Mubashshir Naqsibandi

Mubashshir Naqsibandi புனித நக்ஷிபந்தி தரீகாவின் ஆன்மீக போதனைகள் தமிழில்

Looong time relationship 💗
29/10/2024

Looong time relationship 💗

29/10/2024

Welcome to sri lanka Ya sayyathi❤️❤️ Abdul Razzak

அபு சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன், ஸஹாபாக்கள் ரஸுல்லல்லாஹு ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டிருந்த...
26/10/2024

அபு சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன், ஸஹாபாக்கள் ரஸுல்லல்லாஹு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டிருந்த அன்பு மற்றும் மரியாதை பற்றி அவர்கள் கூறும் போது"

'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை நேசிப்பதைப் போல யாரையும் நேசிப்பதை இந்த உலகில் நான் பார்த்ததில்லை' என்றார்கள்.

உர்வா இப்னு மஸ்ஊத் குரைஷிகள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, ​​ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பைக் கண்டு - காஃபிர்களிடம் திரும்பி வந்து, 'மக்களே! நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன், நான் ராஜாக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சபைகளுக்கு சென்றிருக்கிறேன், ஆனால் வல்லாஹி, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் அவரை மதிக்கும், நேசிக்கும் மற்றும் மரியாதை செய்யும் விதத்தில் ஒரு ராஜா அல்லது ஆட்சியாளர் கௌரவிக்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும், பெரிதாக்குவதையும் நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருவரின் கைகளில் அவரது உமிழ்நீரை அவர்கள் வாயில் இருந்து வெளியேற அனுமதிக்க மாட்டார்கள், அதை அவர்கள் முகத்திலும் உடலிலும் துடைக்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்யும்படி அவர் அவர்களுக்கு அறிவுறுத்தும்போது, ​​அவர்கள் அதை நிறைவேற்ற விரைகிறார்கள். அவர் வுழூ செய்யும்போது - அவர்கள் தண்ணீருக்காக ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போட்டியிடுகின்றனர். அவர் பேசும் போது அவர்கள் பணிவுடன் குரலைக் குறைக்கிறார்கள்.' ரசூலல்லாஹ் ﷺ எங்கள் ஈமானின் ஆத்மா, அவர் நம் இதயங்களின் கிப்லா, அவர் இந்த தீனின் மையம், மேலும் இந்த உலகில் உள்ள அனைத்தையும் விட அவர் நமக்கு மிகவும் பிரியமானவர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

'தங்கள் நபியின் வுழூவின் துளிகளைக் கூட பூமியைத் தொட அனுமதிக்காத மக்கள், அவருடைய ஒரு சொட்டு இரத்தத்தை பூமியைத் தொட எப்படி அனுமதிப்பார்கள்?' என்று வினவினார்கள்.

நம் முன்னோர்கள் காட்டிதந்த வழியிலே நாங்கள் நிலைத்திருக்கிறோமே தவிர நவீன குழப்பவாதிகளின் வீண் விவாதங்களால் குழம்பி போகவில்லை நம் கொள்கையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உள்ள பற்றும் கூடி கொண்டே போகிறது தவிர அவர்களுடைய நேசக் காற்று என்றும் குறைந்ததில்லை

Mubashshir naqsibandi

இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து வாழும் புனித மஸ்ஜிதுன் நபவியில்( மதீனா) உள்ள ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அல...
26/10/2024

இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து வாழும் புனித மஸ்ஜிதுன் நபவியில்( மதீனா) உள்ள ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய ரவ்லாவை துப்பரவு செய்யும் பாக்கியம் பெற்றவர்.

இவர் ஒரு நேர்கானலில் இவ்வாரு கூறுகிறார்:

" நான் தினமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடைய திரு ரவ்ளாவை துப்பரவு செய்வதற்காக நான் அந்த புனித அறையை அடையும் போதெல்லாம் என்னை படைத்த இறைவனானா அல்லாஹ்வின் மீது ஆணையாக அங்கு வானவர்களான மலாயிகத்துமார்கள் பிரசன்னமாயிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இன்னும் அந்த மலாயிகத்துமார்களில் சிலர் குர்ஆன் ஷரீபை ஓதும் சத்தத்தை பல முறை கேட்டிருக்கிறேன்.இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ரவ்லா அடங்கிய அரையில் நான் நுழையும் போதெல்லாம் அந்த திரு கபுரில் இருந்து வரும் சக்தியின் காரணமாக எனது உடல் நடுங்குவதையும் நான் உணர்ந்து இருக்கிறேன். சில நேரம் நான் அந்த ரவ்லாவை நெருங்கி செல்லும் போதெல்லாம் நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திரு குர்ஆன் ஓதும் சத்தத்தையும் கேட்டிருக்கிறேன் சில நேரம் நபியவர்கள் தொழுந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன் என்றார்.

