Beruwala News

Beruwala News "மக்களால் மக்களிடமிருந்து மக்களுக்காக"

இந்திய பாராளுமன்றத் தேர்தல் ஆரம்பம்பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19) தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்கள...
19/04/2024

இந்திய பாராளுமன்றத் தேர்தல் ஆரம்பம்

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19) தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், இலட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.

அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising
+94755780000

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்புகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் நேற்று பிற்பகல் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உ...
19/04/2024

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நேற்று பிற்பகல் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

தனது உறவினர்களுடன் நீராடசென்றிருந்த வேளையில குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.

காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 17 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்புநாடளாவிய ரீதியில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்...
19/04/2024

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாடளாவிய ரீதியில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை.

மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை.

கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்.

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை.

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை.

மன்னார் - சிறிதளவில் மழை பெய்யும்.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

Dialog மற்றும் Airtel நிறுவனங்களுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!!!▪️Dialog Axiata PLC, Axiata Group Berhad),  Bharti ...
18/04/2024

Dialog மற்றும் Airtel நிறுவனங்களுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!!!

▪️Dialog Axiata PLC, Axiata Group Berhad), Bharti Airtel Limited நிறுவனங்கள், இன்று முதல் இலங்கையில் தமது செயற்பாடுகளை ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

▪️இதற்கமைய, Dialog நிறுவனம், Airtel Lanka நிறுவனத்தினை இணைத்துக்கொண்டுள்ளதுடன்,
Bharti Airtel நிறுவனத்திற்கு Dialog நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படவுள்ளன.

▪️இந்த ஒன்றிணைந்த உடன்படிக்கைக்கு, பங்குதாரர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

🌈🌈 வீட்டில் இருந்தே Spoken English & Grammar Zoom Online மூலம்  கற்போம்👉 உங்கள் ஆங்கிலம் பேசும் கனவு...நனவாகிறதுGolden E...
18/04/2024

🌈🌈
வீட்டில் இருந்தே Spoken English & Grammar Zoom Online மூலம் கற்போம்

👉 உங்கள் ஆங்கிலம் பேசும் கனவு...
நனவாகிறது

Golden English 60 வது குழுவில் இணையுங்கள்
👉
https://chat.whatsapp.com/J8gIycJUrlS8wpdJjv7NTD

Golden English Zoom Live வகுப்பில் இணைந்து...
நீங்கள் விரும்பிய ஒருவரை இலவசமாக வகுப்பில் சேருங்கள்

👉 வீட்டில் இருந்து ஆங்கிலம் கற்று மூன்று சான்றிதழ்களை பெறுங்கள்

Golden Spoken English zoom live 60 வது குழுவில் இணையுங்கள்

👉 யார் யார் Golden English வகுப்பில் இணைய முடியும்...?

👉 பாடசாலை செல்லும் மாணவர்கள்.. (ஆண்டு 7 கு மேல் )
👉 வீட்டில் இருக்கும் இல்லதரசிகள்
👉 இளைஞர்கள்
👉 யுவதிகள்
👉 தொழில் புரிப்பவர்கள்
என அனைவரும் இணையலாம்

👉 எவ்வளவு காலம்...?
பாடநெறி காலம்
4 மாதங்கள்

👉 வாரம் 3 நாட்கள்
திங்கள்
வியாழன் சனி

👉 Certificates கிடைக்குமா...?
பாடநெறி முடிவில் 3 Certificates கிடைக்கும் .
👍 Dip in English Certificate
👉 Eng General knowledge Certificate
👉 English News Reading Certificate

பாடநெறி மாத கட்டணம் என்ன...?
மாத கட்டணம் 1600/-..

👉 வகுப்பு எவ்வாறு நடைபெறும்...?
வகுப்பு Zoom மூலம் Live ஆக நடைபெறும்... ஆசிரியையிடம் உடனடியாக உங்கள் சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்...

👉 வகுப்பில் ஆங்கிலம் பேச முடியுமா...?
ஆம் வகுப்பில் உங்களுக்கு ஆங்கிலம் பேச வாசிக்க Live சந்தர்ப்பம் வழங்கப்படும்

👉 வகுப்பில் மேலதிக பயிற்சி வழங்கப்படுமா...?
ஆம்.. நாளாந்தம் ஆங்கிலம் பேசவும்...
நாளாந்தம் பொது அறிவு வினா விடை கற்கவும், ஆங்கில செய்தி வாசிக்கவும் group மூலம் பயிற்சி வழங்கப்படும்.

