21/05/2023
ஏன் ஜப்பான்........... ஏன் தெரியுமா?
👌 ஜப்பானில், ஆரம்பப் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை "நற்குணங்களும் நன்னடத்தைகளும்" என்று ஒரு பாடம் கற்பிக்கப்படுகிறது, அதில் மாணவர்கள் நற்குணங்களையும் மக்களுடன் உறவாடும் கலையையும் கற்றுக்கொள்கிறார்கள்!
👌 ஜப்பானில் முதல் தொடக்கப் பள்ளி முதல் மூன்றாம் இடைநிலைப் பள்ளி வரை பரீட்சைகள், தேர்வுகள் எதுவும் இல்லை. காரணம் இந்த நிலைகளில் அவருகளுக்கு கற்பித்தல், படிப்பித்தல் அல்ல நோக்கம். மாறாக அவர்களிடம் ஆளுமைகளை வளர்த்தல், தார்மீக பண்பாடுகளை ஊக்குவிப்பதே குறிக்கோளாகும்.
👌 ஜப்பானியர்கள், உலகில் மிகவும் வசதி வாய்ப்பானவர்களாக இருந்தும் வீட்டு வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. தாயும் தந்தையும் தான் வீட்டின் மொத்த பொறுப்பையும் சுமப்பார்கள்.
👌 ஜப்பானிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் கால் மணி நேரம் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்வார்கள். இதன் மூலம் சுத்தம் சுகாதாரத்தின் மீது ஆர்வமுள்ள ஒரு ஜப்பானிய தலைமுறை தோன்றுவதற்கு வழிவகுத்தது.
👌 ஜப்பானிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தங்களுடன் பல் துலக்கும் தூரிகைகளை எடுத்துச்செல்வார்கள். , சாப்பிட்ட பிறகு பல் துலக்குவார்கள், அதன் மூலம் அவர்கள் சிறு வயதிலிருந்தே தங்கள் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க கற்றுக்கொள்கிறார்கள்.
👌 ஜப்பானில் பள்ளிக்கூட மாணவர்கள் உண்ண முன்னர் அரை மணி நேரத்திற்கு முன்பே ஆசிரியர்கள் சாப்பிட்டு விடுவார்கள். அதன் மூலம் உணவின் பாதுகாப்பை உறுதி செய்து விடுவார்கள். காரணம் ஜப்பானில் மாணவர்கள்தான் பாதுகாக்கப்பட வேண்டிய எதிர்கால தலைவர்கள் என்று கருதுதப்படுவதாகும்.
👌 ஜப்பானில் துப்புரவுத் தொழிலாளர்கள் "சுகதார இன்ஜினியர்கள்" என்று சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் மாதத்திற்கு 5,000 முதல் 8,000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் பெறுகிறார்கள். துப்பரவுத் தொழிலில் ஒருவர் நியமிக்கப்பட முன்னர், எழுத்து மூலம் மற்றும் வாய்மொழித் தேர்வுகளுக்கு
கட்டாயம் முகம் கொடுக்க வேண்டும்.
👌 ஜப்பானில் ரயில்களில், உணவகங்களில் மற்றும் மூடிய இடங்களில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் சைலன்ட் நிலையில் மொபைலை வைப்பதற்குப்."நன்னடத்தை" என்று சொல்லப்படுகிறது.
👌 ஜப்பானியர்கள் உணவகத்திற்குச் சென்றால், ஒவ்வொருவரும் தனக்குத் தேவையான உணவை மட்டுமே எடுத்துக்கொள்வதைப் பார்க்கலாம். யாரும் அளவுக்கதிக உணவைத் தட்டில் வைக்க மாட்டார்கள்.
👌 ஜப்பானில் வருடத்திற்கு ரயில்கள் தாமதமாகும் விகிதாசாரம் 7 வினாடிகளாகும். ஜப்பானிய மக்கள் நேரத்தின் மதிப்பை நன்கு அறிந்துவைத்தவர்கள். அவர்கள் வினாடிகளும் நிமிடங்களும் வீணாகமல் துல்லியமாக பார்ப்பவர்கள்.
✍ CNN News