MpTv

MpTv LATEST NEWS UPDATE SIR LANKA TAMIL NEWS CHANNEL VIDEO& MOVIE CREATOR MEDIA PEOPLE TV
(1)

ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வருகிறதுதெஹ்ரான்,ஐ.ஆர்.என்.ஏ - ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றி...
19/05/2024

ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வருகிறது
தெஹ்ரான்,

ஐ.ஆர்.என்.ஏ - ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் வடமேற்கு ஈரானில் உள்ள மலைப் பகுதியில் "கடினமாக தரையிறங்க" கட்டாயப்படுத்தப்பட்டதை அடுத்து, விரிவான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையே உள்ள டிஸ்மார் காட்டில் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுடன் அணையை திறந்து வைக்கும் நிகழ்வில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

உள்ளூர்வாசிகள் IRNA இன் நிருபரிடம், சிறிது நேரத்திற்கு முன்பு இப்பகுதியில் "ஒலிகள்" கேட்டதாக தெரிவித்தனர்.

ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட முழு ஆயுதம் கொண்ட தேடல் மற்றும் மீட்பு குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஈரானிய ஆயுதப் படைகளும் கமாண்டோ பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளன.

இப்பகுதியின் கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் கடினமான வானிலை காரணமாக, குறிப்பாக அப்பகுதியில் உள்ள அடர்ந்த மூடுபனி காரணமாக, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு சிறிது நேரம் ஆகலாம் என்று ஐஆர்என்ஏ செய்தியாளர் கூறினார்.

ஈரானின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஐஆர்என்ஏவிடம், எட்டு ஆம்புலன்ஸ்கள் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடுமையான மூடுபனியால் விமான மீட்பு முயற்சிகள் சாத்தியமில்லை என்றும் கூறினார்.

சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்ட உடனேயே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய அவசர மருத்துவக் குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பாபக் யெக்டபராஸ்ட் கூறினார்.

உதவி வழங்குவதற்காக அவசர ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் கடும் மூடுபனி காரணமாக அந்தப் பகுதியில் தரையிறங்க முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையாது எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார் - அநுரகுமார திஸாநாயக்கஜனாதிபதி தேர...
19/05/2024

பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையாது எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார் - அநுரகுமார திஸாநாயக்க

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் என்ற வேறுபாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ,தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு. பாராளுமன்றத்தைக் கலைப்பது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையாது எனத் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மஹரக பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஓய்வூதியலாளர்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு அதேபோல் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.ஆகவே இவ்விரு தேர்தல்களும் நிச்சயம் வெகுவிரைவில் இடம்பெறும்.

பாராளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது தற்போதைய பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. பதவி காலம் நிறைவடையும் வரை பதவியில் இருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பாரே தவிர பதவி காலத்தை வரையறுத்துக்கொள்ளமாட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்தால் ஜனாதிபதிக்கு அதனால் எவ்வித பயனும் கிடைக்காது.ஜனாதிபதி வசமுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க,காஞ்சன விஜேசேகர,செஹான் சேமசிங்க உட்பட பெரும்பாலானோர் ஜனாதிபதியை விட்டு மீண்டும் பொதுஜன பெரமுன பக்கம் செல்வார்கள்.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டால் அது ஜனாதிபதி தேர்தலுக்கும் செல்வாக்கு செலுத்தும்.பொதுத்தேர்தலின் பெறுபேறுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்களாணையின் பலத்தை உறுதிப்படுத்தும் ஆகவே பொதுத்தேர்தலுக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் ஜனாதிபதி நெருக்கடிக்குள்ளாகுவார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் தேவை பஷில் ராஜபக்ஷவுக்கு உண்டு.ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேட்பாளர் ஒருவர் ராஜபக்ஷர்களிடம் இல்லை என்பதால் அவர்கள் பொதுத்தேர்தல் குறித்து அக்கறை கொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வெற்றிப் பெற்றால் ராஜபக்ஷர்களின் அரசியல் அத்துடன் நிறைவடையும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள் பண்டாரநாயக்கர்களின் அரசியல் செல்வாக்கை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கர்களின் அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, ஆகவே இது போன்ற நிலை பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படுமா என்ற அச்சம் ராஜபக்ஷர்களுக்கு உண்டு. ஆகவே ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதை ராஜபக்ஷ குடும்பம் விரும்பவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்ஷர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டும் இன்றும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் இடம்பெற வேண்டிய நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக தேர்தல்களை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். எந்த தேர்தல் முதலில் இடம்பெற்றால் தமக்கும், தமது குடும்பத்துக்கும் பயன் கிடைக்கும் என்பதை பற்றி சிந்திக்கின்றார்களே தவிர மக்களின் நிலைப்பாடு மற்றும் அரசியல் சிந்தனைகள் பற்றி ராஜபக்ஷர்கள் யோசிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் முறையாக நடத்தப்படும். ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்ற வேறுப்பாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ,தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம். எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு என்றார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று மாலை தீ ப...
19/05/2024