👉 பாடங்கள் எப்படி வழங்கப்படும்...?
பாடங்கள் pdf வடிவில் வழங்கப்பட்டு வகுப்பில் கற்பிப்படும்

👉 நேரடி வகுப்பு போல் நடைபெறுமா...?
ஆம் நேரடி வகுப்பு போன்று ஆசிரியருடன் பேசிக்கொண்டு.. கேட்டு கொண்டு கற்கலாம்

👉 வகுப்பில் English Grammar கற்பிக்கபடுமா..?
ஆம் ஆங்கில இலக்கணம் அடிப்படையில் இருந்து கற்பிக்க படும்..

👉 வகுப்பில் இணைவது எப்படி...?

வகுப்பு ஒரு மாத கட்டணம் 1600/-
(நீங்கள் விரும்பிய ஒருவரை *இலவசமாக ஒரு மாதம் வகுப்பில் சேர்க்க முடியும்
(Boys /Girls தனி தனி )இணைக்க படுவீர்கள்.

🤡 மேலதிக விபரம் பெற Golden Eng குழுவில் இணையுங்கள்

👉 அல்லது YouTube இல் கேளுங்கள்
https://youtu.be/ilJsErqAD9c?si=aSybdWW0ahkVuPDI

👉 வகுப்பு ஆரம்பம்
👉👉 22/04/2024.
இரவு 7 மணிக்கு..

👉 ஆசிரியை.
Mrs.Rammya Balendran
HND in English

👉 அழையுங்கள்.
Ramzan சார்,
0777-806606.

👍 Golden English
Kandy
email. leessrilanka@gmail. Com

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயின் பணம், நகை கொள்ளைவவுனியா பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து தாயாரின...
18/04/2024

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயின் பணம், நகை கொள்ளை

வவுனியா பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து தாயாரின் தங்க நகைகள் மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவமென்று பதிவாகியுள்ளது. இக்கும்பலை தேடி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியா தெற்கு வலய கல்வி அலுவலகத்திற்கு அருகில் குறித்த பெண் வவுனியா நகரிலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது முகமூடி அணிந்த மூன்று பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, குழந்தையை மோட்டார் சைக்கிளில் இறக்கிவிட்டு, அவர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

🪀Whatsapp Group
https:Cq5MxYOBABiDpCq5MxYOBABiDpmCOxபடி

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

அருட்தந்தை சிறில் காமினி சி.ஐ.டிக்கு அழைப்புஅருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்...
18/04/2024

அருட்தந்தை சிறில் காமினி சி.ஐ.டிக்கு அழைப்பு

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



ஏப்ரல் – 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக, அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.



அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

நாசா விண்வெளி ஆய்வுக் குழுவில் இலங்கை விஞ்ஞானி!!நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்...
18/04/2024

நாசா விண்வெளி ஆய்வுக் குழுவில் இலங்கை விஞ்ஞானி!!

நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்ஞானி கலாநிதி பியுமி விஜேசேகர இடம்பெற்றுள்ளார்.

செவ்வாய் கிரகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்காக நான்கு பேர் கொண்ட குழுவில் இவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் கிரக பயணத்திற்காக நாசாவால் நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த பணிக்காக, பியுமி விஜேசேகர உள்ளிட்ட குழுவினர் மே 10 ஆம் திகதி “மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக்” பணி பகுதிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 45 நாட்கள் அவர்கள் அங்கு தங்கியிருப்பார்கள் எனவும், ஜூன் 24 ஆம் திகதி குழுவினர் பூமிக்கு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்றதும், குழுவினர் சுமார் 45 நாட்கள் செவ்வாய் கிரக சூழலில் தமது பொழுதை செலவிடுவார்கள்.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg
🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising
+94755780000

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

ஜப்பானில் நிலநடுக்கம்ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கட...
18/04/2024

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால் 8 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!!!▪️ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் இன்று...
18/04/2024

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!!!

