AbdaA Media

AbdaA Media News and media True News only

14/08/2023
இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் வீட்டுக்கு முன்னால் ...
23/06/2022

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்,அந்தவேளை போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முற்பட்ட போது வெளியில் தெரிந்த ஹிருணிக்காவின் மார்பகங்களை வைத்து சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை சிலர் உருவாக்கி வருகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு ஹிருணிக்கா தனது சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.....


"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!

அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன்.

நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"

#ஹிருணிகாபிரேமச்சந்திர

Beautiful countryside_________ Awesome
28/12/2021

Beautiful countryside_________ Awesome

*நாளை மஸ்ஜித்கள் திறக்கப்படுவதன் நிமிர்த்தம் ஜாமிஅத்துல் உலமா வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்!✅**JUNE 11,2020, THURSDAY*READ...
12/06/2020

*நாளை மஸ்ஜித்கள் திறக்கப்படுவதன் நிமிர்த்தம் ஜாமிஅத்துல் உலமா வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்!✅*

*JUNE 11,2020, THURSDAY*

READ MORE 👇👇👇

நாளை (12) இலங்கையில் அனைத்து மஸ்ஜிதுகளும் திறக்கப்படவிருக்கும் நிலையில் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமா மக்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி அதில் 10 அம்சங்கள் அடங்களாக, அவை கீழ்வருமாறு,

*1.* இரண்டு கைகளையும் சவற்காரமிட்டு கழுவிக்க்கொள்ளல்.

*2.* நோயாளர்கள் மஸ்ஜிதிற்கு செல்வதை தவிர்த்தல்.

*3.* அல்குர்ஆன் ஓதுவதற்காக உங்கள் சொந்த பிரதியை (எடுத்துச்செல்லல்) பயன்படுத்தல்.

*4.* தொழுவதற்காக தங்களுக்கென விரிப்புக்களை (முஸ்ஸல்லாஹ்) எடுத்துச் செல்லல்.

*5.* கைலாகு செய்வதை தவிர்ப்பதுடன் சமூக இடைவெளியை பேணல்.

*6.* சிறுவர்களை அழைத்துச் செல்வதை முற்றாக தவிர்த்தல்.

*7.* முகக்கவசம் அணிதல்.

*8.* மஸ்ஜிதின் வாயில்களில் கூடி நிற்பதை மற்றும் கதைப்பதை தவிர்த்தல்.

*9.* வீட்டிலிருந்தே வுழூ செய்துக்கொண்டுச் செல்லல்.

*10.* இது தொடர்பில் அரசாங்கம், சுகாதாரத் துறை, வக்பு சபை மற்றும் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலை பின்பற்றுதல்.

_அகில இலங்கை ஜமிஅத்துல் உலமா_

10 06 2020 *ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் என ஆணைக்குழு தீர்மானம்* எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர...
10/06/2020

10 06 2020
*ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் என ஆணைக்குழு தீர்மானம்*

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதனை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தினார்.

09 06 2020*போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று வெளியாகும்.*நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவ...
09/06/2020

09 06 2020
*போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் இன்று வெளியாகும்.*

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு
இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், இன்று (09) வெளியிடப்படவுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் ஊடாக வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அறிவிக்கவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

08 06 2020*பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு இன்று இல்லை. இவ்வாரத்தில் அறிவிக்கப்படும்.*பொதுத் தேர்தலுக்கான திகதிய...
08/06/2020

08 06 2020
*பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு இன்று இல்லை. இவ்வாரத்தில் அறிவிக்கப்படும்.*

பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து
ஆராயவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு இன்று கூடியது.

காலை 10 மணிக்கு கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது திணைக்கள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடத்தப் பட்டது.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு இன்று இல்லை அறிவிக்கபட்ட இருந்த நிலையில் அது தொடர்பில் இன்று அறிவிக்கப்படவில்லை.
இவ்வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபட்டது.

08 06 2020*பொதுத்தேர்தல் செலவு 800 -900 கோடி வரை அதிகரிக்கலாம் !* சுகாதார பணிப்புரைகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்த வழ...
08/06/2020

08 06 2020
*பொதுத்தேர்தல் செலவு 800 -900 கோடி வரை அதிகரிக்கலாம் !*

சுகாதார பணிப்புரைகளுக்கு அமைவாக பொதுத்தேர்தலை நடத்த வழமையாக தேரதலை நடத்த செலவிடப்படும் தொகையை விட அதிகமான தொகையை செலவிட வேண்டி ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான செலவு செலவு 800 -900 கோடி வரை அதிகரிக்கலாம் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டார்.