சுபுஹானல்லாஹ் நமது தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்று நம்புவதே தூய்மையான ஈமான் ஆகும். ஆக அதை ஈமான் கொள்ளாதவர்கள் பற்றியும் அவர்களது விவாதங்களும் செல்லுபடியானதாகும்.

தீர்கமான தெளிவான அத்தாட்சிகளும் ஆதாரங்களும் இருந்த போதும் அதை நம்பாத மடயர்களுடன் விவாதம் செய்வதும் வீணான அல்லது முட்டாள்தனமான செயல் ஆகும்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது.

அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, தாரமி, பைஹகி, மிஷ்காத் – 120

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ர் அருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதை பார்த்தேன்.

முஸ்லிம் – 2-268

Mubashshir Naqsibandi

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதன்! விட்டுச்செல்லக்கூடிய சிறந்த விஷயங்கள் மூன்றாகும்...
25/10/2024

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ஒரு மனிதன்! விட்டுச்செல்லக்கூடிய சிறந்த விஷயங்கள் மூன்றாகும்:

1. அவனுக்காக இறைவனிடத்தில் பிராத்தனை செய்யும் ஒரு நேர்மையான மகன்

2. ஒருவருக்கு தர்மம் செய்து அதனால் அவரிடம் இருந்து பெறப்பட்ட துஹா

3. அவரது மரணத்திற்குப் பிறகு செயல்படும் அறிவு.

சுனன் இப்னு மாஜா

எந்த ஒரு விடயத்தை எடுத்தாளும் நாம் சட்டென கோபம் கொண்டுவிடுவோம். ஆனால் இறைவனின் நேசர்களாகிய அவர்கள் அமைதியானவர்களாகவும் அ...
25/10/2024

எந்த ஒரு விடயத்தை எடுத்தாளும் நாம் சட்டென கோபம் கொண்டுவிடுவோம். ஆனால் இறைவனின் நேசர்களாகிய அவர்கள் அமைதியானவர்களாகவும் அனைவரின் மீது அன்பு செலுத்துபவர்களாகவும் இருந்தார்கள். அதற்காக அக்கிரமங்கள், அநியாயங்கள் அல்லது இறைவனுக்கு எதிரான செயல்கள் உலகில் மேலோங்கும் போது அவர்களுடைய கோபம் எல்லையை மீறிவிடுகிறது.

இது இறைவனால் வெளியாக்கப்படும் கோபப் பார்வையாகும். அதன் பிரதிபளிப்பே நேசர்களான அவர்களின் கோபத்துக்கு காரணம் அன்றி சாதாரண மனிதர்கள் சட்டென படும் கோபத்துடன் இதை ஒப்பிட்டாள் நாம் தவறான சிந்தனையில் இருக்கிறோம்.

ஆகவே அவர்களின் கோபத்தில் நியாயம் உண்டு.

ஆனால் சில வழிமார்களின் அமைதி நம்மை வியப்பாக்கிறது.
அவர்கள் இறை விசுவாசத்தில் பெரியவர்களாக இருந்தாலும் அது அவருக்கும் அல்லாஹுக்கும் இடையே வெளியாகி பொதுவிழியில் மறைக்கப்பட்டு விடுகிறது.

மௌலானா ஷெய்கு நாழிம் அல் ஹக்கானி எவ்வளவு பெரிய வலியாக இருந்தாலும். அவர்களின் ஊரில் மக்கள் முதலில் அவரை முஹம்மது நாழிம் என்றே அழைத்தனர். ஏன் நமது ஷெய்குநாயகமான ஷெய்யது அப்தில்லாஹி பாஹிசி தகிஸ்தானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சொந்த ஊர் மக்கள் எவ்வாரு அழைத்தனர்?

