AN Creative

AN Creative https://www.youtube.com/channel/UCTl1bZiG-hZwPn2i7Vq74sQ உயர்த்திடு...! உயர்ந்திடு...!

17/06/2023

We are pretty excited to announce that the 2nd runner-up at the Rugby tournament of the Inter-Faculty Sports Festival of South Eastern University of SriLanka is the FIA RUGBY TEAM 🥳
The untiring effort, dedication and commitment the entire team has put in, are beyond words!!!
Congratulations on the great win and may this victory motivate you to achieve more in the future !!

-up .

17/06/2023

We extend our heartfelt congratulations to the FIA VOLLEYBALL TEAM of South Eastern University of SriLanka, for having emerged victorious at the Inter-Faculty Sports Festival 2023 🎊
This victory 🏆 is non other than a tribute to your hard work, passion and determination 💥
It's indeed worth congratulating the team for making our faculty proud and wish that this achievement inspires you to aim even higher in the future ✨
#

17/06/2023

🎉 Let's celebrate the road race team of Faculty of Islamic Studies and Arabic language of South Eastern University of Sri Lanka for their impressive achievement as the 2nd runner-up in the Inter-Faculty Sports Meet 2023! 🏆🚴‍♂️ Your determination, stamina, and competitive spirit have set an inspiring example for others. 🙌💥 Congratulations on this remarkable accomplishment, and may your future races be filled with triumphs! 👏✨

17/06/2023

10th Al Islah Magazine Body
Muslim Majlis 2022/23
SEUSL

13/06/2023

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எமது AN CREATIVE FB page இற்கு ஆரம்ப கட்டத்தில் ஷஹ்னா ஸப்வான் தந்த ஆக்கம்💔

இன்று அவரது ஜனாஸா செய்தியை கேட்கும் போது உண்மையில் இவ்வளவு தான் இந்த உலக வாழ்க்கை என்று எண்ணத் தோன்றுகிறது.

ஏக இறைவன் அவரது மண்ணறையை விசாலமாக்கி மறுமை வெற்றியையும் தந்தருள்வானாக!

اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها واسكنها الفردوس الأعلى يارب العالمين.
واجزها عنا وعن اليتيمات خيرا يا أرحم الراحمين....

INTER FACULTY SPORTS FESTIVAL 2023Volleyball 🏐CHAMPIONS FACULTY OF ISLAMIC STUDIES AND ARABIC LANGUAGE.SOUTH EASTERN UNI...
09/06/2023

INTER FACULTY SPORTS FESTIVAL 2023

Volleyball 🏐

CHAMPIONS

FACULTY OF ISLAMIC STUDIES AND ARABIC LANGUAGE.

SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA.

INTER FACULTY SPORTS FESTIVAL 2023RUGBY2nd RUNNER-UPFACULTY OF ISLAMIC STUDIES AND ARABIC LANGUAGE.SOUTH EASTERN UNIVERS...
05/06/2023

INTER FACULTY SPORTS FESTIVAL 2023

RUGBY

2nd RUNNER-UP

FACULTY OF ISLAMIC STUDIES AND ARABIC LANGUAGE.

SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA.

21/04/2023
16/04/2023

" சங்கை மிகு ரமழானின் மாண்பு சொல்வவா " Ramadan Islamic Song

Lyrics Vocal & Composed : Nuzaila Badurdeen

21/03/2023

ரமழான் பாடல்

மீண்டும் ஒரு ரமழான் நம்மை நோக்கி வந்ததே!!!

இசையற்ற ஓர் அழகிய பாடல் இது...

21/03/2023
17/03/2023

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்ன செய்கிறது? இலங்கை முஸ்லிம்கள் பார்க்க வேண்டிய காணொளி

08/03/2023

பெண்கள் International Women's Day (கவிதை தொகுப்பு)

Media Partner AN Creative AN Quotes Design By Akeef Nasoor
20/02/2023

Media Partner AN Creative AN Quotes
Design By Akeef Nasoor

15/01/2023

இது போன்று உங்களுடைய ஆக்கங்களும் இடம்பெற வேண்டுமா?????

💬 *உங்கள் ஆக்கங்களை சமர்ப்பிக்க வேண்டிய Whatsapp Link*
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://wa.me/message/YIQ2PM57ORQTL1

1. உங்களுடைய ஆக்கம். (கருத்து/சிந்தனை)

2. உங்களுடைய பெயர் (ஆக்கத்தில் குறிப்பிட வேண்டியது போல்)

Organized by:
*AN QUOTES* இது சிந்தனையின் புதுமை

02/01/2023

உதிர்ந்த இலைகள் – நூல் விமர்சனம்


உதிர்ந்த இலைகள்
கவனிக்கப்படாத உணர்வுகளை ஒன்று திரட்டி அதற்கு வண்ணமிட்டு கவிதையாய் வார்த்து இருக்கிறார். கவிதையின் ஆசிரியர் நூர் ஷாஹிதா. ஒரு கவிதைப் புத்தகமோ கதைப் புத்தகமோ அவை ஈர்க்கப்படுவது தலைப்புகளில் ! 20 கவிதைப் பெண்களின் அழகான அணிவகுப்பை பரிசளிக்கும் இந்த மேடைக்கு உதிர்ந்த இலைகள் என்று பெயர் !

