Battitimes 𝖭𝖾𝗐𝗌

Battitimes 𝖭𝖾𝗐𝗌 Unique Media with Ethics
ஒழுக்கத்துடனான தனித்துவ ஊட?

ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை மட்டக்களப்பு ரயில்வே வீதி...
12/05/2024

ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை மட்டக்களப்பு ரயில்வே வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (11) மாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 1440 மாத்திரைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று மாலை 6 மணியளவில் மட்டக்களப்பு ரயில்வே குறுக்கு வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேள‍ை வீதியில் பயணித்த இந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட காரை தம்மிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் கைதான நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.இதனை கொழும்பு லோட்டஸ்...
12/05/2024

தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாராசூட் ஜம்ப் ஷோவை மூன்று நாட்களுக்கு நடத்த தீர்மானித்துள்ளது.

இதனை கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) கம்பெனி லிமிடெட் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இன்று (12), நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) ஆகிய மூன்று நாட்களில் பாராசூட் ஜம்ப் ஷோ நடைபெறவுள்ளது.

இதில் சர்வதேச பேஸ் ஜம்பர்களை சேர்ந்தவர்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

பாராசூட் ஜம்பிங் ஷோஇன்று மதியம் 01:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

மே 13ம் திகதி காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும்.

கடைசி நாளான மே 14ம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தாமரை கோபுர நிர்வாகமும் இந்த நிகழ்வை பார்வையிட மக்கள் வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள் செந்தில் தொண்டமானால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்...
12/05/2024

கிழக்கில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகள் செந்தில் தொண்டமானால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது!

சமீபத்தில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பொதுமக்களின் வசதியான பயணத்திற்காக உள்ளூர் சேவைக்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்...
12/05/2024

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், படிப்படியாக திட்டமிட்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதுவரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வணிகத் தேவைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொருளாதாரத்திற்கு சில பங்களிப்பு செய்வதற்காக பொருளாதார செயல்முறை மற்றும் வணிக செயல்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கே தற்போது கட்டுப்பாடு உள்ளது. அடுத்த வருடத்தில் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம். எனினும் படிப்படியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

மேலும், நாட்டில் தற்போதுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்று வழிகள் இல்லை ன நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப...
12/05/2024

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதற்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாள் கடந்த 9ம் திகதி நடைபெற்றதுடன், கால அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

எனினும், சந்தேகத்திற்குரிய இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகளை நேற்று சனி...
12/05/2024

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகளை நேற்று சனிக்கிழமை (11) இரவு மீட்டதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கமைய நேற்றிரவு இரவு 7 மணியளவில் இருதயபுரம் சமுர்த்தி வங்கி கட்டிடத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் பொலித்தீன் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த 58 ரி.56 ரக துப்பாக்கி ரவைகளை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் வரும் 17-ந் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்...
12/05/2024

நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால் வரும் 17-ந் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சுபம் குரூப் ஆப் கம்பெனி மற்றும் இன்ட் ஸ்ரீ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 'சிவகங்கை' என்ற பெயரில் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை திங்கட்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு திங்கட்கிழமை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகைக்கு வரவேண்டிய பயணியர் கப்பல் தாமதமானதால், வரும் 17-ந்திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளத...
12/05/2024

பிரேசில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரையில் 107 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 136 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடும் வெள்ள பாதிப்பில் சிக்கிய குதிரை ஒன்று, வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் கட்டிடம் ஒன்றின் மேற்கூரை மீது பல மணித்தியாலமாக நின்று கொண்டிருந்தது.

போர்ட்டோ அலிகர் பெருநகர பகுதிக்குட்பட்ட கனோவாஸ் நகரில் சரிந்து விழ கூடிய அபாய சூழலில், கட்டிடத்தின் மேற்கூரையில் நிற்க முடியாமல், அந்த குதிரை தவித்தபடி இருந்தது.

மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையின் ஒளி சிறிதளவே இருந்த சூழலில், இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு குழுவினர் வந்தனர்.

