்றையும் நிர்மாணிப்பதற்குரிய ஆலோசனையே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல்தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழ...
28/02/2023

எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல்

தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விவாதிப்பதற்காக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்...
28/02/2023

5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார்.

கைதான சந்தேக நபர் வசமிருந்து 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

"..இலங்கை மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக கடமையும், பொறுப்பும்  இருக்கின்றன.."    பிரித்தானிய வெளிவிவக...
28/02/2023

"..இலங்கை மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீக கடமையும், பொறுப்பும் இருக்கின்றன.."

பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மற்றும் தூதுவரிடம் தமுகூ தலைவர் மனோ கணேசன்> நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா சிவஞானம், பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், அரசியல் அலுவலர் ஜோவிடா அருளானாந்தம் மற்றும் தமுகூ தலைவர் மனோ கணேசன், இதொகா பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

28/02/2023
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்புமூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் ம...
28/02/2023

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

யாழ் புத்துாா் கிழக்கு – ஊறணி பகுதியை சோ்ந்த 4 வயதான அஜிந்தன் லக்ஸ்மிதா என்ற சிறுமி கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.

மரண விசாரணைகளின் பின்னா் சிறுமியின் சடலம் பெற்றோாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது4.631 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த பொலிவிய நாட்டுப்  பெண் ...
28/02/2023

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது

4.631 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த பொலிவிய நாட்டுப் பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைது கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவ...
28/02/2023

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையை சமூக பாதுகாப்பு பங்களிப்பில் இருந்து விடுவித்த பின்னர், விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு மேல் ஒரு கிலோ நாட்டு அரிசியை வாங்கும் போது, ஒரு கிலோ அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை தற்போதைய விலையில் பராமரிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசியை இலவசமாக வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் 5 இலட்சம் பேர் தொழில் இழப்பு2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளதாக உலக வங்...
28/02/2023

நாட்டில் 5 இலட்சம் பேர் தொழில் இழப்பு

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக வங்கி கூறுகிறது.

இலங்கையில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 65% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுமத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதித் தலைவர் மார்டின் ரைஸர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வறுமை கோட்டு வரம்புக்கு அப்பாற்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து இலங்கையர்களுக்கும் குறிப்பிடத்தக்க நலன் இழப்பை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் அமைச்சரவையில் மாற்றம்?எதிர்வரும் மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ...
28/02/2023

மார்ச் மாதத்தில் அமைச்சரவையில் மாற்றம்?

எதிர்வரும் மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கு இதன்போது அமைச்சுப் பதவிகள் வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய கூட்டணி உருவாகிறது!----------------------------------------மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள் ளூராட்சிமன்றத் தேர்...
28/02/2023

புதிய கூட்டணி உருவாகிறது!

----------------------------------------

மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள் ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி தேசிய ரீதியான ஒரு கட்சியை உருவாக்கும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருவதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசாங்கத்தில் பிரதானமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களை இணைக்கும் முயற்சியிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகொள்ளும் முனைப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுதிபூண்டுள்ளதோடு, அதற்காக ஐ.தே.கட்சி தலைமையிலான கூட்டணி யொன்றை உருவாக்கும் முயற்சியும் தற்போது இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. இவ்வாறான கூட்டணியொன்றை அமைத்தால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மாத்திரமன்றி மாகாண சபைத் தேர்தலையும் இலகுவாக வெற்றிகொண்டு பொருளாதாரத்தை திட்டமிட்ட வாறு தமது கொள்கைகளில் பயணிக்க முடியுமென ஜனாதிபதி நம்புகிறார். அத்தோடு, பாராளுமன்றத் தேர்தலின்போது தனது தலைமையில் பலம்வாய்ந்ததொரு கூட்டணியொன்றின் ஆதரவையும் திரட்ட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இந்த திட்டத்தின் ஊடாக தற்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்தி, மொட்டு கட்சியின் உறவை கைநீட்டும் அளவில் பேணிக்கொண்டு முழுமையானதொரு ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஒரு ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் மாத்திரமே கிடைத்திருந்ததால் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையை விட கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஜனாதிபதி அதிக நாட்டம் கொண்டுள்ளார்.

இதை கருத்திற்கொண்டே நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து பாரிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளருடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவை போன்று தனக்கும் ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என்றும், அரசாங்கத்திற்கு வந்ததும் மேலும் சிலரை அழைத்து வர விரும்புவதாகவும், ஆனால் அதனை செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு வர விரும்புவோரை அழைத்துக்கொண்டு நமது அரசியல் பயணத்தை தொடருவோம் என ஜனாதிபதியிடம் கூறியதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாளை தனியார் பஸ்கள் நாளை இயங்குமா? முக்கிய அறிவிப்பு.......................................................................
28/02/2023

நாளை தனியார் பஸ்கள் நாளை இயங்குமா? முக்கிய அறிவிப்பு
........................................................................
திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொதுமக்களின் வசதிக்காக பாடசாலை, அலுவலக சேவைகள் உட்பட அனைத்து சேவைகளுக்கும் சகல பஸ்களையும் நாளை இயக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

அரச, அரை அரசு, தனியார் மற்றும் தோட்டங்கள் உட்பட பல துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்சார் தொழிற்சங்கங்கள் நாளை (மார்ச் 1) பாரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நாளைய தினம் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டாலும், அனைத்து பஸ்களையும் வழமைப் போன்று இயக்க பொது பஸ் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய்களின் போது கூட, அரசு ஊழியர்கள் முழு சம்பளத்தையும் பெற்றனர், அதேசமயம் தனியார் துறை மற்றும் தனியார் பேருந்து சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் பாதியைப் பெற்றனர்.

எனவே, மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவது சட்டவிரோதமானது. நாங்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.

நஷ்டத்திற்காகப் போராட்டம் நடத்த விரும்புகிறோம், ஆனால் அரசுத் துறை ஊழியர்கள் தங்களது மாதாந்திர கொடுப்பனவுகள், கொடுப்பனவுகள் உள்ளிட்டவற்றைப் பெறும்போது அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவர் வேதனை தெரிவித்தார்.

Update :- துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தகவல்பாணந்துறை - பின்வத்தை பொது மயானத்திற்கு அருகில் இன்று செவ்...
28/02/2023

Update :- துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தகவல்

பாணந்துறை - பின்வத்தை பொது மயானத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்க் கொல்லப்பட்டவர் கடவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் தனது வாகனத்தில் காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உயிரிழந்தவர் கடவத்தை, கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சம்பத் குடகொட என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடவத்தை நகரில் உள்ள வெளிநாட்டு மதுபானக் கடை ஒன்றின் உரிமையாளர் அவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பாணந்துறை பின்வத்தையில் வீடு ஒன்றை நிர்மாணித்து வருவதாகவும், நிர்மாணப் பணிகளுக்குச் செல்லும் போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண, பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Dehiwala

Telephone

+94778739420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnewscut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies