LankaFire.Com

LankaFire.Com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LankaFire.Com, News & Media Website, Wellawatta, Colombo.

நாளை நாட்டினை அண்டி நகரும் சூறாவளி குறித்த அறிவிப்பு!தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவ...
10/12/2024

நாளை நாட்டினை அண்டி நகரும் சூறாவளி குறித்த அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், அது மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து டிசம்பர் 11-ம் திகதி இலங்கை – தமிழக கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75ல் சில கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி: அரசாங்கம் எச்சரிக்கை!இலங்கைக்கு எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்க...
10/12/2024

வாகன இறக்குமதி: அரசாங்கம் எச்சரிக்கை!

இலங்கைக்கு எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும் என விளம்பரங்களை வெளியிடும் முகவர் நிலையங்களுக்கு அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.

அதன்படி, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவித்தார்.

அதன் பிரகாரம் சில கட்டுப்பாடுகளுடன் வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

எனவே, எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிப்பதாக விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம்.

எதிர்காலத்தில் நாட்டின் கையிருப்பினை கருததிற் கொண்டு வாகன இறக்குமதி குறித்து தீர்மானம் எடுக்கப்படும். பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்தும் எந்த முடிவினையும் நாங்கள் எடுப்பதற்கு தயார் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அ...
10/12/2024

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம்,

சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இன்று (10) காலை 6.45 மணியளவில் நிட்டம்புவ புகை பரிசோதனை நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த கார் மீ...
10/12/2024

இன்று (10) காலை 6.45 மணியளவில் நிட்டம்புவ புகை பரிசோதனை நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த கார் மீது பிரதான வீதியில் நுழைந்த பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எம்.பி பயணித்த ஜீப் மோதி பெண் உயிரிழப்பு!யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதி ...
10/12/2024

எம்.பி பயணித்த ஜீப் மோதி பெண் உயிரிழப்பு!

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதி பெண்ணொருவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்ணுக்கு 79 வயது.

கொழும்பு - புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துமீறல்: அர்ச்சுனா எம்பிக்கு எதிராக முறைப்பாடு!நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக யாழ்ப்ப...
10/12/2024

அத்துமீறல்: அர்ச்சுனா எம்பிக்கு எதிராக முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தியமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்து, ராஜபக்ஸ அரசின் இரு முன்னாள் அதிகாரிகளையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் அம...
10/12/2024

பாரிய ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்து, ராஜபக்ஸ அரசின் இரு முன்னாள் அதிகாரிகளையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அந்நாடு தடை விதிப்பு

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு உலகில் ஊழல் .மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கின்றது.

குறிப்பிடத்தக்க ஊழல் ,பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என 14 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை அமெரிக்கா இது தொடர்பிலான பட்டியலில் இணைத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் பிரிவு 7031 சியின் படி இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள்.

மேலும் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் பல கொள்கைகளிற்கு இணங்க மேலும் பலரிற்கு விசா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா ஆராய்கின்றது.

கபில சந்திரசேன – ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதமநிறைவேற்றதிகாரி

7031 சி பிரிவின் அடிப்படையில் கபிலசந்திரசேன ஊழலில் ஈடுபட்டார் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்து அவரை குறிப்பிட்ட பட்டியலில் இணைக்கின்றது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றியவேளை இலங்கை ,எயர்பஸ்ஸினை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக இவர் இலஞ்சம் பெற்றார்.

இந்த செயற்பாட்டிற்காக இவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டு அவர்களிற்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்கவீரதுங்க

7031 சி பிரிவின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க அளவு ஊழலில் உதயங்க வீரதுங்க ஈடுபட்டார் என அமெரிக்கா அறிவித்து குறிப்பிட்ட பட்டியலில் இணைக்கின்றது.

இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது உதயங்க வீரதுங்க ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்தார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிற்கும் பயணத்தடை விதிக்கப்படுகின்றது.

09/12/2024
*தேசியத்தலைவரின் பெயரை களங்கப்படுத்தும் போலிகள் : வெளியான ஆடியோ ஆதாரம்*👇👇👇👇👇
07/12/2024

*தேசியத்தலைவரின் பெயரை களங்கப்படுத்தும் போலிகள் : வெளியான ஆடியோ ஆதாரம்*

👇👇👇👇👇

for more news: http://www.lankafire.com/Subscribe to us: https://www.youtube.c...

*தேசியத்தலைவரின் பெயரை களங்கப்படுத்தும் போலிகள் : வெளியான ஆடியோ ஆதாரம்*👇👇 *CLICK*👇👇👇https://youtu.be/kUsGXgqhKE4
07/12/2024

*தேசியத்தலைவரின் பெயரை களங்கப்படுத்தும் போலிகள் : வெளியான ஆடியோ ஆதாரம்*

👇👇 *CLICK*👇👇👇

https://youtu.be/kUsGXgqhKE4

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் : வெளியான தகவல் போலியா.??https://www.lankafire.com/8450/
02/12/2024

ரஷ்ய படையில் யாழ் இளைஞர்கள் : வெளியான தகவல் போலியா.??

https://www.lankafire.com/8450/

02/12/2024

கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!!

Website Link :- www.Lankafire.Com

Youtube Link :- https://youtu.be/QGztU47MvbY

www.lankafire.com/pvoc
26/11/2024

www.lankafire.com/pvoc

அதிபர் திரு.சின்னப்பா நாகேந்திரராசா அவர்களின் பாடசாலை மீதான மோசடி வேட்டையின் ஒரு பகுதி அம்பலம்.

தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்..!!!
16/11/2024

தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்..!!!

தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் செல்லும் நாமல்.!! 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரம...

சாப்பிட்ட தட்டை கழுவுவதற்கு கற்றுக் கொடுங்கள்....இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்த...
09/11/2024

சாப்பிட்ட தட்டை கழுவுவதற்கு கற்றுக் கொடுங்கள்....

இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார்.

"அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்கவில்லை.

"ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன்.

"இல்லமா இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது".

மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்கு கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்...

சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்....
முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள்... பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,...

(வீட்டைக் கட்டிப் பார்..
கல்யாணம் முடித்து பார்)

என்பது ஒரு பழமொழி..
இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்று சேர்த்து கொள்ளலாம்.

சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்....
பெண்களின் நிலை உங்களுக்கு புரியும்...

படித்தேன் பகிர்ந்தேன்....

Address

Wellawatta
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when LankaFire.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Colombo

Show All