இம்முறை தேர்தலை நடத்த 15 ஆயிரம் மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டி ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

🇱🇰 *AbdaA Media 🇱🇰07 06 2020*LATEST NEWS**தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று*2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத...
07/06/2020

🇱🇰 *AbdaA Media 🇱🇰
07 06 2020
*LATEST NEWS*

*தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று*

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று இடம்பெறவுள்ளது.
காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (07) இந்த ஒத்திகை வாக்களிப்பு நடைபெறுகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக புதிய வழிகாட்டலுக்கு அமைவாக வாக்களிப்பு நிலைமை தொடர்பில் தெளிவை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க, புதிய வழி முறையில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பதற்கான காலத்தை மதிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார்.

*💫News Editor :- Rifnas💫*

06/06/2020

🇱🇰 *AbdaA Media* 🇱🇰
06 06 2020
*பதுளையில் சோகம் - நீராட சென்ற மூன்று பேர் பலி!*

பதுளை - மடுல்சீமை கெரடி எல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளும் , மற்றுமொரு சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 38, 12 மற்றும்13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பசறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

*💫News Editor :- Rifnas💫*

*20வீதமான இலங்கையர் தொழில் இழக்கும் அபாயம்.**JUNE 05,2020, FRIDAY*வெளிநாடுகளில் உள்ள இங்கையர்களில் 20 வீதமானவர்கள் கொரோன...
05/06/2020

*20வீதமான இலங்கையர் தொழில் இழக்கும் அபாயம்.*

*JUNE 05,2020, FRIDAY*

வெளிநாடுகளில் உள்ள இங்கையர்களில் 20 வீதமானவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் இழக்கும் அபாய நிலையை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் ஜகத் பட்டுவத்த தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான கட்டார் மற்றும் குவைட் நாடுகளில் உள்ள இலங்கையரே அதிகமாக பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

*அனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை...!*On, June, 2020, 04அனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்...
05/06/2020

*அனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை...!*

On, June, 2020, 04

அனைத்து அரசு சுகாதார சேவை ஊழியர்களும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதாக வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

🇱🇰 AbdaA Media 🇱🇰04 06 2020*பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.*எதிர்வரும் பொதுத் தேர்தலில் ப...
05/06/2020

🇱🇰 AbdaA Media 🇱🇰
04 06 2020
*பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.*

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.

*💫News Editor :- Rifnas

*கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு**JUNE 03,2020, WEDNESDAY*முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்க...
03/06/2020

*கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு*

*JUNE 03,2020, WEDNESDAY*

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில், கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முதலாம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது

இந்த நிலையில் குறித்த யுவதியின் சடலம் இன்று (03) காலை மீட்கப்பட்டுள்ளது.

அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

*திருமண வீட்டில் உணவு நஞ்சாகி 30 பேர் வைத்தியசாலையில்**JUNE 03,2020, WEDNESDAY*திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர்...
03/06/2020

*திருமண வீட்டில் உணவு நஞ்சாகி 30 பேர் வைத்தியசாலையில்*

*JUNE 03,2020, WEDNESDAY*

திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு, ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி, வைத்தியர் எம். ரமேஸ் தெரிவித்தார்.

நேற்றிரவு (02) ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் திருமண வீடொன்றில் சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி கலந்த புரியாணியை உட்கொண்டுள்ளனர். இதன் பின்னர் இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுள் பெண்களும், சிறுவர்களும் அடங்குகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சுகாதார பகுதியினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (03) காலையும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பாகவும், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

*ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி.**JUNE 03,2020, WEDNESDAY*  ஆறுமுகன் தொண்டமான...
03/06/2020

*ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி.*

*JUNE 03,2020, WEDNESDAY*

ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி!!
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தை பிரதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர், அவரது வீட்டில் இருந்தவரும் சாரதி ஒருவரும் நேற்றைய தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்ட பத்தரமுல்லையிலள்ள அவரது வீட்டிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்திற்கும் சென்றுள்ளார்.

