17/09/2019
Pin ItEmailPrint
எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் நிர்ணயிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.
தேர்தல் காலத்தில் ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். ஊடகங்கள் போலிப் பிரசாரங்களுக்கும் வைராக்கியத்தை ஏற்படுத்தும் கருத்துக்களுக்கும் இடமளிக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டினார்