01/11/2023
*அறிக்கை*
எதிர்வரும் எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் போட்டியிட தான் தயார் சல்மான் பாரிஸ் காட்டம்.
எதிர்வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் தனது தலைமையிலான குழு ஒன்று போட்டியிட போவதாகவும் தற்போது உள்ள கட்சிகள் பயந்து ஓடும் அளவுக்கு எதிர்கால ஆட்சி அமையப் போவதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சல்மான் பாரிஸ் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இவ்வளவு காலமும் மக்களை மடையர்களாக்கும் தேர்தல் நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொண்டு எமது கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்யும் ஊழல்வாதிகள் முற்றாக ஒழிய வேண்டும் என்பதாகும் கலப்படமற்ற தூய்மையான இளைஞர்கள் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
தன்னை மேலும் சூடாக்கி எதிர்வரும் தேர்தலில் உங்களை போட்டியிடாத அளவுக்கு மாற்ற வேண்டாம் என்பதாகவும் ஜனநாயக தேர்தல் ஒன்றையே தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.