சமூக ஊடகத்தில் கேரமேலோ என பாசத்துடன் பெயரிட்டு நெட்டிசன்களால் அழைக்கப்படும் அந்த குதிரை, மிதவை படகு ஒன்றின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவி...
12/05/2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவர் பதவி மற்றும் அந்த கட்சியின் நிறைவேற்று குழுவிலிருந்து விலகியுள்ளார்.

எதுல் கோட்டேவில் இடம்பெற்ற அந்த கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கட்சியின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவி...
12/05/2024

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின நிகழ்வில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

10/05/2024

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று (10) திறந்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று (10 ) மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 6ஆவது சந்திப்பு இதுவாகும்.

குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

😍🫴𝙾𝙻𝙳 𝙺𝙰𝙻𝙻𝙰𝙳𝚈 𝐁𝐑𝐈𝐃𝐆𝐄𝑁𝑖𝑔ℎ𝑡 𝑉𝑖𝑒𝑤 📷@𝐵𝑎𝑡𝑡𝑖𝑐𝑎𝑙𝑜𝑎
10/05/2024

😍🫴
𝙾𝙻𝙳 𝙺𝙰𝙻𝙻𝙰𝙳𝚈 𝐁𝐑𝐈𝐃𝐆𝐄
𝑁𝑖𝑔ℎ𝑡 𝑉𝑖𝑒𝑤 📷
@𝐵𝑎𝑡𝑡𝑖𝑐𝑎𝑙𝑜𝑎

சில மாதங்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, தம்புள்ளை...
09/05/2024

சில மாதங்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 140 ரூபாவாகும்.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பி வெங்காயத்தின் மொத்த விலை 100-120 ரூபாவாகவும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 60 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

10 ஆண்டுகளாக பற்களை திருடி விற்ற மருத்துவர் கோடீஸ்வரரான நிலையில், பொலிஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் ஒன்று ஜப்பானில் நடந்தே...
09/05/2024

10 ஆண்டுகளாக பற்களை திருடி விற்ற மருத்துவர் கோடீஸ்வரரான நிலையில், பொலிஸாரிடம் சிக்கியுள்ள சம்பவம் ஒன்று ஜப்பானில் நடந்தேறியுள்ளது.

அங்குள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த சந்தேக நபரான மருத்துவர், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்தது.

இந் நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்தது. இதன்போது மருத்துவரின் திருட்டு அம்பலமானது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த முறைபாட்டை அடுத்து மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கானாவை சேர்ந்த ஒரு வாலிபர் மரங்களை கட்டிப்பிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.கானா அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் ...
09/05/2024

கானாவை சேர்ந்த ஒரு வாலிபர் மரங்களை கட்டிப்பிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கானா அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார்.

இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அதன்படி சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார்.

இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது.

சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான வீடியோவை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீ...
07/05/2024

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

பொருளாதார நீதியை நிறைவேற்றாதது தொடர்பாக, 72 தொழிற்சங்கங்களின் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, கொடுப்பனவுகளை வழங்குவதாக எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அது ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், இதுவரையில் அந்த வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன்படி, நோயாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு, நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாக, மாகாண ரீதியாக அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களை கடமையில் இருந்து வெளியேறும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையை செயல்படுத்தும் மாகாணங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

09 - வட மத்திய மாகாணம்
13 - மத்திய மாகாணம்
14 - சப்ரகமுவ மாகாணம்
15 - வடமேற்கு மாகாணம்
16 - தென் மாகாணம்
20 - ஊவா மாகாணம்
21 - மேல் மாகாணம் போன்றவற்றில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்த...
07/05/2024

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவருக்கும் இம்மாதம் 8ஆம் திகதி காலை 10.30 மணிக்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அம...
07/05/2024

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன பதிலளிக்கையில்,

“இது தொடர்பாக நீதித்துறை விவகாரம் உள்ளது. ஒரு கட்டத்தில், 61 வயது வரை நீட்டிக்க சம்மதித்தோம். அது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்தோம். 61 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிப்பு இல்லை.”