▪️ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் இன்று(18) கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

▪️கட்சியின் இருதரப்பினராலும் இதுவரை தமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் ஆணைக்குழுவில் முன்வைக்கவுள்ளதாக அதன் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

▪️குறித்த ஆவணங்களை ஆராய்ந்ததன் பின்னர் காணப்படும் நிலைமை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அவர் கூறினார்.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

📢ANNOUNCEMENT
18/04/2024

📢ANNOUNCEMENT

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!!▪️இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணம், ருவாங் தீவில் உ...
18/04/2024

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!!

▪️இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணம், ருவாங் தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, சுமார் 800 பேர் அத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

▪️இந்தோனேசியாவின் மனாடோவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ருவாங் தீவில் உள்ள ஒரு எரிமலை, நேற்று முன்தினம் (16) 3 முறைக்கு மேல் வெடித்துள்ளது. இந்த எரிமலை பல நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்ததாகவும், தற்போது வெடித்துச் சிதறி வருவதாகவும் அந்நாட்டின் எரிமலை கண்காணிப்பு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

ஒமான் வளைகுடாவில் கப்பல் கவிழ்ந்து விபத்து – 21 இலங்கையர்கள் மீட்பு!!!▪️ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற...
18/04/2024

ஒமான் வளைகுடாவில் கப்பல் கவிழ்ந்து விபத்து – 21 இலங்கையர்கள் மீட்பு!!!

▪️ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

▪️குக் தீவுகளின் ( Cook Islands) கொடியுடன் எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பல், ஈரானின் தெற்கு நகரமான ஜாஸ்கில் (Jask) இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் கவிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

▪️கப்பல் கவிழ்ந்ததையடுத்து, மீட்புக் கப்பலொன்று அப்பகுதிக்கு அனுப்பபட்டதாகவும், 21 கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும் ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

பாகிஸ்தானில் கனமழை ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்புபாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. க...
18/04/2024

பாகிஸ்தானில் கனமழை ; உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டிட இடிபாடு, மின்னல் விழுந்து உயிரிழப்பு உட்பட 46 பேர் உயிரிழந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் உட்பட 80 பேர்உயிரிழந்தனர்.

பலூசிஸ்தானில் இயல்பை விட 256 சதவீதம் கனமழை பதிவாகியுள்ளதாகவும், பாகிஸ்தான் முழுவதும் 61 சதவீதம் இயல்பை மீறி மழை பெய்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg
🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising
+94755780000

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 17 பேர் உயிரிழப்புஉக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து...
18/04/2024

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - 17 பேர் உயிரிழப்பு

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் நேற்று, ரஷ்யாவின் 3 ஏவுகணைகள் உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியதில், பொதுமக்களில் 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில், 3 குழந்தைகள் உட்பட 60 பேர் காயமடைந்தனர்.

மேலும், தாக்குதலில் 8 அடுக்குமாடிகளை கொண்ட ஹோட்டல் உட்பட 10க்கும் மேற்பட்ட கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

பெலாரஸ் நாட்டின் எல்லையையொட்டிய செர்னிகிவ் பகுதியில், ரஷ்ய படையெடுப்பின்போது தொடக்கத்தில், படையினர் ஆக்கிரமித்தபோதும், பின்னர் 2 ஆண்டுகளாக அந்த பகுதியில் மோதல் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

 ; IPL தொடரில் மூன்றாவது வெற்றியை சுவைத்த டெல்லி அணி!!!▪️இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 2024ம் ஆண்டு பருவகாலத் தொ...
18/04/2024

; IPL தொடரில் மூன்றாவது வெற்றியை சுவைத்த டெல்லி அணி!!!

▪️இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 2024ம் ஆண்டு பருவகாலத் தொடருக்கான முப்பத்திரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

▪️அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

▪️இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் மாத்திரம் இழந்து 89 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

▪️இது IPL தொடரில் ஒரு இன்னிங்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றுக் கொண்ட மிகக் குறைந்த ஓட்டங்களாகும்.