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று மாலை தீ பரவியுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

நாட்டில் பல பகுதிகளில் நாளையும் கடும் மழைமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெ...
18/05/2024

நாட்டில் பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை (19) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (18) முதல் அடுத்த சில நாட்களில் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அரச சொத்துக்களைத் தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பிற்போடுமாறு கோரிக்கை!அரச சொத்துக்களைத் தனியார் மயமாக்க...
13/05/2024

அரச சொத்துக்களைத் தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பிற்போடுமாறு கோரிக்கை!

அரச சொத்துக்களைத் தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பிற்போடுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியைத் தணிக்கும் நடவடிக்கையாக அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க தாம் முன்மொழிவதாக ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாட்டில் தேர்தல் ஒன்றின் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்தலில் அவர்கள் பெறும் ஆணையின்படி கையாள முடியும்.

எனினும், சில தேசிய சொத்துக்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை விற்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

எனவே, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் எந்தவொரு மறுசீரமைப்பும் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் தேசிய பாதுகாப்புக்கு இசைவான முறையில் கலந்தாலோசித்து நடைபெற வேண்டும்.

இந்நிலையில், சில அரசியல் கட்சிகள் பிடிவாதமான அணுகுமுறையைத் தனியார் மயமாக்கும் திட்டத்தில் கொண்டிருப்பதாக ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாம் நாட்டை ஆட்சி செய்த போது பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது என்றும் தனியார்மயம் குறித்த விவாதம் கூட நடைபெறவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

13/05/2024

Ramabanam_ movie

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஜேம்ஸ் எண்டர்சன்!இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ...
12/05/2024

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஜேம்ஸ் எண்டர்சன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் எண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

2003 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமான எண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.

தனது முகநூல் கணக்கில் பிரியாவிடைக் குறிப்பில், தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்துப் பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் நன்றி என எண்டர்சன் கூறியுள்ளார்.

41 வயதான எண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தால், அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை சமன் செய்திருக்க முடியும்.

ஜேம்ஸ் எண்டர்சன் இங்கிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19, இருபதுக்கு 20 ஓவர் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் போக்குவரத்திற்காகக் குளிரூட்டப்பட்ட பஸ்கள்!சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததைக் கருத்திற் கொண்டு முதன்முறையாக கிழக...
12/05/2024

உள்ளூர் போக்குவரத்திற்காகக் குளிரூட்டப்பட்ட பஸ்கள்!

சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததைக் கருத்திற் கொண்டு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காகக் குளிரூட்டப்பட்ட பஸ்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பொதுமக்களின் வசதியான பயணத்திற்காக உள்ளூர் சேவைக்காகக் குளிரூட்டப்பட்ட பஸ்களுக்குப் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

பாராளுமன்றில் டயனாகமகே போன்று 10 பேர்டயானா கமகே போன்று வேறு பல நாடுகளில் பிரஜா உரிமை பெற்ற மேலும் 10 பாராளுமன்ற உறுப்பின...
11/05/2024

பாராளுமன்றில் டயனா
கமகே போன்று 10 பேர்

டயானா கமகே போன்று வேறு பல நாடுகளில் பிரஜா உரிமை பெற்ற மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர்

அவர்கள் அனைவரும் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காது தமது உறுப்பினர் பதவிகளில் இருந்து தாமாக விலகிக் கொள்ளுமாறு தென்பிராந்திய மகா சங்க நாயக்கர் ஓமல்பே சோபித தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்புஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற...
09/05/2024

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும், அவர் அந்தப் பதவியை வகிப்பதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, வழக்கை எதிவரும் 29ம் திகதி மீண்டும் அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.

உக்ரைன் – ரஷ்யா போரில் 6 இலங்கையர்கள் பலி.மனித கடத்தல்காரர்களால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து க...
09/05/2024

உக்ரைன் – ரஷ்யா போரில் 6 இலங்கையர்கள் பலி.

மனித கடத்தல்காரர்களால் உக்ரேன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேலை நோக்கி நூற்றுகணக்கானஏவுகணைகள் தயார் நிலையில்அமெரிக்கா எச்சரிக்கைஇஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கானஏவுகணைகளை ஈரான் தய...
07/05/2024

இஸ்ரேலை நோக்கி நூற்று
கணக்கான
ஏவுகணைகள் தயார் நிலையில்
அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான
ஏவுகணைகளை ஈரான் தயார்
நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது

அமெரிக்க உளவுப் பிரிவின்
தகவலகளுக்கு இணங்க ஈரான்
மேலும் பல ஆயுதங்களை இஸ்ரேலை நோக்கி நகர்த்தி உள்ளதாகவும்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பை டன்
தெரிவித்துள்ளார். எனவே

இத்தாக்குதல்களை நடத்த வேண்டாம்
என ஈரானை எச்சரித்துள்ள ஜோபைடன்
அமெரிக்கா இஸ்ரேலை பாதுகாப்பதற்கு
அவசியமான ஏற்பாடுகளை செய்து
முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

ஹிட்லரை விட கொடுமைக்காரன்அமெரிக்க ஆதரவு நெட்டன்யாகு - RAJITHA SENARATNA நெட்டன்யாகு ஹிட்லரைவிடக் கொடுமையாளன்ஹிட்லரின் கொ...
07/05/2024

ஹிட்லரை விட கொடுமைக்காரன்
அமெரிக்க ஆதரவு நெட்டன்யாகு - RAJITHA SENARATNA
நெட்டன்யாகு ஹிட்லரை
விடக் கொடுமையாளன்

ஹிட்லரின் கொடுமைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் நேரடியாக கண்டதில்லை ஆனால் அந்த ஹிட்லரை விட கொடுமையான அட்டூழியம் செய்யும் ஒரு கொடியவனை
இன்று இஸாரேலில் காண்கிறேன்
என இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகுவை
பற்றி வர்ணித்தார் ஐக்கிய
மக்கள் சக்தி பாராளுமன்ற
உறுப்பினர் ராஜித சேனாரத்ன......

இஸ்ரேல் யுக்ரேன் யுத்தம் இந்த யுத்தம் இரண்டிற்கும் அமெரிக்கா தான் காரணம் அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்காகவும் இஸ்ரேலைப் பாதுகாக்கவும் காசா றபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் படுகொலைகளை
அமெரிக்காவில் இருக்கிறது..

இஸ்ரேல் காசாவிலும் றபாவிலும்
செய்யும் மனித படுகொலைகள் போல் அட்டூழியங்கள் உலகப் போர்களில் கூட கேள்விப்பட்டதில்லை வைத்தியசாலைகள் அகதி முகாம்கள்
யுத்தம் நடக்கும் தருணங்களில் தாக்கப்படுவது இல்லை இது உலகில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த தர்மம்
ஆனால் காசாவில் கொத்து கொத்தாக சிறு குழந்தைகள் பெண்கள்
வயோதிபர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள்

உலகில் பலம் பொருந்திய நாடுகள் இதனைவேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றன
அமெரிக்காவின் ஈடுபாடு இதில்
உள்ளதால் தான் ஏனைய நாடுகள்
செய்வதறியாது இருக்கின்றன
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.....

