Tamiltv News

Tamiltv News உலக தமிழர்களின் உண்மைக் குரல் News

15/01/2025

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று தொலைபேசி மூலம் 0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு Dialog சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு கிடைத்திருப்பதாக கூறி அவரின் வங்கி கணக்கு இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி இலக்கம் என்பவற்றை பெற்று கடவுச்சொற்களையும் அவரின் அறியாமையை பயன்படுத்தி பெற்று அதன் மூலம் இலங்கை வங்கி கணக்கின் Smart pay செயலியில் உள்நுழைந்து ரூபா 200 000/= பணத்தை திருடியுள்ளனர்

இதே முறையில் 0774650187 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு குறித்த பிரதேசத்தின் வேம்படியை சேர்ந்த முதியவர் ஒருவரிடமும் நேற்றையதினம்(14) ரூபா 2 922 000/= பணத்தை திருடியுள்ளனர்

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக இருவரும் வங்கியில் முறையிட்ட பொழுது மக்கள் வங்கியின் கணக்கு ஒன்றிற்கு பணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வங்கி கணக்கின் விபரம் தமது செயலியில் காட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்

குறித்த பெண் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும் முதியவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்(tkn)

*** # # # # முன்னெச்சரிக்கை # # # #***15.01.2024 புதன்கிழமை மாலை 5.30 மணிஇந்த பதிவு மக்களை குழப்பத்துக்குள்ளாக்கும் பதிவ...
15/01/2025

*** # # # # முன்னெச்சரிக்கை # # # #***

15.01.2024 புதன்கிழமை மாலை 5.30 மணி

இந்த பதிவு மக்களை குழப்பத்துக்குள்ளாக்கும் பதிவல்ல. ஆனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பதிவு. நாம் போதுமான தயார்ப்படுத்தலுடன் இருந்தால் ஏற்படக்கூடிய சிறிய பாதிப்பைக்கூட தவிர்க்க முடியும் என்பதனாலேயே இப் பதிவு.

முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 17.01.2025 அன்று வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக்குகின்றது.

இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் மேலைக் குழப்பமும், மேடன் யூலியன் அலைவின் வருகையும் இருப்பதனால் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

1. எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலம் நிரம்பு நிலையை அடைந்துள்ளது.

3. கிழக்கு மாகாணங்களின் முக்கிய குளங்களான சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை , கந்தளாய்,வாகனேரி, கடுக்காமுனை, நவகிரி, வீராகொட, றுகம் குளம் போன்றன கிட்டத்தட்ட அவற்றின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

4. வடக்கு மாகாணத்தின் பிரதான குளங்களான இரணைமடு, வவுனிக்குளம், முத்தையன் கட்டு, கணுக்கேணி, தண்ணிமுறிப்பு போன்றன தற்போது மேலதிக நீரை வெளியேற்றுகின்றன.

4. இந்த சூழ்நிலையில் எதிர்வரும் 18.01.2025 முதல் 21.01.2025 வரை கிடைக்கும் கன மழை பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்வான பகுதிகளிலும், குளங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள மக்களும் இந்நாட்களில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

6. முன்னரே குறிப்பிட்டபடி நாளையும் நாளை மறுதினமும் (16/17) மழை சற்று குறைவாக இருக்கும்

7. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் இதனைக் கருத்தில் கொண்டு தமது அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.

- நாகமுத்து பிரதீபராஜா -

குடி மக்களே👎இவ்வருடம் மதுபானசாலைகள் மூடப்படும்_தினங்கள் இதோ! 2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குற...
15/01/2025

குடி மக்களே👎
இவ்வருடம் மதுபானசாலைகள் மூடப்படும்_தினங்கள் இதோ!

2025 ஆம் ஆண்டில் மதுபானசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்து கலால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுபானசாலைகள் 18 நாட்களுக்கு மூடப்படும் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை பின்வருமாறு...

2025 ஜனவரி 13 - பௌர்ணமி போயா தினம்

2025 பிப்ரவரி 04 - சுதந்திர தினம்

2025 பிப்ரவரி 12 - பௌர்ணமி போயா தினம்

2025 மார்ச் 13 - பௌர்ணமி போயா தினம்

2025 ஏப்ரல் 12 - பௌர்ணமி போயா தினம்

2025 ஏப்ரல் 13 - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள்

2025 ஏப்ரல் 14 - சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினம்

2025 மே 12 - வெசாக் பௌர்ணமி போயா தினம்

2025 மே 13 - வெசாக் பௌர்ணமி போயா தினத்திற்கு அடுத்த நாள்

செவ்வாய், ஜூன் 10, 2025 - பொசன் பௌர்ணமி போயா தினம்

2025 ஜூலை 10 - பௌர்ணமி போயா தினம்

2025 ஒகஸ்ட் 08 - பௌர்ணமி போயா தினம்

2025 செப்டம்பர் 07 - பௌர்ணமி போயா தினம்

2025 ஒக்டோபர் 03 2025 - உலக மதுவிலக்கு தினம்

2025 ஒக்டோபர் 06 - பௌர்ணமி போயா தினம்

2025 நவம்பர் 05 - பௌர்ணமி போயா தினம்

2025 டிசம்பர் 04- உந்துவப் பௌர்ணமி போயா தினம்

2025 டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ் தினம்

15/01/2025

ஒரு மூடை சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

15/01/2025

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெலே சுதா, அவரது மனைவி மற்றும் ஒரு பெண் நீதிமன்றால் குற்றவாளிகளாக அறிவிக்கப்ட்டு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது

15/01/2025

வரலாற்றுச் சிறப்புமிக்க சிகிரியா சுற்றுலாப் பயணிகளுக்கு இரவு நேர விஜயத்திற்காக திறந்து வைக்கப்படுவதாக வெளியான தகவலை பௌத்த, மதம் மற்றும் மத விவகார அமைச்சு நிராகரித்துள்ளது

கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும்  முச்சக்கர வண்டி ஒன்றும் வந்தாறு மூலை ப...
15/01/2025

கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS Express தனியார் சொகுசு பேருந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் வந்தாறு மூலை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு என பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன

சிகிரியா, இலங்கை 🇱🇰
14/01/2025

சிகிரியா, இலங்கை 🇱🇰

14.01.2025 செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்கு வெளியானதுகடந்த 07.01.2025 அன்று உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாத்தறைக்...
14/01/2025

14.01.2025 செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்கு வெளியானது

கடந்த 07.01.2025 அன்று உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாத்தறைக்கு தென் மேற்கு திசையில் 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வேறுபட்ட அளவுகளிலான மழை தொடரும். அந்த வகையில்;

1. 15.01.2025 காலை மழை சற்று குறைவாக காணப்படும். ஆனால் மதியத்துக்கு பின்னர் வடக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.

2. 16.01.2025 வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

3. 17.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மிகச் சிறிய அளவில் மழை கிடைக்கும்.

( மேலுள்ள 02 நாட்களும்(16/17) போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அறுவடை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஆனாலும் சிறிய அளவிலேனும் மழை கிடைக்கும் என்பதனை கருத்தில் கொள்க.)

17.01.2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால்

1. 18.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. 19.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்

3. 20.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

4. 21.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயப் பெருமக்களே... நீங்கள் அறுவடையைத் திட்டமிட வேண்டும் என்பதற்காகவே மழை தொடர்பான எதிர்வுகூறலை விரிவாக தந்துள்ளேன்.

ஆனாலும் உங்கள் நிலைமைக்காக மனம் வருந்துகின்றேன். நீங்கள் விதைத்த பொழுது பெங்கால் புயல் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் எஞ்சியவற்றை அறுவடை செய்யவிடாமல் தற்போது மழை கிடைத்து வருகின்றது.

தற்போது இரணைமடுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கல்மடுக்குளம் வான் பாய்கின்றது. வவுனிக்குளம் இன்று இரவு அல்லது நாளை காலை வான் பாயும். தண்ணி முறிப்பு மற்றும் முத்தையன் கட்டு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கு முற்றிய நெற்கதிர்கள் உள்ள வயலுக்கு மிதமான மழை கிடைத்தாலே மிகப் பெரிய பாதிப்புக்கள் ஏற்படும்.

இதில் மேலும் கவலையான விடயம் யாதெனில் ஜனவரி மாதம் முடிவதற்கிடையில் இன்னமும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் இனியும் நாம் அசட்டையாக இருக்க முடியாது. துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து மாற்று வழிகள் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.

-நாகமுத்து பிரதீபராஜா-

14/01/2025

பாடசாலை மாணவியை கடத்திய இளைஞர்கள் நீதிமன்றுக்கு!!

தம்மிடம் இருந்து கப்பம் பெறுவதற்காகவே தமது மகள் கடத்தப்பட்டதாக கெலிஓயா – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் குறித்த குற்றத்தை மறைப்பதற்காகவே, சந்தேக நபர் தமது மகளுடன் காதல் உறவு கொண்டிருந்ததாக கூறகிறார் எனவும் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

கெலிஓயா – தவுலகல – ஹபுகஹயடதென்ன பகுதியில் வேனில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 18 வயதான பாடசாலை மாணவியை அண்மையில் கடத்திச் சென்றிருந்தார்.

பின்னர் குறித்த மாணவி அம்பாறை பகுதியில் வைத்து நேற்று மீட்கப்பட்டதுடன் அவரை கடத்திய சென்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தம்மிடம் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தைப் பெற்றுள்ளதாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த பணத்தைத் திருப்பித் தராததால் தாம் மாணவியைக் கடத்தியதாகவும் சந்தேக நபர் காவல்துறையினரிடம் அறிவித்துள்ளார்.