▪️குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட ரஷீத் கான் மாத்திரம் அதிகபட்சமாக 24 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

▪️டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் முகேஷ் குமார் 3 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும், அக்சர் படேல் மற்றும் கலீல் அகமது தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

▪️90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலகு வெற்றி இலக்கு நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

▪️டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் 10 பந்துகளில் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

▪️குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுக்களையும், ரஷீத் கான் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

▪️இப் போட்டியின் நாயகனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பண்ட் தெரிவாகினார்.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

மைத்ரிக்கெதிரான தடையுத்தரவு நீடிப்புஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவ...
18/04/2024

மைத்ரிக்கெதிரான தடையுத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்புகளுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரு பெ...
18/04/2024

வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், இருவரும் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதைக் கண்ட பிரதேசவாசிகள், பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்கள்.

சோதனைகளை மேற்கொண்டு பின்னர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டனதென பொலிஸார் தெரிவித்தனர்.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்புநாடளாவிய ரீதியில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்...
18/04/2024

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாடளாவிய ரீதியில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

நடிகை தமிதா மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!!▪️நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் எதிர்வரும் 24 ஆம் தி...
17/04/2024

நடிகை தமிதா மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!!

▪️நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

▪️அவர்கள் இருவரும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

▪️கொரியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் இருவரும் அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்▪️உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து குறு...
17/04/2024

தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

▪️உள்நாட்டில் அல்லது வௌிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

▪️இவ்வாறான மோசடி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

▪️போலி இணையத்தளம், போலி தொலைபேசி இலக்கங்கள் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

▪️தபால் திணைக்களத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இவ்வான மோசடிகளில் சிக்க வேண்டாம் என திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

▪️தபால் திணைக்களமானது, கடன் அட்டைகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தகவல்களை பெற்றுக்கொள்வதில்லை என தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

🌈🌈 வீட்டில் இருந்தே Spoken English & Grammar Zoom Online மூலம்  கற்போம்👉 உங்கள் ஆங்கிலம் பேசும் கனவு...நனவாகிறதுGolden E...
17/04/2024

🌈🌈
வீட்டில் இருந்தே Spoken English & Grammar Zoom Online மூலம் கற்போம்

👉 உங்கள் ஆங்கிலம் பேசும் கனவு...
நனவாகிறது

Golden English 60 வது குழுவில் இணையுங்கள்
👉
https://chat.whatsapp.com/J8gIycJUrlS8wpdJjv7NTD

Golden English Zoom Live வகுப்பில் இணைந்து...
நீங்கள் விரும்பிய ஒருவரை இலவசமாக வகுப்பில் சேருங்கள்

👉 வீட்டில் இருந்து ஆங்கிலம் கற்று மூன்று சான்றிதழ்களை பெறுங்கள்

Golden Spoken English zoom live 60 வது குழுவில் இணையுங்கள்

👉 யார் யார் Golden English வகுப்பில் இணைய முடியும்...?

👉 பாடசாலை செல்லும் மாணவர்கள்.. (ஆண்டு 7 கு மேல் )
👉 வீட்டில் இருக்கும் இல்லதரசிகள்
👉 இளைஞர்கள்
👉 யுவதிகள்
👉 தொழில் புரிப்பவர்கள்
என அனைவரும் இணையலாம்

👉 எவ்வளவு காலம்...?
பாடநெறி காலம்
4 மாதங்கள்

👉 வாரம் 3 நாட்கள்*
திங்கள்
வியாழன் சனி

👉 Certificates கிடைக்குமா...?
பாடநெறி முடிவில் 3 Certificates கிடைக்கும் .
👍 Dip in English Certificate
👉 Eng General knowledge Certificate
👉 English News Reading Certificate

பாடநெறி மாத கட்டணம் என்ன...?
மாத கட்டணம் 1600/-..

👉 வகுப்பு எவ்வாறு நடைபெறும்...?
வகுப்பு Zoom மூலம் Live ஆக நடைபெறும்... ஆசிரியையிடம் உடனடியாக உங்கள் சந்தேகம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்...