செய்தி சேகரிப்பதற்காக அந்த பிரதேசத்திற்கு சென்று அவர் திரும்பியுள்ளார். அவரின் இறுதிக் கிரியைகளின் பின்னர் குறித்த ஊடகவியலாளருக்கு கொரோனா அறிகுறிகள் சில காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டதனை தொடர்ந்து குறித்த பிரதேச ஊடகவியலாளர் டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீசீஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொளள்ப்படும் எனவும் மீண்டும் ஒரு முறை பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அதுவரை அந்த ஊடகவிலாளர் மற்றும் ஏனைய இருவர் ஹட்டன் திம்புல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

*கோர விபத்து… பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு.**JUNE 03,2020, WEDNESDAY*வவுனியா கனகராயன்குளம் A9 வீதியில் இ...
03/06/2020

*கோர விபத்து… பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழப்பு.*

*JUNE 03,2020, WEDNESDAY*

வவுனியா கனகராயன்குளம் A9 வீதியில் இன்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் பொலிஸ்
உத்தியோகத்தர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன் போது இன்று காலை 5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.

சடலம் வவுனியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

🇱🇰 **AbdaA* *Media**24 🇱🇰03 06 2020*பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் அறிக்கை இன்று தேர்தல் ஆணைக...
03/06/2020

🇱🇰 **AbdaA* *Media**24 🇱🇰
03 06 2020
*பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல் அறிக்கை இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு*

பொதுத் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை இன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

*💫News Editor :- Rifnas

*ஜூன் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனம்.*
02/06/2020

*ஜூன் 4 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனம்.*

*குளவிக்கொட்டுக்கு இலக்காகி முஸ்லிம் பெண் வபாத்! மேலும் 7 பேர் வைத்தியசாலையில்..**JUNE 02,2020, TUESDAY*லிந்துலை, சென்க...
02/06/2020

*குளவிக்கொட்டுக்கு இலக்காகி முஸ்லிம் பெண் வபாத்! மேலும் 7 பேர் வைத்தியசாலையில்..*

*JUNE 02,2020, TUESDAY*

லிந்துலை, சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (02) பிற்பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, 07 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்காக லிந்துலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லிந்துலை சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான அலீமா பீபீ (59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, தேயிலை மலையில் இருந்த குளவிக்கூடு ஒன்று உடைந்து, அதிலிருந்த குளவிகள் கலைந்து வந்து இவர்களை தாக்கியுள்ளது.

இதன்போது குறித்த பெண் தொழிலாளி, குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொதுமக்கள் உதவியுடன் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவருடன் 03 ஆண் தொழிலாளர்களும் 04 பெண் தொழிலாளர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

உயிரிழந்த பெண் தொழிலாளியின் சடலம், லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

*பொது போக்குவரத்து தொடர்பில் பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி.**JUNE 02,2020, TUESDAY*எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சு...
02/06/2020

*பொது போக்குவரத்து தொடர்பில் பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி.*

*JUNE 02,2020, TUESDAY*

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சுகாதார அறிவுறுத்தலுக்கமைய தொடரூந்து மற்றும் பேரூந்து உட்பட சகல பொது போக்குவரத்துக்களையும் வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றினை தொடர்ந்து இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

02 06 2020*பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வௌியானது*ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நட...
02/06/2020

02 06 2020

*பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்ப்பு வௌியானது*

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*💫News Editor:-Rifnas

*பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி* 17 May 2020   எதிர்வரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் கணிப்பானை உபயோகப்ப...
17/05/2020

*பாடசாலை மாணவர்களுக்கான ஓர் விசேட செய்தி*

17 May 2020

எதிர்வரும் கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் கணிப்பானை உபயோகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

கணக்கியல்,பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக இந்த கணிப்பானை உபயோகிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

*பாடசாலைகளின் ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சர் கூறுவது என்ன ?*பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து இதுவரை எந்தத் தீர்மான...
15/05/2020

*பாடசாலைகளின் ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சர் கூறுவது என்ன ?*

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. நாடு முற்றாக பாதுகாப்பில் உள்ளது என்ற சான்றிதழ் வழங்கப்படும் வரையில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது என்கிறார் கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும. நாட்டில் உள்ள பாடசாலைகளில் 582 பாடசாலைகளுக்கு நீர் வசதிகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை அடுத்து பாடசாலைகள் குறித்து நாம் ஆராய்ந்து பார்த்த போது முதல்தடவையாக பல முக்கிய காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 10 ஆயிரத்து 167 பாடசாலைகளில் 582 பாடசாலைகளுக்கு நீர் வசதிகள் இல்லை. மாணவர்கள் கைகளை கழுவ வேண்டும் என்ற கோரிக்கை இப்போது சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து பார்த்த போதே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