இரவின் மடி உறக்கம் கூட இறையே உன் பணி செய்வேன் என்பதைப் போல முதற்பக்கமே இறைவணக்க கவிதை. நட்பின் கோப்பையில் இறைசுவையை வழியவழியத் தந்திருக்கிறார். கடவுளை நண்பனாய் வரித்து பாமாலைச் சூட்டுகிறார்.

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு சொல் நயம் பேசுகிறது. உறவுகளின் உன்னதம், ஒற்றுமை, தாய்மை, ஆண்மை, தோழமை என்று ஏகப்பட்ட மை வண்ணங்களை சுமந்து வந்திருக்கிறது புத்தகம். புரிபடாத வார்த்தைகளில் கவி வடித்து இலக்கிய அன்னம் பகிராமல், எளியோருக்கும் புரியும் வகையில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அதை தொகுத்திருக்கும் வண்மையில் ஆசிரியர் வெற்றி பெற்று இருக்கிறார். படித்தவுடன் சட்டென மனதில் பல வரிகள் நினைவுகளை கீறிவிட்டு செல்கிறது. அன்பையும் நேசத்தையும் மையப்படுத்துகிறது.

கரங்களின் இணைப்புச் சங்கிலியை முகப்பு சித்திரமாய் வைத்து உறவுகளின் உன்னதம் சொல்லும் கவிதை உறவுகள்.

சிற்றெரும்புக்கு மட்டுமல்ல
சிறகு விரித்து பறக்கும்
பறவைகளுக்கும் அடைக்கலமான மரம்….

உறவுகள் உணர்வுகளின் மரம் !
உயிருடன் கலந்த ஒரு வரம் ! என்று உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்த்துகிறது. இக்கவிதை அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும். என்ற திருக்குறளின் பொருளை உணர்த்துகிறது.

பெரும்பாலும் கவிதைகள் பெண்களைச் சுற்றி அவர்களை வர்ணிப்பதிலும், அவர்களின் மேன்மையைச் சொல்வதிலும் புனையப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இக்கவிதை தொகுப்பிலும் பெண்மையை மேம்படுத்தி ஒரு கவிதை இருக்கிறது. அதேபோல் பெண் மனசு ஆழமென்று கவிஞர்கள் பாடியிருக்க, அதையே மாற்றி ஆணின் மனதைப் படிப்பது கடினம் என்று புதிய களம் கொண்டு வந்திருக்கும் கவிஞர் அவன் ஒரு விசித்திர கணிதம் என்ற சொல்லாடலை மிதக்க விட்டிருக்கிறார்.

எதிரும் புதிரும் ஒரு கருப்பை தாங்கிய இரு ஜீவன்களுக்குள் நடக்கும் பாசப் போராட்டம் இக்கவிதை

தங்கையின் அன்பு கண்சிமிட்டும்
விண்மீனைப் போன்றது
அண்ணனின் அன்பு மின்சாரம்
தடைபட்ட இரவில் ஏற்றப்படும்
மெழுகைப் போன்றது

சகோதர உறவில் அன்பிற்கும், குறும்பிற்கும், ஆதரவிற்கும் அக்கறைக்கும் பங்குண்டு என்பதை விளக்கும் கவிதை வரிகள் ரசிக்க வைக்கிறது. நட்பின் அகராதிக்குள் தோழமையின் வாசம் நாசியை நனைக்கிறது தோழி என்னும் கவிதை வரிகளை வாசிக்கும் போது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர்அன்புணர்வுடன் அணுகாதவரையில் எந்த உறவும் தலை நிமிரவே முடியாது. ஆனால் நிறைய பேர்கள் நம் நினைவுகளில் மட்டும் அவ்வப்போது சிட்டுக்குருவின் கூட்டைப்போல் இதமாய் வாழ்வார்கள் அவர்களிடம் ஒரு நேசம் இழையோடியிருக்கும் அது நட்பின் வலிமை கவிதை வரிகளில் தெள்ளத்தெளிவாக ஓவியமாய் வரையப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து பேசப்படுவது மட்டும்
பாசம் என்றில்லை
தொடரப்படாத பேச்சும் பாசம்தான்.