அவர்கள் அந்த மாபெரும் இறை நேசரை ஹாஜி அப்தில்லா என்றே சாதாரணமாக அழைத்தனர். ஆகவே உங்களுடைய வீட்டுத் தோட்டத்தில் முளைத்த மல்லிகையின் அருமையும் வாசனையும் உங்களுக்கு பெரிதாக தெரிவதில்லை.

நல்ல மனம் மற்றுமே நல்ல மனதை அடயாளம் கண்டு கொள்கிறது.

இறை நேசர்களளுக்கு இறைவனால் ஒரு போர்வை போடப்படும்.
அந்த போர்வைக்குள் இருப்பவர்களே ஒருவருக்கொருவரின் தரஜாதை பற்றியும் சக்தியைபற்றியும் அறிந்து கொள்வார்கள். மற்றையவர்களுக்கு அவர்கள் சாதாரணமான மனிதர்கள் அழிந்து போகக் கூடியவர்கள் என்ற எண்ணமே இருக்கும். இது ஷெய்தானினால் உண்டாக்கப்படும் ஒருவித மாயையாகும். அவன் எல்லாவிதத்திலும் மனிதனை குழப்பிவிட்டு கடைசியில் நீதி தீர்பு நாளில். "இறைவனே! இந்த மனிதனுக்கு நீ சிந்திக்கும் ஆற்றளையும் உன்னை அஞ்சி வணங்கும் சுதந்திரத்தையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இறை நேசர்களையும் நன்மை எது தீமை எது என பகுத்தறியும் ஆற்றள் இவை அனைத்தையும் தந்த போதும் அல்லது என்னை பற்றி இவனுக்கு தெரிந்த போதும், இது என்னால் இயங்கும் சூழ்சி என்று அறிந்த போதும் இவன் தன் இச்சைக்கு கட்டுப்பட்டு தவறிச் சென்றதுக்கு நான் எப்படி காரணமாகுவேன்" என தனது வாதத்தை இறைவனிடம் கூறுவான்.

அப்போது அந்த மனிதன் சொல்வதற்கு வார்தையில்லாதவனாய் இருக்கும் போது அதே ஷைதானை படைத்த இறைவனின் நீதிமிகு வாதத்தால் ஷைத்தானும் தோல்வியடைந்து அந்த மனிதனும் ஷைத்தானும் நரகத்தில் தள்ளப்படுவார்கள்.

வீணாக வாதிட வேண்டாம் இறைவனின் அருள் எனும் போர்வை போர்தப்பட்டு கண்ணியம் செய்யட்பட்ட இறை நேசர்களின் மகிமையை காணும் அளவு அத்தகையோரின் கண்கள் பார்வையில்லாதவைகளாகிவிட்டன.
பார்வையில்லாதவன் வழிகாட்டியானால் எப்படி வழி கேட்கும் நபர் சரியாண வழியை நாட முடியும்.

ஆகவே இன்றைய அறிஞ்சர்கள் மூலமும் முடிவும் அற்றவர்களாய் நிறைவு பெறாதவர்களாகவும் வாதிட்டு நேரத்தையும் வாழ்கையையும் தவறான பாதையில் கொண்டு செல்கின்றனர்.

வீண் விவாதமாகிறது அருத்தமட்டதாகும். முட்டாள்களே தீர்மானம் இல்லாத விவாதம் செய்து சந்தேகத்திலேயே வாழ்கையை வீணாக்குவார்கள். அதே போல வீணான கோபம் எல்லாவற்றையும் இல்லாது செய்துவிடுகிறது. கோபம் தலைக்கு ஏறும் போதே மனிதன் மடையனாகிறான். ஆகவே இரண்டு சாராரின் கோபத்தை ஒன்றாக்க வேண்டாம்.

What does the Prophet sallallahu alayhi wasallam say when people talk about the basis of Islam?  If a man does not ask f...
25/10/2024

What does the Prophet sallallahu alayhi wasallam say when people talk about the basis of Islam?

If a man does not ask for good for others as much as he asks for himself, he is not a believer he does not become a believer.

A man who lives only for self-interest is unfit to live. He is considered a good man only when he seeks good for himself and others

Putting others before oneself is the most beautiful quality in a human being and yet it is the highest level of loyalty.

This is the first step of faith or iman. And Deen is a sign that the path remains in his mind

Such people are loved by all.