இதேவேளை, புதிதாக சுமார் 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகப்பரீட்சை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, விரைவில் தாதியர் சேவைக்கு நியமிக்கப்பட முடியும் எனவும், தாதியர் சேவையில் தற்போது 45,000 பேர் உள்ளதாகவும், சுமார் 1,000 வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கட...
07/05/2024

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

வெப்ப பக்கவாதம் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளை இழந்து இருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே, வெப்பநிலை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும்.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்குவீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக வைத்திருக்கவேண்டும்.

அதிக நீர் மற்றும் குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும்.

கடந்த இரு வாரங்களில் வெப்ப பக்கவாதம் காரணமாக எமது நோயாளர் விடுதிகளில் அனுமதிப்பட்டிருந்த நான்கு தொடக்கம் ஐந்து நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.

இந்த நோய் வராமல் இருப்பதற்கு அதிக நீரை அருந்த வேண்டும்.

வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும்.

தர்பூசணி,வெள்ளரிப்பழம்,தோடம்பம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும்.

வயது போனவர்களுக்கு தண்ணர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே நீர் ஆகாரங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து வெப்ப பக்கவாதம் வாராமல் தடுக்கமுடியும் என்றார்.

ஒரு நினைவூட்டல். 🙂 🫴
06/05/2024

ஒரு நினைவூட்டல். 🙂 🫴

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தி...
06/05/2024

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களில் 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரக்காபொல, ருவன்வெல்ல, எட்டியாந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ மற்றும் கேகாலை ஆகிய பிரிவுகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

06/05/2024

கல்முனையிலிருந்து மஹரகம நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று (06)அதிகாலை செங்கலடி பகுதியில் பாரிய விபத்தில் சிக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை கல்முனையிலிருந்து மஹரகவுக்கு சென்ற பஸ் செங்கலடி சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து கடைகளை உடைத்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பஸ்சின் சாரதி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பமானது....
06/05/2024

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் இன்றைய தினம் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்குகின்றனர்.

பரீட்சை நிலையங்களை இணைப்புச்செய்யும் வகையில் 14 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு பரீட்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளாக 10037பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3865பேரும் தோற்றுவதுடன் இதில் தமிழ் மொழியில் 13826 சிங்கள மொழியில் 10பேரும் ஆங்கில மொழியில் 66பேரும் தோற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பெற்றோரின் ஆசிர்வாதகங்களைப்பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் 2 நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுப...
06/05/2024

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் 2 நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இல...
05/05/2024

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்க வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் ஏறாவூர் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து இந்திய முதலீட்டாளர்களுடன் நேரி...
05/05/2024

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் ஏறாவூர் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று பரிசீலனை.

மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரமாக அமையவிருக்கும் ஆடைத் தொழில் முதலீட்டு வலய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் இந்திய முதலீட்டாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.

சனிக்கிழமை 04.05.2024 கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு விமானம் மூலம் வருகைதந்த வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டும் இந்திய முதலீட்டாளர் குழுவினரும் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவிருக்கும் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்தனர்.

ஏறாவூரில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கு கடந்த 26.10.2020 அன்று அமைச்சரவைத் தீர்மானம் எட்டப்பட்டதற்கு அமைவாக புன்னைக்குடா கடற்கரையோரப் பகுதியில் ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் அமைப்பதற்கான அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இது கிழக்கு மாகாணத்தில் துணி உற்பத்தி தொடர்பான தொழில் முயற்சிக்கென அமையவிருக்கும் விஷே‪ட, பிரமாண்ட கைத்தொழில் வலயமாகும்.

