Maatram

Maatram Maatram is a citizens journalism website based in Sri Lanka.

வாக்குறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டியும், மருந்துகள், அத்தியாவசிய உணவு மற்றும் பாடசாலை உபகரண...
16/01/2025

வாக்குறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டியும், மருந்துகள், அத்தியாவசிய உணவு மற்றும் பாடசாலை உபகரணங்கள் மீதான VAT வரியை நீக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தும் பொது மனுவில் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று மக்கள் பேரவைக்கான இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் தங்களது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணிப்பாதுகாப்பதற்கு போட்டிபோடும் சீனாவையும் இந்தியாவையும் பகைத்துக...
16/01/2025

இலங்கையில் தங்களது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பேணிப்பாதுகாப்பதற்கு போட்டிபோடும் சீனாவையும் இந்தியாவையும் பகைத்துக்கொள்ளாத வகையிலான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பது என்பது இலங்கை அரசாங்கத்துக்கு நெடுகவும் இரு பிரச்சினையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Photo, PMD ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்று சரி...

இது தொடர்பாக பொலிஸ் துறை தரவுப் பாதுகாப்பு அதிகார சபையுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளதா அல்லது இன்னும் ஒரு சில மாதங்களில் அ...
15/01/2025

இது தொடர்பாக பொலிஸ் துறை தரவுப் பாதுகாப்பு அதிகார சபையுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளதா அல்லது இன்னும் ஒரு சில மாதங்களில் அமுலுக்கு வரவிருக்கும் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளை ஓரளவுக்காவது அறிந்துள்ளதா என்பது குறித்த எத்தகைய சான்றுகளையும் காண முடியவில்லை. இது ஒரு பாரிய சிவப்புக் கொடியை காட்டுகிறது.

இலங்கையின் துணிச்சல்மிக்க பொலிஸ் துறையினால் அதன் சொந்த சமூக ஊடக கணக்குகளைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாத ந.....

கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக தன்னோடு இணைந்து நின்ற தரப்புகளையே உறிஞ்சித் தோற்கடிக்கத் தெரிந்த தமிழரசுக் கட்சிக்கு – கட...
13/01/2025

கட்சியை வளர்த்துக் கொள்வதற்காக தன்னோடு இணைந்து நின்ற தரப்புகளையே உறிஞ்சித் தோற்கடிக்கத் தெரிந்த தமிழரசுக் கட்சிக்கு – கட்சியினருக்கு – எதிர்த்தரப்பாக அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கான தேவைகளையோ உரிமைகளையோ பெற முடியவில்லை. குறைந்தபட்சம் அரசாங்கத்துக்கு சிறிய அளவிலேனும் நெருக்கடியை உருவாக்க முடியவில்லை. பிராந்திய சக்தியாகிய இந்தியாவைத் தமிழருக்குச் சாதகமாக்கவில்லை. சர்வதேச சமூகத்தை வென்றெடுக்க முடியவில்லை.

Photo, TAMILGUARDIAN ‘தமிழ்த் தேசியக் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே மக்களிடத்தில் பேராதரவு உண்டு. அதனால்தான் அத....

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவராமல் விடுவதற்கோ அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழ...
10/01/2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவராமல் விடுவதற்கோ அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்காமல் விடுவதற்கோ எந்த காரணத்தையும் கூறமுடியாது. வேறு எந்த கட்சியையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான பலம் நாடாளுமன்றத்தில் இருக்கிறது. இந்த அரசாங்கமும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழக்கவில்லையானால் அதற்குப் பிறகு எவராலும் அதைச் செய்யமுடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

Photo, ECONOMYNEXT 2024ஆண்டுக்கு நாம் பிரியாவிடை கொடுத்தபோது ஜனாதிபதி பதவியில் அநுரகுமார திசாநாயக்க நூறு நாட்களை நிறைவு செ.....

எனது தந்தையை அவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் செய்தார்கள்?   – லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க https://maa...
08/01/2025

எனது தந்தையை அவர்கள் என்ன செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? – லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க https://maatram.org/?p=7453

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான   படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 வருடங்கள்.   தண்டனை விலக்கீட்...
08/01/2025

சிரேஷ்ட ஊடகவியலாளரும்
பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 வருடங்கள்.

தண்டனை விலக்கீட்டு உரிமையுடன் கொலையாளிகள் சுதந்திரமாக நடமாட்டம்.

📷

தமிழ் அரசியற் தலைவர்கள் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதன் அரசியற் சேதியை தமிழ் மக்கள் கவனத்திலெடுத்துப்பார்க்க...
03/01/2025

தமிழ் அரசியற் தலைவர்கள் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதன் அரசியற் சேதியை தமிழ் மக்கள் கவனத்திலெடுத்துப்பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை அந்தக் கொலைகளின் அரசியற் சரி - தவறுகளைப் பற்றி இங்கே பேசவில்லை. அது தனியாகப் பேசப்பட வேண்டியது. ஆனால், அன்று தமிழ்ப் பிரதேசத்தை விட்டுக் கொழும்பிலும் இந்தியாவிலுமே தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை தளமிட்டிருந்தன என்பதைக் கவனிக்க வேண்டும்.

Photo, TAMIL GUARDIAN இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவு.....