Sultanul Awliya Maulana Sheikh Nazeem Al Haqqani May Allah be pleased with him

Mubashshir Naqsibandi

மக்களே இஸ்லாத்தின் அடிப்படையைப் பற்றிப் பேசும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறுகிறார்கள். ஒரு மனிதன் த...
25/10/2024

மக்களே இஸ்லாத்தின் அடிப்படையைப் பற்றிப் பேசும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் தனக்காகக் கேட்பது போல் மற்றவர்களுக்காக நன்மையைக் கேட்கவில்லை என்றால், அவன் விசுவாசி அல்ல அதாவது அவன் நம்பிக்கை கொண்டவனாக ஆக மாட்டான்.

வெறுமனே சுய நலத்திற்காக மட்டும் வாழும் மனிதன் வாழத்தகுதியற்றவன். அவன் தனக்காகவும் பிறருக்காகவும் நன்மைகளை தேடும் போதே அவன் நல் மனிதனாக கருதப்படுகிறான்

தன்னை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது ஒரு மனிதனிடம் உள்ள மிகவும் அழகான குணமாகும் இன்னும் அது விசுவாசத்தின் உயர்ந்த நிலையாகும்.

இதுவே நம்பிக்கை அல்லது விசுவாசத்தின் முதல் படியாகும். மற்றும் தீன் எனும் மார்கம் அவனது மனதில் நிலைத்திருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்

அத்தகைய மனிதர்களே அனைவராலும் விரும்பப்படுவார்கள்.

சுல்தானுல் அவ்லியா மௌலானா ஷெய்கு நாழிம் அல் ஹக்கானி ரலியல்லாஹு அன்ஹு

Mubashshir Naqsibandi

24/10/2024

அன்றைய உலமாக்களின் நோக்கம் திரு மார்கத்தை பரப்புவதாய் அமைந்தது இன்றையவர்களின் நிலை சமூகவலைத்தலங்களில் celebrity ஆக வேண்டும் என்ற நோக்கமே காணப்படுகிறது.

சில நாட்களாக எனது பதிவுகளை குறிப்பிட்ட சிலர் அவர்கள் எழுதியதை போன்று பதிவு செய்து வருகின்றனர், இது பற்றி பலர் என்னிடத்தி...
14/10/2024

சில நாட்களாக எனது பதிவுகளை குறிப்பிட்ட சிலர் அவர்கள் எழுதியதை போன்று பதிவு செய்து வருகின்றனர், இது பற்றி பலர் என்னிடத்தில் முறைபாடு செய்த போதும் அது தொடர்பாக நான் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அந்த பதிவுகளை பதிவிடுவதென்பது லாபத்தை நோக்காக கொண்டதாக அமைகிறது. நாம் செய்த நல்ல விடயங்களிலும் கூடவே இருந்தும் அவர்கள் செய்தன போல் மக்களுக்கு காட்டி அதில் அவர்கள் ஆதாயம் தேடி கொள்கிறார்கள். இது லாப நோக்கம் இல்லாத சேவை நோக்குடைய தலமாகும். இங்கு நாம் நல் எண்ணங்களை உண்டாக்க முயற்சி செய்கிறோம். இன்னும் இது மௌலானா ஷெய்கு நாசிம் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஷெய்கு அத்நான் கப்பானி மற்றும் ஷெய்கு முஹம்மத் ஆதில் ரப்பானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நேரடி அனுமதியுடன் இயங்கும் தலமாகும்.கடந்த கால இடைவேலையில் மனிதர்களின் தன்மையை பற்றி நாம் அறிந்து கொண்டோம். பலரின் முரிவு மற்றும் துரோகங்களுக்கு பிரகும் விதை போல நிலைத்திருக்கிறோம் என்றால் அது இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரமாகும். முரித்துவிட்டு சென்ற சிலர் வெட்கம் இல்லாமல் நமது பதிவுகளை அவர்கள் எழுதியதை போல சாயல்லிடும் செயல் கேவலமானது. நாம் யாருடைய பதிவுகளையும் திருடி பதிவிட்டதில்லை. இறைவனால் எமக்கு அருளப்பட்ட சொந்த ஞானமே இங்கும் நாம் பதிவிட்ட பதிவுகள். இது நமது முன்னோர்கள் மூத்தோர்கள் நமக்கு கற்றுத்தராமல் நாம் அதைபற்றி அறிந்திருக்க மாட்டோம். நிச்சயமாக இறைவன் எம்மை இயக்குகிறான். நாமாகவே இயங்கவில்லை.
என்றும் அவனது அடிமை என்ற அந்தஸ்தே மேலானது