👉 வகுப்பில் ஆங்கிலம் பேச முடியுமா...?
ஆம் வகுப்பில் உங்களுக்கு ஆங்கிலம் பேச வாசிக்க Live சந்தர்ப்பம் வழங்கப்படும்

👉 வகுப்பில் மேலதிக பயிற்சி வழங்கப்படுமா...?
ஆம்.. நாளாந்தம் ஆங்கிலம் பேசவும்...
நாளாந்தம் பொது அறிவு வினா விடை கற்கவும், ஆங்கில செய்தி வாசிக்கவும் group மூலம் பயிற்சி வழங்கப்படும்.

👉 பாடங்கள் எப்படி வழங்கப்படும்...?*l
பாடங்கள் pdf வடிவில் வழங்கப்பட்டு வகுப்பில் கற்பிப்படும்

👉 நேரடி வகுப்பு போல் நடைபெறுமா...?
ஆம் நேரடி வகுப்பு போன்று ஆசிரியருடன் பேசிக்கொண்டு.. கேட்டு கொண்டு கற்கலாம்

👉 வகுப்பில் English Grammar கற்பிக்கபடுமா..?
ஆம் ஆங்கில இலக்கணம் அடிப்படையில் இருந்து கற்பிக்க படும்..

👉 வகுப்பில் இணைவது எப்படி...?

வகுப்பு ஒரு மாத கட்டணம் 1600/-
(நீங்கள் விரும்பிய ஒருவரை இலவசமாக ஒரு மாதம் வகுப்பில் சேர்க்க முடியும்
(Boys /Girls தனி தனி )இணைக்க படுவீர்கள்.

🤡 மேலதிக விபரம் பெற Golden Eng குழுவில் இணையுங்கள்

👉 அல்லது YouTube இல் கேளுங்கள்
https://youtu.be/ilJsErqAD9c?si=aSybdWW0ahkVuPDI

👉 வகுப்பு ஆரம்பம்
👉👉 22/04/2024
இரவு 7 மணிக்கு..

👉 ஆசிரியை.
Mrs.Rammya Balendran
HND in English

👉 அழையுங்கள்.
Ramzan சார்,
0777-806606.

👍 Golden English
Kandy
email. leessrilanka@gmail. Com

🔴 இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

டுபாயில் கனமழை,வெள்ளம் - விமான சேவை பாதிப்புடுபாயில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம்  முழுவ...
17/04/2024

டுபாயில் கனமழை,வெள்ளம் - விமான சேவை பாதிப்பு

டுபாயில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று(16) பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளில் நீர் தேங்கி, பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது

கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டுபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது.

எண்ணற்ற விமானங்கள் காலதாமதத்துடனும், இரத்து செய்யப்பட்டன. இது விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால், அமீரகத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. புயல் வீசக்கூடும் என முன்னறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

டுபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 18 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

அரச அங்கீகாரம் பெற்ற பிரபல நாடி வைத்தியர் பேருவளைக்கு மீண்டும் வருகை!!திகதி :2024.ஏப்ரல் 20&21நேரம் : முற்பகல் 8.00 முதல...
17/04/2024

அரச அங்கீகாரம் பெற்ற பிரபல நாடி வைத்தியர் பேருவளைக்கு மீண்டும் வருகை!!

திகதி :2024.ஏப்ரல் 20&21

நேரம் : முற்பகல் 8.00 முதல் பிற்பகல் 8.00 வரை

0767710092 அல்லது 0771962009 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிகொள்ளுங்கள்.

🔴இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பூனையால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் ஒருவர் உயிரிழப்புவீட்டு செல்லப்பிராணியான பூனையால் மைத்துனர்கள் இருவருக்கிடையில் ந...
17/04/2024

பூனையால் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் ஒருவர் உயிரிழப்பு

வீட்டு செல்லப்பிராணியான பூனையால் மைத்துனர்கள் இருவருக்கிடையில் நடந்த தகராறில் பெண் ஒருவர் அதிர்ச்சிக்குள்ளாகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தென் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஒருவர் புத்தாண்டுக்காக சப்-இன்ஸ்பெக்டரான மைத்துனரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த நீதிபதி சப்-இன்ஸ்பெக்டரின் சகோதரியை திருமணம் செய்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி புத்தாண்டு தினத்தன்று மாவட்ட நீதிபதி தனது மனைவியுடன் வீட்டில் வளர்க்கும் பூனையுடன் மைத்துனரான சப்-இன்ஸ்பெக்டர் மைத்துனரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். 14ஆம் திகதி இரவு, நீதிபதியும், அவரது மனைவியும் தமது வீட்டுக்கு செல்ல முற்படும் போது, அவர்கள் கொண்டு வந்த பூனை வீட்டில் இருக்கவில்லை.

