Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ்

Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ் தெரிவிப்பது நாங்கள் – தீர்மானிப்பது எம்மைப் பற்றி
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

27/12/2024
27/12/2024
கடன் மறுசீரமைப்பு நிறைவுபொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச நிவாரணப் பொதிகள் தொடர்பிலான ஊடக...
26/12/2024

கடன் மறுசீரமைப்பு நிறைவு

பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச நிவாரணப் பொதிகள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்றது.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயல்முறை மற்றும் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் தொடர்பான ஊடக அறிக்கை

01.பொருளாதார ஸ்திரத்தன்மை

முன்னைய ஆட்சிகள் உருவாக்கிய படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது முக்கியமானது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில், நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் 2022 ஏப்ரலில் ஒருதலைப்பட்சமாக வெளிநாட்டுக் கடன் பெறுவதை நிறுத்தியிருந்ததுடன், 4 வருட காலத்திற்குள் 8 தவணைகளாக கிடைக்கப்பெறவிருந்த 3 பில்லியன் டொலர்கள் வரையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் நுழைந்திருந்தனர்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன் ஆகியவை நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஏற்ப மறுசீரமைப்பு செயல்முறை மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தாமதிப்பு மற்றும் கடினமான தன்மை காரணமாக, நாடு மேலதிகச் செலவுகளைச் செய்ய வேண்டியிருந்ததுடன் மக்கள் மீதான அதிக சுமை அதிகபடுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பின்னர், சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு அமைய, அப்போதைய நிலைமைகளின் நன்மை, தீமைகள் என்ற இரண்டையும் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் நலனுக்கான மாற்றீடுகளுடன் அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கிறது.

அதன்படி, வேலைத்திட்டத்தின் அளவுகோள் மற்றும் அரச வருமான வழிமுறைகளுக்கு அமைய, உரிய தலையீடு மற்றும் காலோசிதமான முறையில் வசதிகளை வழங்குவதன் ஊடாக, 2024 நவம்பர் 26 ஆம் திகதி மூன்றாவது மீளாய்வில் பணிக்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது.

சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதிக்கு முன்னதாக, EFF இன் அடுத்த தவணையைப் பெற்றுகொள்வதற்கு அரசாங்கம் உரிய பங்குதாரர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.

கடன் மறுசீரமைப்பு இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மறுசீரமைப்பை உள்ளடக்கியுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு 2023 ஜூலை மாதமளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும் பலதரப்பு கடன் மறுசீரமைப்பு பல்வேறு அடிப்படைகள் மற்றும் தர்க்கங்களுக்கு அமைய கடன் வழங்குநர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் மற்றும் தனியார் சர்வதேச பிணைமுறிகள் (ISB) என்பன வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும். இருதரப்புக் கடன் 17 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள்இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (OCC), சீனா எக்சிம் வங்கி, சீனா அபிவிருத்தி வங்கி, ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) மற்றும் ஏனைய வணிக கடன் வழங்குநர்களுடன் இணைந்து இருதரப்பு கடன் தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு 2024 ஜூன் மாதத்தில் உரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த தீர்வுகளின் (CoT) ஒப்பீட்டு நிலையைஉறுதிசெய்து, இணக்கம் காணப்பட்ட கட்டமைப்பிற்குள் சீனாவுடனான கடன் 2023ஒக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைக்கப்பட்டிருந்தது.

ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) உள்ளிட்ட நாடுகளுடனான கடன் அண்ணளவாக 300 டொலர் மில்லியன்களாக காணப்படுவதுடன், இது ஏனைய முழுக் கடன் மறுசீரமைப்பு செய்தலில்1% ஆக காணப்படுகிறது. ஏனைய அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் இணங்கிய கட்டமைப்புக்குள் மறுசீரைப்புச்
செய்ய தற்போதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்கள்

மிகவும் தாமதமான சர்வதேச பிணைமுறி கடன், மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள், இணக்கமின்மை, முன்மொழிவுகளை மாற்றுதல், DSA மற்றும் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைகளுக்கு இசைவாக மாற்றுதல் உள்ளிட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளைக் கடந்துள்ளது.