இருந்து மக்களை வெளியேறுமாறு நெட்டன்யாகு

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு?மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எ...
01/05/2024

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு?

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனை தெரிவித்துள்ளார்

ஈரான் - சவுதி உறவு மீண்டும் பலப்படுகிறது??ஈரானின் மத்திய வங்கி ஆளுநர் சவூதி அரேபியாவிற்கு வங்கி ஒத்துழைப்பு குறித்த பேச்...
27/04/2024

ஈரான் - சவுதி உறவு மீண்டும் பலப்படுகிறது??

ஈரானின் மத்திய வங்கி ஆளுநர் சவூதி அரேபியாவிற்கு வங்கி ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு வருகை தந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் KSA பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துகின்றன.

ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜிட்டாவில் உள்ள ஈரான் கான்சல் ஜெனரல் ஹசன் ஜர்னேகர், மக்காவின் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சலே அப்துல்லாஹ் கமாலை சந்தித்தார்.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஈரானிய மற்றும் சவூதி வணிகர்களுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜர்னேகர் வலியுறுத்தினார்.

புனித நகரமான மக்காவில் யாத்ரீகர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான பொருளாதார அம்சங்கள் குறித்தும் இரு அதிகாரிகளும் விவாதித்தனர்.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி ஆகியோர் வலியுறுத்தியபடி, ஈரான்-சவுதி உறவுகளின் விரிவான வளர்ச்சிக்கான நம்பிக்கையை கமால் வெளிப்படுத்தினார்.

27.04.2024

வத்திக்கானிடம் சேவைநீடிப்பு கோருகிறார் பேராயர்Sri Lanka guardian தகவல்ஈஸ்டர் தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...
27/04/2024

வத்திக்கானிடம் சேவை
நீடிப்பு கோருகிறார் பேராயர்
Sri Lanka guardian தகவல்

ஈஸ்டர் தினத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும் வரையில் தனக்குச் சேவை நீடிப்பை வழங்குமாறு கொழும்பு
பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்கள்
வத்திகானில் வேண்டுகோள் விடுத்துள்ளார் என Sri Lanka guardian
செய்தி வெளியிட்டுள்ளது......

மரணித்த மக்களின் பேரில் சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்ள பேராயர் முயற்சிப்பதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனா ஈரானின் இஸ்ரேல் மீதான பகையை வளர்க்கிறதுயுக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவை தூண்டுகிறதுஎன்டனீ பிலிக்கன் கடும் எச்சரிக்கைஇஸ்ர...
27/04/2024

சீனா ஈரானின் இஸ்ரேல் மீதான பகையை வளர்க்கிறது

யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவை தூண்டுகிறது
என்டனீ பிலிக்கன் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பகையை மேலும் மேலும் வளர்க்க
சீனா ஈரானுக்கு உதவுகிறது

யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின்
யுத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது
இந்த போக்கினை சீனா மாற்றிக் கொள்ளாவிட்டால் சீனாவுக்கு எதிராக
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி வரும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனீ பிலின்கன்
சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்...
என சர்வதேச ஊடகங்கள் பரவலாக
செய்தி வெளியிட்டுள்ளது......

எனினும் சீனாவுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் நடவடிக்கை என்ன என்பதை அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை எனவும் அச்செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது..

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய...
26/04/2024

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

Under Secretary for Trade and Foreign Agricultural Affairs at the U.S. Department of Agriculture (USDA), Alexis Taylor, paid a courtesy call on President Ranil Wickremesinghe today (26).

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் ...
26/04/2024

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார்.

குறித்த நிறுவனம், வலுசக்தித் துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தும் என்றும் அதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக இதனைத் தெரிவித்தார்.

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழ...
26/04/2024

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

President Ranil Wickremesinghe received official handovers of generous financial contributions for the ‘Children of Gaza’ Fund this morning (26). This is an initiative the President established to alleviate the suffering of those affected by conflicts in Gaza.

நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத...
25/04/2024

நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

40ஆவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்களை நிதி அமைச்சு பறிமுதல் செய்ய உ...
25/04/2024

கடந்த சில வருடங்களில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்களை நிதி அமைச்சு பறிமுதல் செய்ய உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சின் அறிக்கையின்படி, 2015-2022 வரை 112 வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் ரூபா 7 பில்லியன்க்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை தற்போது பயன்படுத்தும் மக்களிடம் இருந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வாகனங்கள் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவது வாங்குபவரின் பொறுப்பாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு கைகொடுக்கத் தயார்!                                                       ...
24/04/2024

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு கைகொடுக்கத் தயார்! ஈரான் ஜனாதிபதி.
=================================

இந்நிகழ்வில் பங்கேற்குமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பின் அடையாளமாக விளங்கும் இந்நிகழ்வில் பங்கேற்பதை பெருமையாகவும் கருதுகிறேன்.

இந்த திட்டம் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவின் சின்னம் என்றே கூறவேண்டும். இந்த அற்புதமான பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கிறோம். ஆனால், நமது இரு நாடுகளுக்கும் ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையே அதிகபட்ச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பவற்றை உறுதி செய்வதே இங்கு மிக முக்கியமான விடயம் என்று நான் நம்புகிறேன்.

மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை விட நமது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்களின் விருப்பமும் உறுதியும் முக்கியமானது என்று கூற வேண்டும்.

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களே, ஈரான் இஸ்லாமிய குடியரசிடம் உள்ள நவீன தொழில்நுட்ப அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக கடந்த 45 வருடங்களில் ஈரான் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் இலங்கையுடன் சிறந்த பங்காளித்துவத்துடன் முன்னோக்கிச் செல்ல ஈரான் தயாராக இருப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.

இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்க ஈரான் தயாராக உள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24-04-2024

கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஈரான் அதிபர்.24.04.2024
24/04/2024

கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஈரான் அதிபர்.
24.04.2024

சியோனிச இஸ்ரேலில் எதையும்மீதம் வைக்க மாட்டோம்இஸ்ரேலுக்கு றைசி கடுமையானதொணியில் எச்சரிக்கைஈரான் இஸ்ரேல் மீது நடத்தும் பொர...
24/04/2024

சியோனிச இஸ்ரேலில் எதையும்
மீதம் வைக்க மாட்டோம்
இஸ்ரேலுக்கு றைசி கடுமையான
தொணியில் எச்சரிக்கை

ஈரான் இஸ்ரேல் மீது நடத்தும் பொருட்படுத்தக்கூடிய தாக்குதல் ஒன்றில் நாம் நடத்தும் எதிர்
தாக்குதல் ஒன்றின் போது
இஸ்ரேலை அழித்து ஒழித்து விடுவோம் இஸ்ரேலிய சியோனிச நாட்டில் எதையும் மீதம் வைக்க மாட்டோம் என
ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி இப்றாஹிம் றைசி இஸ்ரேலுக்கு கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம்
மேற்கொண்ட றைசி அங்கு நடத்திய உரைகளில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானின் அரச
தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.....

எம்மீதான பதில் ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதில் எமக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை ஆனால்
ஈரான் மண்ணுக்குள் இஸ்ரேல் நடத்தும்
உணரக்கூடிய தாக்குதல் ஒன்றில்
எமது இராணுவப் பதிலடியின் தாக்கம்
பயங்கரமான தாக இருக்கும்......

இவ்வாறான எமது பதிலடியில்
இஸ்ரேல் முழுமையாக மடியும்
அதன்போது சியோனிச
இஸ்ரேலில்எதனையும் எஞ்ச வைக்க மாட்டோம் எனவும் அவர் இந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளார்

Address

AddalaiChenai, SirLanka
Colombo
32350

Alerts

Be the first to know and let us send you an email when MpTv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MpTv:

Videos

Share

Category