இது தொடர்பாக மைத்துனர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சந்தர்ப்பத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளில் மைத்துனரான நீதிபதியை திட்டி கண்ணத்தில் அரைந்ததாகவும் நீதிபதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்மீமன பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு வீட்டிற்கு வந்து சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்த போது நீதிபதியின் மனைவி அதிர்ச்சியில் கிழே விழுந்த நிலையில் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

நீதிபதியை தகாத வார்த்தைகளில் திட்டி கண்ணத்தில் அரைந்ததாக கூறப்படும் சப் இன்ஸ்பெக்டரை சந்தேகத்தின் பேரில் அக்மீமன பொலிஸார் கைது செய்து காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான பூனை நீதிபதியின் காரில் இருந்தமை பின்னர் தெரியவந்துள்ளது.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA

 ; IPL தொடரில் ஆறாவது வெற்றியை சுவைத்த ராஜஸ்தான்  அணி!!!▪️இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 2024ம் ஆண்டு பருவகாலத் த...
17/04/2024

; IPL தொடரில் ஆறாவது வெற்றியை சுவைத்த ராஜஸ்தான் அணி!!!

▪️இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 2024ம் ஆண்டு பருவகாலத் தொடருக்கான முப்பத்து ஒன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

▪️கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

▪️இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை மாத்திரம் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது.

▪️கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சுனில் நரைன் 56 பந்துகளில் 108 ஓட்டங்களைப் பெற்றார்.

▪️மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ஓட்டங்களையும் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றார்.

▪️ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுக்களையும், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ட்ரென்ட் போல்ட் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினார்.

▪️224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய வெற்றி இலக்கு நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

▪️ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 107 ஓட்டங்களைப் பெற்றார்.

▪️மேலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் ரியான் பராக் 14 பந்துகளில் 34 ஓட்டங்களையும், ரோவ்மன் பவல் 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும் பெற்றார்.

▪️கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுக்களையும்,இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட வைபவ் அரோரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

▪️இப் போட்டியின் நாயகனாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பில் சதம் விளாசிய ஜாஸ் பட்லர் தெரிவாகினார்.

💁‍♂️ Whatsapp https://chat.whatsapp.com/HPWMmBp6613Htt8yRVI1pN
💁‍♂️ Telegram https://t.me/Beruwalanewssrilanka
💁‍♂️Community https://shorturl.at/kvHP9
💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP
💁‍♂️ Advertising https://shorturl.at/bvyE4

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் திருட்டுநுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவ...
17/04/2024

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் திருட்டு

நுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை, பணம், இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் நுவரெலியா இலங்கை அரச போக்குவரத்து சபைக்கு அருகில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனியார் விடுதியொன்றிலேயே குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் விடுதி வசிப்பவர்கள் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை கழிப்பதற்கு தமது சொந்த ஊருக்கு சென்றிருந்த வேளை குறித்த விடுதியை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் , பணம் மற்றும் மடிக்கணினி , தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பல இலத்திரனியல் சாதனங்களை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சொந்த ஊருக்கு சென்று மீண்டும் இன்று (17) திரும்பிய நிலையில் விடுதி உடைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆராய்ந்த போதே திருட்டுச் சம்பவம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா தடயவியல் பொலிஸார் மோப்ப நாய் உதவியுடன் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

🪀Whatsapp Group
https://chat.whatsapp.com/Cq5MxYOBABiDpmCOxKUkvg

🪀Girls Whatsapp https://shorturl.at/kvHP9

For Advertising>> +94755780000

FOLLOW US 👇

💁‍♂️Instagram https://shorturl.at/dCPS0
💁‍♂️ Facebook https://shorturl.at/nIY48
💁‍♂️ YouTube https://shorturl.at/kpwOP

BERUWALA NEWS

Address

Beruwala
12070

Alerts

Be the first to know and let us send you an email when Beruwala News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beruwala News:

Videos

Share