இறுதியாக 2024 செப்டம்பர் 19 ஆம் திகதி கொள்கை அடிப்படையில் (AIP) ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இணக்கம் காணப்பட்டது. Ad Hoc Group (AHG) மற்றும் Local banking consortium இனால் கடந்த காலங்களில் செலுத்த வேண்டியிருந்த 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட சர்வதேச பிணைமுறிக் கடன்களில் 14.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

காலோசிதமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் புதிய வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நிதி
ஸ்திரத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப தரப்படுத்தல்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

இந்த வெற்றிக்காகு சரியான முறையில் வழங்கப்பட்ட முன்னுரிமை மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் ஆகியன முக்கிய காரணங்களாகியுள்ளன.

இவ்வாறாக, இலங்கை மக்களுக்கு வளமான நடு - அழகான வாழ்வு இனை ஏற்படுத்திக்கொடுப்பதை நனவாக்க அரசாங்கம் தனது மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தது. இதன்படி, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தீர்மானமிக்க முயற்சியாக 2024 டிசம்பர் 20 ஆம் திகதி நடைமுறையில் உள்ள பிணைமுறி பரிமாற்றத்திற்காக புதிய பிணைமுறிகளை வௌியிடுவதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், அதனை திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

2. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான வசதிகளை வழங்கல்

2.அ.1. பராட்டே சட்ட சலுகைகளை நீடித்தல்

பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் இணைந்துகொண்டுள்ளது. இதன் பலனாக, பராட்டே சட்டத்தின் அமுலாக்கம் இப்போது 2025 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2.ஆ.2.நிவாரணப் பொதி

கால நீடிப்பினால் மாத்திரம் வியாபாரங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மத்தியவங்கியின் தரவுகளின்படி, 25 மில்லியனுக்கும் குறைவான கடன் மூலதனத்தைக் கொண்டகடனாளர்களில் 99% ஆனோர் வங்கிகளுடன் கலந்தாலோசித்து தங்களது கடன்களை

செலுத்தும் முறைக்கு இணங்க 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 25 - 50மில்லியன்கள் வரையிலான கடன்கள் கொடுக்கல் வாங்கல் செய்தோருக்கும் 9 மாதங்கள்கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனை கொடுக்கல் வாங்கல்செயற்பாட்டாளர்களுக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியினால் செயற்படுத்தப்படும்இந்த நிவாரணப் பொதியில், குறிப்பாக குறைந்த வட்டி விகிதங்கள், மீள் செலுத்தும் காலம்நீடிப்பு, கடன் தரப்படுத்தலில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளை தீர்ப்பதற்கு வெளிப்படையான பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் கடன் பெறுபவர்களுக்குபெருமளவில் நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண நடவடிக்கைகள்,பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.

2. ஆ. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவி
2.ஆ.1. அஸ்வெசும குடும்ப பிள்ளைகள்.

சமூகத்தில் ஆபத்திற்குட்படக்கூடிய தொகுதியிலிருக்கும் பெற்றோர்களுடைய பிள்ளைகளின் கல்வி மீதான சுமையை குறைக்கும் வகையில் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு அத்தியாவசியமான பாடசாலை புத்தகங்கள் மற்றும் எழுதுவினைபொருட்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக இந்த சலுகை விரைவில் ஆரம்பிக்கப்படும்.

2.ஆ.2. அஸ்வெசு பெறாத குடும்பங்களின் பிள்ளைகள்

தற்போது அஸ்வெசும கிடைக்காத, ஆனால், நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரைக்கமைய இந்த சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செயற்பாட்டினை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதோடு, பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற மற்றும் இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தகுதியான சகல பிள்ளைகளுக்கும் இந்த சலுகையை வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
http://muslimvoice.lk/?p=37195

செப்பு கம்பியை அறுக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி பலிஅம்பாறை நகரில் உள்ள மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றியில் செப்பு ...
26/12/2024

செப்பு கம்பியை அறுக்கச் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

அம்பாறை நகரில் உள்ள மின்சார சபைக்கு சொந்தமான மின்மாற்றியில் செப்பு கம்பியை அறுக்கச் சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (26) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

செப்பு கம்பியை அறுக்க சென்ற நபர், மின்சார தூணில் தொங்கியிருந்த நிலையில், பின்னர் நகரத்திற்கான மின்சாரத்தை துண்டித்து அவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்தவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

அம்பாறை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://muslimvoice.lk/?p=37192

அஸ்வெசும நிலுவைத் தொகை நாளை வங்கியில்அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உர...
26/12/2024

அஸ்வெசும நிலுவைத் தொகை நாளை வங்கியில்

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி பெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத்தொகையை வங்கியில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

1,314,007,750.00 ரூபாய்க்கும் அதிகளவான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு நலன்புரி நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
http://muslimvoice.lk/?p=37189

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் அடையாளம் கடந்த நவம்பரில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த ...
26/12/2024

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் அடையாளம்

கடந்த நவம்பரில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

2024/25 பெரும்போக பயிர் சேத ஆய்வின் முன்னேற்றம் குறித்து இன்று (26) ஊடகங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இது தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பின்படி, 2024/25 பெரும்போகத்தில் 2024 நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணி தற்போது விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி மற்றும் விவசாயிகள் அமைப்புகளின் பங்களிப்புடன் செய்யப்படுகிறது.