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை - டாக்டர் மனோகரனுடன் ஓர் உரையாடல் https://maatram.org/?p=7993
03/01/2025

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை - டாக்டர் மனோகரனுடன் ஓர் உரையாடல்

https://maatram.org/?p=7993

03/01/2025

திருகோணமலை மாணவர் ஐவர் படுகொலை: நீதியின்றி தொடரும் 19 ஆண்டுகள்...

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985)
யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985)
லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985)
தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985)
சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985)

அரசாங்கம் மூன்று வருடங்களில் கொண்டு வரவிருப்பதாக கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் 13ஆவது திருத்தத்தில் உள்ள அ...
01/01/2025

அரசாங்கம் மூன்று வருடங்களில் கொண்டு வரவிருப்பதாக கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமானால் முதலில் தமிழர் அவை தங்களுக்கு வேண்டுமென்று உறுதியாக நிற்கவேண்டும். தமிழர்கள் வெறுக்கின்ற ஒரு ஏற்பாட்டை அரசியலமைப்பில் உள்ளடக்கவேண்டும் என்று அரசாங்கத்துக்கு என்ன தேவை? தமிழர்களும் சிங்களவர்களும் வேறுபட்ட காரணங்களுக்காக வெறுக்கின்ற ஒரு ஏற்பாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு இந்தியாவுக்கு என்ன தேவை?

Photo, INDIANEXPRESS பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால்தான் இலங்கையின் அரசியலமைப்புக்குக...

26/12/2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகளாகின்றன. கொலையாளிகள் சுதந்திரமாக நடமாட்டம்...

படுகொலையை நேரில்கண்ட, பிரதான சாட்சியாளரான முன்னாள் ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அன்று நடந்த சம்பவத்தை மாற்றத்துடன் பகிர்ந்துகொண்டார்.

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20ஆவது வருட நினைவுதினம் இன்றாகும். ஆழிப்பேரலையில் சிக்குண்டு உயிரிழந்த சுமார் 35 ஆயிரத்துக...
26/12/2024

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20ஆவது வருட நினைவுதினம் இன்றாகும். ஆழிப்பேரலையில் சிக்குண்டு உயிரிழந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடுபூராகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

📷 AP, kumanan

பாலஸ்தீன இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் நிறுத்துமாறு கோரி பாலஸ்தீன சுதந்திரத்துக்கான இயக்கமும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம...
20/12/2024

பாலஸ்தீன இனவழிப்பையும் ஆக்கிரமிப்பையும் நிறுத்துமாறு கோரி பாலஸ்தீன சுதந்திரத்துக்கான இயக்கமும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனமும் இணைந்து அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டன.

📷 virakesari.lk

மிருசுவில் வழக்கு: சட்ட சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வதன் அவசியமும் அவரசரமும் https://maatram.org/?p=3438
20/12/2024

மிருசுவில் வழக்கு: சட்ட சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வதன் அவசியமும் அவரசரமும் https://maatram.org/?p=3438

மிருசுவில் படுகொலையில் தண்டனை வழங்கப்பட்ட படைவீரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை சாட்சிகளின், விசாரணையை மேற்கொண்டவர்கள...
20/12/2024

மிருசுவில் படுகொலையில் தண்டனை வழங்கப்பட்ட படைவீரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை சாட்சிகளின், விசாரணையை மேற்கொண்டவர்களின், வழக்கு தொடுநர்களின், நீதிபதிகளின், பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் ஓங்கி விழுந்த அறையாகும்.

https://maatram.org/articles/8411

பட மூலம், CT மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை படுகொலை செய்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிப.....

யாழ். மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுவன் உட்பட 8 பேரின் 24 ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.குற்றவ...
20/12/2024

யாழ். மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுவன் உட்பட 8 பேரின் 24 ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

குற்றவாளிக்கு மன்னிப்பு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு இல்லை.

நான்கு நபர்கள் மற்றும் நான்கு பிள்ளைகளதும் சடலங்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு காணப்பட்டது. மேலும், சில சடலங்களில் அவர்களது கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டு காணப்பட்டது. கொலை செய்யப்பட்டவர்கள் நான்கு குடும்பங்களின் அங்கத்தவர்களாவர். ஒரு குடும்பத்தில் ஐந்து வயது மற்றும் பதின்மூன்று வயது சிறுவர்களுட்பட நான்கு அங்கத்தவர்களை இழந்து தவித்தது. மற்றுமொரு குடும்பம் தங்களுக்கு வருமானத்தைப் பெற்றுத் தந்த குடும்ப அங்கத்தவர்களை இழந்துள்ளது. மேலும், இரு குடும்பங்கள் அவர்களது பிரதான குடும்ப அங்கத்தவர்களை இழந்தது.

சபாநாயகராக (வைத்திய கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!
17/12/2024

சபாநாயகராக (வைத்திய கலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!

📢 දසවැනි පාර්ලිමේන්තුවේ කථානායකවරය‍ා ලෙස ගරු (වෛද්‍ය) ජගත් වික්‍රමරත්න මහතා ඒකමතිකව තේරී පත්වෙයි!

📢 பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கௌரவ (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!

📢 Hon. Dr. Jagath Wickramaratne appointed as the Speaker of the Tenth Parliament!

Address

6/5, Layards Road 5 Colombo
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Maatram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maatram:

Videos

Share

Category