கொவிட் -19 தாக்கம் காரணமாக பல விடயங்களில் நாம் இலகுவாக கையாள பழகிக்கொண்டுள்ளோம். நாம் இழந்த பல விடயங்களை எமக்கு கொவிட் வைரஸ் மீண்டும் தந்துள்ளது. ஒரு விதத்தில் இந்த தாக்கம் நல்லதென்றே நினைக்கிறேன்.

அதேபோல் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த உறுதியான தீர்மானம் இப்போதுவரையில் எடுக்கவில்லை. ஆனால் மாணவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்.

அதுவரையில் எம்மால் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது. சகல பாடசாலைகளுக்கும் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். கைகளை கழுவ அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட வேண்டும்.

எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் மாணவர்களின் பாதிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆகவே நல்ல மாற்றங்கள் விரைவில் உருவாக்கும் என அமைச்சர் கூறினார்.

15/05/2020

*💥🌙லைலத்துல் கத்ரின் சிறப்புகள்💥🌙*

1️⃣
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.

சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.

*(அல்குர்ஆன் 97:1,5)*

*யாழில் கடலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து*Thursday, April 30, 2020காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ...
30/04/2020

*யாழில் கடலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து*

Thursday, April 30, 2020

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் வண்டி, கடலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் பஸ் நடத்துனர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (30) பிற்பகல் 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் - யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

*🇱🇰காலியில் 30 பேரின் உயிரைக் குடித்த ஊரடங்குச் சட்டம்🌟* ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் காலி மாவட்ட...
30/04/2020

*🇱🇰காலியில் 30 பேரின் உயிரைக் குடித்த ஊரடங்குச் சட்டம்🌟*

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் காலி மாவட்டத்தில் மட்டும் 30 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 30 நாட்களிற்குள் இந்த மரணங்கள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை காலி பொலிஸார் வெளியிட்டிருக்கின்றனர்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியதன் காரணமாக முறையான மருந்துகள் கிடைக்கும் வைத்தியசாலைகளின் இலவச மருத்துவ சேவைகளுக்காக செல்ல முடியாத நோயாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் நீரிழிவுநோய், புற்றுநோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகிய பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்களே எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மனிதனின் அன்பு எல்லையற்றது என்று காட்டியுள்ளார்.இந்த காவல் துரை அதிகாரியை பாராட்டலாம்.Congratulations and god bless you ...
22/04/2020

மனிதனின் அன்பு எல்லையற்றது என்று காட்டியுள்ளார்.
இந்த காவல் துரை அதிகாரியை பாராட்டலாம்.
Congratulations and god bless you &your family sir Lot of salutes

இல்லாதவர்களுக்கே  தெரியும் இதன் அருமை எல்லாம்.இருக்கின்ற வரைக்கும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.  இப்படம் நிரைய அ...
22/04/2020

இல்லாதவர்களுக்கே தெரியும் இதன் அருமை எல்லாம்.
இருக்கின்ற வரைக்கும் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.
இப்படம் நிரைய அர்த்தமுள்ள கருத்துக்களை முன்வைக்கின்றது
இதனை உணர்வு பூர்வமாக உணர்ந்தவர்கள் ஒரு Like போட்டு போங்க.
உதவிக் கரம் உள்ளவர்கள் , பன்னுங்க.
உங்களது Like நன்றி
Thanks you All

*க.பொ.த உயர்தர பரீட்சை,பாடசாலைகள் இரண்டாம் தவணை தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு*2020-04-22க.பொ.த உயர்தர பரீட்சையை பி...
22/04/2020

*க.பொ.த உயர்தர பரீட்சை,பாடசாலைகள் இரண்டாம் தவணை தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவிப்பு*

2020-04-22

க.பொ.த உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் தீர்மானத்திலும் இதுவரை மாற்றமில்லையென தெரிவித்துள்ளார்.

Address

Redbana Kalpitiya Puttalam
Colombo
20003400

Alerts

Be the first to know and let us send you an email when AbdaA Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AbdaA Media:

Videos

Share


Other News & Media Websites in Colombo

Show All