இவற்றில் பொலன்னறுவை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் சேத ஆய்வு தற்போது நிறைவடைந்துள்ளது.

அந்த மாவட்டங்கள் தொடர்பான இறுதி அறிக்கைகள் கிடைத்த பின்னர் இழப்பீடுகள் வழங்கப்படும் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் 29ஆம் திகதிக்குள் பயிர்ச் சேதங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளையும், அனுராதபுரம், குருநாகல், மாத்தளை மாவட்டங்களில் பயிர்ச் சேதங்கள் தொடர்பான ஆய்வுப் பணிகளை டிசம்பர் 30ஆம் திகதிக்குள் முடிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயிர் இழப்புக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பீடு தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டவுடன், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
http://muslimvoice.lk/?p=37186

மதுபோதையில் வாகனம் செலுத்தல் - பொலிஸாரின் தீர்மானம்இனிமேல் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் அனைத்து சந்திர்ப்பங்...
26/12/2024

மதுபோதையில் வாகனம் செலுத்தல் - பொலிஸாரின் தீர்மானம்

இனிமேல் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் அனைத்து சந்திர்ப்பங்களிலும் கைது செய்யப்படும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்தி அல்லது இரத்து செய்யுமாறு நீதிமன்றில் பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என அனைத்து சாரதிகளையும் இலங்கை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று (26) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த 24 மணி நேரத்தில், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 50 சாரதிகளும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 120 சாரதிகளும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 1,262 சாரதிகளும், அனுமதிப்பத்திர தவறுகள் தொடர்பில் 682 சாரதிகளும்,வேறு வகையான போக்குவரத்து தவறுகள் தொடர்பில் 5,441 சாரதிகளும் உள்ளடங்களாக 7,950 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை கடந்த 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விசேட நடவடிக்கையை பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
http://muslimvoice.lk/?p=37183

மீண்டும் உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தைகொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (26)...
26/12/2024

மீண்டும் உச்சம் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (26) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 15400.53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இது புதிய அதிகரிப்பு என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், மொத்த புரள்வு 07 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
http://muslimvoice.lk/?p=37180

20 லட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண...
26/12/2024

20 லட்சத்தை கடந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

2024ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) 2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

தாய்லாந்திலிருந்து வந்த தம்பதியரால் அந்த இலக்கு அடையப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://muslimvoice.lk/?p=37177

பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு2025ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த...
26/12/2024

பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு

2025ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான உத்தரவை கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படவிருந்த 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி அவ்வருடம் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை கட்டாயக் காரணங்களுக்காக அன்றைய தினத்திற்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இருந்தால், மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூலம் அறிக்கை தயாரித்து பிரதி பொலிஸ் மா அதிபர் மனிதவள முகாமைத்துவ மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடமைத் தேவைகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

http://muslimvoice.lk/?p=37174

25/12/2024

விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம்
See more.... https://lankabase.com/?p=39807

வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்...
25/12/2024

வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றிருந்த அவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் சமூகத்தில் இவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டது.

http://muslimvoice.lk/?p=37170

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கைபண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இல...
25/12/2024

வீதி விபத்துக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க ஜாகொட தெரிவித்துள்ளார்.

அதிக வேகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றமை போன்ற காரணங்களால் வீதி விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதி விபத்துக்கள் தடுக்கப்படக்கூடிய ஒன்றாகும் எனவும், மக்கள் இது தொடர்பில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று விசேட வைத்தியர் இந்திக்க ஜாகொட தெரிவித்தார்.

வாகனங்களில் பயணிக்கும் போது முன் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் மாத்திரமே சீட் பெல்ட் அணிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், விபத்து ஏற்படும் போது, ​​சீட் பெல்ட் அணியாத பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கு விபத்துகளின் தீவிரம் மிக அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://muslimvoice.lk/?p=37167

Address

Maradana
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Voice - முஸ்லிம் வொய்ஸ்:

Videos

Share