எப்போது தலைமைத்துமாகிறது அது தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதோ.. நிச்சயமாக அது உலக அழிவிற்கு விதையாக மாறிவிடுகிறது,...
14/10/2024

எப்போது தலைமைத்துமாகிறது அது தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதோ.. நிச்சயமாக அது உலக அழிவிற்கு விதையாக மாறிவிடுகிறது, ஜனநாயக முறைப்படி மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்படுபவனே தலைவனாவானே அன்றி அதிகாரத்தின் மூலமும் மத இன மொழியியல் வாதத்தின் மூலமாகவும் சமூகவலைத்தலங்களினூடாக சித்துக்கள் காட்டி மக்களை பித்துக்களாக்கி தலைமைத்துவத்தை பெறுதல் என்பது சூழ்சியே தவிர அது அறிவாற்றலாக கருத முடியாது. பொதுவாக மனிதர்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சித்து விளையாட்டுகளுக்கும் கண் கெட்டு வித்தைகளுக்கும் மயங்கிவிடுகிறார்கள்.

இறை நேசர்களான அவர்களை நீங்கள் நடிகர்களுடைய வரிசையில் சேர்த்துவிட வேண்டாம் அல்லது அவர்களை மெஜிக் மேன்களாக ஆக்கிவிட வேண்டாம். அவர்களுடைய நோக்கம் இறைவனா அல்லாஹ்வை திருப்திபடுத்துவதாய் இருக்கிறது. இதில் அவர்களால் நிகழ்த்தப்படும் அற்புதங்கள் அது இறைவனால் உண்டாக்கப்படுகிறது. இறைவனின் சக்தியும் அதிகாரமும் அவர்களிடத்தில் இல்லையெனின் நிச்சயமாக அவர்களும் உங்களை போன்ற மனிதர்களே. ஆகவே எங்களுடைய மூளைகளை மயக்கும் மாய விளையாட்டுகளில் இருந்தும் நீங்கி இறைவனின் உன்மை அதிகாரத்தை பெற்றுக் கொள்ளுங்கள். தலைப்பாகை மற்றும் ஜுப்பா போன்ற ஆடைகள் அது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை பின்பற்றும் நோக்குடனேயே அணியப்பட வேண்டுமே தவிர பெருமைக்காகவும் சமூகவலைத்தலங்களில் காட்சிப் பொருளாக அமைய அதை அணிந்தால் அவன் அந்த ஆடையை அணிய தகுதி அற்றவனாக கருதப்படுவான் ஆகவே விசுவாசமான அடியான் எல்லாவற்றிலும் தனது எஜமானை பயந்தவனாகவும் அவனுக்கு நன்றி செலுத்துபவனாகவும் இருக்கிறான்

One of the sheikhs of Naqshbandi Tariqa and one of the teachers of Muhyaddin Abdul Qadir ralyallahu anhu, kaja Abu Yusuf...
17/09/2024

One of the sheikhs of Naqshbandi Tariqa and one of the teachers of Muhyaddin Abdul Qadir ralyallahu anhu, kaja Abu Yusuf Ayyub Ramazani Shaykh Hammad said about Muhyaddin, "This Ajami Abdul Qadir will be a great sage in the coming time. He will be ordered by Allah to say that his feet are on the shoulders of all the awliya allah .he is All the mighty men of time will bow down to him" and those who come after him will bow down to them. They said that their unparalleled rule will last till the day of judgement

Warning❗️❗️❗️❗️ I condemn the Naqshibandi mureedeen who post bad or belittling posts about Muhiyadeen Abdul Qadir Jeelan...
17/09/2024

Warning❗️❗️❗️❗️
I condemn the Naqshibandi mureedeen who post bad or belittling posts about Muhiyadeen Abdul Qadir Jeelani ralyallahu anhu. I have never seen a Shaykh like Muhiyadeen Abdul qadir jilani who was recognized by many renowned sages as the leader of Sultanul Awliyas and whose spiritual rulership has not faded to this day. I Doubt and object to rumours of what some say as Sheikh Nasim and Sheikh Abdullah has said . we request Naqshibandi mureedeen and caliphs to stop saying that other tariqas have no power or other shaykhs have no spiritual connection or power to spread his tariqa and to serve his cause. All Tariqas are virtuous and its beautiful examples have created a positive revival in the people. If Nakshibandi Tariqa is powerful then why they not recite the Awrads created by them and reciting the Awrads of Qadiriya, Shaduliya, Maulavia tariqas comes to doubt. Don't forget that just as the foot of Muhyiddin rests on the shoulders of all Saints, so does the foot of Imam Saduli on their foreheads. I warn you not to blame other tariqa to spread your tariqa

Always with your love


I am back...