நல்லவர்கெல்லாம் சாட்சிகள் உண்டு ஒன்று மனசாட்சி என்று கவியரசரின் வரிகள் தான் முகமூடி கவிதையை வாசிக்கும் போது தோன்றுகிறது. நாம் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முகமூடியை மனிதன் அணிந்து கொள்கிறான்.

முகத்திற்கு ஒரு நிறம் தான் மூகமூடிக்கு பலநிறங்கள்.. என்ற வரிகள் குறிப்பிடுகிறது. ஒரு சலி சொல்லி அதற்கு நிவாரணம் சொல்லும் ஒரு மருத்துவக் குறிப்பேட்டைப் போல இக்கவிதை.

நம் மன அலகுகளால் கொத்தித் தின்ன அநேக அன்புப் பொறிகள் தூவப்பட்டது இக்கவிதைத் தொகுப்பு, அதிலும் கொரானாவும் நானும். நிகழ்கால நடப்பை பட்டவர்த்தனமாக நெற்றிப் பொட்டில் அறைகிறது.

இலவச கல்வியை இலவசமாக படித்த காலம் போய்
அதை கைப்பேசிக்குள் காசு கொடுத்து
படிக்கும் நிலை வந்து விட்டது.

ரீசார்ஜ் ஏதும் இன்றியே கடைசியில் என்னோடு
சேர்ந்து கைப்பேசியும் பட்டினியால் வாடும்…

இலவசமும் கூட பணவசமானது தான்
கொடுமையிலும் கொடுமை – இவை நான் ரசித்த வரிகள்

தற்காலிகமானது கவிதைவரிகள் தவிக்க வைக்கிறது வாசிக்கும் தருணத்தில்

நம்மை இலகுவாக்கிக் கொள்ளும் நகை, அதன் மதிப்பிற்கு விலை நம் சிந்தனை என்னும் விதை. எத்தனையோ பதட்ட உணர்வுகளில் பய நிமிடங்களில் நம்மை திடமாக்கிக்கொள்ளும் வலிமை எதிராளியின் புன்னகைக்கு இருக்கிறது. அது எத்தனை நிறங்களில் வெளிப்படுகிறது என்பதை புன்னகை என்னும் கவிதை விளிக்கிறது.

ஏமாற்றம், துரோகம், அவமானம், அலட்சியம், கோபம், கவலை, விரக்தி, சுயநலம், அக்கறை என நவரத்தினங்களால் கோர்க்கப்பட்ட நகை அதுவே புன்னகை

நவரத்தினங்களின் நகை எங்கும் பிரயோகித்துப் பார்க்காத ஒரு வார்த்தை. அருமை

ஒவ்வொரு கவிதையைப் பற்றியும் ஒரு சிறு கட்டுரையே தரலாம் ஆனால் அணிந்துரையில் சிலதை அள்ளித்தெளித்தால் மட்டுமே முழு வர்ணங்களை வாசிக்க புத்தகம் தேடத் தோணும் என்பதால் சில கவிதை வரிகள் உங்கள் பார்வைக்காக நூலில் இருந்து.

இருண்ட வானம்தானே விடியும்

தோற்றுப் போவது திறமைகள் அல்ல மனங்கள்

உலகின் நடைமுறைகள் எல்லாவற்றையும் தூர இருந்து ரசிக்க விரும்புகிறேன் நான் ஆம், மழையின் ஜில்லிப்பு, பூக்களின் நுகர்வு, இவையெல்லாம் ரசிக்கும் அத்தனை தனிமை பிடித்துப் போயிருக்கிறது. சில நிஜங்கள் பொய்களை தின்று விடுகிறது. தனிமை அத்தனை பலவீனங்களையும் மாற்றும் வல்லமை பெற்றிருக்கிறது.

அதை கவிஞர் இவ்வரிகளில் குறிப்பிடுகிறார்

என் உணர்வுகளை எல்லாம் உமையாக்கிவிட்ட பின்னரும் நான் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா ? என்ற கேள்வியுடன்.

போதுமானது சில கனவுகளுக்கு உறக்கம் தேவையில்லை உழைப்பு போதுமானது. சில கோபங்களுக்கு வார்த்தைகள் தேவையில்லை பார்வை போதுமானது. இக்கவிதையில் ஒவ்வொரு வரிகளுமே மேற்கோள் காட்டவேண்டியவையே.

மெளனம் திமிராக புதிராக ஊமைகளின் மொழியாக, கண்ணீர்த் துளியாக அருமையான வரிகளை வார்த்தைகளாகவும் வடிக்க முடியும் அதை உணர்த்துகிறது மெளனம் கவிதை.

கற்றுக்கொண்டால் அறிவுரைகள் தேவையில்லை
ஏற்றுக்கொண்டால் அனுபவங்கள் தேவையில்லை,

பொய்களுக்கு உள்ள அழகு உண்மைக்கு இருப்பதில்லை ?