தாமும் கடத்தப்பட்ட மாணவியும், காதல் உறவு கொண்டிருந்ததாகவும், தாம் வெளிநாட்டிலிருந்த போது மாணவியின் தந்தைக்கு 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை வழங்கியுள்ளதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் தமது மூத்த சகோதரியின் மகன் என கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தம்மிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கிலேயே சந்தேகநபர் தமது மகளைக் கடத்தியுள்ளதாகவும் மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் கோரி தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் கம்பளை நீதவான் நீதிமன்றில் இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வேன் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் காஞ்சனா கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், இன்று காலை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரையும் நாளை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், மாணவியின் தந்தையை பொலிஸ் காவலில் வைக்க வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் இன்று காலை கம்பளை ஜயமலபுர பிரதேசத்தில் தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மொஹமட் நசீர் அம்பாறை பிரதேசத்திலும், வேன் சாரதி மொஹமட் அன்வர் சதாம் கம்பளை கஹடபிட்டிய பிரதேசத்தில் வைத்து தவுலகல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை கடத்த பயன்படுத்திய வேன் கம்பளை கஹடபிட்டிய பகுதியில் உள்ள கார் வாடகை இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதுடன், கடத்தல் சம்பவம் தொடர்பில் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸ் பரிசோதகர் சம்பத் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பின்னர் அந்த வேன் பொலன்னறுவை பகுதியில் இருப்பது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளம் காணப்பட்டு பொலன்னறுவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அப்போது, ​​இந்த வேனில் வந்த பிரதான சந்தேகநபரும் மாணவியும் பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு பகுதிக்கு சென்றுவிட்டு, இங்கு இருந்த அவரது உதவியாளர்கள் இருவரும் மீண்டும் கம்பளை பகுதிக்கு வந்துள்ளனர்.

பிரதான சந்தேக நபர், மாணவியின் தந்தையிடம் இருந்து ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் மற்றும் வேன் ஒன்றைக் கோருவது தொடர்பான குரல் நாடாவையும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

ஜப்பானில் பணிபுரிந்து இங்கு வந்த பிரதான சந்தேக நபர், இந்த மாணவிக்கு பணம் செலவழித்து வீட்டைக் கட்டியதாகவும், தந்தைக்கு வேன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்ததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், உண்மைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபருடன் அம்பாறை மற்றும் கல்குடா பிரதேசங்களில் இரண்டு இரவுகள் தங்கியிருந்த போதிலும் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும் இன்று அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார் DC

14/01/2025

சற்றுமுன் கல்முனை கிட்டங்கி வீதியில் வெள்ளநீர் பரவ ஆரம்பம்

கோட்டைக்கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். சாரதி தப்பியோட்டம்மட்டு கல்முனை சாலை வழிய...
14/01/2025

கோட்டைக்கல்லாற்றில் வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித்தள்ளிய வேன். சாரதி தப்பியோட்டம்

மட்டு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வேன் கோட்டைக்கல்லாறு பகுதியால் பயணிக்கும் போது கோட்டைக்கல்லாறு புத்தடிக்கோயிலுக்கு அருகாமையில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வயதான பெண்மணியை மோதித் தள்ளியதில் அப் பெண்மணி படுகாயமடைந்ததுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வேனின் சாரதி வேனைக் கைவிட்டு தப்பிச் சென்ற நிலையில் அவ்விடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். கோட்டைக்கல்லாறு பகுதியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த சமயமே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது

புகைப்பட உதவி Kumaran Rock .தகவல் _கடோ கபு

14/01/2025

நீர்கொழும்பில் கேரள கஞ்சா, சிகரெட்டுக்களுடன் இருவர் கைது!

14/01/2025

நாட்டில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நேரத்தில், கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.tw

14/01/2025

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அவசர வேண்டுகோள்...

இன்று (14) செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் DS சேனநாயக்க சமுத்திரத்தில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மல்கம்பிட்டி பிரதேசம் உட்பட கல்லோயா ஆற்றினை அண்மித்துள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படிகேட்டுக்கொள்வதோடு, தொழில்நிமித்தம் வயல் வேலை, செங்கல் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு உட்பட ஏனைய சகல தொழில் நடவடிக்கைகளுக்காக செல்பவர்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறும் கேட்கப்படுகின்றீர்கள்.

பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
சம்மாந்துறை.

14/01/2025

வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற மிதிகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

31.12.2012 அன்று மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றபோது வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே அவர்களினால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகலில் மட்...
14/01/2025

இரண்டு வயது பெண் குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (13) பிற்பகலில் மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் 2ஆம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த முகமட் ஷரகீர் ஜப்பிரா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உள்ள கிணற்றிற்கு அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவதினமான நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கிணற்றுக்கு அருகில் வைத்திருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பாத்த நிலையில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6.00 மணியளவில் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடிய நிலையில் கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து குழந்தையை பிரேத பரிசோதைனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தை உயிரிழந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தோடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamiltv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share