Alai TV

Alai TV The official page for AlaiTV - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

"நினைவுகள்"  🤲🌊 சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள். ஆழிப் பேரைலை சுனாமியின் போது காத்தான்குடி பகுதியில் 2004/12/26ஆம...
26/12/2024

"நினைவுகள்" 🤲
🌊 சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள்.

ஆழிப் பேரைலை சுனாமியின் போது காத்தான்குடி பகுதியில் 2004/12/26ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட சில காட்சிகள்.

25/12/2024

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 252 பேர் உட்பட மொத்தம் 8,747 போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரிய டெங்கு நோயினை கட்டுபடுத்துவதற்கான 3 நாள் விஷேட வேலைத்திட்டம்..! 2024/12/25 இன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ம...
25/12/2024

பாரிய டெங்கு நோயினை கட்டுபடுத்துவதற்கான 3 நாள் விஷேட வேலைத்திட்டம்..!

2024/12/25 இன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு பரவலுக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அரச அலுவலகங்கள்,
பள்ளிவாயல்கள்,பொது நிறுவனங்கள் பாடசாளைகள் மற்றும் வெற்று காணிகள் போன்ற இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr.ULM. நசீர்தீன் பிரதேச செயலாளர் U உதயசிரிதர் அவர்களின் தலைமையிலும் மேற்பார்வையிலும் காத்தான்குடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் 03 நாள் விஷேட வேலைத்திட்டத்தின் ஊடாக 2024/12/25 இன்று முதல் சுகாதார வைத்திய அதிகாரி ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்,சமூக மேம்பாட்டுக்கான இளைஞர் கழக உறுப்பிபினர்கள்,மற்றும் சமூக மேம்பாட்டுக்கான விளையாட்டு கழக உறுப்பினர்கள் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்கள்,
பள்ளிவாயல்கள்,பொது நிறுவனங்களுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு டெங்கு தொடர்பான விழிப்பூட்டல் மற்றும் சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பான அறிவூட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பாரிய பணியினை மேற்கொள்வதற்கு இக்கால பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மேற்கொண்ட எமது சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் இப்பணியில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பணிப்பாளர் /செயலாளர்
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்

🔵 2 பெண் பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு; விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு..!  (பாறுக் ஷிஹான்)விடுதி அறை மலசல...
25/12/2024

🔵 2 பெண் பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு; விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு..!

(பாறுக் ஷிஹான்)

விடுதி அறை மலசல கூடத்தில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு எதிராக அமைந்துள்ள தனியார் கட்டிடமொன்றின் விடுதி அறை மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டிருந்தது.

இதன் போது மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த பெரிய நீலாவணை 02 செல்லத்துரை வீதி பகுதியை சேர்ந்த 2 பெண் பிள்ளைகளின் தந்தையான 54 வயது மதிக்கத்தக்க பூசாரி சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு குறித்த சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டார்.

இதன் போது துணி ஒன்றினை பயன்படுத்தி தூக்கு மேற்கொண்டு தற்கொலை செய்தமைக்கான அடையாளம் தென்பட்டுள்ளதாகவும் கழுத்து எழும்பு முறிவடைந்து மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையிடப்பட்டு உறவினர்களிடம் சடலம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம் மரணம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றதா அல்லது வேறு ஏதாவது விடயத்திற்காக மரணம் சம்பவித்துள்ளதா என மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அல் அக்க்ஷா பள்ளி தலைவராக முன்னாள் நகர சபை உறுப்பினர் ஜவாஹிர் தெரிவு..!
23/12/2024

அல் அக்க்ஷா பள்ளி தலைவராக முன்னாள் நகர சபை உறுப்பினர் ஜவாஹிர் தெரிவு..!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு -இன்று முதல் அதிரடி மாற்றம். முப்படையினர் நீக்கம்..!முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற...
23/12/2024

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு -
இன்று முதல் அதிரடி மாற்றம். முப்படையினர் நீக்கம்..!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கினார்.

இதன்படி இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று பல பிரதேசங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை..!மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில...
21/12/2024

இன்று பல பிரதேசங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களை கோருகிறது.

ஜனாதிபதியின் தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை பார்ப்பதற்காக, அனுரகுமார...
21/12/2024

ஜனாதிபதியின் தாய் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக, அனுரகுமார திசாநாயக்க வைத்தியசாலை சென்றுள்ளார். இதன்போது பிடிக்கப்பட்ட படமே இது..!

சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்..!கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட...
20/12/2024

சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்..!

கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அந்த குறைபாட்டிற்கான நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சந்தையில் அரிசி கிடைப்பது படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பிலும் சோதனைகள் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு : ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஹரிஸ்தடி சில்...
18/12/2024

விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு : ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின்
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஹரிஸ்தடி சில்வா வழங்கி வைப்பு.!

ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்)

பராமரிப்பு நிலைய அதிகாரி அவர்களால் இங்கு இருக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் தேவையாக உள்ளது அதனை பெற்றுத் தரும்படி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் சாஜன்ட் அப்துல் மஜீட் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைய,
இக்கோரிக்கையை இப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹரிஸ்தடி சில்வா அவர்களிடம் கொண்டு சென்று, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் பூரண உதவியுடன் இச்சிறு வர்களுக்கு சுமார்
25ஆயிரம் ரூபா
பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு
இவ்விளையாட்டு உபகரணங்களை ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹரிஸ்தடி சில்வா அவர்கள் தலைமையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய சிறுவர்கள் பகுதிக்குப் பொறுப்பான சுசிலா, சாஜன்ட் அப்துல் மஜீட் ஆகியோர் உட்பட பலரும் கலந்து
சிறப்பித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹரிஸ்தடி சில்வா அவர்களுக்கும், சாஜன்ட் அப்துல் மஜீட் அவர்களுக்கும் ஏறாவூர் சிறுவர் பராமரிபு நிலையத்தினர் நன்றிகளை தெரிவிக்கின்றனர்

18/12/2024
இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு2024 டிசம்ப...
16/12/2024

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் இன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு

2024 டிசம்பர் 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2024 டிசம்பர் 16ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

விசேட அறிவித்தல்:

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் வலுவடைந்து அடுத்த இரண்டு நாட்களில் இலங்கையின் வடக்குப் பகுதியை அண்டியதாக தமிழ்நாடு கரையை நோக்கி நகரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்கள், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இன்றைய தினத்திற்கான (டிசம்பர் 15ஆம் திகதி) வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி)

ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான சந்திப்பு.(செய்...
14/12/2024

ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான சந்திப்பு.

(செய்தியாளர் எம்.எஸ்.எம். சஜீ)

இலங்கை பொதுப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினரின் பிள்ளைகளை கௌரவிக்கும் நிகழ்வும் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான சந்திப்பொன்றும் இன்று மாலை இடம் பெற்றது.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் தலைவர் மௌலவி எச்.எம். ஷாஜஹான் (பலாஹி) தலைமையில் அமைப்பின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் சிரேஷ்ட உலமாக்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

தாழமுக்கம்:நேற்றைய தினம் அந்தமான் கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதி மற்றும் தாய்லாந்து வளைகுடா பிராந்தியத்தில் காணப்பட்ட...
14/12/2024

தாழமுக்கம்:

நேற்றைய தினம் அந்தமான் கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதி மற்றும் தாய்லாந்து வளைகுடா பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது, இன்று தெற்கு அந்தமான் கடல் பிராந்தியம் மற்றும் அதனை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் கடல் மட்டத்திலிருந்து 3.1km தூரம் வரை காணப்படுகின்றது.

இது நாளை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்க பகுதியாக (Low Pressure Area) சற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்து வரும் 02 நாட்களில் தமிழ்நாட்டில் கரையை அண்மைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றைய தினம் லட்ச தீவு மற்றும் மாலதீவு கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட முதலாவது தாழமுக்கமானது தற்போதும் அதே இடத்தில் காணப்படுகின்றது.

இது நாளை முதல் படிப்படியாக இதன் வலு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-கே.சூரியகுமாரன்
(ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி)

காத்தான்குடி ஜம்மியாவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்குமிடையில் விசேட சந்திப்பு.(எம்.எஸ்.எம். சஜீ)அகில இலங்க...
14/12/2024

காத்தான்குடி ஜம்மியாவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்குமிடையில் விசேட சந்திப்பு.

(எம்.எஸ்.எம். சஜீ)

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா கிளை பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை இடம் பெற்றது.

காத்தான்குடி ஜெம்மியாவின் தலைவர் மௌலவி எம்.ஐ. அப்துல் கபூர் (மதனி) தலைமையில் இடம் பெற்ற சந்திப்பில் ஜம்மியாவின் சிரேஷ்ட உலமாக்கள் என பலரும் பங்கேற்றனர்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வட்ஸ்அப், த்ரெட்ஸ் ஆகிய செயலிகளில் நேற்று ஏற்பட்டிருந்த செயலிழப்பு சிக்கல்கள் பெரும்பாலும் தீர்...
12/12/2024

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வட்ஸ்அப், த்ரெட்ஸ் ஆகிய செயலிகளில் நேற்று ஏற்பட்டிருந்த செயலிழப்பு சிக்கல்கள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Alai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category