எச்சரிக்கை❗️❗️❗️❗️முஹீயத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி தவறாக அல்லது அவர்களை சிறுமை படுத்தி ப...
17/09/2024

எச்சரிக்கை❗️❗️❗️❗️
முஹீயத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி தவறாக அல்லது அவர்களை சிறுமை படுத்தி பதிவுகளை பதிவிடும் நக்ஷிபந்தி முரீதீன்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் . எக்காலத்திலும் சுல்தானுல் அவ்லியாக்களின் தலைவராக பல பிரசித்தி பெற்ற வழிமார்களால் அங்கீகரிக்கப்பட்டு இன்றுவரை மங்கிவிடாத தனது ஆன்மீக ஆட்சியாள் மக்களை கவறும் முஹீயத்தீன் ஆண்டகையை போன்ற ஒரு ஷெய்கை நான் கண்டதில்லை. சிலர் ஷெய்கு நாசிம் மற்றும் ஷெய்கு அப்தில்லா சொன்னதாக கூறும் கருத்துக்களில் சந்தேகமும் எதிர்பும் எம் புரத்தில் இருக்கும் என்பது மற்றும் அல்லாது நக்ஷிபந்தி முரீதீன்கள் மற்றும் கலீபாக்கள் தனது தரீகாவை பரப்பும் முயற்சியில் மற்றும் தனது நோக்கை செலுத்துமாறும் மற்ற தரீக்காக்களுக்கு சக்தி இல்லை அல்லது மற்ற ஷெய்குமார்களுக்கு ஆன்மீக தொடர்பு அல்லது சக்தி இல்லை என்று சர்சை கருத்துக்களை கூறுவதை நிறுத்துமாறு வேண்டுகிறோம். எல்லா தரீக்காக்களும் கன்னியமானவை மற்றும் அதன் அழகிய எடுத்துக்காட்டுகள் மக்களிடத்தில் நல் மறுமலர்சியை ஏற்படுத்துவிட்டது. நக்ஷிபந்தி தரீக்கா மற்றும்தான் சக்திவாய்ந்தது என்றிருந்தால் ஏன் அவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட அவ்ராதுகளை மற்றும் ஓதாமல் காதிரியா,ஷாதுலியா,மௌலவியா தரீக்காக்களின் அவ்ராதுகளை ஓதுகிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. எப்படி எல்லா ஒளிமார்களுடைய தோளில் முஹியத்தீனின் பாதம் அமைந்துள்ளதோ அவர்கள் அனைவரின் நெற்றியிரும் இமாம் சாதுலியின் பாதமும் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களுடைய தரீக்கத்தை பரப்ப மற்ற தரீக்கத்தை குறை சொல்ல வேண்டாம் என எச்சரிக்கிறேன்

என்றும் உங்கள் அன்புடன்


I am back...

17/09/2024

Don't spread wrong ideas among people, Naqshibandi is involved in activities that blame Sultanul Awliya muhyadeen Abdul Qadir Jilani ralyallahu anhu without anything to talk about.Don't misrepresent them.Maulana Shaikh Nazim al haqqani is not worthy to be the dust of the feet of muhyadeen .Naqshibandi people live in a fantasy world,Jealousy is also seen in them,I did not see good manners in them,They belittle other Tariqas to propagate their ideals,It does not look like the Naqshibandi that kaja Bahauddin blessed us with,Some are sowing hatred in the name of Naqshibandi Sheikhs The world runs on the immeasurable power of Muhiyadeen,I also live in the spiritual world with the symbol of Muhiyadeen,Don't spread lies to people

18/08/2024
      Jazakallah for everything
25/03/2024


Jazakallah for everything

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Mubashshir Naqsibandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mubashshir Naqsibandi:

Videos

Share


Other Colombo media companies

Show All