இந்த ஆடைக் கைத்தொழில் முதலீட்டு வலயம் இயங்கத் துவங்குமாயின் அங்கு பல்வேறு தொழிற் தரங்களில் சுமார் ஈராயிரம் பேர் நேரடியாகவும் சுமார் அதே எண்ணிக்கையிலானோர் மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலீட்டு வலயத்திற்கென சிபார்சு செய்யப்பட்ட 400 ஏக்கர் காணிகளில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழவுக்கு உரித்தான 275 ஏக்கர் காணிகள் ஏற்கெனவே இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்டு அங்கு மின்சாரம், நீர் விநியோகம், வீதிகள், தொலைத் தொடர்பு உள்ளிட்ட உள் கட்டமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி முடக்கம் காரணமாக இந்த முதலீட்டு வலயத்திற்கான அபிவிருத்திப் பணிகள் தாமதமாகியிருக்கின்ற போதிலும் வெகுவிரைவில் துரித கதியில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு முதலீட்டு வலயம் செயல்படத் துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆளுநருடன் வந்த இந்திய ஆடை உற்பத்தி முதலீட்டாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் பாரிய ஆடைத் தொழிற்சாலைகளை நிர்மாணிக்க தாம் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
அதன் மூலம் வறிய நிலையிலுள்ள பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பைப் பெறுவர் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் உடன் வருகை தந்த இந்திய முதலீட்டாளர்கள் குழுவில், தமிழ் நாட்டின் முன்னோடி ஆடையுற்பத்தி நிறுவனமான எஸ்பி அப்பரல்ஸ் லிமிட்டெட்டின் நிருவாகப் பணிப்பாளர் பி. சுந்தர்ராஜன், பிரதம நிறைவேற்று அதிகாரி பி.வி. ஜீவா, தலைமை கணக்காளர் வி. பாலாஜி, எஸ்பி யூகே நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி பிரசங்க ஹேவாபத்திரன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்

பாலமுனை ஜாமிஉல் ஹஸனாத் மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா.காத்தான்குடி அல் குர்ஆன் அபிவிர...
05/05/2024

பாலமுனை ஜாமிஉல் ஹஸனாத் மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா.

காத்தான்குடி அல் குர்ஆன் அபிவிருத்தி சபையினால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அல் குர்ஆன் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இவ்வருட ரமழான் மாதத்தில் சுபஹ் தொழுகையின் பின் அல் குர்ஆன் ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டு அல் குர்ஆன் ஓதிய மாணவர்களுக்குமான கெளரவிப்பு நிகழ்வும் அண்மையில் பாலமுனை ஜாமிஉல் ஹஸனாத் மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு பள்ளிவாயலின் தலைவர் எம்.எம்.ஏ.முரீத் தலைமையில் நடைபெற்றதுடன் காத்தான்குடி அல் குர்ஆன் அபிவிருத்தி சபையினால் 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட அல் குர்ஆன் போட்டி பரீட்சையில் சித்தி பெற்ற 14 மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் நினைவு சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாயல் தலைவர்கள், நலன் விரும்பிகள்,ஊர் பிரமுகர்கள் என கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து ...
05/05/2024

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தை நிலைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா பாராட்டு தெரிவித்தார்.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவுபடுத்தல், இலகு ரயில் (LRT) திட்டம் உட்பட ஜப்பான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீள ஆரம்பிப்பதே ஜப்பான் அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திடுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்காக தொடர்ச்சியாக முன்னிலையாகும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கமிகாவா, அதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகளுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்று உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதே தனது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளையில் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஜனாதிபதி நன்றி கூறினார்.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழும்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்...
05/05/2024

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில், 14.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன, மேலும் மார்ச் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தனியார் வாகனங்களின் மதிப்பு 4.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

வாகனங்களுக்கு மேலதிகமாக, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 102.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான காய்கறிகள் (பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் பிற காய்கறிகள்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அந்தக் காலப்பகுதியில் 34.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ்  சே...
05/05/2024

விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் சேவையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் விடுமுறை பெறாமல் கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ அதிகாரிகள் உட்பட பல தரப்பினருக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி பொதுமன்னிப்புக் காலத்தில் 9,770 இராணுவத்தினர் இவ்வாறு விலக்கப்பட்டதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Address

Batticaloa
SRILANKA

Alerts

Be the first to know and let us send you an email when Battitimes 𝖭𝖾𝗐𝗌 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Battitimes 𝖭𝖾𝗐𝗌:

Videos

Share

Category


Other Media Agencies in Batticaloa

Show All