கண்ணீர்துளிகள் ஒற்றைப் புன்னகைக்குள் புதைக்கபட்டிருக்கத் தேவையில்லை இதுதான் உலகம்.
நாம் எதை தருகிறோமோ அதையே உலகமும் நமக்குத் தருகிறது. அது தனித்து எங்கோ இயங்கவில்லை நமக்குள்தான் நாம்தான் உலகம். நாம் அனைவரும் வெள்ளைத்தாளாகப் படைக்கப்பட்டு இருக்கிறோம். கடைசி வரையில் வெள்ளைத்தாளாக வாழ்க்கையினை முடித்துவிடாமல் அதில் பொருளற்ற கிறுக்கல்களைக் கிறுக்கித் தள்ளலாம், குப்பையாக கசக்கியும் எறியலாம், அர்த்தமுள்ள ஆயிர
ம் விஷயங்களை எழுதி வைக்கலாம், கவிதையும், காவியத்தையும் பதிந்து வைக்கலாம்.

இந்த கவிதைப் புத்தகத்தின் வெற்றுப்பக்கங்கள் ஆக்கப்பூர்வமான வழிகளை உரைக்கிறது. அக்கறையான அன்பை போதிக்கிறது. உறவுகளை உணருங்கள் என்று உரக்கச் சொல்கிறது. வாசிக்கும் உள்ளங்களில் தன்னம்பிக்கை விதை தூவச்செய்கிறது. தலைப்பு உதிர்ந்திருந்தாலும் அவ்விலைகள் அனைத்தும் மக்கி உரமாக மாறி இன்னொரு விளைநிலத்தை தோற்றுவிக்கும் கிரியாசக்தியாக விளங்குகிறது.

இவை உதிர்ந்த இலைகள் என்று பெயர்பெற்றாலும் தளிர் இலைகளே தன் கருத்து செறிவுகள் மூலம் என்பதை உணர்த்தியிருக்கிறார் கவிஞர். நூர் ஷாஹிதா

முதல் கவிதைத் தொகுப்பினைத் தொடர்ந்து இன்னமும் சமுதாயம் சார்ந்த கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு பாராட்டும்.

லதாசரவணன்
எழுத்தாளர்

For Status & Share 🤝🏼
01/09/2022

For Status & Share 🤝🏼

N.D.H அப்துல் கபூர் ஹாஜி அவர்களால் 1931 ஆம் ஆண்டு மஹரகமை பிரதேசத்தில் சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டு கி...
18/08/2022

N.D.H அப்துல் கபூர் ஹாஜி அவர்களால் 1931 ஆம் ஆண்டு மஹரகமை பிரதேசத்தில் சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 90 வருடங்களையும் கடந்த கபூரிய்யா அரபுக் கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் பாரிய ஒரு சொத்தாகும்.

பல பிரபல அறிஞர்களையும், புத்தி ஜீவிகளையும், உலமாக்களையும், உருவாக்கிய இக் கல்லூரியையும், அதன் நிலப்பரப்பையும், *வக்ஃப் சட்டம்* இல்லை என்றும், அது தம்முடைய தனிப்பட்ட சொத்து என்றும், அதனை வியாபார நோக்கில் கைப்பற்ற முயல்கிறது கபூர் ஹாஜியார் அவர்களின் மூன்றாவது பரம்பரையில் வந்த வாரிசுகளில் ஒருவர்.

அனைத்து முஸ்லிம்களும் உங்களுடைய பிரார்த்தனைகளில் இக் கல்லூரியையும் அதன் உடைமைகளையும் பாதுகாக்க இறைவனிடம் கையேந்துங்கள்.

இது நம் அனைவரினதும் அமானித சொத்தாகும்


13/11/2021

Poster DESIGN BY AN Graphics Akeef Nasoor

Use our unique creative to impress your potential customers.
Price & More Details:

Whatsapp & Call : 0769027026, 0754059064
Email: [email protected]
FaceBook : AN Graphics
Click and View Our More Designs https://www.pinterest.com/akeefn/_created/

13/11/2021

Poster DESIGN BY AN Graphics Akeef Nasoor
Use our unique creative to impress your potential customers.

Price & More Details:
Whatsapp & Call : 0769027026, 0754059064
Email: [email protected]
FaceBook : AN Graphics

Click and View Our More Designs https://www.pinterest.com/akeefn/_created/

எமது AN CREATIVE இன் YouTube Channel Hack செய்யப்பட்டுள்ளது.
08/10/2021

எமது AN CREATIVE இன் YouTube Channel Hack செய்யப்பட்டுள்ளது.

Address

Central Road
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when AN Creative posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AN Creative:

Videos

Share

Category